சினிமா! சினிமா!! சினிமா!!! - 1
சினிமா வாய்ப்பு தேடிய, தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் சிலர் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்தே வாய்ப்பு தேடி வருகிறார்கள். சில நண்பர்கள் படிப்பு முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தபின் சினிமாத்துறையால், அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தவர்கள். சில நண்பர்கள் ஓரிரு மாதங்களில் அத்துறையின் நிதர்சனத்தை உணர்ந்து வேறு வேலையில் சேர்ந்தார்கள். சிலரின் நம்பிக்கை மட்டும் அசைக்க முடியாததாக இருக்கிறது.
*******************************************
கோகுலகிருஷ்ணன். சொந்த ஊர் போடி. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் கணிப்பொறியில் பட்டயப் படிப்பு. நாங்கள் வைத்த பெயர் 'கொம்பு'. ஆரம்பத்தில் அவரின் சினிமா ஆசையைப் பல முறை கிண்டலடித்திருக்க்கிறோம். ஆனால் காலப்போக்கில் அவர் காட்டிய உத்வேகமும் அவர் பட்ட கஷ்டங்களும் எங்கள் மனதை மாற்றின. அவர் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.
படிப்பு முடிந்து கணிணித்துறையில் வேலை தேட சென்னைக்கு வந்தவர் சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். செலவுக்காக வீட்டிலிருந்து வாங்கும் பணம் அனைத்தையும் புகைப்படம் எடுக்கவும் ஆல்பம் தயார் செய்யவும் செலவு செய்துவிடுவார். அறை நண்பர்களுடனும் அவ்வளவாக பேச மாட்டார். அவருக்கு அறிவுரை சொல்லும் தோரணையில் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுவார்.
ஆரம்பத்தில் சிறு வேடங்கள் கிடைத்தபோது அவற்றை நிராகரித்தவர் நாட்கள் செல்லச் செல்ல சிறுசிறு துண்டு வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தலை காட்டினார்.
இரண்டு வருடங்கள் முனைப்பாக இருந்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வாய்ப்பும் வராமல் பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தரவு உள்ளீட்டுத் (Data Entry) துறையில் தற்காலிகமாக வேலை செய்தபடி சினிமா வாய்ப்புகள் தேடினார். அடுத்த ஆறு மாதத்தில் உண்மை நிலையை உணர்ந்து சினிமாவைத் துறந்து இப்போது அதே வங்கியில் நிரந்தர பணியில் சேர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
*******************************************
கோகுலகிருஷணனின் அறை நண்பர் சங்கர். இவரும் மதுரை பாலிடெக்னிக்கில் படித்தவர் தான். சென்னையில் ஒரு சிறு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவரது கனவு திரைப்பட இயக்குனராவது.
பொதுவாக புதிதாக ரிலீசாகும் படங்களை முதல் நாளிலோ முதல் வாரத்திலோ உதயம், கமலா,நேஷனல் அல்லது கருமாரி காம்ப்ளெக்ஸில் பார்த்துவிடுவது வழக்கம். இவருடன் படம் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள், எப்படி எடுக்கலாம் என சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஏரியாவில் எந்த படப்பிடிப்பு நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவார்.
தொழில்நுட்பம் குறித்து பெரிதாகத் தெரியாது எனினும் இயக்குனராகும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர். திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசையிருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கைவிட்டவர். இவருக்கு பிடித்த இயக்குனர் பாலா. அதற்கு அவர் சொல்லும் காரணம் இயக்குனர் பாலா மட்டுமே திரைப்படக் கல்லூரியில் பயிலாதவர்களையும் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வாராம். நண்பர் வேலை செய்துகொண்டே இயக்குனராகும் முயற்சியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
*******************************************
வடபழனி செந்தில் ஆண்டவர் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் அதற்கு முன்னர் நடிகர் பாலா சிங் தங்கியிருந்தாராம். வேறொரு வீட்டிற்கு மாறிப் போனதில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் மீண்டும் அங்கு குடி வர கேட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் எங்களிடம் சொன்னார். திரைப்படத்துறையில் உள்ளவர்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.
சினிமா! சினிமா!! சினிமா!!! - 2
Subscribe to:
Post Comments (Atom)
35 பின்னூட்டங்கள்:
கப்பி,
நீ ஏன் சினிமால நடிக்கக்கூடாது???
உன் திறமைக்கு நீ நல்ல டைரக்டராக்கூட வரலாம்... பேரரசு மாதிரி பாட்டெல்லாம் வேற எழுதற :-)
// ஏன் சினிமால நடிக்கக்கூடாது???
உன் திறமைக்கு நீ நல்ல டைரக்டராக்கூட வரலாம்... பேரரசு மாதிரி பாட்டெல்லாம் வேற எழுதற :-)
//
ஆனாலும் ரொம்பத்தான் லொள்ளு போங்க :))
//ஆனாலும் ரொம்பத்தான் லொள்ளு போங்க :))//
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்பா!!!
நீ சாப்ட்வேர் ஃபீல்ட்ல இருக்கறதுதான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது...
ஏன்னு கேக்காத.. எனக்கு தெரியாது ;)
//இரண்டு வருடங்கள் முனைப்பாக இருந்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வாய்ப்பும் வராமல் பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தரவு உள்ளீட்டுத் (Data Entry) துறையில் தற்காலிகமாக வேலை செய்தபடி சினிமா வாய்ப்புகள் தேடினார். அடுத்த ஆறு மாதத்தில் உண்மை நிலையை உணர்ந்து சினிமாவைத் துறந்து இப்போது அதே வங்கியில் நிரந்தர பணியில் சேர முயற்சி செய்துகொண்டிருக்கிறார். //
இது நிதர்சனமான உண்மைப்பா கப்பி,
அவர்மட்டுமில்லே நிறையபேரு இப்பிடித்தான் சினிமாவிலே சாதிப்போமின்னு கிளம்பி வந்து தங்களோட இளமையே தொலைத்து விட்டு கடைசிலே கிடைக்கிற வேலைக்கு போவாங்க...
ஆனா வேலையிலே சேர்ந்துட்டாலும் அந்த சினிமா ஆசை,நினைப்பு, அதேமட்டும் மறக்காமே கஷ்டப்படுவாங்க!!!!
சொன்னா வெக்கக்கேடு கப்பி!
என் ப்ரெண்டு ஒருத்தன் மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு சினிமா ஆசையால வீட்டுல கோவிச்சிகிட்டு சென்னை வந்தான். வந்தவன் ஒரு இயக்குனர்கிட்ட உதவியாளனா இருக்கறதா சொன்னான். கடேசில பார்த்தா அந்த ஆளும் கடைசில இயக்குனரே இல்ல. இது தெரிஞ்சும் அவர்கூடவே ஒரு வருஷமா உதவியா இருந்திருக்கான். உதவின்னா எப்படி?
அவங்க கதை சொல்லுவாங்களாம் இவர் பேப்பருல உக்காந்து எழுதுவாராம். இதுக்கு சம்பளமும் இல்லாம 8 மாசம் வேலை பாத்திருக்கான். நல்ல திறமையானவன் புத்திசாலி.
கடேசி வரைக்கும் அவனும் ஒரு படம் கூட எடுக்கல இவனும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட போனதில்ல.
இப்போ ஒரு மல்டிமீடியா கம்பெனில வேலை செய்யறான்.
//சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்பா!!!
நீ சாப்ட்வேர் ஃபீல்ட்ல இருக்கறதுதான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது...
ஏன்னு கேக்காத.. எனக்கு தெரியாது ;)
//
அடப்பாவி மக்கா....நான் எதுவும் கேட்கல விடு ;)
//ஆனா வேலையிலே சேர்ந்துட்டாலும் அந்த சினிமா ஆசை,நினைப்பு, அதேமட்டும் மறக்காமே கஷ்டப்படுவாங்க!!!!
//
ஆமாங்க ராம்...சரியா சொன்னீங்க..
//good one //
நன்றி நிர்மல்!
//பேரரசுக்கும் கப்பி பயலுக்கும் என்ன வித்தியாசம்?
//
வானமே எல்லை...முதல் வரவு நல்வரவாகுகன்னு சொல்ல விடறீங்களா??? அதுக்குள்ள பேரரசுக்கும் எனக்கும் வித்தியாசம் கண்டுபுடிக்கறீங்க :))
//
கப்பி பயலுக்கு படம் எடுக்கத் தெரியாது.அதனால எடுக்கறதில்லை.பேரரசுக்கும் படம் எடுக்கத் தெரியாது.ஆனா எடுக்கறாரு...
//
ஆனா டேமேஜ் இல்லாம காப்பாத்திட்டீங்க..டாங்கிஸ் ;)
தம்பி..
இது மாதிரிதான் பல பேர் தெரிந்தே ஏமாந்துகொண்டிருக்கிறார்கள் :(
//கப்பி,
நீ ஏன் சினிமால நடிக்கக்கூடாது???
உன் திறமைக்கு நீ நல்ல டைரக்டராக்கூட வரலாம்... பேரரசு மாதிரி பாட்டெல்லாம் வேற எழுதற :-)//
இதை நான் 'ஆணி'த்தரமாக வழிமொழிகிறேன்.
:))
////சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்பா!!!
நீ சாப்ட்வேர் ஃபீல்ட்ல இருக்கறதுதான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது...
ஏன்னு கேக்காத.. எனக்கு தெரியாது ;)
//
இந்தியாவின் பொருளாதார வீக்கத்தைக் குறைக்க உருகுவேயில் ஆணி புடுங்கும் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பிநிலவன் வாழ்க வாழ்க!!
//இதை நான் 'ஆணி'த்தரமாக வழிமொழிகிறேன்.
:))
//
என்ன வழிமொழியறீங்க?? ;)))
//என்ன வழிமொழியறீங்க?? ;))) //
கோலிவுட்டின் இளம் நாயகன்...உருகுவேயின் வருங்கால அதிபர்...தமிழகத்தின் வருங்கால முதல்வர் டைரக்டர் கப்பியரசு வாழ்க வாழ்க!!
:)
ஹ்ம்ம்ம்!
//ஹ்ம்ம்ம்!//
அதே..வேறென்ன சொல்வது!
கப்பி, இப்படி சினிமா மோகத்துல வாழ்கைய இழந்தவங்க நிறைய பேர்.. என்னை பாருங்க.. எனக்கும் ஆசைகள் இருக்கு.. ஆனா அதை எல்லாம் குழிதோண்டி புதைச்சுட்டு வாழ்க்கையை ஓட்டுறேன்..
ஆமா கப்பி, வெட்டிபயல் சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு.. நீ ஏன் சினிமால நடிக்க கூடாது..
முந்நூறாவது போஸ்டுக்கு வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா
//கப்பி, இப்படி சினிமா மோகத்துல வாழ்கைய இழந்தவங்க நிறைய பேர்..
//
உண்மை கார்த்திக். அதில் நான் சந்தித்த சிலரைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.
//
என்னை பாருங்க.. எனக்கும் ஆசைகள் இருக்கு.. ஆனா அதை எல்லாம் குழிதோண்டி புதைச்சுட்டு வாழ்க்கையை ஓட்டுறேன்..
//
ஆகா...உங்களுக்குள்ள வருங்கால முதல்வர் காத்துகிட்டிருக்காரா?? ;)
ஆசை கைகூட வாழ்த்துக்கள்!
//
ஆமா கப்பி, வெட்டிபயல் சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு.. நீ ஏன் சினிமால நடிக்க கூடாது..
//
நீங்களும் அந்த எதிரிகளின் சதித்திட்டத்தில் சேரலாமா?? ;))
//
முந்நூறாவது போஸ்டுக்கு வந்து வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா
//
ஆகா..பழசை மறக்காம இருக்கீங்களே :)
முந்நூறெல்ல்லாம் நினைச்சு பார்க்கவே மலைப்பா இருக்கு...நீங்க அசால்டா அடிச்சு ஆடிட்டிருக்கீங்க :)
நன்றி கார்த்திக்!
என்னோட இரண்டு பின்னூட்டங்களைக் கண்மூடித் தனமாக நிராகரித்த ஜாவா பாவலர் கப்பிபிரசாத்தின் அதிகாரப் போக்கை வெகு ஆணித் தரமாகக் கண்டிக்கிறேன். அவன் அவன் பின்னூட்டத்துக்கு தவம் கெடக்கும் போது போட்ட ரெண்டு பின்னூட்டத்தை அழிச்சிருக்காம்பா...வெட்டி, தம்பி என்னான்னு கேளுங்க...இதுக்கு எம்புட்டு செலவானாலும் நான் பாத்துக்கறேன்.
கப்பி...ஒரு பின்னூட்டத்தோட வெலை தெரியுமாய்யா ஒனக்கு? நீ செய்ற தனிமனித கருத்து இருட்டடிப்பை "ஜாவா பாவலருக்கு சில கேள்விகள்"னு ஒரு பதிவு போட்டு என்னான்னு கேக்கறேன்.
நீதி என் பக்கம்.
//என்னோட இரண்டு பின்னூட்டங்களைக் கண்மூடித் தனமாக நிராகரித்த ஜாவா பாவலர் கப்பிபிரசாத்தின் அதிகாரப் போக்கை வெகு ஆணித் தரமாகக் கண்டிக்கிறேன்.
//
நிராகரிக்கப்படவில்லை...நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...அந்த பின்னூட்டத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கருதுவதால் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை :D
//
அவன் அவன் பின்னூட்டத்துக்கு தவம் கெடக்கும் போது போட்ட ரெண்டு பின்னூட்டத்தை அழிச்சிருக்காம்பா...
//
நாங்களும் தவம் கிடக்கறவங்க தான் ;)
//
வெட்டி, தம்பி என்னான்னு கேளுங்க...இதுக்கு எம்புட்டு செலவானாலும் நான் பாத்துக்கறேன்.
//
இதுக்கு கூட்டு வேற சேர்க்கறீங்கள்ளா?? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லையா...அடுத்தவனை அழிக்க என்னா அராஜகம் பண்றாங்கப்பா!!
//
கப்பி...ஒரு பின்னூட்டத்தோட வெலை தெரியுமாய்யா ஒனக்கு? நீ செய்ற தனிமனித கருத்து இருட்டடிப்பை "ஜாவா பாவலருக்கு சில கேள்விகள்"னு ஒரு பதிவு போட்டு என்னான்னு கேக்கறேன்.
//
உங்க பின்னூட்டங்கள் தான் தனிமனித தாக்குதலோட இருக்கு...
அதைவிட கொடுமை நீங்க போட்ட பின்னூட்டத்தை இப்ப 'கருத்து'ன்னு சொல்றது...அதை நிறுத்திவச்சா 'இருட்டடிப்பு'ன்னு பெரிய வார்த்தை பேசறது...உங்களுக்கே ஓவரா தெரியல??
//
நீதி என் பக்கம்.
//
யாரது நீதி?? பக்கத்துல உக்கார்ந்து வேலை பார்க்கற சேட்டு பொண்ணா?? நீதி குப்தாவா? நீதி சிங்கா??
ஹிஹிஹிஹிஹி நல்ல பதிவு ஜூனியர்
//ஹிஹிஹிஹிஹி நல்ல பதிவு ஜூனியர்
//
நன்றி தல ;)
//இந்தியாவின் பொருளாதார வீக்கத்தைக் குறைக்க உருகுவேயில் ஆணி புடுங்கும் ஜாவா பாவலர் கவிஞ்சரு கப்பிநிலவன் வாழ்க வாழ்க!!
//
//கோலிவுட்டின் இளம் நாயகன்...உருகுவேயின் வருங்கால அதிபர்...தமிழகத்தின் வருங்கால முதல்வர் டைரக்டர் கப்பியரசு வாழ்க வாழ்க!!
:)
//
மிரட்டி அடிபணிய வைத்து இந்த பின்னூட்டங்களை வெளியிட செய்த கைப்பு...உன் பேச்சு கா :))
//என்னோட இரண்டு பின்னூட்டங்களைக் கண்மூடித் தனமாக நிராகரித்த ஜாவா பாவலர் கப்பிபிரசாத்தின் அதிகாரப் போக்கை வெகு ஆணித் தரமாகக் கண்டிக்கிறேன். //
யேய் கப்பி,
உனக்கு எம்பூட்டு தைரியம் இருந்தா தல கமெண்டே நிராகரிப்பே.... அம்பூட்டு ஆகிப்போச்சா உனக்கு????
//வெட்டி, தம்பி என்னான்னு கேளுங்க...இதுக்கு எம்புட்டு செலவானாலும் நான் பாத்துக்கறேன்.//
ஏன் தல... நீ இதிலே என்னை சேர்க்கலே????
//கப்பி...ஒரு பின்னூட்டத்தோட வெலை தெரியுமாய்யா ஒனக்கு? நீ செய்ற தனிமனித கருத்து இருட்டடிப்பை "ஜாவா பாவலருக்கு சில கேள்விகள்"னு ஒரு பதிவு போட்டு என்னான்னு கேக்கறேன். //
தல சீக்கிரம் போடு... இல்லேன்னா நான் வந்து "கப்பியென்னும் கயவனுக்கு"னு ஒரு பதிவு போட்டுறுவேன்.... :)))
//நீதி என் பக்கம். //
நீதிக்குப்தா மால்பூவா அண்ணி பேரா தல???
//ஆகா..பழசை மறக்காம இருக்கீங்களே :)
முந்நூறெல்ல்லாம் நினைச்சு பார்க்கவே மலைப்பா இருக்கு...நீங்க அசால்டா அடிச்சு ஆடிட்டிருக்கீங்க //
கப்பி பயலே, உங்களை மாதிரி நண்பர்களின் ஆதரவும் ஆலோசனையும் இருந்தா.. எதையும் சாதிக்கலாம்னு எனக்கு புரிய வச்சது அந்த 300வது மைல்கல்
//தல சீக்கிரம் போடு... இல்லேன்னா நான் வந்து "கப்பியென்னும் கயவனுக்கு"னு ஒரு பதிவு போட்டுறுவேன்.... :)))
//
போட்டாச்சு போட்டாச்சு...பதிவெல்லாம் வேணாம் ;)
//நீதிக்குப்தா மால்பூவா அண்ணி பேரா தல???
//
அதைத் தான் நானும் கேக்கறேன்..இன்னும் பதிலைக் காணோம்
//கப்பி பயலே, உங்களை மாதிரி நண்பர்களின் ஆதரவும் ஆலோசனையும் இருந்தா.. எதையும் சாதிக்கலாம்னு எனக்கு புரிய வச்சது அந்த 300வது மைல்கல் //
மேன்மேலும் வளர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :D
தலயோட பின்னூட்டத்தை நிறுத்தி வைத்து அவருக்கு மனவுலைச்சலை ஏற்படுத்திய இந்த பதிவை நான் கன்னா பின்னானு புறக்கனிக்கிறேன்...
அப்பறம் அந்த நிதி அண்ணியபத்தி சொல்லவே இல்லையே தல...
//தலயோட பின்னூட்டத்தை நிறுத்தி வைத்து அவருக்கு மனவுலைச்சலை ஏற்படுத்திய இந்த பதிவை நான் கன்னா பின்னானு புறக்கனிக்கிறேன்...
//
மன உலைச்சலா?? ஏன்யா பின்னூட்டம் போடும்போதே மனசாட்சியை கழட்டி வச்சுட்டு தான் போடுவீங்களா??? :))
//அப்பறம் அந்த நிதி அண்ணியபத்தி சொல்லவே இல்லையே தல...
//
நான் நிறுத்திவைக்காம இருந்தா இந்த மேட்டர் வெளிய வந்திருக்குமா??
//யாரது நீதி?? பக்கத்துல உக்கார்ந்து வேலை பார்க்கற சேட்டு பொண்ணா?? நீதி குப்தாவா? நீதி சிங்கா?? //
//நீதிக்குப்தா மால்பூவா அண்ணி பேரா தல??? //
//அப்பறம் அந்த நிதி அண்ணியபத்தி சொல்லவே இல்லையே தல...//
அட அயோக்கியத் தனம் பண்ணற அராஜக அடாவடி அப்ரெண்டீசுங்களா! நான் என்ன சொன்னேங்கிறதை கீழே பாருங்கையா...
"கப்பி...ஒரு பின்னூட்டத்தோட வெலை தெரியுமாய்யா ஒனக்கு? நீ செய்ற தனிமனித கருத்து இருட்டடிப்பை "ஜாவா பாவலருக்கு சில கேள்விகள்"னு ஒரு பதிவு போட்டு என்னான்னு கேக்கறேன்.
நீதி என் பக்கம்."
நான் சொன்னது நீதி தேவதையை. சினிமா படத்துல எல்லாம் ஜட்ஜ் ஆர்டர் ஆர்டர்னு இட்லி சாம்பாருக்கு ஆர்டர் எடுக்கும் போது சுத்தி எடுத்து தட்டுவாரு அதை பாத்துருப்பீங்க...அந்த சீனுங்கள்ல மேசை மேல வெள்ளை கலர் சிலை ஒன்னு கண்ணுல கறுப்பு துணி கட்டிக்கினு நிக்குமே...அது தான் நீதி தேவதை. நீங்க நெனக்கிற மாதிரி அண்ணியும் இல்ல தண்ணியும் இல்ல.
//அட அயோக்கியத் தனம் பண்ணற அராஜக அடாவடி அப்ரெண்டீசுங்களா! //
இப்படி ஓவரா திட்டினா ரிஜக்சன் பண்ணிடுவோம்..ஆமா...பாரு ராயல் அழுதுகிட்டே வீட்டுக்கு கிளம்பிட்டாரு...
//நான் சொன்னது நீதி தேவதையை. சினிமா படத்துல எல்லாம் ஜட்ஜ் ஆர்டர் ஆர்டர்னு இட்லி சாம்பாருக்கு ஆர்டர் எடுக்கும் போது சுத்தி எடுத்து தட்டுவாரு அதை பாத்துருப்பீங்க...அந்த சீனுங்கள்ல மேசை மேல வெள்ளை கலர் சிலை ஒன்னு கண்ணுல கறுப்பு துணி கட்டிக்கினு நிக்குமே...அது தான் நீதி தேவதை. நீங்க நெனக்கிற மாதிரி அண்ணியும் இல்ல தண்ணியும் இல்ல.
//
நீ சொன்னது எந்த தேவதையைன்னு எங்களுக்கு தெரியும்..இப்ப தமாசு பண்ணி மறைக்க பார்க்கறீங்களா?? தொண்டையில தண்ணி தெரியற அண்ணின்னு தூக்கத்துல உளறினதை நான் கேட்டுட்டேன்..மறைக்காதீங்க...
//நான் சொன்னது நீதி தேவதையை. சினிமா படத்துல எல்லாம் ஜட்ஜ் ஆர்டர் ஆர்டர்னு இட்லி சாம்பாருக்கு ஆர்டர் எடுக்கும் போது சுத்தி எடுத்து தட்டுவாரு அதை பாத்துருப்பீங்க...அந்த சீனுங்கள்ல மேசை மேல வெள்ளை கலர் சிலை ஒன்னு கண்ணுல கறுப்பு துணி கட்டிக்கினு நிக்குமே...அது தான் நீதி தேவதை. நீங்க நெனக்கிற மாதிரி அண்ணியும் இல்ல தண்ணியும் இல்ல.//
ஒண்ணும் பிரியல...
சரி நான் சொல்றேன் சரியா சொல்லுங்க...
வெள்ளை கலர் சுடிதார் போட்டுட்டு கருப்பு கலர் கண்ணாடி போட்டுட்டு உங்க மேனஜர் பக்கத்துல உக்கார்ந்துருக்கவங்கதானே நிதிகுப்தா?
தல சரினு சொல்லிடுச்சு...
மக்கா, எல்லாம் திருவிழாவுக்கு ரெடியாயிடுங்கப்பா!!!
மீண்டும் சினிமா பற்றி ஒரு நல்ல பதிவு..வாழ்த்துக்கள் கப்பி
//
வெள்ளை கலர் சுடிதார் போட்டுட்டு கருப்பு கலர் கண்ணாடி போட்டுட்டு உங்க மேனஜர் பக்கத்துல உக்கார்ந்துருக்கவங்கதானே நிதிகுப்தா?
//
இதைத்தான் நானும் சொல்லிட்டிருக்கேன்..தல ஒத்துக்க மாட்டேங்கறாப்ல...
//
தல சரினு சொல்லிடுச்சு...
மக்கா, எல்லாம் திருவிழாவுக்கு ரெடியாயிடுங்கப்பா!!!
//
ஒத்துக்கிடாச்சா?? ரெடி ஜுட்ட்ட்ட்ட் :)
//மீண்டும் சினிமா பற்றி ஒரு நல்ல பதிவு..வாழ்த்துக்கள் கப்பி
//
நன்றி கார்த்திக் பிரபு!
உங்க கருத்து? Post a Comment