புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்

சரித்திர நாயகன்
புர்ர்ர்ரட்சி புதல்வன்
டர்ரு டான்ஸர்
ஏழரையாவது அதிசயம்
சோதனை நாயகன்
நடன சூறாவ'லி'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
சாம் ஆண்டர்சன் நடித்த 'யாருக்கு யாரோ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!!

படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் பாடல் காட்சிகள்:


சாம் ஆண்டர்சன் ஓர்குட் குழுமம் - http://www.orkut.com/Community.aspx?cmm=43224008டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே!!42 பின்னூட்டங்கள்:

சொன்னது...

என்ன கொடுமையோ! இதையெல்லாம் பாக்கனும்னு நம்ம தலையெழுத்து வேறயா? வாழ்க சாம்!

சொன்னது...

//டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே//
ROFL! ரிப்பீட்டு!

சொன்னது...

என்ன கொடுமை கப்பி இது??? :-((((

எங்கள் கப்பி நிலவர் போன்ற ஆணழகர்களே sideline-இல் silent-ஆக இருக்கும்போது,இத்தகைய அநியாயங்கள் நடப்பதை காண நெஞ்சு பொறுக்கவில்லை!!
இதை எதிர்த்து அன்பு நெஞ்சங்கள் யாவரும் நாளை டீ குடிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!!! B-)

சொன்னது...

இது உண்மையிலேயே சினிமாவா? நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. இப்பல்லாம் கலியாணத்தை வீடியோ எடுக்குறாங்கள்ள...அதுல புதுமையா வீடியோவா?

ஆனா ஒன்னு...இதுல நடிச்சவங்களே..இதப் பாத்திருப்பாங்களான்ன்னு தெரியலை.

சொன்னது...

\\டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே!!\\

படிக்கும் போதே பயமாக இருக்கு...இதுல இதை வேற பார்க்கனுமா!!!

சொன்னது...

தமிழ் பிரியன்

நம்ம நெலமை இப்படி ஆகிப்போச்சே :((


Dreamzz

இப்படி புலம்பறதை தவிர வேறென்ன செய்ய முடியும் :))


CVR

பெருங்கொடுமை அண்ணாத்த!!

சந்தடி சாக்குல ஆப்படிக்கறீயளே...வொய் திஸ் மர்டர் வெறி!!

சொன்னது...

ஜிரா

வாங்க அட்லாஸ் சிங்கமே

இது சத்தியமா முழுநீள கொடூர திரைப்படம் தான்!!

//ஆனா ஒன்னு...இதுல நடிச்சவங்களே..இதப் பாத்திருப்பாங்களான்ன்னு தெரியலை.//

பாட்டைப் பார்த்த நமக்கே இந்த நிலைமைனா படம் பார்த்தவன் நல்லாயிருப்பான்னு நினைக்கறீங்களா? :))


கோபிநாத்

//படிக்கும் போதே பயமாக இருக்கு...இதுல இதை வேற பார்க்கனுமா!!!//

:))

யாரும் பார்த்து பயந்துடக்கூடாதுன்னு தான் இப்படி ஒரு எச்சரிகை :))

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

// CVR said...

என்ன கொடுமை கப்பி இது??? :-((((

எங்கள் கப்பி நிலவர் போன்ற ஆணழகர்களே sideline-இல் silent-ஆக இருக்கும்போது,இத்தகைய அநியாயங்கள் நடப்பதை காண நெஞ்சு பொறுக்கவில்லை!!
இதை எதிர்த்து அன்பு நெஞ்சங்கள் யாவரும் நாளை டீ குடிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!!! B-)//

இதை இன்னொரு சூப்பர் ஸ்டார் சொல்றது தான் தாங்கல.

CVRஐ பார்த்துட்டு ஒருத்தர் "ஒரு நடிகர் உங்களை மாதிரியே இருக்காருங்கனு சொன்னாராம்."

யார் அந்த நடிகர்னு கண்டுபிடிபார்க்கலாம்...

(மணி ரத்னத்தோட கடைசி மூணு தமிழ் படத்துலயும் அவர் இருக்காரு)

சொன்னது...

// வெட்டிப்பயல் said...
இதை இன்னொரு சூப்பர் ஸ்டார் சொல்றது தான் தாங்கல.

CVRஐ பார்த்துட்டு ஒருத்தர் "ஒரு நடிகர் உங்களை மாதிரியே இருக்காருங்கனு சொன்னாராம்."

யார் அந்த நடிகர்னு கண்டுபிடிபார்க்கலாம்...

(மணி ரத்னத்தோட கடைசி மூணு தமிழ் படத்துலயும் அவர் இருக்காரு)//

தமிழ்ப் பெண்கள் எல்லாரும் சிவியாரைப் பார்த்து வலையுலக ப்ருத்விராஜ்னு சொல்றாங்களாமே...நீங்க என்னடான்னா மணிரத்னம் சினிமால நடிச்சிருக்காருன்னு சொல்றீங்க....மாதவனைச் சொல்றீங்களா? சித்தார்த்தைச் சொல்றீங்களா? இல்ல..அபிஷேக் பச்சனைச் சொல்றீங்களா?

சொன்னது...

நான் ஏதோ செகுவேரா ரேஞ்சுக்குக் கப்பி போஸ்ட் போட்டிருக்காருங்காட்டியும்-னு ஓடியாந்தா....
இது அத விட புரட்ட்ட்ட்ட்ட்சியா இருக்கேப்பா!

கப்பி - உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்! :-)))

ஜிரா
சாம் ஆண்டர்சனுக்குச் சோடியா பாம் ஆண்டர்சனைப் போட்டா நீங்க ஒன்னும் கோவிச்சிக்க மாட்டியளே? :-))

சொன்னது...

//இல்ல..அபிஷேக் பச்சனைச் சொல்றீங்களா?//

யப்பா "இயக்குனராகிறார் ஜிரா"!
அபிசேக் பச்சன் எப்போய்யா மணி ரத்னத்தோட கடைசி மூணு தமிழ் படத்துல நடிச்சி இருக்காரு?

ஓ...
ஒங்களுக்கு போட்டியாளரே இப்ப மணிரத்னம் தான் இல்ல? அதான் இப்படி டேமேஜ் பண்றீங்களா? :-))

சொன்னது...

எது எப்படியோ...சாம் ஆண்டர்சனைப் பார்த்த பொறவு...ஒரு துணிவு வந்துரிச்சி!

வலையுலகப் பிருத்விராஜையும், வலையுலகப் பருத்திவீரனையும் போட்டு ஒரு டபுள் ஹீரோ படம் பண்ணலாமான்னு இயக்குனர் இமயம் ஜிரா கிட்ட ஐடியா கேக்கணும்! படத்துக்கு பைனான்ஸ் பண்ண வெட்டிகாரு ரெடியாம்!

யார் அந்த வலையுலகப் பருத்திவீரன்-ன்னு கேக்கறீங்களா? அட, குதிரை மேல குனிஞ்சு நிக்கற நம்ம கப்பி வீரனுங்க! :-))

சொன்னது...

இரண்டாவது துண்டில் இருக்கும் பாடலுக்கான நடனத்தில் பாக்யராஜின் சாயல் அதிகமுள்ளது.

சொன்னது...

//யார் அந்த வலையுலகப் பருத்திவீரன்-ன்னு கேக்கறீங்களா? அட, குதிரை மேல குனிஞ்சு நிக்கற நம்ம கப்பி வீரனுங்க! :-))//

இதை நான் கண்மூடித்தனமாக கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன். வலையுலக பருத்திவீரனை உலகுக்கு அறிமுகம் படுத்திய ஒவ்வொரு கமெண்டிலும் கலக்கும் வலையுலகச் செவ்வாழை சித்தப்பு KRS வாழ்க வாழ்க.

சாம் ஆண்டர்சனை யாரோ உசுப்பி விட்டு ஹீரோவாகச் சொல்லிருப்பாங்க...பாவம் மன்னிச்சி விட்டுருங்க.

சொன்னது...

இந்த படத்தை முழுசா பார்த்த மாவீரன் கப்பி அவர்களை என்ன சொல்லி பாராட்டுறதுனே தெரியலை :-))

மருத்துவரைப்பார்த்தாச்சா?

சொன்னது...

கப்பி,

நகைச்சுவைக் காட்சிகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சாச்சு :)

ஆனாலும், சாம் ஆண்டர்சனோட தன்னம்பிக்கையைப் பாராட்டாமல் இருக்க முடியலே!!

சொன்னது...

:)))

நேத்து இந்த விடீயோவ ரொம்ப நாள் பேசாம இருந்த ஒரு நண்பர் கிட்ட காட்டினேன்... இனி இது மாதிரி விடீயோவ அனுப்புனா அப்புறம் மனுசனா இருக்க மாட்டேன்னு சொல்லிப் போட்டாரு :((((

சொன்னது...

எதுக்கு இந்த ஹீரோவா போட்டு இப்படி கலைக்கறீங்க? அவரு மீசைய பாருங்க. அது ஒன்னே போதும் அவரு ஹீரோவா நடிக்க. சான்ஸே இல்ல. அப்படியே தாஜ்மஹால் படத்துல வர மனோஜ (பாரதிராஜாவோட புதல்வன்) ஞாபகப்படுத்துராறு. அவரு இல்லாத குறையை இவரு நிறைவேத்துவாறு. இதுவாச்சும் பரவா இல்ல. ஹீரோ ஹீரோயின் மூஞ்ச பார்த்தவுடனே மக்கள் உஷராயிடுவாங்க. இதுக்கு முன்னாடி "பாசக்கிளிகள்னு" ஒரு படம் வந்துது. கலைஞர் கதை வசனம். பிரபு, முரளி நாசர் எல்லாம் இருந்தாங்க. சரி கலைஞர் படம் பார்க்கலாம்னு அந்த படத்த பார்த்துட்டு அதிர்ச்சி ஆயிட்டேன். சரி நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு என் அண்ணா கிட்ட இந்த படத்த கண்டிப்பா பாருங்க. அப்படியே மனோகரா மாதிரி சூப்பரா இருக்குன்னு பில்ட் அப் கொடுத்து பார்க்க வச்சு ஒரு இருபது நிமிஷம் அசிங்கமா திட்டு வாங்கினேன்;)

சொன்னது...

வெட்டி

இந்த படத்தையும் முழுசா பார்த்த உங்க வீரத்துக்கு தலைவணங்குகிறேன் :))

ஜிரா

உங்களுக்கு பொது அறிவு பாடம் எடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சு..கைப்ஸ் தலயை வச்சு ஒரு குவிஜூ நடத்தினா தான் வேலைக்காவும் :))

கேஆரெஸ் தல

//
இது அத விட புரட்ட்ட்ட்ட்ட்சியா இருக்கேப்பா!
//

இது தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போற புர்ர்ரட்ட்ச்சி தல ;))

//
கப்பி - உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்! :-)))//

எல்லா புகழும் சாம் ஆண்டர்சனுக்கே ;)))

சொன்னது...

வசந்தன்

வாங்க வசந்தன்...பாக்யராஜ் மட்டுமா? ராமராஜன், டிஆர், மனோஜ், ப்ரவீன்காந்த்-ன்னு எல்லாரையும் சேர்த்து செஞ்சவருங்க இவர் :))


கைப்ஸ்

இஸ்ஸ்டாரே, (நாயகன் நாயக்கரே ஸ்டைல்ல :D)

//
வலையுலகச் செவ்வாழை சித்தப்பு KRS வாழ்க வாழ்க.//

:)))))))))

//
சாம் ஆண்டர்சனை யாரோ உசுப்பி விட்டு ஹீரோவாகச் சொல்லிருப்பாங்க...பாவம் மன்னிச்சி விட்டுருங்க.//

ஆமா தல ஆமா...அவரை நினைச்சா பாவமா தான் இருக்கு :)))


வவ்வால்

//இந்த படத்தை முழுசா பார்த்த மாவீரன் கப்பி அவர்களை என்ன சொல்லி பாராட்டுறதுனே தெரியலை :-))//

தெய்வமே..நான் இந்த படத்தைப் பாக்கல..பாக்கல..பாக்கல...ரெண்டு பாட்டை பார்க்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடுச்சு :))


//மருத்துவரைப்பார்த்தாச்சா?//

இந்த படத்துல தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரா ஏதாவது காட்சி இருக்கா என்ன? :)))

சொன்னது...

தஞ்சாவூரான்

நம்மள சந்தோஷப்படுத்த தான் இப்படி வரிசையா நடிக்க வர்றாங்க :))

//ஆனாலும், சாம் ஆண்டர்சனோட தன்னம்பிக்கையைப் பாராட்டாமல் இருக்க முடியலே!!//

பின்ன..ச்சும்மாவா :)))

ஜி

//இனி இது மாதிரி விடீயோவ அனுப்புனா அப்புறம் மனுசனா இருக்க மாட்டேன்னு சொல்லிப் போட்டாரு :((((//

மக்கா..இந்த மாதிரி கொல்வெறி படத்தையெல்லாம் ரசிக்கற பக்குவம் அவருக்கு வரல..பாவம் விட்டுடு :)))

சத்யா

மனோஜ் மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை இளம்புயல்களுக்கு இவர் ஆப்பு வைக்கப்போறாருன்னு உலகமே பார்த்துட்டு இருக்கு :)))

//ஒரு இருபது நிமிஷம் அசிங்கமா திட்டு வாங்கினேன்;)//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :)))

சொன்னது...

என்னாது இப்படி ஒரு சினிமாவா? சொல்லுங்கப்பா என்னா படம்னு.

சொன்னது...

இரத்தகண்ணிரு வருதுய்யா.... :(

சொன்னது...

ம்ம்ம்ம்ம்ம்ம் முடில.... ஆராச்சும் கைதாங்கலா என்னிய கூட்டிட்டு போங்கப்பூ...

கப்பி இந்த வீடியோவ போட்டுக்காட்டியதுக்கு நஷ்ட ஈடா ஒழுங்கா ரெண்டு புல் டக்கீலா அனுப்பனும்னு அண்ணன் சிபி கேட்குறாருங்கோ.. ;))))

சொன்னது...

:))))))))

அச்சச்சோ !!!! பாதி பாட்டு பார்த்துக்கிட்டிருந்தப்பவே மயங்கிட்டேன் !!!! என்னா சூப்பர் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் !!!! எக்சலன்ட் சாம் !!

எதோ ஒரு நாதாரி ITல நட்டக்கணக்கு காட்டணும்னு படம் எடுத்து வெளில விட்டிருக்கு !!

எங்க ஊரு JKரித்திஸ் தேவலை போல !!

சொன்னது...

அண்ணே !!! அந்த ஆர்குட் குழுமத்தில் நானும் சேர்ந்திருக்கேன் !! பசங்க சும்மா கலாய் கலாய்ன்னு கலாய்ச்சிட்டு இருக்காங்க !!

உங்க பதிவுக்கு அந்தக் குழுமத்தில் சுட்டி கொடுத்திருக்கேன்.

:)

சொன்னது...

விவ்ஸ்

படம் பேரு 'யாருக்கு யாரோ'..இந்த பாட்டையெல்லாம் பார்த்த பிறகும் படம் பெயரை தெரிஞ்சுக்கனும்னு நினைக்கற உங்க வீரத்துக்கு தலை வணங்கறேன் :))


இராம்

//இரத்தகண்ணிரு வருதுய்யா.... :(//

தலைமகனே கலங்காதே!!
தனிமை கண்டு வருந்தாதே!! :))

ஜொ.பா

//ம்ம்ம்ம்ம்ம்ம் முடில.... ஆராச்சும் கைதாங்கலா என்னிய கூட்டிட்டு போங்கப்பூ... //

அவ்வ்வ்வ்வ்வ் :))

//ரெண்டு புல் டக்கீலா அனுப்பனும்னு அண்ணன் சிபி கேட்குறாருங்கோ.. ;))))
//

இது என்ன பக்கத்து இலைக்கு பாயசமா :))))


பொன்வண்டு

//அச்சச்சோ !!!! பாதி பாட்டு பார்த்துக்கிட்டிருந்தப்பவே மயங்கிட்டேன் !!!! //

வண்டுக்கு ஒரு ஜோடா கொடுங்கப்பா...இதுக்கே மயங்கினா எப்படி? இன்னும் நீங்க நிறைய படம் பார்த்து எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கனும் :)))

//
எதோ ஒரு நாதாரி ITல நட்டக்கணக்கு காட்டணும்னு படம் எடுத்து வெளில விட்டிருக்கு !!
//

அதுக்கு நாம தான் கிடைச்சோமா? என்ன கொடுமை இது

//
எங்க ஊரு JKரித்திஸ் தேவலை போல !!
//

ரித்திஷு தேவலையா?? அவனா(ரா) நீயு :)))//அண்ணே !!! அந்த ஆர்குட் குழுமத்தில் நானும் சேர்ந்திருக்கேன் !! பசங்க சும்மா கலாய் கலாய்ன்னு கலாய்ச்சிட்டு இருக்காங்க !!
//

அதையெல்லாம் படிச்சா சாம் சாமியாராயிடுவாரு :)))


//உங்க பதிவுக்கு அந்தக் குழுமத்தில் சுட்டி கொடுத்திருக்கேன்
//

இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன் :)))

சொன்னது...

theatreku pokamma escape annalum oolaga tholaikatchikalil poduvangale
iyyo bayama iruku.partha unggala eppadi paraturathu???(grrrrr) isthri potti

சொன்னது...

பாவமுங்க...எல்லோரும் தம்பி சாம் பற்றி மட்டும் சொல்றீங்களே!...அந்த அக்கா, cinematographer, choreographer, constume designer - எல்லோரும் எம்புட்டு பாடுபட்டு படுத்துறாங்க...ஆனாலும் என்ன ஆனாலும் சரின்னு இந்த படத்தை முழுசா பார்க்கணும்னு ஒரு ஆசைங்க. (என்னது இதுக்குப் பேருதான் suicidal termperament அப்டின்றதா?!)

சொன்னது...

ஒரு வழியா பாதி படத்த பார்த்து முடிச்சாச்சு. ஒரே நாள்ல முழு படத்தையும் பார்க்குற தைரியம் இல்ல, அதான். எப்போவெல்லாம் மனசு கஷ்டமா இருக்கோ அப்பவெல்லாம் இந்த படத்துல வர இரண்டு பாட்ட பார்த்தா போதும், அப்படியே பீரிகிட்டு வருது...சிரிப்பு தான். இந்த படத்த பார்த்துட்டு விஜய் டிவில அடுத்த ஜோடி நம்பர் ஒன் சீசனுக்கு இதுல வர ஹீரோ ஹீரோயினையும் புக் பண்ணிட்டாங்களாம். இந்த படத்தோட நடன இயக்குனர 'படவா' கோபி ஜோடிக்கு போடலாம்னு யோசிச்சிகிட்டிருக்காங்கலாம். அது மட்டும் இல்ல, இந்த படத்தோட ஹீரோயினுக்கு இப்போ கையில நாலு படமாம்....அதிர்ச்சி ஆகாதீங்க, எல்லாம் அவங்களோட படம் தேன், அத காட்டி ஹீரோயின் சான்ஸ் தேடுறாங்கலாம். இந்த படத்துல வர வெண்ணிற ஆடை மூர்த்தி சார் இந்த பொண்ணு சீரியசா நடிச்சாலும் நல்லா காமெடி வருதுன்னு தன்னோட 'மீண்டும் மீண்டும் சிரிப்புல' தனக்கு ஜோடியா நடிக்கிறியானு கேட்டாராம். அதுக்கு இந்த ஹீரோயின் தான் நடிச்சா ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற 'யங்' ஹீரோஸ் கூட தான் நடிப்பேனு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்களாம்!

சொன்னது...

இஸ்திரி பொட்டி

//tholaikatchikalil poduvangale
iyyo bayama iruku.//

இதுக்கே கலங்கிப்போயிட்டா எப்படி..இவர் இன்னும் எத்தனை வருஷத்துக்கு நடிக்கப் போறாரு :)))

//partha unggala eppadi paraturathu???//

நான் இந்த பாட்டை மட்டும் தான் பார்த்தேனுங்க..பாராட்ட நான் தகுதியானவன் இல்ல :))))

தருமி

//எல்லோரும் எம்புட்டு பாடுபட்டு படுத்துறாங்க...//

அநியாயத்துக்கு உசுப்பேத்திவிட்டு ரணகளப்படுத்தியிருக்காங்க :)))

//
ஆனாலும் என்ன ஆனாலும் சரின்னு இந்த படத்தை முழுசா பார்க்கணும்னு ஒரு ஆசைங்க. //

தற்கொலை முயற்சின்னு உள்ள புடிச்சு போட போறாங்க :))


சத்யா

:)))


முழுப் படத்தையும் பார்த்துட்டீரா..உங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்குது :))))

ஸ்கூப் நியூஸ் செம காமெடி கலக்கல்ஸ் :)))

சொன்னது...

Compared to this bloke, Krotham/Asoka Prem appears like nadigar thilagam.

சொன்னது...

விஜயின் ஆரம்ப காலப் படங்களைப் பார்த்து நாமும் நடிக்கலாம் என்று
ஒரு எண்ணம் வந்திருக்கும், நடித்து விட்டார் :)
வருங்கால சூப்பர் ஸ்டார்
சாம் ஆண்டர்சன் வாழ்க :)

சொன்னது...

நாலு பேரு நல்ல படம் பார்க்கனும்னா இந்த பின்னூட்டம் தப்பே இல்லை-Movie Link
Still Pics of the Gr8 Star

சொன்னது...

ஒரு திரைப்படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு நூற்றாண்டாய் கட்டமைக்கப்பட்ட அனைத்து கருத்து மையங்களையும் தகர்த்து தூள் தூளாக்கி பகடி செய்யும் 'யாருக்கு யாரோ' ஒரு பின்நவீனத்துவ திரைப்படம் என்றே படுகிறது.

எப்ப்ப்புடி...........? ;)

சொன்னது...

இந்த பாட்டை அரை நிமிஷம் பார்த்ததுக்கே நான் கொலநடுங்கிட்டன். ஆனால் இந்த படத்தை முழுசா பத்ததுக்கப்புறம் எந்த பேய் பிசாசு வந்தாலும் பயமே வராது!!

சொன்னது...

இந்த பாட்டை இந்த பதிவுல நான் பாக்கலை இதுக்குமுன்னாடியே நந்து f/o நிலா எனக்கு சாட்ல அனுப்பி பாக்க சொன்னார்

(என்னா ஒரு வில்லத்தனம்)

சொன்னது...

இந்த படத்தை முழுமையா பாத்த கப்ப்பி, சத்யா மன உறுதியை மெச்சுகிறேன்.

சொன்னது...

நவீன்

எங்கியோ போயிட்டீங்க :))

பின்நவீனத் திரைப்படமாமுல்ல :)))


கருப்பன்

//
இந்த பாட்டை அரை நிமிஷம் பார்த்ததுக்கே நான் கொலநடுங்கிட்டன். ஆனால் இந்த படத்தை முழுசா பத்ததுக்கப்புறம் எந்த பேய் பிசாசு வந்தாலும் பயமே வராது!!
//

அரை நிமிஷத்துக்கேவா :))

இது மாதிரி பாட்டெல்லாம் பார்த்து நம்ம தைரியத்தை வளர்த்துக்கனும்..அப்ப தான் வருங்காலத்துல சாம் ஆண்டர்சன் நடிக்கற படத்தையெல்லாம் பார்த்து 'ரசிக்க'???!!! முடியும் :))))மங்களூர் சிவா

//என்னா ஒரு வில்லத்தனம்//

அது வில்லத்தனம் இல்ல சிவா..பாசம் :)))


// இந்த படத்தை முழுமையா பாத்த கப்ப்பி, சத்யா மன உறுதியை மெச்சுகிறேன்.
//

சத்யா தாங்க முழுசா பார்த்தாரு..நான் இந்த பாட்டு, க்ளைமாக்ஸ் சீன் மட்டும் தான் பார்த்தேன்..அதுக்கே ம்ம்ம்முடியல ;))))

சொன்னது...

என்ன நடக்குது இங்க. ஒரு மனுஷன் இவ்வளவு தன்னம்பிக்கையோட தன் திறமையை நிரூபிச்சு தமிழ்நாட்டு மக்களுக்கு விமோசனம் குடுக்க வந்தா ஆளாளுக்கு கலாய்ச்சுட்டிருக்கீங்க. என்ன உலகம் இது.

இவங்க எல்லாரையும் குத்துங்க எச‌மான் குத்துங்க‌. :(

சொன்னது...

என்ன நடக்குது இங்க. ஒரு மனுஷன் இவ்வளவு தன்னம்பிக்கையோட தன் திறமையை நிரூபிச்சு தமிழ்நாட்டு மக்களுக்கு விமோசனம் குடுக்க வந்தா ஆளாளுக்கு கலாய்ச்சுட்டிருக்கீங்க. என்ன உலகம் இது.

இவங்க எல்லாரையும் குத்துங்க எச‌மான் குத்துங்க‌. :(இப்படிக்கு நடிப்புச்சுறாவளி சாம்
அகில உலக ரசிகர் மன்றத்தலைவி

வேற யாராவது பதவிக்கு போட்டி போட்டீங்க அவ்ளோதான் சொல்லிட்டேன். அப்புறம் சூறாவளி நேரா உங்க வீட்டுக்கே வந்திடும். சாக்கிரதை