Love in the time of Cholera, Of Love and Other Demons நாவல்களை வாசித்த நாட்களிலிருந்தே மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude (நூற்றாண்டு காலத் தனிமை) நாவலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த இரு நாவல்களும், இணையத்தில் படித்திருந்த மார்க்வெஸ்ஸின் கட்டுரைகளும், நூற்றாண்டு கால தனிமை நாவல் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்த நாவலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சென்னையில் அலுவலகத்தில் நடந்த ஒரு சிறிய புத்தக கண்காட்சியில் வாங்கிய நான்கு புத்தகங்களில் இரண்டு மார்க்வெஸ் எழுதியது. One Hundred Years of Solitude மற்றும் மார்க்வெஸ்ஸின் சிறுகதை தொகுப்பு. முதலில் கையில் எடுத்தது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை. இந்த பதிவு அந்த புத்தகம் குறித்த என்னளவினால் ஆன குறிப்பே. அதைக் குறித்த முழுமையான பதிவை எழுதிவிட முடியுமெனத் தோன்றவில்லை.
இந்த நாவல் கற்பனை நகரமான மகந்தோ(Macondo) என்ற நகரில் வாழ்ந்த பொயந்தியா(Buendia) வம்சாவளியினரின் கதை. நூறாண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் மகந்தோ நகரின் வளர்ச்சி, வீழ்ச்சி, கொண்டாட்டங்கள், துக்கங்கள், காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறாமலிருந்தவைகள் என அந்நகருடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளை பொயந்தியா குடும்பத்தினர் வாயிலாக சொல்லியிருக்கிறார் மார்க்வெஸ். ஹோசே ஆர்காதியோ பொயந்தியா(Jose Arcadio Buendia)வும் அவன் குழுவினரும் மகந்தோ நகரை நிர்மானித்து அங்கு வாழ்கிறார்கள். அவன் மனைவி உர்சுலா(Ursula). பொயந்தியா எப்போதும் கற்பனையில் வாழும் மனிதன். எப்போதாவது மகந்தோவிற்கு வரும் நாடோடிகளே அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்பு. நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளாலும் கருவிகளாலும் ஈர்க்கப்படும் பொயந்தியா அவர்களுடன் நட்புகொள்கிறான். உர்சுலா குடும்பத்தினை தன் கட்டுப்பாட்டுள் வைத்திருப்பவள். அவளுக்குத் தெரியாமல் அந்த குடும்பத்திலோ மகந்தோ நகரிலோ எதுவும் நடப்பதில்லை. அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை இந்த நாவல் மூலம் சொல்கிறார் மார்க்வெஸ்.
பொயந்தியா தம்பதியினரின் மகன் ஆரெலியனோ பொயந்தியா (Aureliano Buendia) அரசாங்கத்திற்கெதிராக போரில் இறங்குகிறான். பதினெட்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறான். மற்றொரு மகன் ஹோசே ஆர்காதியோ(Jose Arcadio) நாடோடிகளுடன் சென்றுவிடுகிறான். அவர்களின் மகள் அமராண்தா(Amaranta) காதலை நிராகரித்துவிட்டு மணமாகாமல் இருக்கிறாள். ஹோசே ஆர்காதியோவின் மகன் ஆர்காதியோ, ஆர்காதியோவின் மகள் ரெமெதியோ(Remedios), மகன் ஆர்காதியோ செகுந்தோ(Arcadio Secundo), அவனது மனைவி பெர்னாண்டா(Fernanda), இவர்களது பிள்ளைகள் என நாவல் முழுக்க கதாபாத்திரங்களால் நிரம்பிவழிகிறது.
ஒரே குடும்பத்தினராயினும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசியங்கள். உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களும் அவர்களின் செய்கைகளும் அதை மார்க்வெஸ் விவரிக்கும் விதமும் நம்மை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தும் ஒவ்வொருவரும் தன்னளவில் தனிமையிலேயே இருக்கின்றனர். அந்த நூற்றாண்டு காலத் தனிமையின் கதையே இந்த நாவல்.
இறந்துபோனவர்கள் தாகத்துடன் நடமாடுவது, இறந்தவர்களுடன் நேருக்கு நேராக பேசுவது, நாடோடிகளின் கண்டுபிடிப்புகள், மஞ்சள் பட்டாம்பூச்சிகள் புடைசூழ வரும் கதாபாத்திரம், வீட்டினுள் நிர்வாணமாக அலைந்துகொண்டிருக்கும் ரெமெதியோஸ் என்ற அழகி, பார்வை மங்கிவிட்ட பிறகும் தன் பிற உணர்ச்சிகள் மூலம் அனைத்தையும் பார்த்து வரும் உர்சுலா, ஐந்து வருடங்கள் தொடர்ந்து பெய்யும் மழை, பல தலைமுறைகளாக வீட்டை ஆக்கிரமிக்கும் எறும்புகள், எதிலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத சோபியா(Sofia), வீட்டில் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று செய்யும் பெர்னாண்டா, வாலுடன் பிறக்கும் குழந்தை, வெள்ளியை உருக்கி மீண்டும் மீண்டும் மீன்கள் செய்யும் கலோனல் ஆரெலியெனோ, புத்தகங்களில் மூழ்கியிருக்கும் இன்னொரு தலைமுறை ஆரெலியெனோ, பொயந்தியா குடும்பத்தினரின் நூற்றாண்டு கால வாழ்வை முன்னமே கணித்து எழுதிய நாடோடி என நாவல் முழுக்க நம்மை மயக்கச் செய்யும் எழுத்து. 'மேஜிக்கல் ரியலிசம்' குறித்து எனக்கு தெளிவான புரிதல் கிடையாது என்ற போதிலும் இந்த நாவலில் அதை பொருத்திப் பார்க்க முடிந்தது.
இந்த நாவலைப் படித்து முடிக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பல பக்கங்களை மீண்டும் மீண்டும் படித்தேன். மீண்டும் மீண்டும் அவற்றைப் படிப்பதே சுகானுபவமாக இருந்தது. குறிப்பாக பெர்னாண்டாவின் எண்ணவோட்டமாக இரண்டு பக்கங்களுக்கு மேல் முற்றுப்புள்ளி இல்லாமல் செல்லும் ஒரு பகுதியை நான்கைந்து முறை வாசித்து மகிழ்ந்தேன். வாசிக்கையில் இந்நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வெறுமையையும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த நாவலை படித்து முடிக்கவே முடியாதென்று கருதி ஒரு வாரம் படிக்காமல் இருந்தேன். இப்போது படித்து முடித்ததும் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது.
ஆரெலியெனோக்களும், ஆர்காதியோகளும் ரெமெதியோக்களும் நிறைந்திருக்கும் இந்நாவலில் பெயர்கள் குழம்பும் சமயங்களில் நாவலின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் பொயந்தியா வம்சாவளியினரின் பட்டியலை அடிக்கடி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மகந்தோவின் வாயிலாக மார்க்வெஸ் காலச் சுழற்சியில் பல மாற்றங்களையடைந்து அனைத்தும் ஆரம்ப நிலையையே அடைந்துவிடுவதைக் குறிப்பிடுகிறார். மகந்தோவை எந்த நாட்டோடும் நாகரீகத்தோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
மார்க்வெஸ்ஸின் மாஸ்டர் பீஸ்-ஆகப் போற்றப்படும் இந்நாவலை பல தளங்களிலும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு சாதாரண வாசகன் என்ற நிலையிலேயே எனது புரிதல்கள் அமைந்திருககிறது. இந்நாவல் குறித்தான கட்டுரைகளைப் படித்த பின் மறுவாசிப்பில் எனது புரிதல்கள் விரிவடையலாம். பின்னாட்களிலும் இந்த புத்தகத்தைக் கையில் எடுக்கும் பொழுதெல்லாம் மாயவித்தைகளைக் காணும் சிறுவனின் மனநிலையில் இருப்பேன் என்றே தோன்றுகிறது.
One Hundred Years of Solitude
கப்பி | Kappi
வகை புத்தகம், மார்க்வெஸ்
Subscribe to:
Post Comments (Atom)
16 பின்னூட்டங்கள்:
//குறிப்பாக பெர்னாண்டாவின் எண்ணவோட்டமாக இரண்டு பக்கங்களுக்கு மேல் முற்றுப்புள்ளி இல்லாமல் செல்லும் ஒரு பகுதியை நான்கைந்து முறை வாசித்து மகிழ்ந்தேன்.//
நாங்க எல்லாம் இப்படிப் புத்தகத்தைத் தேடி ரொம்ப கஷ்டப்படாம அய்யனார் பதிவைத்தான் படிக்கிறது! :))
அருமை!
\மாயவித்தைகளைக் காணும் சிறுவனின் மனநிலையில் இருப்பேன் என்றே தோன்றுகிறது.\\
பதிவை படிக்கும் போது நானும் இப்படி தான் இருந்தேன். ;)
andha booka pathina ithunoondu padhivae enakku puriyala.. andha booka padichalum puriyadhu pola.. so me the escape :D
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
நல்ல அறிமுகம் கப்பி.உன்னோட முந்தய பதிவு படிச்ச ஒடனே நெனச்சயன்யா பையனுக்கு ஏதோ ஆயிடுச்சின்னு :)
பல தளங்களிலிருந்து இந்நாவலை அணுகலாம் பல்வேறு விதமான பார்வைகளை உள்ளடக்கிய அற்புதமான நாவல்.திகைப்பையும் ஆச்சர்யத்தையும் வெகுநேரம் சுமந்து கொண்டு திரிந்தேன் வாசிப்பின்பம் என்பதற்கான சரியான அடையாளமாக இந்நாவலை சொல்லலாம்.
No one writes to colonal நாவலையும் முடிஞ்சா படிங்க கப்பி மார்க்வெஸின் எல்லா நாவல்களிலும் பிரதானமா இழையோடறது தனிமைதான்னு நான் அர்த்தப்படுத்திக்கிறேன்.
எலே டம்பி பார்யா எம்புட்டு பெரிய புக் லாம் படிச்சிட்டு கப்பி எவ்ளோ சைலண்டா இருக்கார்னு பாத்துக்கோ.. நீ என்னடான்னா லோக்கலா 5 புக படிச்சிட்டு பெரிய எலக்கியவியாதி பில்ட் அப்ப கொடுக்கிற :))
கொத்ஸ் நம்ம பக்கத்துக்கும் attendence உண்டா ..நன்றி :)
அய்ஸ்!
கப்பி ஒரு ஞானக்குழந்தைன்னு உனுக்கு தெரியாதா?
அவர்கிட்ட இருக்குற விஷயத்துல பாதிக்கும் கால்தான் பதிவுல போடறாரு. முழுசா காமிச்சார்னு யாரும் பக்கத்துல நிக்க முடியாது.
// கப்பி ஒரு ஞானக்குழந்தைன்னு //
huhahaha... :)))
கொத்ஸ்
//ரொம்ப கஷ்டப்படாம அய்யனார் பதிவைத்தான் படிக்கிறது! :))//
நானும்தேன் :)))
பிரகாஷ்
நன்றி!!
கோபிநாத்
இதெல்லாம் ரொம்ப ஓவரு :)))
G3
நான் தான் சொதப்பியிருப்பேன்..நாவல் நல்லாவே புரியும்..படிச்சு பாருங்க :))
ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி!!
அய்ஸ்
//நல்ல அறிமுகம் கப்பி.உன்னோட முந்தய பதிவு படிச்ச ஒடனே நெனச்சயன்யா பையனுக்கு ஏதோ ஆயிடுச்சின்னு :)//
:))))))))
//வாசிப்பின்பம் என்பதற்கான சரியான அடையாளமாக இந்நாவலை சொல்லலாம்.//
சரியா சொன்னீங்க!!
//
No one writes to colonal நாவலையும் முடிஞ்சா படிங்க கப்பி //
தேடிப் பிடிக்கிறேன் தல!
//
மார்க்வெஸின் எல்லா நாவல்களிலும் பிரதானமா இழையோடறது தனிமைதான்னு நான் அர்த்தப்படுத்திக்கிறேன்.//
அதே தான்...அது தான் அவர் எழுத்தை தேடித் தேடி படிக்க வைக்குது!!
//
எலே டம்பி பார்யா எம்புட்டு பெரிய புக் லாம் படிச்சிட்டு கப்பி எவ்ளோ சைலண்டா இருக்கார்னு பாத்துக்கோ.. நீ என்னடான்னா லோக்கலா 5 புக படிச்சிட்டு பெரிய எலக்கியவியாதி பில்ட் அப்ப கொடுக்கிற :))
//
அய்ஸ்..எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம்..ஏன் இப்படி??? :)))
நன்றி ஹை!!
தம்பியண்ணன்
போதும்..நிப்பாட்டிப்போம் :)))
இம்சை அரசி
என்னா வில்லத்தனம் :)))
//கப்பி ஒரு ஞானக்குழந்தைன்னு உனுக்கு தெரியாதா?
அவர்கிட்ட இருக்குற விஷயத்துல பாதிக்கும் கால்தான் பதிவுல போடறாரு. முழுசா காமிச்சார்னு யாரும் பக்கத்துல நிக்க முடியாது.//
டபுல் ரிப்பீட்டே!!!
//இந்த நாவலைப் படித்து முடிக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது//
கப்பி, யூ ஆர் ரியலி கிரேட்! ஒரே மாசத்துக்குள் படிச்சி முடிச்சிட்டீங்களா? ஏழு தலைமுறைக் கதையாச்சேப்பா! ஜந்தேகமே இல்ல! கப்பி ஞானக் குழந்தையே தான்! :-)
//இந்த நாவலை படித்து முடிக்கவே முடியாதென்று கருதி ஒரு வாரம் படிக்காமல் இருந்தேன். இப்போது படித்து முடித்ததும் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது//
ஹிஹி...ரெண்டு மாசம் கழிச்சி இன்னொரு தபா படியுங்கள்.
அதுவும் Marquesஇன், Love in the time of Cholera படத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் படியுங்கள்! Magical Realism என்னும் மாய வித்தை ரொம்பவும் பிடித்துப் போகும்! :-)
வெட்டி
ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட் :)))
கேஆரெஸ்
தல,
Love in the time of Cholera நாவல் வாசிச்சிருக்கேன்..அது குறித்தான பதிவு - இங்கே http://kappiguys.blogspot.com/2007/01/love-in-time-of-cholera.html
படம் இன்னும் பார்க்கல...பார்க்கனும்ம்ம்ம்ம்...
//
கப்பி, யூ ஆர் ரியலி கிரேட்! ஒரே மாசத்துக்குள் படிச்சி முடிச்சிட்டீங்களா? ஏழு தலைமுறைக் கதையாச்சேப்பா! ஜந்தேகமே இல்ல! கப்பி ஞானக் குழந்தையே தான்! :-)//
ஒரு மாசத்துல ஒரு வாரம் படிக்க வேண்டாம்னு வெச்சிட்டாரு.மொத்தம் மூணு வாரம் தான்...
//கப்பி பய said...
வெட்டி
ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட் :)))//
அதான்பா உண்மையை சொல்லிட்டேன் ;)
வெட்டி
எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம் :))
உங்க கருத்து? Post a Comment