சினிமாவில் ஆசிரியர்களாக நடிக்கும் கதாநாயகர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போதோ கெட்ட மாணவனை அடித்து திருத்தும்போதோ விடும் டயலாக் 'நானும் ஒரு காலத்துல ஸ்டூடண்ட் தான்'. அதே மாதிரி நேத்து குழந்தைகள் தினம்னு ஞாபகம் வந்ததும் 'நானும் ஒரு காலத்துல குழந்தைதான்'ன்னு பஞ்ச் டயலாக் தோன்றியது. இப்பவும் மனசால குழந்தைதான் என்ற உண்மையை சொன்னா அடிக்க வருவீங்க. என்னை பெத்தவங்களே 'இன்னும் நீ திருந்தலையா?'ன்னு பாவமா பார்ப்பாங்க. அதனால அந்த உண்மையை மனசுக்குள்ள பொத்தி வச்சிகிட்டு இந்த பிஞ்சு மனசுல பதிஞ்ச பசுமரத்தாணிகள் சில:
* இரண்டாவது படிக்கும் போது எங்க சி செக்சனுக்கும் ஏ செக்சனுக்கும் லஞ்ச் பிரேக்ல சண்டை நடக்கும். எங்க க்ரூப்புக்கு ஞானசம்பந்தம்ன்ற குட்டையன் தான் லீடர். ரெண்டாவது படிக்கும்போது எல்லாருமே குட்டையா தானேடா இருப்பீங்கன்னு கேட்கக்கூடாது. அவன் எங்களை விட குட்டை. ரெண்டு செக்ஷனும் அடிக்கடி அடிச்சிப்போம். அதில்லாம சிமெண்ட் தரையில் ஸ்கேட்டிங் போட்டி வேற நடக்கும்.
* மூணாவது படிக்கும்போதே கிரவுண்ட் பக்கம் போனாலும் நாலாவது படிக்கும்போதுதான் எங்க தெரு அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கிட்டாங்க. அதுவும் ஜோக்க்ராகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோதான்.
* ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது தாத்தா இறந்துட்டார். அவர் இறந்த அடுத்த நாள் வீட்டுல இருக்கவங்க எல்லாம் வருத்தத்தோட வரவுசெலவு கணக்கு பார்த்திட்டிருக்கும்போது தெருவில விளையாடிட்டு குதிச்சு குதிச்சு ஓடி வந்து தாழ்வான வாசல்படியில மண்டையை உடைச்சுக்கிட்டேன். ரத்தம் வழியறதுகூட தெரியாம ஒன்னும் ஆகலைன்னு சொல்லிகிட்டே எழுந்தா எல்லாரும் ஓடி வந்து தலையை அழுத்திபிடிச்சுட்டு தூக்கிட்டு எங்க ஊர் பேமிலி டாக்டர்கிட்ட போனாங்க. அவர் கைல கிடைச்ச ஊசி,நூல்ல ஒரு ஏழெட்டு தையல் போட்டுவிட்டார். அடுத்தநாள் காஞ்சிபுரத்துக்கு வந்து நல்ல டாக்டர்கிட்ட காமிச்சா 'இந்த நூல்ல இது வரைக்கும் பாலியஸ்டர் துணு தைக்க பயன்படுத்திதான் பார்த்திருக்கேன். இதை வச்சு யாரு தையல் போட்டது?'ன்னு கேட்டார்.
* 'சாட் பூட் த்ரீ', 'இங்கி பிங்கி பாங்கி' மாதிரி 'பிஸ்கட் பிஸ்கட்'ட்டும் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கறேன். தெரியாத அப்பாவிகளுக்கு
பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி
'பன்ருட்டி' சில சமயம் 'பொண்டாட்டி'யாகவும் மாறும்.
* நாங்க குடியிருந்த மேட்டுத் தெருதான் காஞ்சிபுரத்துல பட்டு சேலைக் கடைகள் எல்லாம் இருக்கும் தெரு. அந்த தெருவில சாயங்காலம் என்ன டிராபிக் இருந்தாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஐஸ்பாய் விளையாடலைனா எங்களுக்கெல்லாம் தூக்கம் வராது. எல்லா கடைகளுக்குள்ளேயும் போய் ஒளிந்துகொள்ள எங்களுக்கு சிறப்புரிமை உண்டு.
* ஐஸ்பாய் மாதிரியே கல்லா மண்ணா, நாடு புடிக்கற ஆட்டம் இதெல்லாமும் இப்போதெல்லாம் பசங்க விளையாடறதில்லையாமே. ரொம்ப வருத்தமா இருக்கு :(. பல்லாங்குழி, தாயம், நொண்டிக்கெல்லாம் இன்னும் மவுசு இருக்குன்னு நினைக்கறேன்.
* மொதமொத தெரு டீம்ல பெளலிங் கொடுத்தப்போ என் பெளலிங் ஸ்டைலை பார்த்துட்டு 'ஏண்டா மாவாட்டற மாதிரி கையை சுத்திட்டு ஓடி வர?'ன்னு கேட்ட அண்ணனால என் பெளலிங் செம்மைபட்டது.
* பக்கத்து வீட்டு வாசல்ல காகித பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது ஏறி வந்து ஷாட் அடிக்க முயற்சி செய்து தாழ்வாரத்துல உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் மண்டையை பேட்டால் உடைத்திருக்கிறேன். பாட்டிக்கு 12 தையல். எங்கப்பா எனக்கு கொடுத்த அடி பலம்னாலும் தையல் போடற அளவு சீரியஸ் ஆகலை.
* ஒரு கிரிக்கெட் மேட்சில கைக்கு வந்த கேட்சை விரல் வழியாக கப்பைவிட ஸ்டிச் பால் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்குமிடையிலுள்ள தசையை கிழித்துவிட்டது.ஆழமான காயம். வீட்டிற்கு சென்று கமுக்கமாக உட்கார்ந்திருக்கும்போது அம்மா சமைக்க ஆரம்பிச்சாங்க. கேரட் சீவித்தர்றேன்னு சீவல்மணையை வாங்கி இரண்டு நிமிஷத்தில் சீவல் மணை கையைக் கிழிச்சிடுச்சுன்னு ஒரு ஆக்ட் விட்டு அந்த காயத்தை காண்பித்தேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் கட்டு போட்டு வெளியே வந்ததும் அம்மா 'ஒழுங்கா மரியாதையா எப்படி அடிபட்டுச்சுன்னு சொல்லு. விளையாடும்போதா இல்ல எங்கயாவது விழுந்துவாறினயா??' என்று கேட்டதும் கையெல்லாம் ரத்தம் முகமெல்லாம் அசடு. அன்றிலிருந்து அம்மாவிடம் பொய் சொல்வதில்லை. அப்பாவிடம் மட்டும் தான்.
* பத்தாவது முடிச்சு டிசி வாங்கறதுக்கு எங்கப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன போது பிரின்சிபால் நல்லா போட்டு குடுத்துட்டார். 'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு எங்கப்பா கிட்ட பத்த வச்சிட்டார். இன்னைக்கும் அப்பாகிட்ட ஏதாவது எதிர்த்து பேசினா 'அப்பவே உங்க பிரின்சிபால் சொன்னாரேடா..நீ திமிர் பிடிச்சவன்னு' என என்னை ஆஃப் செய்துவிடுவார்.
'என்னடா சின்னபுள்ளத்தனமா வெட்டிக்கதை சொல்லிட்டிருக்க'ன்னு யாராவது வந்து காதைத் திருகறதுக்கு முன்னாடி எல்லா குழந்தைகளுக்கும், மனசால குழந்தைகளா இருக்கற மத்தவங்களுக்கும் பிலேட்டட் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சொல்லி அப்பீட் ஆகறேன் :)
பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
கப்பி | Kappi
Subscribe to:
Post Comments (Atom)
69 பின்னூட்டங்கள்:
//பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி//
கலத் ஜவாப்
பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன் டீ
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
பச்சை ரிப்பன்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
அம்மா
என்ன அம்மா
டீச்சர் அம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்டை மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வடை
ஆமை வடை
என்ன ஆமை
குளத்து ஆமை
என்ன குளம்
திரி குளம்
என்ன திரி
விளக்கு திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து
கடைசியா ஒரு கும்மாங் குத்து விடலைன்னா பிஸ்கெட் பிஸ்கெட் வெளாடி என்ன புண்ணியம்?
:)
அருமையான பதிவு கப்பி. குழந்தை பருவத்துக்குத் திரும்பிச் சென்று விட்டு வந்தது போல் இருந்தது. மிக்க நன்றி.
//பத்தாவது முடிச்சு டிசி வாங்கறதுக்கு எங்கப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன போது பிரின்சிபால் நல்லா போட்டு குடுத்துட்டார். 'பையன் நல்லாத்தான் படிக்கறான்.//
ஏலேய் கப்பி,
இதெல்லாம் எங்களை நம்பச் சொல்லுறீய்யா??????
//கடைசியா ஒரு கும்மாங் குத்து விடலைன்னா பிஸ்கெட் பிஸ்கெட் வெளாடி என்ன புண்ணியம்?//
தல,
எப்பிடி இம்பூட்டுயும் இன்னும் ஞாபகம் வைச்சிருக்கே????
:)
//கலத் ஜவாப்
//
வாங்க தல...நான் சொன்னது ஷார்ட் வெர்ஷன்...இங்கி பிங்கிக்கு பதில் யூஸ் பண்றது....அப்படின்னு மெயிண்டெயின் பண்ணலாம்...ஆனா காலைல உட்கார்ந்து யோசிக்கும்போது 'பச்சை ரிப்பன்,கணக்கு டீச்சர்' எல்லாம் கொஞ்சம் ஞாபகம் வ்ந்துச்சு..ஆனா முழுசா மறந்துபோச்சு. :)
//அருமையான பதிவு கப்பி. குழந்தை பருவத்துக்குத் திரும்பிச் சென்று விட்டு வந்தது போல் இருந்தது. மிக்க நன்றி.
//
வாழ்த்துகக்ளுக்கு மிக்க நன்றி கைப்ஸ்!
ஜாம் ஜாம் என்ன ஜாம் ? கலக்கிட்டீங்க...கைப்புள்ளையோட நினைவுத்திறன் அட்டகாசம்...சமீபத்தில் 1950 ல் நடந்ததை அருமையா சொல்லி இருக்கிறார்.
சூப்பர் கைபுள்ள.. so nice ..
இந்த 'பிஸ்கட் பிஸ்கட்' ஊருக்கு ஊரு மாறுபடும் போல இருக்கு. எங்க ஊரில்
பிஸ்கட் பிஸ்கட்
என்ன பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பொண்டாட்டீ
என்ன பொண்ணு
ராஜா பொண்ணு
என்ன ராஜா
மஹால் ராஜா
என்ன மஹால்
தாஜ்மஹால்
என்ன தாஜ்
மும்தாஜ்
என்று முடிப்போம். இந்த பதிவைப் படித்ததும் கண்ணா மூச்சி, சடுகுடு, கொக்கி, கோட்டிப்புல், கோலிகுண்டு, பட்டம், பம்பரம், பல்லாங்குழி, தாயக்கட்டை, ஆடுபுலி என்று ஒன்றொன்றாக சிறு வயதில் விளையாடி அடிபட்டதெல்லாம் ஞாபகம் வருது. மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்.
கப்பி நல்ல பதிவு!
குழந்தைப் பருவ நினைவுகள் வந்து சென்றன!
//'இந்த நூல்ல இது வரைக்கும் பாலியஸ்டர் துணு தைக்க பயன்படுத்திதான் பார்த்திருக்கேன். இதை வச்சு யாரு தையல் போட்டது?'ன்னு கேட்டார்.
//
அந்த நூல்ல தையல் போட்டதால தான் உனக்கு இம்புட்டு அறிவா:)
கைப்பூ நீ இன்னும் ஒரு கைப்"புள்ளை"ங்கிறத நிருபிசுட்டபா!
அன்புடன்...
சரவணன்.
//ஏலேய் கப்பி,
இதெல்லாம் எங்களை நம்பச் சொல்லுறீய்யா??????
//
அட நம்புங்கப்பா...ஒரு நல்லவன் சொன்னா நம்புங்க :))
//தல,
எப்பிடி இம்பூட்டுயும் இன்னும் ஞாபகம் வைச்சிருக்கே????
//
இப்பவாவது தலையோட தனித்திறமையை தெரிஞ்சுக்கோங்க :)
//ஜாம் ஜாம் என்ன ஜாம் ?
//
வாங்க SJ சூர்யா (இப்போதைக்கு விடறதா இல்ல ;))
//
கலக்கிட்டீங்க...கைப்புள்ளையோட நினைவுத்திறன் அட்டகாசம்...சமீபத்தில் 1950 ல் நடந்ததை அருமையா சொல்லி இருக்கிறார்.
//
கைப்பு வாங்கின ஆப்பை மட்டும்தான் மறந்துடுவார்..மத்ததெல்லாம் எப்பவும் நினைவுல இருக்கும் ;)
aaradhana said...
//சூப்பர் கைபுள்ள.. so nice .. //
ஆஹா...இந்தா வந்த எடத்துலயும் உன் கைவரிசையக் காமிக்க ஆரம்பிச்சுட்டியா? வந்தமா கமெண்டு போட்டமானா இல்லாமா பதிவ விட பெரிய பந்தா கமெண்டு போட்டு வந்த ஆளப் பூரம் ஓட்டிகிட்டு போறியா?
போலிஸ்க்கார் போலிஸ்க்கார்....
செந்தழல் ரவி said...
//கைப்புள்ளையோட நினைவுத்திறன் அட்டகாசம்...சமீபத்தில் 1950 ல் நடந்ததை அருமையா சொல்லி இருக்கிறார்.//
வ.பு.அணி...:))))))))
பரவாயில்லையே ரவி...! குழந்தைப் பருவம் முடிந்த 57 ஆண்டுகள் ஆன பின்னும் கைப்புள்ளையின் நினைவாற்றல் குறையவில்லையே!!:))
அன்புடன்...
சரவணன்.
//சூப்பர் கைபுள்ள.. so nice ..
//
வாங்க ஆராதனா..முதல் வருகை நல்வரவாகுக!
//இந்த 'பிஸ்கட் பிஸ்கட்' ஊருக்கு ஊரு மாறுபடும் போல இருக்கு.//
ஆம் சுல்தான்..ஊருக்கு ஏற்றதுபோல் மாறும்போல...எல்லாமே ஒரு ஜாலி தானே ;)
வருகைக்கு நன்றி சுல்தான்!
தல கலக்கிட்ட...
//அட நம்புங்கப்பா...ஒரு நல்லவன் சொன்னா நம்புங்க :))
//
நான் வரதுக்கு முன்னாடியே நம்மல பத்தி பேச்சு அடிபட்டிருக்கு :-)
//கப்பி நல்ல பதிவு!
குழந்தைப் பருவ நினைவுகள் வந்து சென்றன!
//
நன்றி சரவணா...நல்லா மெதுவா அசைபோடுங்க ;)
//
அந்த நூல்ல தையல் போட்டதால தான் உனக்கு இம்புட்டு அறிவா:)
//
ஆகா....மாப்பு...என்னா இது?? நமக்குள்ள ஏன்??
//
கைப்பூ நீ இன்னும் ஒரு கைப்"புள்ளை"ங்கிறத நிருபிசுட்டபா!
//
கைப்பு ஒரு அதிசயக் குழந்தைப்பா :)
//ஆஹா...இந்தா வந்த எடத்துலயும் உன் கைவரிசையக் காமிக்க ஆரம்பிச்சுட்டியா? வந்தமா கமெண்டு போட்டமானா இல்லாமா பதிவ விட பெரிய பந்தா கமெண்டு போட்டு வந்த ஆளப் பூரம் ஓட்டிகிட்டு போறியா?
போலிஸ்க்கார் போலிஸ்க்கார்....
//
முழு பாட்டையும் முட்டிங்கால் போட்டு ஒப்பிச்சதுக்காவது மன்னிச்சு விட்டுடலாம் நண்பா..நம்ம கைப்ஸ்ஸ் தானே ;)
//தல,
எப்பிடி இம்பூட்டுயும் இன்னும் ஞாபகம் வைச்சிருக்கே????///
அம்புட்டு கும்மாங்குத்து வாங்கி இருக்காரு. அதை எப்படி மறப்பது....
// 'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு //
இதுல இன்னும் ஒரு மேட்டர விட்டுட்டியே....
அதான் சேர்க்கை சரியில்லை.
உங்க பையன் என்னமோ நல்ல பையன் தான், ஆனா அவன் சேர்க்கை தான் சரியில்லை. அப்படிங்குற இந்த டயலாக் நான் ஸ்கூல் படிச்ச காலத்தில் இருந்து காலேஜ் விட்டு வெளிய வந்து பிறகும் கூட சொல்லிக்கிட்டு இருக்காங்க.....
ஆனா இதை கேட்கும் நம்ம பசங்க ரொம்ப பீல் பண்ணுவானுங்க... எதுக்கு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா....
இப்ப கூட பாரு என் சேர்க்கை சரி கிடையாதுனு பல பேர் சொல்லுறாங்க....
கைப்புள்ள, நீ, வெட்டி, பாண்டி, தேவ், இளா, ராம், ஷாம், தம்பி போன்ற பலர்....
மறுபடியும் பாரு என் சேர்க்கை சரி இல்லாம போச்சு.....
:-(((((
//நிர்மல் said...
கலக்கிருக்கிங்க கப்பி //
நீ "கலக்குற" மேட்டரு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா!
யாருக்கும் தெரியாம பண்ணு அண்ணன், மாட்டினா ஆப்பு தான்
//நான் வரதுக்கு முன்னாடியே நம்மல பத்தி பேச்சு அடிபட்டிருக்கு :-)
//
அந்த நல்லவன் நான்..நீங்களும் நல்லவனாகறது உங்க கைல தான் இருக்கு :))
//கலக்கிருக்கிங்க கப்பி
//
நன்றி நிர்மல்!
//அதான் சேர்க்கை சரியில்லை.//
அது கொஞ்சம் வளர்ந்தப்புறம் வந்த டயலாக்குங்கறதால விட்டுட்டேன் ;)
//
ஆனா இதை கேட்கும் நம்ம பசங்க ரொம்ப பீல் பண்ணுவானுங்க... எதுக்கு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா....
//
ஆமா...நம்மள பத்தி சொல்லும்போது அவங்க பீல் பண்ணுவாங்க...அவங்களை பத்தி சொல்லும்போது நாம பீல் பண்ணுவோம் ;))
//கைப்புள்ள, நீ, வெட்டி, பாண்டி, தேவ், இளா, ராம், ஷாம், தம்பி போன்ற பலர்....
மறுபடியும் பாரு என் சேர்க்கை சரி இல்லாம போச்சு.....//
யோவ்..உன் மேல தப்பு வச்சுகிட்டு மொத்த ஊரையே தப்பு சொல்லிட்டு திரியறீங்களா??
//நீ "கலக்குற" மேட்டரு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா!
யாருக்கும் தெரியாம பண்ணு அண்ணன், மாட்டினா ஆப்பு தான் //
நோ மிஸ்டர் புலி...வேணாம்..தப்பு :)
//நாகை சிவா said...
இப்ப கூட பாரு என் சேர்க்கை சரி கிடையாதுனு பல பேர் சொல்லுறாங்க....
கைப்புள்ள, நீ, வெட்டி, பாண்டி, தேவ், இளா, ராம், ஷாம், தம்பி போன்ற பலர்....
மறுபடியும் பாரு என் சேர்க்கை சரி இல்லாம போச்சு.....
:-((((( //
இங்க பாருடா... இவர் நல்லவராம்!!!
ஒரு பால் குடிக்கற பப்பாக்கூட இத கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கும் ;)
எந்த பசங்க அப்பா வந்தாலும் வாத்தியாருங்க இதையேதான் சொல்லுவாங்க...
எங்களுக்கு இப்படி சொல்லி தான் பழக்கம்
//பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ//
ரொட்டி
என்ன ரொட்டி
பன்ரொட்டி
என்ன பன்
ரிப்பன்
என்ன ரிப்பன்
பச்சை ரிப்பன்
என்ன பச்சை
மா பச்சை
என்ன மா
உப்பு மா
என்ன உப்பு
கல் உப்பு
என்ன கல்
ராஸ்கல்
என்ன ராஸ்
மத்ராஸ்(madras)
கப்பி,
கலக்கிட்டேமா.. அப்படியே குழந்தைப்பருவத்துக்கே எங்களை கூட்டிட்டு போயிட்டே நீ. சூப்ப்ரு.. தலை தலைதான்னு நிறுபிச்சிட்டாரு.
தம்மாத்தூண்டு பிஸ்கேட்டுக்கு இவ்ளோ கவிதையா.
//சமீபத்தில் 1950 ல் நடந்ததை அருமையா சொல்லி இருக்கிறார். //
ரவி சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிடிங்க போல :))
//இங்க பாருடா... இவர் நல்லவராம்!!!
ஒரு பால் குடிக்கற பப்பாக்கூட இத கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கும் ;)
//
இதையேத்தான் நானும் சொல்றேன் வெட்டி :)
//எங்களுக்கு இப்படி சொல்லி தான் பழக்கம்
//
வாங்க பூர்ணிமா...
ஆகா..உங்களுக்கும் ஒரு வெர்ஷன் இருக்கா..
இந்த பாட்டுல டாக்டரேட் பண்ற அளவுக்கு மேட்டர் கிடைக்கும் போல :)
//கப்பி,
கலக்கிட்டேமா.. அப்படியே குழந்தைப்பருவத்துக்கே எங்களை கூட்டிட்டு போயிட்டே நீ. சூப்ப்ரு..
//
டாங்கிஸ் சந்தோஷ் ;)
//
தலை தலைதான்னு நிறுபிச்சிட்டாரு.
//
தலைன்னா சும்மாவா??
//
தம்மாத்தூண்டு பிஸ்கேட்டுக்கு இவ்ளோ கவிதையா.
//
இன்னும் எத்தனை வெர்ஷன் வருதோ?? பார்ப்போம் ;)
//ரவி சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டிடிங்க போல :))
//
அது ஆட்டோவா..கண்டெயினரே ஓட்டியிருக்காருங்க ;)
Kids are always kids ; P
ரசித்துப் படித்தேன் : )
//Kids are always kids ; P//
ஹி ஹி!!
//
ரசித்துப் படித்தேன் : )
//
மிக்க நன்றி பாலா! :)
ரசிச்சேன் & சிரிச்சேன்:-))))
//ரசிச்சேன் & சிரிச்சேன்:-))))
//
ரொம்ப மகிழ்ச்சி. நன்றி டீச்சர் :)
மலரும் நினைவுகள் அருமையிலும் அருமை!!
பருப்பாம் பருப்பாம்
பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி
சோத்துல போட்டு
உங்கப்பன் பேர் என்ன??
................
முள்ளாங்கஞ்சி குடிச்சவனே
....................................
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்.
மாட்டேன்னா மாட்டேன்.,
மாதுளங்கா கோட்டை
-------------
அதுக்கு மேலெ வர மாட்டேங்குது கப்ஸ்.
இங்க வேற ஆபீஸ்லே எல்லாரும் ஒரு மாதிரி
பாக்குறாங்க.(ஆமா இதுக்கு முன்னாடி எப்படி
பாத்தங்களாம்.).
//பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
நல்ல மலரும் நினைவுகள் கப்பி.. என்னையும் பழைய காலதுக்கு கொண்டு போயிட்டீங்க போங்க
என்ன டீ
பன்ருட்டி
//
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!
இதையெல்லாம் படித்தால் நான் சின்ன வயதில் செய்த ஒவ்வொன்றும் ஞாபகம் வருதே!!!
//மலரும் நினைவுகள் அருமையிலும் அருமை!!
//
வாங்க திவ்யா..முதல் வருகை நல்வரவாகுக!! ;)
குரு என்ன கொஞ்ச நாளா ஆளே காணோம்??
//
அதுக்கு மேலெ வர மாட்டேங்குது கப்ஸ்.
//
பாட்டு கலக்கல்...எதுக்கு மேலே வர மாட்டேங்குதுன்னு சொல்லனும்..அவ்வள்வுதான் பாட்டுன்னு முடிச்சுடுங்க :))
//
இங்க வேற ஆபீஸ்லே எல்லாரும் ஒரு மாதிரி
பாக்குறாங்க.(ஆமா இதுக்கு முன்னாடி எப்படி
பாத்தங்களாம்.).
//
:))
தப்பு அவங்க மேல தான் நம்ம மேல இல்ல குரு :)
//நல்ல மலரும் நினைவுகள் கப்பி.. என்னையும் பழைய காலதுக்கு கொண்டு போயிட்டீங்க போங்க
//
வாங்க கார்த்தி...மெல்ல நினைவுகளை அசை போடுங்க ;)
//ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!
இதையெல்லாம் படித்தால் நான் சின்ன வயதில் செய்த ஒவ்வொன்றும் ஞாபகம் வருதே!!!
//
வாங்க my friend...
'.::' இது சும்மாவா இல்ல ஏதாவது காரணம் இருக்கா?? :)
ஹாய் கப்பி,
அங்க சுத்தி, இங்க சுத்தி நீங்களும் நம்ம ஊர் தானா? எங்க குழந்தை பருவமும் காஞ்சில தான்.ரொம்ப பெருமையா இருக்கு பா.
ஆமா, இதே ஆட்டமெல்லாம் நாங்களும் கூட குரங்கயும் சேர்த்து ஆடியிருக்கோம் பா...
மலரும் நினைவுகள்.. ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
//ஹாய் கப்பி,
அங்க சுத்தி, இங்க சுத்தி நீங்களும் நம்ம ஊர் தானா? எங்க குழந்தை பருவமும் காஞ்சில தான்.ரொம்ப பெருமையா இருக்கு பா.
//
வாங்க சுமதி..நீங்களும் நம்ம ஊர் தானா?? ரொம்ப மகிழ்ச்சிங்க :)
//
ஆமா, இதே ஆட்டமெல்லாம் நாங்களும் கூட குரங்கயும் சேர்த்து ஆடியிருக்கோம் பா...
மலரும் நினைவுகள்.. ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
//
'ஆடிய ஆட்டமென்ன'ன்னு மெல்ல அசைபோடுங்க :)
//நோ மிஸ்டர் புலி...வேணாம்..தப்பு :) //
ஏத நீ தப்புங்குற.... உங்க கூட சேர்ந்தையா.... அதான் எனக்குகே தெரியுமே.....
//யோவ்..உன் மேல தப்பு வச்சுகிட்டு மொத்த ஊரையே தப்பு சொல்லிட்டு திரியறீங்களா?? //
உன் மனசாட்சிய தொட்டு சொல்லு...
சரி தான் தப்பு என் மேல் தான்.. உங்க கூட எல்லாம் சேர்ந்தது பத்தி தானே நீ சொல்ல வர...
//இங்க பாருடா... இவர் நல்லவராம்!!!
ஒரு பால் குடிக்கற பப்பாக்கூட இத கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கும் ;)//
வெட்டி உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது. குறு குறுங்குதா என்ன?
interesting...very interesting
//இந்த பாட்டுல டாக்டரேட் பண்ற அளவுக்கு மேட்டர் கிடைக்கும் போல :) //
அப்புறம் என்ன சீக்கிரம் ஸ்டாட் பண்ணு....
டாக்டர் கப்பி பய....
//சரி தான் தப்பு என் மேல் தான்.. உங்க கூட எல்லாம் சேர்ந்தது பத்தி தானே நீ சொல்ல வர...
//
ஆமா...நாலு நல்ல பசங்களையும் சேர்ந்தே கெடுக்கறோமேன்னு இல்லாம எங்களையும் கெடுத்துட்டிருக்கியே..அதைத்தான் சொல்றேன் :)
//அப்புறம் என்ன சீக்கிரம் ஸ்டாட் பண்ணு....
டாக்டர் கப்பி பய....
//
வேணாம்...தாங்காது...விட்டுடலாம்..
:))
//interesting...very interesting
//
நன்றி luis galego!
//ஒரு பாட்டியின் மண்டையை பேட்டால் உடைத்திருக்கிறேன்//
பாட்டி மண்டைய போட்டுறலையே! சந்தோஷப் படுங்க கப்பியாரே!
நானும் ஒரு பாட்டு சொல்றேன்!
"டாடி டாடி"
"யெஸ் ஜானி"
"ட்ரிங்கிங்க் பியர்"
"நோ ஜானி"
"டெல்லிங்க் லைஸ்"
"நோ ஜானி"
"வாயை ஊதுங்க"
"ஊ ஊ ஊ"
//பாட்டி மண்டைய போட்டுறலையே! சந்தோஷப் படுங்க கப்பியாரே!
//
அவங்க பேரன் ரொம்ப வருத்தப்பட்டான் தள :))
//நானும் ஒரு பாட்டு சொல்றேன்!
"டாடி டாடி"
"யெஸ் ஜானி"
"ட்ரிங்கிங்க் பியர்"
"நோ ஜானி"
"டெல்லிங்க் லைஸ்"
"நோ ஜானி"
"வாயை ஊதுங்க"
"ஊ ஊ ஊ"
//
அடடா...நாமக்கல் கவிஞரே...பாட்டு பட்டையைக் கிளப்புது :)
vaazhthinathukku romba taangs. naan modalla solla naenachaen, nee mundhi kitta :-)
//சூப்பர் பதிவு கப்பி. நிஜமாவே ரொம்ப நல்லாருந்தது!
கமேண்டு செக்ஷனும் ரொம்ப கலக்கல்.
செம பதிவு பா.//
மிக்க நன்றி மதுரா ;)
chancey illa, lovely post. enjoyed every section.. esp abt the games...
நன்றி தீக்ஷன்யா!
//ஐஸ்பாய் மாதிரியே கல்லா மண்ணா, நாடு புடிக்கற ஆட்டம் இதெல்லாமும் இப்போதெல்லாம் பசங்க விளையாடறதில்லையாமே. ரொம்ப வருத்தமா இருக்கு//
எனக்கும்தான்
//எனக்கும்தான் //
சேம் ப்ளட்டா தங்கவேல் :)
முதல் வருகை நல்வரவாகுக! ;)
hi,
neenga kanchipurama... nan kooda anga than padichen...
அப்படிங்களா? மிக்க மகிழ்ச்சி மீனாப்ரியா! ;)
வருகைக்கு நன்றி!
\\நாலாவது படிக்கும்போதுதான் எங்க தெரு அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கிட்டாங்க. அதுவும் ஜோக்க்ராகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோதான்.\\
still it continues??
:))
rereading this post,but still its enjoyable to read ur evergreen childhood memories:))
\\மொதமொத தெரு டீம்ல பெளலிங் கொடுத்தப்போ என் பெளலிங் ஸ்டைலை பார்த்துட்டு 'ஏண்டா மாவாட்டற மாதிரி கையை சுத்திட்டு ஓடி வர?'ன்னு கேட்ட அண்ணனால என் பெளலிங் செம்மைபட்டது.\
:))
\\'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு எங்கப்பா கிட்ட பத்த வச்சிட்டார்.\\
5 yil vilaiyathathu, 50 pathil vilayumaa??
திவ்யா
//ts enjoyable to read ur evergreen childhood memories:))//
நன்றி நன்றி :))
//still it continues??//
அவ்வ்வ்வ்வ்வ்...இப்புடி கேட்டுப்புட்டீங்களே..அது நாலாப்பு படிக்கும்போதுங்க..அதுக்கு அடுத்த வருஷமே டீம்ல நிரந்தர உறுப்பினர் ஆயிட்டொம்ல .:)))
//5 yil vilaiyathathu, 50 pathil vilayumaa??//
டூ லேட்!! ஹி ஹி
நன்றி திவ்யா :))
ஹஹஹஹஹா எனக்கு இன்னும் நல்ல நினவிருக்கு, நீ பெரிய கட்டோட ஸ்கூல் இக்கு வந்தது...... அப்புறம் ப்ரின்சி உன் அப்பா கிட்டே போட்டு கொடுத்தது ....... (வேற ஒரு பதிவில படிச்சது, அந்த பொண்ணு பேரு சௌமியா... ;-) )
உங்க கருத்து? Post a Comment