?! - பிப்ரவரி

எல்லா சனிக்கிழமைகளையும் போலத்தான் சென்ற வாரமும் சோம்பலாக விடிந்தது. போர்வைக்கு வெளியே கைநீட்டி அலைபேசியை எடுத்து நேரம் பார்ப்பதற்குள்ளாகவே கைவிரல்கள் விறைக்க ஆரம்பித்தன. மீண்டும் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு இரண்டு நாட்களுக்கு என்னென்ன திரைப்படம் பார்க்கலாமென்றும் ஆன்லைனில் யார் இருப்பார்கள் என்றும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் நண்பர்கள் வருவார்களா என்றும் எண்ணியபடி எந்த தடயமுமின்றி மற்றுமொரு வாரமும் கடந்துபோனதை அசைபோட்டபடியிருந்தேன்.

நீண்ட நாட்களாக தொடர்பிலில்லாத நண்பன் ஒருவனிடமிருந்து ஜிடாக் அரட்டைக்கான அழைப்பு எழுந்து உட்கார வைத்தது. அவனுடன் கல்லூரி முடிந்து ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் ஒன்றாக சுற்றியவர்கள். அவன் திருவள்ளூர். விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் ஒன்றாகத்தான் வருவோம். ஏனோ இடையில் இத்தனை வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. எங்களுக்குள் பொதுவான நண்பர்களிடம் பேசும்போது அவனைப் பற்றி விசாரித்திருக்கிறேன். எப்போதாவது ஓர்குட்டில் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்றே பல நண்பர்களுடனான தொடர்பு குறைந்துவருகிறது. ஓர்குட் இருக்கவே பலரின் பெயர்களாவது மறக்காமல் இருக்கிறது.

ஜிடாக் அழைப்பை ஏற்றதும் உடனே பேசினான். கடந்த மாதமே டல்லாஸ் வந்திருக்கிறான். நான் இங்கு இருக்கிறேன் என்பதை தற்செயலாக ஓர்குட்டில் பார்த்திருக்கிறான். ஓர்குட் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஊர்ப்பெயரை டல்லாஸ் என்று மாற்றியிருந்தேன். (இன்னும் ப்ளாக்கர் பக்கத்தில் கூட மாற்றவில்லை. சோம்பல்தான். வேறேன்ன). உடனே தொலைபேசி எண்ணை வாங்கி அழைத்தேன். நான் தங்கியிருக்கும் ஏரியாவிலேயே தான் இருந்திருக்கிறான். முகவரி தந்ததும் உடனே கிளம்பிவந்தான்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு. இருவருமே கல்லூரி நாட்களிலிருந்து ரொம்பவும் மாறிவிடவில்லை என்பது அவன் வந்ததுமே தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏழெட்டு வருடக் கதையைப் பேசியபடி இருந்தோம். விடுதி நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தில்(4 சிடிகளில்) அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு "இப்படியாடா இருந்தோம்" என்றான் சிரித்தபடி. விடுதி வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள், நண்பர்களிடையான சண்டைகள், மன வருத்தங்கள், எதிர்கொண்ட சவால்கள், குடும்பம், நண்பர்களின் திருமணம், பணி மாற்றங்கள் என பேசப்பேச பேசுவதற்கான விஷயம் இன்னும் நிறையவே மீதமிருந்தது. அந்த வாரமே சியாட்டலுக்குச் சென்றுவிட்டான். இதன்பின் அவனை எப்போது சந்திப்பேனோ ஆனால் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வாரயிறுதி மறக்கமுடியாத ஒன்றாகிப் போனது.

***********************************

புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கொடுத்த சுட்டி

Machines 'to match man by 2029' - பிபிசி செய்திக் கட்டுரை


நமக்கெல்லாம் இது எச்சரிக்கை மணி! கி.பி 2029-ல் மெஷின்கள் பதிவெழுதும். சண்டையிடும். மொக்கை போடும். இப்போதே போட்டிக்குத் தயாராகிக் கொள்வோம்!!

****************************

சென்ற வாரம் ஓட்டுநர் உரிமத்திற்கான எழுத்துத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். அன்று முதுகில் தட்டி வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள். எனக்கு இடது கண்ணில் லேசான பார்வைக் குறை உண்டு. ஆனால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லையாதலால் கண்ணாடி அணியாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறேன். கண்பார்வை சோதனையின் போது 'Vision Tester'ல் படிக்கச் சொன்னார். இரண்டு கண்களையும் அதில் பொறுத்திப் பார்த்ததில் மூன்று வரிசைகளில் இருந்ததில் எனக்கு இடது வரிசை காலியாகவே தெரிந்தது. நடுவிலும் வலதுபக்கத்திலும் உள்ள எண்களைப் படித்துக் காட்டினேன். இடது வரிசையில் இருப்பதையும் படிக்கச் சொன்னார். 'இடது வரிசையில் எண்கள் எதுவுமில்லையே' என நான் கேட்க, ஒரு துண்டுச்சீட்டைத் தந்து இடது வரிசையில் ஏதாவது தெரிந்தால் எழுதிக்கொடு இல்லையென்றால் மருத்துவரைப் பார்த்துவிட்டு வா என்று கலாய்த்துவிட்டு அடுத்தவரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

ஓரளவு தெரிந்த கண் மொத்தமாக ஃப்யூஸ் போய்விட்ட அதிர்ச்சியில் மீண்டும் பார்த்தால் இடது வரிசை காலியாகவே தெரிந்தது. என் மேலிருந்த நம்பிக்கையில் இடது வரிசை காலியாகத் தான் இருக்க வேண்டுமென அந்த அலுவலர் பார்க்காத சமயத்தில் இடது கண் துவாரத்தில் வலது கண்ணைப் பொருத்திப் பார்த்தால் அதிர்ச்சி. இடது வரிசையில் எண்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குத் தெரியவில்லை. இந்தளவுக்கு கண் ஃப்யூஸ் போயிருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. வலது கண்ணில் பார்த்து எண்களை மனப்பாடம் செய்துகொண்டு பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன். உரிமம் வாங்கப்போகும்போது இன்னொருமுறை எப்படியாவது ஏமாற்றவேண்டும். அல்லது அதற்குள் ஒரு சோடாபுட்டியை மாட்டவேண்டும்.

*****************************

எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.

****************************

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலிகள். பள்ளி நாட்களில் ஓசியில் வார இதழ்கள் படிக்கத்தந்து சுஜாதா என்ற பெயரை அறிமுகப்படுத்திய பக்கத்து கடைக்காரரின் சிரைக்காத முகமும், மாவட்ட நூலகத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடித்தேடி படித்த நாட்களும், டிவி தொடர்களாக வந்த அவரது நாவல்களும், அறிவியல் கட்டுரைகளும், கற்றதும் பெற்றதும், வேலையில் சேர்ந்தபிறகு வாங்கிக்குவித்த அவரின் புத்தகங்களும், அவரது ஆளுமை குறித்தான பிரமிப்பும் அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும், சினிமாவிற்காக அவர் செய்துகொண்ட சமரசங்களும், நண்பர்களுடனான பல விவாதங்களும் இன்னும் பலவும் நினைவுகளாக நிழலாடுகின்றன.

வாழ்க நின் புகழ்!

*************************

இந்த மாத ?! தத்துவம்

"Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"

- Paulo Coelho (Veronika decides to die நாவலில்)25 பின்னூட்டங்கள்:

சொன்னது...

///அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு////
இப்போ ஆட்டம் கொறைஞ்சுப்போச்சுன்னு நெனப்போ!! ;)

///கி.பி 2029-ல் மெஷின்கள் பதிவெழுதும். சண்டையிடும். மொக்கை போடும். இப்போதே போட்டிக்குத் தயாராகிக் கொள்வோம்!!////
அட்ரா அட்ரா!!
எப்படிப்பா உனக்கு மட்டும் இப்படியெல்லாம் புத்தி போகுது?? :-ஓ

///பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன்.///

எலே!!! பாத்துலே!!! எங்கிடாவது காரை எடுத்துட்டு போய் விட்டுற போற!!
Take care!! :-)

சொன்னது...

ஒத்த கண்ணு போச்சா? அதிகமா அடிக்காதலே, தம்முதான்.

வெவசாயி

சொன்னது...

//எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.//

எல்லாருக்கும் ஒரு கவலைன்னா உங்களுக்கு இதான் பெரியா கவலையா?? :))

ஏமாத்துற வேலையெல்லாம் இருக்கட்டும், கண்ணை செக் பண்ணுங்க மொதல்ல..

சொன்னது...

:)
பழிக்குப் பழி

சொன்னது...

பழய நண்பர்களை சந்திப்பது போன்ற மகிழ்ச்சி வேறெதும் இல்லை.. :)

சொன்னது...

CVR

//இப்போ ஆட்டம் கொறைஞ்சுப்போச்சுன்னு நெனப்போ!! ;)//

பின்ன :))

//எப்படிப்பா உனக்கு மட்டும் இப்படியெல்லாம் புத்தி போகுது?? :-ஓ//

உங்க கூட சேர்ந்ததுல இருந்துதாண்ணே :))

//எங்கிடாவது காரை எடுத்துட்டு போய் விட்டுற போற!! //

அட..இடது கண்ணுக்கும் சேர்த்து வலது கண் வேலை பார்க்குதுல்ல..இடது கண்ணில் மட்டும் சின்ன எழுத்து படிக்கறதுக்கு தானே தாவு தீருது :)))


வெவசாயி

சரிங்ங்ங்க்ண்ணா :)))

சொன்னது...

காயத்ரி

வாங்க கவிஞரே! :))

//எல்லாருக்கும் ஒரு கவலைன்னா உங்களுக்கு இதான் பெரியா கவலையா?? //

இதுவும் ஒரு நியாயமான கவலை தானே :)))

//
ஏமாத்துற வேலையெல்லாம் இருக்கட்டும், கண்ணை செக் பண்ணுங்க மொதல்ல..//

வலது கண் டபுள் டூட்டி பார்க்குது..இருந்தாலும் மொத்தமா இருட்டறதுக்குள்ள பண்ணிடனும்...பார்ப்போம் (இனி எங்கிட்டு பார்க்கறது) :))))

நன்றி ஹை!!தம்பியண்ணன்

நாம ரெண்டு பேரும் இதே விளையாட்டைத் தொடருவோம் :)))


கயல்விழி முத்துலட்சுமி

//பழய நண்பர்களை சந்திப்பது போன்ற மகிழ்ச்சி வேறெதும் இல்லை.. :)//

ஆமாங்கக்கா ஆமா :))

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்னு சிவாஜியை விட டபுள் மடங்கு ரியாக்ஷனைக் கொடுத்துருவோம்ல :)))

சொன்னது...

hahaha...
nalla mixturea oru nalla post :)
nice...

சொன்னது...

eluthaalar sujathakku en irangalgal

சொன்னது...

அருமை ;)

நான் விளையாட்டில் இல்லை..!

சொன்னது...

\\இருவருமே கல்லூரி நாட்களிலிருந்து ரொம்பவும் மாறிவிடவில்லை என்பது அவன் வந்ததுமே தெரிந்தது. \\

மாறாதது இருவரின் தோற்றமா?? ....... உங்களை மாதிரியே இன்னொரு 'மார்க்கெண்டேயன்' இருக்கிறாரோ?

சீக்கிரம் உங்க கண்ணை டெஸ்ட் பண்ணிடுங்க ,
சோடாபுட்டி போட்ட பிறகாச்சும், பதிவுகள் எல்லாம் படிப்பீங்களா......இல்ல வழக்கம்போல 'repeatu'or :))ன்னு தான் பின்னூட்டமா??

சொன்னது...

//அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு "இப்படியாடா இருந்தோம்" என்றான் சிரித்தபடி. விடுதி வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள், நண்பர்களிடையான சண்டைகள், மன வருத்தங்கள், எதிர்கொண்ட சவால்கள், குடும்பம், நண்பர்களின் திருமணம், பணி மாற்றங்கள் என பேசப்பேச பேசுவதற்கான விஷயம் இன்னும் நிறையவே மீதமிருந்தது. அந்த வாரமே சியாட்டலுக்குச் சென்றுவிட்டான். இதன்பின் அவனை எப்போது சந்திப்பேனோ ஆனால் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வாரயிறுதி மறக்கமுடியாத ஒன்றாகிப் போனது//

கப்பி,
இந்த மாதிரி எழுதறப் பாரு...இந்த எழுத்துக்குத் தாம்ப்பா நான் விசிறி. உருசிய எழுத்தாளர் ஆண்டன் செகோவை(Anton Chekov) ஞாபகப்படுத்துது உன் எழுத்துகள். செம டச்சிங். அதோட கொசுவத்தி சுத்துறதுல என்னைப் பொருத்த வரைக்கும் நீ தான் மாஸ்டர்.

//எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை//

இந்த மாதிரி எழுதுறது உன் பன்முகப் பார்வைக்கு ஒரு சான்று :)

சொன்னது...

//இந்த மாதிரி எழுதுறது உன் பன்முகப் பார்வைக்கு ஒரு சான்று :)//

கைப்புள்ள உங்கள கிண்டல் பண்றார் பாருங்க! :)

கண்ண செக் பண்ணீங்களா இல்லியா?

சொன்னது...

Dreamzz

நன்றி மக்கா! :)

கோபிநாத்

//நான் விளையாட்டில் இல்லை..!//

ஹி ஹி ஹி..ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட் :)))


திவ்யா


//....... உங்களை மாதிரியே இன்னொரு 'மார்க்கெண்டேயன்' இருக்கிறாரோ?//

அது யாருங்க அந்த மார்க்? ஓ மார்கண்டேயனா? வெளிய சொன்னா நாலு கழுதை வயசாச்சுன்னு அடிய போட்ருவாங்க..நோ நோ நோ :)))//
சோடாபுட்டி போட்ட பிறகாச்சும், பதிவுகள் எல்லாம் படிப்பீங்களா......இல்ல வழக்கம்போல 'repeatu'or :))ன்னு தான் பின்னூட்டமா??//


அதெல்லாம் தொழில் ரகசியம்..வெளியே சொல்றதில்ல :))))

சொன்னது...

கைப்ஸ்

தன்யனானேன் தல!! நன்றி :)

//அதோட கொசுவத்தி சுத்துறதுல என்னைப் பொருத்த வரைக்கும் நீ தான் மாஸ்டர்.
//

நீங்க தானே அதில குரு! :)


//இந்த மாதிரி எழுதுறது உன் பன்முகப் பார்வைக்கு ஒரு சான்று :)//

ஒரு கண்ணுல பார்வை சரியில்லன்னு சொன்னா அதுக்கு இப்படி நக்கல்சா ;))காயத்ரி

//கைப்புள்ள உங்கள கிண்டல் பண்றார் பாருங்க! :)
//

அவ்வ்வ்வ்வ் :)))

அவரோட அப்ரசண்டிதானே :)))

//கண்ண செக் பண்ணீங்களா இல்லியா?//

பண்ணனும்..என்ன அவசரம் :))))

இந்த வாரம் ஆப்பாயின்மெண்ட் வாங்கனும் :)))

சொன்னது...

:)))

எப்படி மக்கா உனக்கு மட்டும் ?! க்கு மேட்டர் கெடைக்குது???

சொன்னது...

//Divya சொன்னது...
இல்ல வழக்கம்போல 'repeatu'or :))ன்னு தான் பின்னூட்டமா??//

ரிப்பீட்டே!
:-)

சொன்னது...

//எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும்//

//posted by கப்பி பய at 8:51 AM on 29 Feb, 2008//

இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா கப்பி? நியாயமாப் பேசணும்!
எச்ச ஆண்டை ஒழிச்சிருந்தா, இந்தப் பதிவை படிச்சிருக்க முடியுமா?
எங்க அறிவுக் கண்ணைத் தொறந்த பதிவுய்யா! :-)

யாருப்பா அது என்னையும் கப்பி கூட விஷன் டெஸ்டிங் போவச் சொல்லுறது? அங்க அறிவுக் கண்ணையெல்லாம் டெஸ்ட் பண்ணுவாங்களா? :-)

சொன்னது...

//நான் தங்கியிருக்கும் ஏரியாவிலேயே தான் இருந்திருக்கிறான். முகவரி தந்ததும் உடனே கிளம்பி வந்தான்//

உங்க நண்பருக்கு ரொம்பவே துணிச்சல் தான் கப்பி!
உங்களைப் போலவே நானும் என் நண்பன் பிலிப்பை புது ஜெர்சி மாலில் பார்த்தேன்! வாத்தியாரே அவனை மச்சான்-னு தான் கூப்புடுவாரு!

அவனை வூட்டுக்கு கூட்டியாந்து ஒரே நான் ஸ்டாப் மொக்கை தான்!
என்ன நீங்க பதிவாப் போட்டீங்க! நான் ஓர்க்குட்-ல ஒரு பாட்டு டெடிகேட் செஞ்சீட்டேன்! :-)

//பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன்//

யப்பா...
ஏமாத்துனது எல்லாம் இருக்கட்டும்!
அண்ணன் சொல்றேன் திருந்திரு! சீக்கிரமா செக்கப் பண்ணிக்கோ, தள்ளிப் போடாதே!
Take care Kappi :-)

சொன்னது...

//எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.//

என்னுடைய எண்ணப்படி மூன்று ஆண்டுகள் ஒரு நாள் குறைத்து வேலை பார்த்ததற்கான‌
ஈடுகட்டுதல் தான் லீப் வருடம்.

அது சரி, 400 ஆண்டுகட்கு ஒரு முறை பிப்ரவரி மாதம் எத்தனை நாட்கள் கூடுதலாக
வேலை பார்க்கவேண்டும். தெரியுமா..
//இன்னொருமுறை எப்படியாவது ஏமாற்றவேண்டும். அல்லது அதற்குள் ஒரு சோடாபுட்டியை மாட்டவேண்டும்.//
இதற்கு நீங்களே பதில் தந்துள்ளீர்கள்
Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"
நானும் சுப்பனே

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com

சொன்னது...

ஜி

//
எப்படி மக்கா உனக்கு மட்டும் ?! க்கு மேட்டர் கெடைக்குது???//


எலே மக்கா...மேட்டரே இல்லாம பதிவு போட்டு எப்படி ஒப்பேத்த முடியுதுன்னு தானே கேட்கற? :))))
KRS

//
எச்ச ஆண்டை ஒழிச்சிருந்தா, இந்தப் பதிவை படிச்சிருக்க முடியுமா?//

முடியும்..28ம் தேதியே எழுதியிருப்போம்ல...மொக்கை போடறதுன்னு முடிவு பண்ண பிறகு நாள் கணக்கா முக்கியம் :)))


// அங்க அறிவுக் கண்ணையெல்லாம் டெஸ்ட் பண்ணுவாங்களா? :-)//

உங்க அறிவுக்கண்ணுக்கு சோதனையா? இதை கேட்டா செத்துப்போன ஐன்ஸ்டீனுக்கே ஹார்ட் அட்டாக் வரும் :)))

//
உங்களைப் போலவே நானும் என் நண்பன் பிலிப்பை புது ஜெர்சி மாலில் பார்த்தேன்! அவனை வூட்டுக்கு கூட்டியாந்து ஒரே நான் ஸ்டாப் மொக்கை தான்!
//


அட...சூப்பர்..இப்படி எதிர்பார்க்காம சந்திக்கறது இன்ப அதிர்ச்சில்ல :))...நானும் நான் - ஸ்டாப் மொக்கை தான்...அவன் எதுனா பேச ஆரம்பிச்சா குறுக்க புகுந்து நான் பேசிட்டிருந்தேன்...செம காமெடி..


//என்ன நீங்க பதிவாப் போட்டீங்க! நான் ஓர்க்குட்-ல ஒரு பாட்டு டெடிகேட் செஞ்சீட்டேன்! :-)//

இந்த பாட்டு டெடிகேட் பண்றது டிவி, ரேடியோன்னு இப்ப ஆர்குட் வரைக்கும் வந்துருச்சா..கஷ்டகாலம் :))))


//ஏமாத்துனது எல்லாம் இருக்கட்டும்!
அண்ணன் சொல்றேன் திருந்திரு! //

அண்ணன் சொல்லி கேட்காம இருப்பேனா..இந்த வாரமே செக்கப் போயிடறேன் அண்ணாத்த ;))
சூரி


//என்னுடைய எண்ணப்படி மூன்று ஆண்டுகள் ஒரு நாள் குறைத்து வேலை பார்த்ததற்கான‌
ஈடுகட்டுதல் தான் லீப் வருடம்.
//

அவ்வ்வ்வ்வ்...மூனு வருசம் கம்மியா வேலை பார்க்கறோமா..நீங்க ரொம்ப நல்லவருங்கோ :))


//இதற்கு நீங்களே பதில் தந்துள்ளீர்கள்
Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"
நானும் சுப்பனே
//

:))

நன்றி சுப்பு ரத்தினம்! :)

சொன்னது...

சீக்கிரமே specy என இங்கிலிஸ் பிகரெல்லாம் அழைக்க கடவ... :)

சொன்னது...

ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. ஒரு வணக்கம் வச்சிக்கிறேன். ;-)

சொன்னது...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.

சொன்னது...

//Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"//

நெசமாவா? :P

.. அண்ணே கண்ணை பரிசோதித்து விட்டீர்களா?...