மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும்

ராகவன் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அவரது மனைவி கயல்விழியாக நடித்தவர் கமலினி முகர்ஜி. கமலினி நடித்திருக்கும் 'கோதாவரி' என்ற தெலுங்கு படம் நன்றாக இருக்கும். நன்றாக இருக்குமென நினைத்து நாம் பார்க்கும் பல படங்கள் சொதப்புவதும் மொக்கை படம் பார்க்கும் மனநிலையோடு இருக்கும் போது நல்ல படங்கள் சிக்குவதும் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற தத்துவத்தை உணர்த்துகின்றன. தத்துவவாதி அத்தனை பேரும் தண்ணியடிக்க மாட்டார்கள். ஆனால் தண்ணியடிக்கும் அத்தனை பேரும் தத்துவம் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு படத்தில் 'இல்லை இல்லை' என பஞ்சப்பாட்டு பாடும் தன் மனைவியிடம் 'இல்லைன்னு சொல்லாதே! எல்லாமே காலியா இருக்கு'ன்னு சொல்லுன்னாராம் கலைவாணர். கலைவாணர் அரங்கம் சென்னை அண்ணா சாலையில் இருக்கிறது. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தால், சிக்னலில் வண்டியை கோட்டின் முன்னாலேயே நிறுத்தினால், பச்சை விளக்கு எரிந்த பிறகு வண்டியெடுத்தால், ஹெல்மெட் அணிந்தால், இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்பினால், ஓவர்டேக் செய்யும் வண்டிக்கு வழிவிட்டால், சாலையைக் கடப்பவருக்காக வண்டியை நிறுத்தினால், இன்ஷூரன்ஸ், ஆர்.சி அத்தனையும் பக்காவாக வைத்திருந்தால், டிராபிக் போலிஸ் பணம் வாங்குவதற்கான வாய்ப்பே கொடுக்காவிட்டால் உங்களை மடையன் என்று கூறிவிடுவார்கள். என் மாமா சிறுவயதில் என்னை 'மாங்கா மடையன்' என்று தான் கூப்பிடுவார். மடையனுக்கு மாங்காய் எப்படி அடைமொழியாக வர முடியும்? 'எப்படா முடியும்' என்று ஒவ்வொரு வாரம் ஆரம்பிக்கும்போதும் தோன்றுவதும் முடியும்போது எப்படி முடிந்தது என்று தெரியாமலே போவதும் பெரிய காமெடி. காமெடி கஷ்டப்பட்டு எழுதினா வராது.இஷ்டப்பட்டு எழுதினா தான் வரும். வரும் வரும்னு ரொம்ப நாளா பில்டப் கொடுத்திட்டிருக்க 'பீமா' பொங்கலுக்கு வந்துடும் போல. பொங்கலுக்கு தாத்தா பாட்டி ஊருக்குப் போய் நாலு நாள் சுகமா இருந்து சில பல வருடங்கள் ஆச்சு. சில பல வருடங்கள் கழித்து இந்த பதிவை படிச்சா இம்புட்டு மொக்கையா போட்டிருக்கோம்னு சிரிப்பா வரும். இப்பவே அப்படித்தான் இருக்கு. அப்படி இப்படின்னு இருபது வரிக்கு எழுதியாச்சு. அடுத்து என்ன எழுதலாம்னு காபியே குடிச்சிகிட்டே யோசிச்சிட்டிருக்கேன். சென்னைல காபிக்கு சிறந்த இடம் எது? அ) சரவண பவன். ஆ) வசந்த பவன் இ) அடையார் சங்கீதா. இங்க போனா வாய்க்கு நல்லா சாப்பாடு கிடைக்கும். ஆனா பர்ஸுக்கு நல்லதில்லையே. எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்கறது யாரு? ஒருத்தனுக்கு நல்லதா இருக்கறது இன்னொருத்தனுக்கு கெட்டதாயிடுது. கெட்டுப் போன பால்ல தான் கல்யாணங்களில் காபி போடுவாங்கன்னு நினைக்கறேன். கல்யாணத்துக்கெல்லாம் போனா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தா ஜாலியா பொழுது போகும். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டிருக்க பெருசுங்க, இந்த மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லேயர் பவுடர் அடிச்சுட்டு வர ஆண்ட்டிஸ், என்னிக்குமில்லாம அன்னிக்கு மட்டும் பக்காவா டிரெஸ் பண்ணி செண்ட் அடிச்சுட்டு வர மாம்ஸ்ங்க, கல்யாண மண்டபத்தை கிரவுண்டாக்கி விளையாடற பொடிசுங்க, கக்கத்துல கேஷ்-பேக் வச்சிட்டு திரியற பொண்ணு/மாப்பிள்ளையோட மாமா/சித்தப்பா, வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள பக்கத்து இலையை எடுத்துப்போடறவங்க, பின்னாடி சேரைப் புடிச்சுகிட்டு அடுத்த பந்திக்கு இடம் போடறவர், தாம்பூலம் கொடுக்கற தாத்தா. தாத்தா இறந்து பத்து வருடம் ஆகிறது. அவர் இறந்த போது என் அப்பாவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து நான் அழுதேன். அவர் இறந்தது அப்போது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அதிர்ச்சியும் பரபரப்பும் உண்டாக்கவேண்டுமென இந்த செய்தி சேனல்கள் செய்யும் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. எந்த சேனலை திருப்பினாலும் ஒரே நிகழ்ச்சி வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அரங்கங்களில் ஒளிபரப்பாகிறது. ஆனால் அத்தனையும் பார்க்க ஆளிருக்கிறது. நண்பர் ஒருவருக்கு 'அசத்த போவது யாரு' ஒரு வாரம் பார்க்கவில்லையென்றாலும் தூக்கம் வராது. புலம்ப ஆரம்பித்துவிடுவார். புலம்பல் பார்ட்டிகளிடம் பெரும்பாலும் கோபம் வருவதில்லை. யார் எவ்வளவு புலம்பினாலும் 'ம்' கொட்டிக் கேட்டுக்கொண்டு 'விடுங்க. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்'ன்னு அறிவுரை சொல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கவழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடிவதில்லை. 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் 'ஏ ஆத்தா' பாடலை மலைக்கோட்டையில் ரீமிக்ஸ் செய்திருந்தது ஓரளவு நன்றாகவேயிருந்தது. ஆனால் ரீமிக்ஸ் என்றாலே நடுவில் ஆங்கில ராப் சேர்த்துவிடுவதும் பழைய பாடலை மொத்தமாக சொதப்புவதும் கடி. வார இதழ்களில் கடி ஜோக் என்ற வகை போய் இப்போதெல்லாம் ஜோக் என்றாலே கடி மட்டும் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நேரில் பார்த்ததில்லை. பார்க்காத இடங்களென்றால் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஆங்கிலத்தில் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல்கள் இணையத்தில் பரவலாகக் கிடைத்தாலும் IMDb-யின் டாப்-250ல் உள்ள திரைப்படங்களை நம்பலாம். வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். 'Lahe Raho Munnabhai' ஒரு நேரத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் டாப்-10ல் இருந்தது. நம்மாட்கள் குத்தியிருப்பார்கள். கத்தி குத்து வாங்கிய நண்பனின் கதையை எழுதலாம் என யோசித்தேன். அவன் கத்திக்குத்து வாங்கியதற்கான காரணம் எனக்கே மொக்கையாகப்பட்டதால் எழுதவில்லை. எழுத வேண்டுமென நினைத்து எழுதாமல் விடுகின்ற விஷயங்கள் நிறைய. நிறைய விஷயங்கள் எனக்கு புரிவதேயில்லை. அருஞ்சொற்பொருளுடன் யாராவது விளக்கினால்தான் மண்டையில் ஏறுகிறது. உச்சிவெயில் மண்டையைப் பிளக்க மட்டையாடிய நாட்களைப் போலில்லை. இப்போது ஒரு ஓவர் பெளலிங் போட்டாலே மூச்சு வாங்குகிறது. மூச்சு விடாம மொக்கை போடறதுக்கு மட்டும் என்றைக்குமே சலிக்கவில்லை. சலிப்படைந்த எதையும் தொடருவதற்கும் மனம் ஒப்புவதில்லை. தொடரை தொடர புரட்சி போட்டோகிராபர் சிவிஆரையும், ஒரு வாரம் முழுக்க பதிவு போட்டு டயர்டாகி இப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களையும் அப்ஸ்காண்ட் ஆன அண்ணாச்சி இராயல் அவர்களையும் பணிவன்புடன் அழைக்கிறேன். வெளங்கிரும்.



34 பின்னூட்டங்கள்:

சொன்னது...

romba sinthika vaitha pathivu.

ulaga aringar patiyalae ungalukum oru idam avasiyam idam undu.

சொன்னது...

I bet you possess all the qualities become CM of the state. You can convince/ confuse everyone and anyone.... romba mokkai saami !

Does your keyboard still working properly after having typed this post?

சொன்னது...

யப்ப்போய்ய்ய்

படிக்க ஆரம்பிக்கும் போதே கண்ண கட்டுதே...!!

சொன்னது...

மொக்கை என்பது மொச்சையைப் போல இச்சை என்பதை உணர்ந்த திருவாளர் கப்பி அவர்கள் தலைப்பில் தொடங்கி வணக்கம் வரும் மொச்சைகளை.. மன்னிக்க மொக்கையை அள்ளித் தெளித்திருக்கிறார். அவருடைய மொச்சைக் குழம்பை..மன்னிக்க மொக்கை குழப்பத்தை மிகமிகப் பாராட்டுகிறேன்.

சொன்னது...

ஏலேய்,

ஒன்னோட கால்'ஐ காட்டிக்கிட்டு நிக்கிற படம் போட்ட பதிவை மீள் பதிவு செயி ராசா.... எல்லாரும் அதை தொட்டு கும்பிட்டு போவாங்க..... :(

சொன்னது...

இந்த பதிவில் அடையாறு சங்கீதா என்ற பிகரின்:) பெயர் எங்கு வருகிறது என்று கண்டு பிடிப்பவர்களுக்கு 10 லெமன் பரிசாக வழங்கபடும்!!!

அது ஏன் லெமன் என்று புரியாதவர்கள் டாக்டர். இராயல் ராம் அவர்களை கேளுங்கள்

சொன்னது...

///ஒன்னோட கால்'ஐ காட்டிக்கிட்டு நிக்கிற படம் போட்ட பதிவை மீள் பதிவு செயி ராசா.... எல்லாரும் அதை தொட்டு கும்பிட்டு போவாங்க..... :(//////

ரிப்பீட்டேய்

டேய்ய்!!!!
எப்படி!!
எங்கிருந்து!!
எதனால??
எப்போலேர்ந்து!!!
யாரு.....

யப்பா!
என்னால முடியல!!

வாயடைச்சு போயிருக்கேன்பா!! :-ஸ்

சொன்னது...

Nirmal

//romba sinthika vaitha pathivu.//

அப்படியா? நம்பவே முடியல ;))

//ulaga aringar patiyalae ungalukum oru idam avasiyam idam undu//

அவ்வ்வ்வ்வ் :))


Vino

//vI bet you possess all the qualities become CM of the state. You can convince/ confuse everyone and anyone.... romba mokkai saami !
//

சி.எம்மா..என்னங்க இது..அமெரிக்க ஜனாதிபதின்னு கூவுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேனே ;)))

//
Does your keyboard still working properly after having typed this post?//

கீ-போர்டெல்லாம் ஒழுங்கா தான் வேலை செய்யுது..நாம தான் கொஞ்சம் ஹி ஹி

மின்னல்

//படிக்க ஆரம்பிக்கும் போதே கண்ண கட்டுதே...!!//

அப்ப எழுதின எனக்கு எப்படி இருக்கும்? :)))

சொன்னது...

ஜிரா

//மொக்கை குழப்பத்தை மிகமிகப் பாராட்டுகிறேன்.//

செய்யறதெல்லாம் செய்துட்டு பாராட்டு வேறயா? :)) நன்னி :))


இராம்

அண்ணே...சைட் பார்ல பெர்மனெண்டா வச்சுருவோமா :))

குசும்பன்

//இந்த பதிவில் அடையாறு சங்கீதா என்ற பிகரின்:) //

அண்ணாச்சிக்கு குறும்பு :)))


சிவிஆர்

அண்ணாத்த..நோ பீலிங்க்ஸ் ஆப் இந்தியா :)))

சொன்னது...

கேவலமான போஸ்ட்

சொன்னது...

புரட்டிப் போட்டு அடித்திருக்கிறீர்கள்..மொக்கையோ மொக்கை.

சொன்னது...

தல சொல்லும்போது நான் நம்பல!
கப்பி கண்ணா நீ ஒரு ஞானக்குழந்தைடா செல்லம்.

சொன்னது...

கண்ணா உன் கீபோர்டுல என்டர் கீ இல்லவே இல்லையா?

சொன்னது...

அதிர்ச்சியில ஒன்னும் சொல் முடியல செல்லம் ..;)

சொன்னது...

School examla 20 mark qn ku pakkam pakkama badhil ezhudhina effectu :)

//
அண்ணே...சைட் பார்ல பெர்மனெண்டா வச்சுருவோமா :))//

adha vida neengalae nerla vandhu nineengana kuzhi vetti ungala podhaika vasathiya irukkum :D

சொன்னது...

வெளங்கிரும், வெளங்கிரும், வெளங்கிரும்
எப்படி இப்படி... முடியல...
டெல்லிப்பக்கம் வரக்கூடிய திட்டம் இருந்தால் முன்கூட்டியே சொல்லவும், ஊரை விட்டு ஓட வசதியாய் இருக்கும்.

-அரசு

சொன்னது...

இந்த வாரம் பதிவர் பக்கத்தில்...."மொக்கை பதிவுன்னா இது தானா" மார் தட்டுகிறார் மொக்கை பதிவர் கப்பி. படித்து விட்டீர்களா;) படிச்சதும் கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு. பல்லு இடுக்குல அங்க இங்க மாட்டிட்டு இருந்ததை எல்லாம் மொத்தமா குத்தி எடுத்து துப்புன மாதிரி என்ன ஒரு பதிவு;)

சொன்னது...

\\என் அப்பாவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து நான் அழுதேன். அவர் இறந்தது அப்போது பெரிய அதிர்ச்சியாக இல்லை.// இதுல நீங்க அழறது பத்தி தான் அடுத்த வரியில் சொல்லி இருக்கனும்.. அப்பத்தான் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாம இருக்கும்..:)))

படிச்சுமுடிக்கறதுக்குள்ள ஹய்யோ .. நிஜம்மாவே சிவிஆரோட பின்னூட்டத்தை தான் வழிமொழியனும் நான்..

பத்தி வேற பிரிக்கலையா லெட்டர்ஸ் எல்லாம் கண்ணுக்குள்ள இன்னும் டேன்ஸ் ஆடுதுப்பா...

சொன்னது...

aiya sami, naanum eththanayo MOKKAI padachiruken,neenga engiyo poitinga. dr kitta kanna check pannanum

சொன்னது...

கப்பி நீ ஒரு ஞானப்பழமப்பா!!!

சொன்னது...

உலகின் ஒன்பதாவது அதிசயம் நீங்க தான் கப்பி

சொன்னது...

என் மாமன உலக அதிசயம்னு சொல்றதுக்கு நீ யாருடி?

நான் தான் சொல்வேன். மாமா நீங்க ஒரு திங் டேங்.

சொன்னது...

joe

மாப்ள, நீ எப்பவும் பேசற மாதிரி தானேடா எழுதியிருக்கேன்? வொய் டென்சன் :)))

பாச மலர்

//புரட்டிப் போட்டு அடித்திருக்கிறீர்கள்..//

என்ன அடிச்சுப்போட பல பேர் காத்திட்டிருக்கிறதா கேள்வி..ஆட்டோ அனுப்பியாச்சாம் :))

தம்பியண்ணன்

//கப்பி கண்ணா நீ ஒரு ஞானக்குழந்தைடா செல்லம்.//

உங்களை விட ஞானத்துல குறைஞ்சவன் தான்ண்ணே :))

//கண்ணா உன் கீபோர்டுல என்டர் கீ இல்லவே இல்லையா?//

இருந்துச்சு..ஆனா மொக்கை போடனுங்கற வெறில அதையெல்லாம் அடிக்க நேரமில்ல :)))

கோபிநாத்

//அதிர்ச்சியில ஒன்னும் சொல் முடியல செல்லம் ..;)//

இதெல்லாம் நமக்கு புதுசா தல :))

சொன்னது...

G3

//adha vida neengalae nerla vandhu nineengana kuzhi vetti ungala podhaika vasathiya irukkum :D//

வொய் திஸ் மர்டர் வெறி :)))


அரசு

//ஊரை விட்டு ஓட வசதியாய் இருக்கும். //

இப்போதைக்கு அந்த பக்கம் வர ப்ளான் இல்ல...சந்தோசமா இருங்க :)))


வடக்குப்பட்டு ராமசாமி

// படிச்சதும் கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்துடுச்சு. //

அவ்வ்வ்வ்வ்வ் :)))

//
பல்லு இடுக்குல அங்க இங்க மாட்டிட்டு இருந்ததை எல்லாம் மொத்தமா குத்தி எடுத்து துப்புன மாதிரி என்ன ஒரு பதிவு;)//

அடப்பாவிகளா..காறி துப்பற பதிவுன்னு சொல்லாம சொல்லிட்டீரேய்யா...நல்லா இருங்க :)))

முத்துலட்சுமி

//இதுல நீங்க அழறது பத்தி தான் அடுத்த வரியில் சொல்லி இருக்கனும்.. அப்பத்தான் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லாம இருக்கும்..:)))//

அக்கா...இவ்வளவு உன்னிப்பா படிச்சிருக்கீங்களே..பெருமையா இருக்கு :D


//
படிச்சுமுடிக்கறதுக்குள்ள ஹய்யோ .. நிஜம்மாவே சிவிஆரோட பின்னூட்டத்தை தான் வழிமொழியனும் நான்..
//

ஹி ஹி


//பத்தி வேற பிரிக்கலையா லெட்டர்ஸ் எல்லாம் கண்ணுக்குள்ள இன்னும் டேன்ஸ் ஆடுதுப்பா...
//

கொஞ்ச நேரம் தூங்கினா சரியாயிடும்..நானும் பதிவை எழுதி முடிச்சதும் அதான் செஞ்சேன் :)))

சொன்னது...

அனானி

//aiya sami, naanum eththanayo MOKKAI padachiruken,neenga engiyo poitinga. dr kitta kanna check pannanum//

எங்கயும் போல இங்கயே தான் இருக்கேன் :)))

வெட்டிப்பயல்

//கப்பி நீ ஒரு ஞானப்பழமப்பா!!!//

அடங்கொக்கமக்கா..குரூப்பு சேர்ந்துட்டீங்களா :))

ஐஸ்வர்யா ராய் & அர்ஜெண்டினா அழகி

தனிமடலில் போட்டோ அனுப்பவும் :D

சொன்னது...

நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பீச்ல எடுத்தோமே அந்த போட்டோவை முதல்ல எனக்கு அனுப்பி வைங்க டியர்

சொன்னது...

என் பொண்டாட்டி ஃபோட்டோவை கேக்கறவன் எவன்டா?

தைரியமிருந்தா பாம்பேல கால எடுத்து வைடா பார்க்கலாம்.

சொன்னது...

மூச்சு விடாம எழுதினிங்களோ.
வித்தியாசமா இருக்கு.

//'Lahe Raho Munnabhai' ஒரு நேரத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் டாப்-10ல் இருந்தது. நம்மாட்கள் குத்தியிருப்பார்கள்//
இந்த இரு வரிகளோட continuity புரியலை. continuity miss ஆயிடுச்சு னு நினைக்கிறேன்.

சொன்னது...

மங்கை

//இந்த இரு வரிகளோட continuity புரியலை. continuity miss ஆயிடுச்சு னு நினைக்கிறேன்.//

டாப்-10ல் வர நம்மாட்கள் ஓட்டு குத்தியிருப்பார்கள். இப்ப சரியா வருதுங்களா? :))

நன்றி :)

சொன்னது...

chancey illa.. super pathivu. mudinjaa kalvetla pathichitu pakathulayay utkarnthirunga.. pinadi varra santhathiyinarkellam intha vishayam poi seranumay..

ur sense of humour is damn good..
keep writing !!
-Deeksh

சொன்னது...

:))

சொன்னது...

Deekshanya

நம்ம பெருமையெல்லாம் பதிக்கனும்னா ஊர்ல இருக்க மலை எல்லாத்தையும் மொட்டையாக்கனும்..அம்புட்டு கல்லு தேவைப்படும் :))))

நன்னி :D

கொத்ஸ்

நன்றி ஹை :)))

சொன்னது...

இதுதான் நூறு சதவீத அக்மார்க் பின்நவீனத்துவ சரக்கு. பத்தி வேற பிரிக்கலையா, இல்லை என்று மறுக்க யாராலும் இயலாது.

சொன்னது...

உஷா

அப்ப நான் பி.ந.வியாதி..ச்சே பி.ந.வாதி ஆயிட்டேன்னு சொல்றீன்க :))