யார் அந்த டினா?
"நான் இதுவரை இப்படியொரு கல்லறைத் தோட்டத்தைப் பார்த்ததில்லை. மின்னசோட்டாவிலுள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் பெரிய கல்லறைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கல்லறைகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். நேற்று மாலை முழுக்க நான் அங்குதான் செலவழித்தேன்" - நகரச் சுற்றுலா முடிந்து ஓட்டலுக்குள் நுழையும்போது மில்லர் என்ற சக அமெரிக்கப் பயணி ரிகொலெதா கல்லறைத் தோட்டத்தைப்(Recoleta Cemetery) பற்றி சொன்னார். நகரின் வரைபடத்தில் வழி காட்டியதுடன் பேருந்து தடத்தையும் தந்தார். அடுத்த நாளுக்கு முதல் இலக்காக அந்த கல்லறைத் தோட்டத்தை வைத்துக்கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க மீண்டும் நகரைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.
பொய்னொஸ் ஐரிஸில் இந்திய உணவகம் இருப்பதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். முகவரி எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும் சிலவற்றை மறந்துவிட்டு பின்னர் நொந்துகொள்வது எல்லாப் பயணங்களிலும் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஓட்டல் வரவேற்பாளரிடம் கேட்டதற்கு ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் அது பிட்ஸா கடை(Pizzeria) தான். அவருக்கு என்ன புரிந்ததோ, ஏதோ ஒரு உணவகத்திற்கு வழி காண்பித்துவிட்டார். நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்திய உணவகத்தின் முகவரி கேட்கும் அளவு வாய்க்கு பசி எடுக்காததால் அங்கேயே வயிற்றுப் பசியைத் தணித்துக்கொண்டு மீண்டும் கொர்ரியெந்தெஸ் அவென்யூவில் நடக்க ஆரம்பித்தேன்.
கொர்ரியெந்தெஸ் அவென்யூ முழுக்க சினிமா, நாடக அரங்கங்களும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான அரங்குகளில் நகைச்சுவை நாடகங்கள்தான் நடக்கின்றன. இளம்பெண்கள் கோமாளிகள் போல் வேடமனிந்து பாதசாரிகளை நாடகம் பார்க்க அழைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் எல்லா அரங்க வாசல்களிலும் கூட்டமிருந்தது. சனிக்கிழமை இரவு என்பதும் காரணமாக இருக்கலாம்.
புத்தக கடைகளில் ஸ்பானிஷ் புத்தகங்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டனின் சில நாவல்களும் வேறு சில நாவலாசிரியர்களின் ஃபிக்சன் நாவல்களுமே கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கிடைக்குமென தேடிச்சென்ற எனக்கு ஏமாற்றம்.
அங்கிருந்து லவாஷே(Lavalle) என்ற தெருவிற்கு வந்தேன். இதுவும் ப்ளோரிடா தெருவைப் போலவே வணிக வளாகங்களும் திரையரங்குகளும் நிறைந்த தெரு. இந்த தெருவில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு தென்னிந்திய முகம் தெரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவரின் மனைவி கடையில் இருந்து வெளியே வர எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசலாமா என்ற யோசித்தபடியே அவர்களை நோக்கி நடக்கையில் வேறு ஏதோ கடைக்குள் சென்று கண்ணில் இருந்து மறைந்துவிட்டார்கள்.
இவ்வாறு கடைகளையும் சாலைகளையும் மக்களையும் வேடிக்கைப் பார்த்தவாறே இரவு பதினொரு மணி வரை நடந்துகொண்டிருந்தேன். சிறிது உடல் அயற்சி ஏற்பட்டதால் ஓட்டலுக்குத் திரும்பினேன்.
வெள்ளிக்கிழமை இரவு பொய்னொஸ் ஐரிஸில் ஷகிராவின் இசை நிகழ்ச்சி இருந்திருக்கிறது. ஒரு நாள் முன்னதாகச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம். சாலையோர பேனர்களிலும் , எப்.எம் ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஷகிராவின் ராஜ்ஜியம். தொலைக்காட்சியில் சிறிது நேரம் ஷகிராவின் இசைநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்குத் தயாரானேன்.
காலையில் தூங்கி எழுந்ததும் சிற்றுண்டி அருந்திவிட்டு ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ரிகொலெதா கல்லறைத் தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
உலகின் புகழ்பெற்ற கல்லறைத் தோட்டங்களில் ஒன்றான ரிகொலெதா கல்லறைத் தோட்டம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அர்ஜெண்டின அதிபர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் எனப் பலரின் கல்லறைக் கோபுரங்கள்(Mausoleum) அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கோபுரமும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் ஆன பலகையில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் இறந்த நாள் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை.
சில கல்லறைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெருக்களைப் போல் அகலமான இடைவெளிகள் விட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன.
கல்லறைத் தோட்டத்தினுள் பூனைகள் அதிகமாக உலாவுகின்றன.
கல்லறைத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்ததும்....அடுத்த பதிவில்.
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery
கப்பி | Kappi
வகை அனுபவம், சொந்தக் கதை, பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
15 பின்னூட்டங்கள்:
கல்லறையா இது? எதோ வீடு மாதிரி இருக்கு...
அப்புறம் 6 மாசம் கழிச்சு பிரேசிலா???
//கப்பி,
சுவராஸ்யமாய் இருக்கு
//
நன்றி நிர்மல்!
//கல்லறையா இது? எதோ வீடு மாதிரி இருக்கு...//
வாங்க அட்லாஸ்,
நாம 'வூடு கட்டறது'ன்னு சொல்வோம்ல..அதை அவனுங்க செஞ்சு வச்சிருக்கானுங்க ;)
//
அப்புறம் 6 மாசம் கழிச்சு பிரேசிலா???
//
அடுத்த மாசமே போகலாம்னு ஒரு ப்ளான் இருக்கு ;)
ஆச்சரியமா இருக்கு கப்பி! இந்த பதிவ பாத்தவுடனே! நான்கூட VISA CHENGE காக நாலு முறை இரான் நாட்டின் தீவு ஒன்றிற்கு (Qeshem & Kish) சென்றிருக்கிறேன். அப்போல்லாம் பதிவு எழுத ஆரம்பிக்கலை. இப்போ எழுதாலாம்ணு பாத்தா கொஞ்சம்தான் ஞாபகத்துல இருக்கு, போட்டாவும் இல்ல.
சும்மா சொல்லல கப்பி அழகா எழுதறப்பா!
//ஆச்சரியமா இருக்கு கப்பி! இந்த பதிவ பாத்தவுடனே! நான்கூட VISA CHENGE காக நாலு முறை இரான் நாட்டின் தீவு ஒன்றிற்கு (Qeshem & Kish) சென்றிருக்கிறேன். அப்போல்லாம் பதிவு எழுத ஆரம்பிக்கலை. இப்போ எழுதாலாம்ணு பாத்தா கொஞ்சம்தான் ஞாபகத்துல இருக்கு, போட்டாவும் இல்ல.
//
அஞ்சாம் கிளாஸ்ல படிச்சதெல்லாம் மறக்காம வாலிப வயசுல வருதேப்பா..இதையும் கொஞ்சம் கொசுவத்தி சுத்தி போடு ;)
//
சும்மா சொல்லல கப்பி அழகா எழுதறப்பா!
//
நன்றி தம்பி! :)
eppdi da....eppdi...
kadaseela kallaraikkudhaan povomngura thathuvam unarthavaa?
கலக்கலா இருக்குப்பா!!!
கல்லறைய பார்த்தா நம்ம உதய் சொன்ன மாதிரி வீடு போல தாம்பா தெரியுது...
ஏதோ நாங்களே நடக்கற மாதிரி ஃபீலிங் வருது...
//eppdi da....eppdi...
kadaseela kallaraikkudhaan povomngura thathuvam unarthavaa?
//
வாடா...தத்துபித்துவமெல்லாம் வேணாம் விட்ருவோம் ;))
//கலக்கலா இருக்குப்பா!!!
//
நன்றி வெட்டி!
//
கல்லறைய பார்த்தா நம்ம உதய் சொன்ன மாதிரி வீடு போல தாம்பா தெரியுது...
//
ஆமா வெட்டி..பெத்த பெத்த கல்லறையா கட்டி வச்சிருக்காங்க..
புகை படங்கள் அனைத்தும் அருமையா வந்திருக்குதுங்க, அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
/புகை படங்கள் அனைத்தும் அருமையா வந்திருக்குதுங்க, அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
//
நன்றி திவ்யா! நிறைவுப் பகுதி விரைவில் வரும் ;)
கல்லறையா அது? என்னமோ ஒரு தெரு மாதிரி இருக்கு?
கவிஞரே...வழக்கம் போல பதிவு சூப்பர். தென்னிந்திய தம்பதியைப் புடிச்சுருந்தா ஒரு சாம்பார், ரசம் உஸார் பண்ணிருக்கலாம்ல? மிஸ் பண்ணிட்டியேப்பா?
கப்பி,
போட்டோ எல்லாமே சூப்பரப்பு...
இப்போதான் நம்ம தல மானத்தே காப்பத்தி இருக்கே... :)
//கல்லறையா அது? என்னமோ ஒரு தெரு மாதிரி இருக்கு?
கவிஞரே...வழக்கம் போல பதிவு சூப்பர்.//
நன்றி கைப்ஸ்!
//
தென்னிந்திய தம்பதியைப் புடிச்சுருந்தா ஒரு சாம்பார், ரசம் உஸார் பண்ணிருக்கலாம்ல? மிஸ் பண்ணிட்டியேப்பா? //
அதே கவலை தான் தல எனக்கும்..அதை இங்க மாண்டிவிடியோல இருக்க நம்மூர்காரர் வீட்டுக்கு போய் சரிகட்டிட்டேன் :))
//கப்பி,
போட்டோ எல்லாமே சூப்பரப்பு...
இப்போதான் நம்ம தல மானத்தே காப்பத்தி இருக்கே... :)
//
தலயோட ட்ரெயினிங்னா சும்மாவா? அவரோட அப்ரெண்டீசுன்னு நிருபிக்கனும்ல :))
உங்க கருத்து? Post a Comment