தாமோதரனின் கடிதம்

திருவாளர் திருடன் அவர்களுக்கு,

சென்ற வாரம் சனிக்கிழமை ஜீவா நகரில் தாங்கள் கொள்ளையடித்த வீட்டின் உரிமையாளன் தாமோதரன் எழுதிக் கொள்வது, எப்படியும் இந்த கடிதம் உங்களைச் சேரப் போவதில்லை. ஆனாலும் என் மனதிலுள்ள சோகங்களை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும். என் மனைவி ஏற்கனவே பேயடித்தது .போல் இருக்கிறாள். என்னிடம் சண்டை பிடிப்பதற்கு அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவளை எதிர்த்துப் பேசி சலித்துவிட்டது. எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு இப்போது குறைந்துபோய்த்தான் இருக்கிறது.

நீங்கள் எங்கள் வீட்டில் திருட வந்த அன்று குலதெய்வத்திற்கு பூஜை செய்ய சொந்த ஊருக்குச் சென்றிருந்தோம். அன்றே கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. ஆனால் என்ன செய்வது ஏற்கனவே செய்வதாக ஒத்துக்கொண்டாகிவிட்டது. நானும் தட்டிக்கழிக்க முயன்றேன்.முடியவில்லை.

இந்த செலவு போதாதென்று பூஜையின் போது அம்மாவுடன் வேறு சண்டை போட்டாகிவிட்டது. என்னுடன் இங்கு வந்துவிடு என்று சொன்னாலும் கேட்பதில்லை. கட்டை சாயும் வரை ஊரிலேயே இருப்பதாக சொல்லிக்கொண்டு தனியாக இருக்கிறார். அவருக்கே மாதாமாதம் மருந்து, மளிகை சாமான் என செலவுக்குத் தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இது போதாதென்று இப்போது டிவி வேண்டுமாம். இத்தனை நாள் பக்கத்து வீட்டு அத்தை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது வயதான காலத்தில் தெருவில் இருக்கும் அனைவருடனும் சண்டையாம். அத்தையுடனும் போன வாரம் சண்டை போட்டிருக்கிறார். திடீரென்று டிவி வேண்டுமென்று கேட்டால் நான் எங்கு போவது? இப்போது தான் இந்த கோயில் செலவே நான்காயிரம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு வாங்கிக் கொடுப்பதாக இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறேன்.

நான் ஏன் வாங்கித் தர வேண்டும்? எல்லா சொத்தையும் தம்பி பெயரில் எழுதி வைத்தார்களே அவனிடம் கேட்க வேண்டியது தானே. கூட இருந்தே எல்லா பணத்தையும் திருடியவன் தானே அவன். எனக்கென என்ன செய்திருக்கிறார்கள்? ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்போது பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்குக்கூட ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று அப்பாவுடன் சண்டை போட வேண்டும். படித்து வேலை தேடிக்கொண்டிருந்தபோதும் என்ன உதவி செய்துவிட்டார்கள்? நானாக இந்த வேலை தேடி, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.

என் தம்பி அவர்களுடனேயே இருந்து எல்லா பணத்தையும் அடித்துவிட்டான். அப்பா நோய்வாய் பட்டிருந்தபோது மருத்துவ செலவுகள் பார்க்கிறேன் என்று ஏகத்துக்கும் அவன் பொது பணத்தை சுருட்டியது தெரியாதா? என் அப்பா இன்ஷ்யூரன்ஸ் கட்டியதாக ஞாபகம். ஆனால் இப்போது அதையெல்லாம் அவனிடம் கேட்கமுடியுமா?

சொத்து பிரிக்கும்போதும் அவனுக்கு வீட்டை எழுதி வைத்துவிட்டு எனக்கு காலி நிலத்தைத் தானே கொடுத்தார்கள். அவனுக்கு நல்ல தண்ணீரோடு எட்டு ஏக்கர், எனக்கு பாறை கிணறுடன் மூன்று ஏக்கர். கேட்டால் நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேனாம். நானாக கஷ்டப்பட்டு இந்த நிலையில் இருக்கிறேன். அவர்களா உதவினார்கள்? இவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் சொத்து பிரிக்கும்போது என் மாமனாரையும் சகலையையும் கூட்டிச் சென்றேன். அவர்கள் இவர்களுக்கு மேல். நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். பெற்றவர்களும் சரியில்லை. இவர்களும் சரியில்லை.

இவர்கள் மட்டும் எனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கல்யாணத்தின்போது 20 சவரன் போடுவதாக சொல்லிவிட்டு 15 சவரன் தான் போட்டார்கள். ஆனால் இவளின் தங்கைக்கு 30 சவரன் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் என் சகலைக்கு ரைஸ் மில் வைக்க பணம் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு பண உதவி செய்வது எனக்குத் தெரியாதென நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவளுக்கு நாலு தம்பிகள், அவர்களுக்கு கல்யாணம், குழந்தை பிறப்பது, காது குத்துவது என எத்தனை செலவுகள். இவற்றுக்கெல்லாம் கணக்கு போட்டால் நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் எனக்கென இவர்கள் எனன் செய்தார்கள்?

இதையெல்லாம் கேட்டால் என் மனைவி என்னிடம் சண்டை போடுவாள். இந்த வீட்டைக் கட்ட 50000 ரூபாய் கொடுத்தார்களே எனக் கேட்பாள். பெற்ற மகளுக்கு இது கூட கொடுக்கக்கூடாதா?? நான் கூடத்தான் என் மச்சான் 5000 கடனாக வாங்கியதை விட்டு வைத்திருக்கிறேன்.

இவர்கள் தொல்லைதான் இப்படியென்றால் அலுவலகத்தில் இதற்கு மேல் பிரச்சனை. நான் லஞ்சம் எதுவும் வாங்காதபோதே என் மேல் மொட்டை கடுதாசி எழுதுகிறார்கள். இதற்கு முன்னாவது பரவாயில்லை. கொஞ்சம் வருமானம் வரும் சீட். இப்போது அதுவும் இல்லை. சீட்டை மாற்றி பழி வாங்கிவிட்டார்கள்.

எல்லாரும் பொறாமை பிடித்தவர்க்களாக இருக்கிறார்கள். எனக்கென யாரும் எதுவும் செய்ததில்லை. எல்லாருக்கும் நான் தான் அழுதுகொண்டிருக்கிறேன். நான் எல்லோரிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதை என் மனைவி குறையாகச் சொல்கிறாள். உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?

இந்த நிலையில் என் போதாத நேரம் நீங்கள் என் வீட்டைத் தேர்ந்தெடுத்து திருடியிருக்கிறீர்கள். 20000 ரூபாய் ரொக்கம், 22 சவரன் நகை. போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாகிவிட்டது. ஆனால் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. சும்மா செய்துவிடுவார்களா என்ன? அவர்களும் பணம் கறக்கப் பார்க்கிறார்கள்.

இப்போதிருக்கும் என் மனநிலையில் பாதி பணம் திரும்பக் கிடைத்தாலே போதும் என்றிருக்கிறது. உங்களை சந்திக்க முடிந்தால் பாதியை நீங்கள் வைத்துக்கொண்டு பாதி தந்தால் சரி என்று கூட ஒத்துக்கொண்டுவிடுவேன்.

இதுவரையில் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் யாருக்கும் எதுவும் செய்துவிடுவதில்லை. இப்படி புலம்பியபடியே என் வாழ்க்கை முடியப்போகிறது. எனக்கு யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. விட்டுத் தள்ளுங்கள். என் மனைவி சாப்பிட அழைக்கிறாள். உப்புசப்பில்லாமல் எதையாவது சமைத்துவைத்திருப்பாள். சண்டையில்லாமல் சாப்பிட்டு உறங்கச் செல்ல முயல்கிறேன்.

வணக்கத்துடன்,
தாமோதரன்.



52 பின்னூட்டங்கள்:

சொன்னது...

பாவம்பா தாமோதரன் ஒரு திருடன்கிட்ட கூட இவ்வளோ அப்பாவியா இருக்கிறானே. அவனுக்கா இப்படி :((

சொன்னது...

சுத்தமா எந்த எதிர்பார்ப்பே இல்லியே தாமோதரனிடம்!

சொன்னது...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......


தாமோதரனுக்கு வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதனும் போல இருக்கு!
கப்பி கலக்கிட்ட

வாழ்த்துக்கள் நண்பா!!!

அன்புடன்....
சரவணன்.

சொன்னது...

//பாவம்பா தாமோதரன் ஒரு திருடன்கிட்ட கூட இவ்வளோ அப்பாவியா இருக்கிறானே. அவனுக்கா இப்படி :((
//

ஆமா தம்பி..அவன் ஓரளவு அப்பாவி தான் ;)

சொன்னது...

//சுத்தமா எந்த எதிர்பார்ப்பே இல்லியே தாமோதரனிடம்! //

வாங்க ஹரிஹரன்,

எதற்கெடுத்தாலும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்கும் தோல்வி மனப்பான்மை கொண்ட ஒருவனின் கதையாக எழுதியிருக்கிறேன் ;)

சொன்னது...

//தாமோதரனுக்கு வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதனும் போல இருக்கு!
கப்பி கலக்கிட்ட

வாழ்த்துக்கள் நண்பா!!!

//

சரவணா..ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்க..வாப்பா ராசா ;)

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!

சொன்னது...

//நல்லாயிருக்கு கப்பி //

நன்றி நிர்மல்.

சொன்னது...

கப்பி ஏதோ பீல் பண்ணி எழுதி இருக்க போல....
அப்பால படிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.
வரட்டா

சொன்னது...

நல்லாயிருக்கு கப்பி, அழகான எழுத்துநடையிலே வந்துருக்குப்பா...!

வாழ்த்துக்கள்!

சொன்னது...

கலக்கலா இருக்கு கப்பி...

எல்லாமே இலவசமா கிடைச்சிடும்னு நினைக்கிற இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றது :-(

சரிப்பா... அப்படியே போட்டிக்கு அனுப்பிடு ;)

சொன்னது...

சரி! இப்ப கதை எழுதுனவர் கிட்ட ஒரு சின்ன பேட்டி "ஒரு எழுத்தாளரா நீங்க ஜெயிச்சிட்டீங்க. ஆனா ஒரு சமூக ஆர்வலரா நீங்க சமுதாயத்துக்கு இக்கதையின் மூலம் சொல்ல வருவது என்ன? தாமோதரன் மாதிரி இருக்கக் கூடாது என்பதா?"

சொன்னது...

//கப்பி ஏதோ பீல் பண்ணி எழுதி இருக்க போல....
அப்பால படிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.
வரட்டா
//

இதெல்லாம் ரொம்ப ஓவரு..ஆமா ;)

சொன்னது...

//நல்லாயிருக்கு கப்பி, அழகான எழுத்துநடையிலே வந்துருக்குப்பா...!

வாழ்த்துக்கள்!

//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராம்!

சொன்னது...

//கலக்கலா இருக்கு கப்பி...
//

நன்றி வெட்டி!!

//
எல்லாமே இலவசமா கிடைச்சிடும்னு நினைக்கிற இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றது :-(
//
அதே!

//
சரிப்பா... அப்படியே போட்டிக்கு அனுப்பிடு ;)
//

இப்போதைக்கு இதை போட்டிக்கு அனுப்பும் எண்ணமில்லை...பார்ப்போம் ;)

சொன்னது...

//சரி! இப்ப கதை எழுதுனவர் கிட்ட ஒரு சின்ன பேட்டி "ஒரு எழுத்தாளரா நீங்க ஜெயிச்சிட்டீங்க. ஆனா ஒரு சமூக ஆர்வலரா நீங்க சமுதாயத்துக்கு இக்கதையின் மூலம் சொல்ல வருவது என்ன? தாமோதரன் மாதிரி இருக்கக் கூடாது என்பதா?"
//

எழுத்தாளரா ஜெயிச்சாச்சா?? ஒரே காமெடி தான் போங்க :))

எதற்கெடுத்தாலும் அடுத்தவர் தனக்கு எதுவும் செய்யமாட்டார்களா என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பது, தான் எதுவும் செய்யாமல் தனக்கு அடுத்தவர்கள் உதவுவார்கள் என்ற மனநிலையில் இருப்பது, தானாக தனக்கு எதுவும் கிட்டாதா என்ற மனப்பான்மை, வரதட்சனை முதற்கொண்டு மாமனார் வீட்டில் கறக்க நினைப்பது, அலுவலகத்திலூம் மேல் வருமானத்துக்கு வேலை பார்ப்பது
இப்படி பலவிதமான எதிர்ப்பார்ப்புடனே இருக்கிறார்கள். அதை மொத்தமாக ஒருவனிடம் காட்ட நினைத்தேன். தாமோதரன் மாதிரி இருக்க கூடாது தானே? ;)

சொன்னது...

கதை நன்றாக இருக்கின்றது.

இங்கே ஒரு சேரன் எழுதிக் கொண்டிருக்கிறார் ; )
'தவமாய் தவமிருந்து' மாதிரி... 'களவாய் கையறு பொழுதினராய்'!

சொன்னது...

//கதை நன்றாக இருக்கின்றது.

//

மிக்க நன்றி பாபா!

//
இங்கே ஒரு சேரன் எழுதிக் கொண்டிருக்கிறார் ; )
'தவமாய் தவமிருந்து' மாதிரி... 'களவாய் கையறு பொழுதினராய்'!
//

ஆகா...என்னை வச்சு காமெடி பண்ணலையே :)

சொன்னது...

---என்னை வச்சு காமெடி பண்ணலையே ---

இல்லை.. இல்லை : )

சும்மா ஜாலிக்காக...
வலைப்பதிவின் சேரன் - கப்பி
வலைப்பதிவின் கதிர் - வெட்டி

தம்பி, இன்ன பிறருக்கு நீங்களே பொருத்தமானதை கொடுக்குமாறு 144-வது வட்டம் சார்பாக தலைவரை வேண்டுகிறேன் ; )

சொன்னது...

//வலைப்பதிவின் கதிர் - வெட்டி
//

இது கலக்கலா இருக்கு ஆனா

//வலைப்பதிவின் சேரன் - கப்பி//

இது நல்லாயில்லையே ;))

ஏற்கனவே பேரரசுன்னு ஓட்டிட்டிருக்காங்க..நீங்க ஜில்லுனு இருக்கற கூல்டிரிங்க்ல ஐஸ்கட்டி போட்டுட்டு போறீங்க :))

//
தம்பி, இன்ன பிறருக்கு நீங்களே பொருத்தமானதை கொடுக்குமாறு 144-வது வட்டம் சார்பாக தலைவரை வேண்டுகிறேன் ; )
//

அப்படியே இதுக்கும் யாராவது 144 போட்டா நல்லது :)

தம்பியா...கரெக்டான ஆளாகத்தான் பார்த்துவிடறீங்க...

இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ;)

சொன்னது...
This comment has been removed by a blog administrator.
சொன்னது...

//வலைப்பதிவின் சேரன் - கப்பி
வலைப்பதிவின் கதிர் - வெட்டி//

ஏன் இந்த கொலை வெறி??? :-)

நம்ம தீயினால் சுட்ட புண் கதைக்கு பிறகும் இப்படி சொல்வதா???
லிப்ட் ப்ளீஸ் கதையும் நினைவிலிருக்கும் என்று நினைக்கிறேன்!!!

வேணும்னா விக்ரமன்னு சொல்லுங்க ;)

சரி... இனி நீங்க தம்பிக்கு கொடுத்ததை நான் சிரமேற்கொள்கிறேன்...

கப்பி - பேரரசு (கவிதை எழுதுவதால்)
செல்வன் - சுபா (மிலிட்டரி கதைகளால்)
செந்தழல் ரவி - S.J.சூர்யா (கிளுகிளுப்பான காதல் கதை :-))
தம்பி - டி.ராஜேந்தர். (கதை, கட்டுரை, கவிதை இப்படி வெரைட்டி கொடுப்பதால்)

சொன்னது...

//வேணும்னா விக்ரமன்னு சொல்லுங்க ;)//

லாலல்ல்லா...லால்ல்லாஆஆ...
விக்ரமனும் ஓகே தான்...ஆனா கதிர் அளவுக்கு விக்ரமனுக்கு காதல் கதைகள் கிடையாதே :)

//
சரி... இனி நீங்க தம்பிக்கு கொடுத்ததை நான் சிரமேற்கொள்கிறேன்...
//
அடுத்தவனுக்கு ஆப்படிக்கனும்னா என்ன கடமையுணர்ச்சி :))

//
கப்பி - பேரரசு (கவிதை எழுதுவதால்)
//
நான் வாயே தொறக்கமாட்டேன்...ஒன்னும் சொல்றதுக்கில்ல ;))

//
செல்வன் - சுபா (மிலிட்டரி கதைகளால்)
//
நல்ல சாய்ஸ்!

//
செந்தழல் ரவி - S.J.சூர்யா (கிளுகிளுப்பான காதல் கதை :-))
//

பாக்யராஜும் ஒத்துப்போவார்...ஆனா SJ சூர்யா இன்னும் நெருங்கிவருது ;)

//
தம்பி - டி.ராஜேந்தர். (கதை, கட்டுரை, கவிதை இப்படி வெரைட்டி கொடுப்பதால்//

இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு :D

சொன்னது...

அட! இது நீங்க எழுதுனதா? ரொம்பப் பழையகால எழுத்தாளர் ஒருத்தரோட
'ஸ்டைல்' இருந்துச்சுன்னே,வேகமா ஸ்க்ரோல் செஞ்சேன், யாரோட எழுத்துன்னு
பார்க்க!

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்து(க்)கள்.

சொன்னது...

வருக நட்சத்திரமே! :)

//அட! இது நீங்க எழுதுனதா? ரொம்பப் பழையகால எழுத்தாளர் ஒருத்தரோட
'ஸ்டைல்' இருந்துச்சுன்னே,வேகமா ஸ்க்ரோல் செஞ்சேன், யாரோட எழுத்துன்னு
பார்க்க!

நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்து(க்)கள். //

நான் எழுதினதுதான் டீச்சர் :D

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

சொன்னது...

நல்லா இருக்கு

சொன்னது...

நல்ல சிந்தனை.

சொன்னது...

//நல்லா இருக்கு //

நன்றி சீனியர் :)


//நல்ல சிந்தனை.
//

'வலையுலக SJ சூர்யா' செந்தழல் ரவி...வருக வருக ;)

சொன்னது...

என்ன கப்பி லவ் லெட்டரு எழுத வேண்டிய வயசுல இதுமாதிரி பீலிங் லெட்டராஎழுதிகிட்டு இருக்கே. போம்மாஆ.. இதே ரேஞ்சுல ஒரு லவ் வெட்டரை உட்டேன்னு வையேன் உருகுவேயே உன் காலடியில இருக்கும் :))..

சொன்னது...

//என்ன கப்பி லவ் லெட்டரு எழுத வேண்டிய வயசுல இதுமாதிரி பீலிங் லெட்டராஎழுதிகிட்டு இருக்கே. போம்மாஆ.. இதே ரேஞ்சுல ஒரு லவ் வெட்டரை உட்டேன்னு வையேன் உருகுவேயே உன் காலடியில இருக்கும் :))..
//

அட போங்க தல...இந்த ஊர்ல லெட்டருக்கெல்லாம் அவசியமே இல்ல...ஆனா ஸ்பானிஷ் ரொம்ப அவசியம்...அங்க தான் பிரச்சனையே :D

சொன்னது...

//லாலல்ல்லா...லால்ல்லாஆஆ...
விக்ரமனும் ஓகே தான்...ஆனா கதிர் அளவுக்கு விக்ரமனுக்கு காதல் கதைகள் கிடையாதே :)//

காதல் கதைகள் கிடையாதா?

பூவே உனக்காக மட்டுமே போதுமே ;)

அப்பறம் நம்ம கதைலயும் எல்லாரும் ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பாங்க நம்ம விக்ரமன் படம் மாதிரி ;)

சொன்னது...

//காதல் கதைகள் கிடையாதா?

பூவே உனக்காக மட்டுமே போதுமே ;)
//

அவ்வளவாக இல்லையே என்று சொன்னேன் ;)

//
அப்பறம் நம்ம கதைலயும் எல்லாரும் ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பாங்க நம்ம விக்ரமன் படம் மாதிரி ;)
//

அதுவும் சரிதான்..அப்ப விக்ரமன்னே வச்சுடுவோம் :)

சொன்னது...

//
அதுவும் சரிதான்..அப்ப விக்ரமன்னே வச்சுடுவோம் :)//

சரி விக்ரமன் வேணாம்... கொஞ்சம் ஓவரா இருக்கு...
வேணும்னா
மணிரத்னம் இல்லை சங்கர்னு வெச்சிக்குவோம் ;)

சொன்னது...

//அட போங்க தல...இந்த ஊர்ல லெட்டருக்கெல்லாம் அவசியமே இல்ல...ஆனா ஸ்பானிஷ் ரொம்ப அவசியம்...அங்க தான் பிரச்சனையே :D//
மக்கள் இன்னும் மொழி பார்டரை தாண்டலை போல அது சரி தேவை பட்டா எத வேணா செய்வோம் இல்ல :)

சொன்னது...

//சரி விக்ரமன் வேணாம்... கொஞ்சம் ஓவரா இருக்கு...
வேணும்னா
மணிரத்னம் இல்லை சங்கர்னு வெச்சிக்குவோம் ;)
//

விக்ரமன் தான் கரெக்டா இருக்கும்...நீங்க சொன்ன மாதிரி எல்லாரும் நல்லவங்கன்னா விக்ரமன் படத்துல மட்டும் தான் ;)

அப்படி மாத்தனும்னு நினைச்சா சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க..இது மாதிரி உங்ககிட்டயே தேர்ந்தெடுக்கற உரிமை எங்கேயும் கிடைக்காது..ஆனா தேர்ந்தெடுத்த பின்னாடி அந்த பேரை வச்சு தான் கூப்பிடுவோம்..ஓகேவா? :))

சொன்னது...

//அப்படி மாத்தனும்னு நினைச்சா சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க..இது மாதிரி உங்ககிட்டயே தேர்ந்தெடுக்கற உரிமை எங்கேயும் கிடைக்காது..ஆனா தேர்ந்தெடுத்த பின்னாடி அந்த பேரை வச்சு தான் கூப்பிடுவோம்..ஓகேவா? :))//

சரிப்பா உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்...

பாலாஜில ஜி எடுத்துட்டு பாலா ஆயிடலாம் ;)

அப்பறம் நீ பேரரசுதான்... ஓகேவா?

சொன்னது...

/மக்கள் இன்னும் மொழி பார்டரை தாண்டலை போல அது சரி தேவை பட்டா எத வேணா செய்வோம் இல்ல :) //

ஆமா சந்தோஷ்...தக்க நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பிச்சாச்சு ;)

சொன்னது...

//
பாலாஜில ஜி எடுத்துட்டு பாலா ஆயிடலாம் ;)
//

பாலா வேண்டாம்..அது உங்க பேர் மாதிரியே இருக்கு..செல்லாது....விக்ரமன் வேண்டாமினா ஷங்கர் வச்சுக்கலாம் ;)

//
அப்பறம் நீ பேரரசுதான்... ஓகேவா?
//
ஆமா.. வேண்டாம்னு சொன்னா பெரிய மனசு பண்ணி விடவா போறீங்க??

//சரிப்பா உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்...
//

அதைத்தான் நானும் சொல்றேன்..நீங்க வெட்டி..நான் கப்பி :))

சொன்னது...

//தம்பி - டி.ராஜேந்தர். (கதை, கட்டுரை, கவிதை இப்படி வெரைட்டி கொடுப்பதால்)//

அடப்பாவிகளா ரெண்டு நாள்தான் இந்த பக்கம் வரல அதுக்குள்ள இப்படி காமெடி பண்ணிட்டிங்களே!

இத தட்டி கேக்க யாருமே இல்லயா?

சொன்னது...

//தம்பி - டி.ராஜேந்தர். (கதை, கட்டுரை, கவிதை இப்படி வெரைட்டி கொடுப்பதால்//

இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு :D //

இதுக்கு நீயும் உடந்தையா கப்பி?

சொன்னது...

//மணிரத்னம் இல்லை சங்கர்னு வெச்சிக்குவோம் ;) //

குருலயும், சிவாஜிலயும் அவங்க பிசியா இருப்பாங்க. வேணாம் அவங்கள கஷ்டப்படுத்தாத வெட்டி.

சொன்னது...

இங்கப்பாருடா காமெடிய!

ஏதோ பா.பா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு போனா, மணிரத்னம், ஷ்ங்கர், பாலாவை எல்லாம் வம்புக்கு இழுப்பதை.....

தம்பிகளா, நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.....

சொன்னது...

//தம்பி - டி.ராஜேந்தர். (கதை, கட்டுரை, கவிதை இப்படி வெரைட்டி கொடுப்பதால்//

யோவ் எத வச்சியா இந்த முகத்தை நீ டி. ராஜேந்தர் என்று சொன்னீங்க.....

என்னா கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பா.... ஒரு ஆள் அனாமத்தா கிடைக்க கூடாதே.... உடனே கூடி நின்னு கும்மி அடிச்சுடுறது....

சொன்னது...

உ ஹா.....

கூ...

உ ஹா.....

ஆ...

தட்டி கேட்க ஆள் இல்லையேனா "தம்பி" சண்டை பிரஸண்டன்.

ஓ....

தட்டி கேட்க ஆள் இல்லையேனா "தம்பி" சண்டை பிரஸண்டன்.

ஒ கீரிம் ரீம் ரீம்

தடக் தடக் டிஸ்யூம் டிஸ்யூம்

உடம்ப எல்லாம் படக் படக், ஏய் உடம்ப எல்லாம் படக் படக்

தகினத்தோம் தீம்த்தினோம்.

தலைவலிச்சா வாலுக்கு மருந்து, தலை செஞ்ச தப்பு காலுக்கு விலங்கா...

தலைவலிச்சா வாலுக்கு மருந்து, தலை செஞ்ச தப்பு காலுக்கு விலங்கா...

சொன்னது...

//அடப்பாவிகளா ரெண்டு நாள்தான் இந்த பக்கம் வரல அதுக்குள்ள இப்படி காமெடி பண்ணிட்டிங்களே!
//

வந்திருந்தா மட்டும் விட்ருவோமா?? :))

//
இத தட்டி கேக்க யாருமே இல்லயா?
//

இல்ல காலிங் பெல் அடிச்சு தான் கேட்டாங்க..என்னய்யா தட்டி கேக்க, வட்டி கேக்கன்னு??

//இதுக்கு நீயும் உடந்தையா கப்பி?
//

நட்புக்காக..ஹி ஹி!

சொன்னது...

//இங்கப்பாருடா காமெடிய!

தம்பிகளா, நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.....
//

புலி..காமெடிக்கு பண்றோம்னு தெரிஞ்சுக்கிட்டு நினைப்பு பொழப்புன்னு பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்...சிரிச்சுட்டு போவியா?? ;))

//என்னா கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பா.... ஒரு ஆள் அனாமத்தா கிடைக்க கூடாதே.... உடனே கூடி நின்னு கும்மி அடிச்சுடுறது.... //

நாம ரொம்ப யோக்கியம் :))

//தலைவலிச்சா வாலுக்கு மருந்து, தலை செஞ்ச தப்பு காலுக்கு விலங்கா...

தலைவலிச்சா வாலுக்கு மருந்து, தலை செஞ்ச தப்பு காலுக்கு விலங்கா...
//
சூடான்ல யாராவது சூன்யம் வச்சுட்டாங்களா ராசா??

சொன்னது...

என்னை எஸ்.ஜே சூர்யா என்றழைத்த வெட்டிப்பயலை மென்மையாக கண்டிக்கிறேன்...(நமீதாவோட இருக்க ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தாச்சா)

சொன்னது...

//என்னை எஸ்.ஜே சூர்யா என்றழைத்த வெட்டிப்பயலை மென்மையாக கண்டிக்கிறேன்...//

எஸ்.ஜே சூர்யா கண்ணடிக்கலாம்..ஆனா கண்டிக்கலாமா? ;)

//(நமீதாவோட இருக்க ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தாச்சா)
//
பார்த்தாச்சு..பார்த்தாச்சு!!

சொன்னது...

//சூடான்ல யாராவது சூன்யம் வச்சுட்டாங்களா ராசா?? //

கப்பி மேட்டர் தெரியுமா?

புலி நாளைக்கு ஷார்ஜா வரப்போகுதாம்!

சொன்னது...

முதல் பின்னூட்டமிட்டவருக்கும் அம்பதாவது பின்னூட்டமிட்டவருக்கும் நாலாவது வட்ட நகர சபையின் சார்பாக முப்பெரும் விழா நடைபெறும் என்பதை மாண்டிவிடியோ செய்தி குறிப்பு அறுவுறுத்துகிறது.

சொன்னது...

//மாண்டிவிடியோ செய்தி குறிப்பு அறுவுறுத்துகிறது. //

நல்லா உறுத்துச்சுய்யா???/

சொன்னது...

//கப்பி மேட்டர் தெரியுமா?

புலி நாளைக்கு ஷார்ஜா வரப்போகுதாம்!
//

உங்களுக்கு முன்னாடியே தெரியும் பாஸூ ;)

//முதல் பின்னூட்டமிட்டவருக்கும் அம்பதாவது பின்னூட்டமிட்டவருக்கும் நாலாவது வட்ட நகர சபையின் சார்பாக முப்பெரும் விழா நடைபெறும் என்பதை மாண்டிவிடியோ செய்தி குறிப்பு அறுவுறுத்துகிறது.
//
வலைப்பதிவர் சந்திப்புல உங்களுக்கு சிறப்பு ஆப்பு வழங்க ஏற்பாடு செஞ்சிருக்கு..மறக்காம கேட்டு வாங்கிக்கோங்க...

சொன்னது...

//அழகான முயற்சி! அருமையான கருத்தினை கதையா எழுதி, கலக்கலப்பா கலக்கல். தலைவா செமயா எழுதிறீங்க, சீக்கிரமே வந்து பாக்காம போயிட்டனே.
இனிமே அடிக்கடி வந்து பாக்குறேன். :) ...
//

மிக்க நன்றி மதுரா...அடிக்கடி வாங்க.. :)