என் புத்தக அலமாரியில்..

நன்றி: Sivabalan


கிரிக்கெட்டாக இருந்தாலும் புத்தகமாக இருந்தாலும் ஓசி காஜி அடிக்கற சுகமே தனி தான். கடந்த ஓரிரு வருடங்களாகத் தான் நானாக புத்தகங்கள் வாங்கி சேகரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கோடை விடுமுறைகளில் சொந்த கிராமத்திற்குச் செல்லும் போது என் ஒன்று விட்ட சித்தப்பா அறிமுகப்படுத்திய ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்கள்தான் என் முதல் வாசிப்பனுபவம். அவர் ஒரு பாலகுமாரன் ரசிகர். அவர் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிப்பதற்குள் விடுமுறை கழிந்துவிடும். ஓஷோவை வாசிக்கத் தந்தவரும் இவரே.

முதன்முதலில் நூல்கம் சென்றது மழைக்கு ஒதுங்குவதற்குத் தான். எதற்காகவோ என் அப்பா என்னைத் திட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டேன். சற்று நேரத்தில் தூரல் வலுத்து மழை பெய்ய அருகிலிருந்த மாவட்ட கிளை நூலகத்தில் நுழைந்தேன். அதன் பின்னர் தான் நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்ப நாட்களில் நூலகம் எனக்கு அந்நியமாகவே இருந்தது. தினசரிகளையும் வாரப் பத்திரிகைகளையும் படித்துவிட்டு கிளம்பிவிடுவேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்ல தயக்கமாகவே இருந்த்து. அந்த தயக்கம் கலைய சில மாதங்கள் ஆனது.

தேவன், புதுமைப்பித்தன்,தி.ஜா, ஜெயகாந்தன்,பிரபஞ்சன் எனப் பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்தது அந்த நூலகம் தான். அந்த நூலகத்தில் இருந்து படித்த புத்தகங்களின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டுப் புத்தகம் இப்போது வீட்டுப் பரணில் எங்காவது இருக்க வேண்டும்.

கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆங்கில "Best Seller" நாவல்களும் கவிதைப் புத்தகங்களுமே வாசிக்க உவப்பாயிருந்தன. பெரும்பாலும் ஓசி புத்தகங்கள் தான். சென்னை வந்தபின் British Library துணை இருந்தது.

எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியவர் என் பெரியப்பா. என் பெரியப்பா வீட்டில் இருந்து எடுத்து வந்த திருக்குறளும்(மு.வ) பள்ளியில் பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகளும் தான் முதலில் எனக்கே எனக்காக கிடைத்த புத்தகங்கள்.

இப்போது சென்னையில் என் அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் 50-60 புத்தகங்களில் சட்டென நினைவுக்கு வருபவை:

சுஜாதா:

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
ஸ்ரீரங்கத்து சிறுகதைகள்
கற்றதும் பெற்றதும்
புறநானூறு - ஒரு எளிய அறிமுகம்

கல்கி:

பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
அலை ஓசை

சுந்தர ராமசாமி:

ஜே.ஜே. சில குறிப்புகள்
ஒரு புளியமரத்தின் கதை
காகங்கள் - சிறுகதை தொகுப்பு

எஸ். ராமகிருஷ்ணன்:

உபபாண்டவம்
நெடுங்குருதி
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்

ஜெயமோகன்:

விஷ்ணுபுரம்
கொற்றவை
ஜெயமோகன் குறுநாவல்கள்

வைரமுத்து:

வைரமுத்து கவிதைகள்
தண்ணீர் தேசம்

நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்
காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

ஷெல்டன்,ஆர்ச்சர்,ஃபோர்சிய்த்களை தவிர்த்து ஆங்கில நாவல்களில் குறிப்பிடும்படியாக:

The Idiot - Fyodor Dostoevsky
To Kill A Mocking Bird - Harper Lee

இவையல்லாமல் கம்பெனியில் வருடாவருடம் தரும் சலுகையை பயன்படுத்தி கணிப்பொறியியல் புத்தகங்களும் :).

இங்கே மாண்டிவிடியோவில் ஆங்கிலப் புத்தகம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. வாங்க தேடிக் கொண்டிருப்பவை:

Crime and Punishment :Fyodor Dostoevsky
The Motorcycle Diaries - Che Guevera

பி.கு: மகேந்திரன், தலைப்பை மாற்றிவிட்டேன் :)



113 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி பய ,

சூப்பர் லிஸ்ட்ங்க...

அந்த " வைர முத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவிடுங்கள்..

சொன்னது...

கப்பி பய,

உங்கள் வாசிப்பில் பரிணாமம் தெரிகிறது, இனிமேல் நீங்கள் வானத்தையும் அண்ணாந்து பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

Michael Crichton - The Prey என்ற நாவல் கிடைத்தால் முயன்று பாருங்கள், Nano-technology ´Õ ¿øÄ «È¢Ó¸õ, ¿¡ÅÖõ ¿øÄ Å¢Õ Å¢ÕôÀ¡¸ §À¡Ìõ.

¯í¸Ç¢ý Òò¾¸ô À¨¼ÂÖìÌ ¿ýÈ¢!

சொன்னது...

//அந்த " வைர முத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை பற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவிடுங்கள்..
//

சிவபாலன்,
தண்ணீர் தேசம், pdf வடிவில் Project Madurai-இல் கிடைக்கும்...
லின்க் தேடித் தருகிறேன்..

வாழ்த்துக்களுக்கு நன்றி!

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தெகா..

//Michael Crichton - The Prey என்ற நாவல்//

இந்த புத்தகத்தை ஒரு முறை British Library-இல் தேடிப் பார்த்தேன்..கிடைக்கவில்லை :(
படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கும் புத்தகம்...

//´Õ ¿øÄ «È¢Ó¸õ, ¿¡ÅÖõ ¿øÄ Å¢Õ Å¢ÕôÀ¡¸ §À¡Ìõ.

¯í¸Ç¢ý Òò¾¸ô À¨¼ÂÖìÌ ¿ýÈ¢! //

இது என்னங்க?? இதைப் படிச்சுட்டே வானத்தை அண்ணாந்து பாக்க ஆரம்பிச்சுட்டேன் :D..

சொன்னது...

கப்பி,

இதிலிருக்கும் பல புத்தகங்கள் என்னுடைய அலமாரியையும் அலங்கரிக்கின்றன....

ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் புத்தகத்திற்கு மட்டும் ஒரு தனி மரியாதை.... :)

சொன்னது...

அந்த கசமுசா எழுத்துக்கள்.... இதுவாகத்தான் இருக்கணும் "Nano-technology பற்றி ஒரு நல்லதொரு அறிமுகம்." கதையும் நல்ல விரு விருப்பாக போகுமென்பதே, அது.

Cosmic Force வந்து சென்சார் பண்ணிடுச்சுப் போல, முன்னமே ;-))

என்னுடைய நூலகத்தின் சுட்டி:

http://thekkikattan.blogspot.com/2006/07/blog-post_30.html

சொன்னது...

ஹீம் -இங்கிலீசு நாவல்லாம் படிக்கிறீங்க அதிகமா நமக்கு புடிச்ச ஆளு ஹென்றி மில்லரும். எரிக்கா ஜங்க் கும் தான் புத்தகத்தோட பேர சொன்னா அடிக்க வருவாங்க அதால எஸ்கேப்பு......

சொன்னது...

//ஸ்ரீரங்கத்து சிறுகதைகள் புத்தகத்திற்கு மட்டும் ஒரு தனி மரியாதை.... :) //

அதிலும் குறிப்பாக 'சீனு'விற்கு?? :)

சொன்னது...

//Cosmic Force வந்து சென்சார் பண்ணிடுச்சுப் போல, முன்னமே ;-))
//

நம்ம அறிவுப்பசியைக் குலைக்க சதி பண்றாங்க...விடுங்க :D...

இதோ உங்க ஏரியாவுக்கு வந்துட்டே இருக்கேன்..

சொன்னது...

//அதிகமா நமக்கு புடிச்ச ஆளு ஹென்றி மில்லரும். எரிக்கா ஜங்க் கும் தான் புத்தகத்தோட பேர சொன்னா அடிக்க வருவாங்க அதால எஸ்கேப்பு...... //

ஹி ஹி..நானும் ஒன்னு ரெண்டு படிச்சிருக்கேன்..

சொன்னது...

சிவபாலன்,

தண்ணீர் தேசம் TSCII-ல் இங்கே கிடைக்கும்..

http://www.tamil.net/projectmadurai/pmfinish.html

pdf link எங்கோ இருந்தது..நினைவில்லை..

சொன்னது...

Fear of Flying
எரிக்கா ஜங்க் கின் ரொம்ப நல்ல நாகரீகமான நாவல்

இன்னும் இருக்கு அதெல்லாம் சே சே கலாச்சாரம் கெட்டு போகும்

சொன்னது...

கப்பி பய,

சுட்டிக்கு நன்றி

சொன்னது...

/இன்னும் இருக்கு அதெல்லாம் சே சே கலாச்சாரம் கெட்டு போகும்
//

ஹி ஹி..அதே அதே ;)

சிவபாலன்..
நன்றிக்கு நன்றி ;)

சொன்னது...

Thats a Good collection Boss:)

சொன்னது...

நன்றி தேவ்..

ஏழைக்கேத்த எள்ளுருண்டை :))

சொன்னது...

கப்பி,

வந்து எழுப்பி விடுங்க பதிவெ... நீங்க எந்த ஊராண்டை இருக்கீங்க இப்ப, எங்கிருந்தாலும் "கலீல் ஜிப்ரான்" புத்தகங்கள் கிடைக்கும், வாங்கி சுவைச்சுப் பாருங்க...

எறும்பு சேர்க்கிறமாதிரி ஒன்னென்னா தான் சேர்க்க முடியும், மனச உட்டுப்புடமா, தேடுங்க ;-))

சொன்னது...

அட இப்போதான் உங்க ஏரியாக்கு வந்தேன்..நீங்க இங்க இருக்கீங்க.. :))

//... நீங்க எந்த ஊராண்டை இருக்கீங்க இப்ப, //

மாண்டிவிடியோங்க..

இங்க எல்லா புக்கும் ஸ்பானிஷ்ல தான் கிடைக்கும் :(
பெருசு-ஐ கூப்பிட்டு மொழிப் பெயர்க்க சொல்லனும்..

இன்னும் 4 மாசம்...அது வரைக்கும் இணையமே துணை ;)

//எறும்பு சேர்க்கிறமாதிரி ஒன்னென்னா தான் சேர்க்க முடியும், மனச உட்டுப்புடமா, தேடுங்க ;-))
//
மனசை விட்றதா..நீங்க வேற..

இதை இப்படியே விட்றதா இல்ல..

சொன்னது...

கப்பி மாண்டிவிடியோல மான் வேட்ட பேமசாமே போனீங்களா?

சொன்னது...

என்னங்க இது..

தெகா,நீங்க நான் மூணு பேரும் சுத்தி சுத்தி அடிச்சிட்டு இருக்கோமோ??


//கப்பி மாண்டிவிடியோல மான் வேட்ட பேமசாமே போனீங்களா? //

இந்த மேட்டர் எனக்கே தெரியாதே..
கிளப்பிவிடுங்க :))

இங்க மாட்டு வேட்டையும் பன்றி வேட்டையும் தான் ;)

சொன்னது...

பாத்தீங்கள என்ன என் நூலகத்திற்கே திரும்ப அனுப்பி தேட வைக்கலாமின்னு பார்க்கிறீங்க... ;-))

ரெஃபரன்ஸ் புக்கல்லாம் "கடம்"அடிச்சு வைச்சுகிறதில்லை... பிறகெதற்கு இத்தினி வசதின்னு, இப்ப நீங்க சொல்லுங்க

****மாண்டிவிடியோ..**** அப்படிங்கிற இடம் எந்த நாட்டுல (தென் அமெரிக்காவில) இருக்கு...

சொன்னது...

அட ஒரு அம்பது பின்னூட்டத்த தாண்டினாத்தான் வர்ற ஆளுங்க கொஞ்சம் கவனிப்பாங்க் ஆதுல ஒரு ரெண்டுபேர் நூலகம் எழுதுனாலும் நல்லதுதான நாம காத்தாட மான்வேட்டைய பத்தி பேசுவோம்

சொன்னது...

//****மாண்டிவிடியோ..**** அப்படிங்கிற இடம் எந்த நாட்டுல (தென் அமெரிக்காவில) இருக்கு... //

உருகுவே தெகா..

முந்தைய பதிவுகளை கொஞ்சம் பாருங்க..இங்க குடியரசு தினம், நீர்வீழ்ச்சி எல்லாம் போட்டிருக்கேன்..

சொன்னது...

//அட ஒரு அம்பது பின்னூட்டத்த தாண்டினாத்தான் வர்ற ஆளுங்க கொஞ்சம் கவனிப்பாங்க் ஆதுல ஒரு ரெண்டுபேர் நூலகம் எழுதுனாலும் நல்லதுதான நாம காத்தாட மான்வேட்டைய பத்தி பேசுவோம்
//

ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க..

இங்க வேட்டையைப் பத்தி அங்க வந்து சொல்றேன் ;)

சொன்னது...

பெரிவேலிக்கும் மான்டிவிடியோவுக்கும் நடுவுல இருக்க ரோடுல அம்பு வில்ல மட்டும் பயன்படுத்தி வெள்ளை வால் மான் வேட்டையாலாம்ங்க ஸ்னகா க்ரீக் ஸ்டேட் பார்க் இருக்கில்லயா அங்கதான்

சொன்னது...

கதைய கேட்டுகிட்டு இங்கயே இருந்தா எப்பிடிங்க நம்ம ஊட்டுக்கும் வந்து எதாச்சும் கத சொல்லுங்க

சொன்னது...

ஓ, அப்பிடியா, கொத்தானரு பேரை காப்பத்துணுமா இல்லீயா, நான் அவரது பட்டறையிலதான் பின்னூட்டங்கள் எப்படி போடுவதுன்னு கோடை க்ளாஸ் எடுத்துக் கிட்டேன்...

இப்ப நான் உங்க கிட்ட கேக்கலைன்னு வச்சுக்கங்க... இந்த பின்னூட்டம் கிடைச்சுருக்குமா.... ஹி...ஹி...ஹி... அதான் ;-)

சொன்னது...

ரைபில் ஃபோர்ட் ரோட்ல இருந்து ப்ளாக் ரோடு வரைக்கும் ஆனா ஒரு வருச வேட்டை லைசன்ஸ் வேனும்ங்க

சொன்னது...

நான் ஏதோ பொய்சொல்றதா நீங்க நினைக்கிறீங்கல்ல நிஜமாவே நான் ஒரு தடவை உருகுவே வுக்கு வந்தனுங்க

சொன்னது...

இந்த ஏரியாவ கேட்டு பாருங்க அப்பிடி தெரியிலன்னா நீங்க கேக்கர ஆளு கு.ச.கு வா யிருக்கும் :)
Hunting Area 1
Riffle Ford Road to Black Rock Road

Hunting Area 2
Berryville Road to Montevideo Road

சொன்னது...

Obtain the permit, maps and information package from these two Department of Natural Resource Office locations:


Maryland State Park Service, 11950 Clopper Road, Gaithersburg, MD 20878
Telephone Number: 301-924-2127.

Maryland Wildlife and Heritage Service, 11960 Clopper Road, Gaithersburg, MD 20878
Telephone Number: 301-258-7308.

சொன்னது...

சந்ததேகமே இல்லை, நான் நினைச்சது சரியாத்தான் போச்சு... மாகோ பெரிய பன்னாட்டு மிருக கடத்தல் ஆள் அப்படிங்கிறது தெரிஞ்சுப் போச்சு...

உங்க வீட்டான்டை இருக்கிற, Wildlife Conservation Force, 1458A Igdipa yusup Rd, Dubailங்கிற முகவரிக்கு இப்பத்தான் தெரிவிச்சுருக்கேன் எதுக்கும் தலமறைவு ஆகாம அங்கேயே இருங்க... ;-)

சொன்னது...

இந்த மிரட்டலுக்கெல்லாம் கோவிந்தன் பயந்துவிடமாட்டான் என்பதை பயமில்லாததுபோல் சொல்லிக்கொள்கிறேன் வரட்டும் அவர்கள்
அவர்களின் ஒட்டகத்தில் சவாரி செய்தேனா இல்லை அவற்றின் முதுகில் சிறுபிள்ளைகளை ஏற்றி ஒட்டகத்தை சித்திரவதை செய்தேனா பாலைவனம் எங்கும் நீண்டு கிடக்கும் மணல் வெளியில் பஹ்ரைன்காரன் போல் காரை ஓட்டி புழுதிவாரித் தூற்றினேனா ?, அல்லது என்னை எடுத்த எடுப்பில் கைது செய்துவிட நான் என்ன ஈரானா? :)

சொன்னது...

கலங்காதே கண்மணி...

எதிரிகளின் வஞ்சத்தை உன் நெஞ்சின் தீரம் சுக்கு ஆயிரமாக்கும்..

சொன்னது...

கப்பி பய,

// தண்ணீர் தேசம் TSCII-ல் இங்கே கிடைக்கும்.. //


தேடிகிட்டே இருக்கிறேன்...

எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன்.

சொன்னது...

/எதிரிகளின் வஞ்சத்தை உன் நெஞ்சின் தீரம் சுக்கு ஆயிரமாக்கும்..//

என்னாது "சுக்கு" காபி ஆக்குமா? எங்களுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்... பிரியாணி வாங்கி போட்டு ஆட்களை நீங்கள் 'உருகுவே"யில இருந்து கொண்டுவந்தாலும்... நாய்'ங்கெல்லாம் யாரு, தீரன் புஷ்ஷின் தீவிர பக்தன்... ;-)))

சொன்னது...

//தேடிகிட்டே இருக்கிறேன்...

எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன்.//

வேணும்னா துப்பறியும் ஆட்களை கூப்பிடலாமா? :))

சொன்னது...

//கலங்காதே கண்மணி...

எதிரிகளின் வஞ்சத்தை உன் நெஞ்சின் தீரம் சுக்கு ஆயிரமாக்கும்.. //

கலக்கமா எனக்கா என் கால்கள் நடுங்குவது கண்டு நீ கலாய்ப்பது தெரிகிறது அது நடுக்கமில்லை குளிர் ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஏஸி பக்கத்தில் இருந்தால் ஆடாதா பின்னே

சொன்னது...

//Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்... //

இதைக் கண்டித்து செயற்குழு கூட்டி நாளை மாபெரும் வலையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்...

சொன்னது...

வீரா "வேஷ" த்தில் உங்களை வா போ நீ யென்று சொல்லிவிட்டேன் அடியேனை வீரத்துடன் மன்னியுங்கள்

disci

சொன்னது...

//கலக்கமா எனக்கா என் கால்கள் நடுங்குவது கண்டு நீ கலாய்ப்பது தெரிகிறது அது நடுக்கமில்லை குளிர் ஆறு மணி நேரத்துக்கும் மேல் ஏஸி பக்கத்தில் இருந்தால் ஆடாதா பின்னே
//

தெரிகிறதடா கண்மணி..எதிரிகள் அதைக் கண்டு தவறாக எண்ணிவிடக் கூடாது... உன் வாயால் அதைச் சொல்ல வேண்டும் என்றே உசுப்பி விட்டேன்.

சொன்னது...

//வீரா "வேஷ" த்தில் உங்களை வா போ நீ யென்று சொல்லிவிட்டேன் அடியேனை வீரத்துடன் மன்னியுங்கள்
disci

//
உன் கோபமும் வீரமும் பாசமும் நெகிழச் செய்கிறது..

ஆனா மன்னியுங்கள் - அப்படின்னா இன்னாப்பா??

மன்னி-ன்னா அண்ணி தானே??

disci - இங்கிலீஷ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...

சொன்னது...

//Pre-emtive aresst பண்ணி"யே தீருவோம்//
ப்ரிஎமிடிவ் அரஸ்ட் பன்ன இது என்ன மைனாரிடி ரிபோர்ட்டா இல்லை புஷ் என்ன டாம் க்ரூஸா ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே வந்தாலும் மான் வேட்டை நடந்தே தீரும் என்று மதியம்தான் சேதி வந்தது அல்ஜசீரா டீவியில் அல்கொய்தா பேசியது கேட்டதா பென்டகனில் இல்லை புஷ் புஸ்ஸென்று ஏர்போர்ஸ் ஒன்னில் பறந்துவிட்டாரா?

சொன்னது...

/இதைக் கண்டித்து செயற்குழு கூட்டி நாளை மாபெரும் வலையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்...//

ஆமா, இங்கிருக்கிற சங்கங்களையெல்லாம் திரட்டி நீங்க எலி'வலையடைப்பு பண்றதுக்குள்ள நாங்க பக்கத்து ஊரு நாட்டை தூண்டி விட்டு புகைமூட்டி எல்லா எலியையும் கைது பண்ணி கொண்டுபுடுவோம்...

சொன்னது...

//நாட்டை தூண்டி விட்டு புகைமூட்டி எல்லா எலியையும் கைது பண்ணி கொண்டுபுடுவோம்//

துபாய் சிங்கத்தை அதன் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸில் வந்து பார்த்திருக்க வேண்டும் எனது அன்பு சகோதரன் இந்த "தள்ளாத" நிலையிலும் பொல்லாத புலியென சீரியிருப்பான், குவாட்டர் கோவிந்தனுக்கு தெரிந்தால் புஷ்ஷின் வண்டவாளம் ஏர்போர்ஸ் ஒன்னில் ஏறியிருக்கும், இப்படி பின்னூட்டத்துக்கு ஆசைப்பட்டு தனியாக கதம்பத்தில் மாட்டிக்கொண்ட எனக்கு சரியான தண்டனை சரியான தண்டனை...

சொன்னது...

46

சொன்னது...

46

சொன்னது...

47

சொன்னது...

48

சொன்னது...

49

சொன்னது...

50.............................
:)

சொன்னது...

//எங்கள் குத்து விளக்கு, எப்பொழுதும் "டேவிஸ் காம்ப்"ல் தான் இருப்பார்//

டேவிஸ் கப்பா அப்ப கிரண்டுல இருப்பாருன்னு சொல்லுங்க ஒசாமா ஓசி ப்ளைட் எடுக்க வேண்டியதுதான்

சொன்னது...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

என்னையும் 50 போட வச்சிட்டீங்களே குவாட்டரு...

சொன்னது...

மாகோ, இது அனியாயத்திலும் அனியாயம், நீங்களே கவுன்ட் அப் பண்ணி ஒவ்வொரு ரன்னா தட்டி ஐம்பத போட்டாக்க, எங்கய்ங்கெல்லாம் அப்புறம அ'சிங்கங்களேன்னு கப்பி எப்படி கூப்பிடறதாம்...

எல்லோருக்கும் An Equal Opportunity கொடுக்குமாறு, உருப்பிடாத கோயில்ல உருண்டைச் சோரு (உ.கோ.உ.சோ) வாங்கி சாப்பிடும் சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்...

சொன்னது...

//மாகோ, இது அனியாயத்திலும் அனியாயம், நீங்களே கவுன்ட் அப் பண்ணி ஒவ்வொரு ரன்னா தட்டி ஐம்பத போட்டாக்க, //

பீல் பண்ணாதீங்க தெகா...

//எல்லோருக்கும் An Equal Opportunity கொடுக்குமாறு, உருப்பிடாத கோயில்ல உருண்டைச் சோரு (உ.கோ.உ.சோ) வாங்கி சாப்பிடும் சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்ளப் படுகிறீர்கள்//

இதை யாருங்க வந்து கொடுக்கனும்??

சொன்னது...

//புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்ல தயக்கமாகவே இருந்த்து. அந்த தயக்கம் கலைய சில மாதங்கள் ஆனது. //
கவித்துவமாக எழுதியிருக்கிறீர்கள்.

நானும்... ஜெயகாந்தன், பிரபஞ்சன், புதுமை பித்தன், சு சமுத்திரம் புத்தகங்களை விரும்பி இன்றும் படிக்கிறேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ் குமார் கதைகளை பள்ளிப் பருவத்தில் கட்டுண்டு கிடந்ததுண்டு.

சரித்திர நாவல்களில் எனது சாய்ஸ் சாண்டின்ல்யன் :)

சொன்னது...

நன்றி கோவியாரே..

//சரித்திர நாவல்களில் எனது சாய்ஸ் சாண்டின்ல்யன் :) //
சரித்திர நாவல்களில் அவரை விஞ்சமுடியுமா :)

சொன்னது...

கப்பி எங்க சொல்லாம கொ"ல்லா"ம போய்ட்டீங்க வாங்க நம்ம மான்வேட்டையாடலாம்

சொன்னது...

//இன்னைக்கு புதுசா எத்தனை பட்டியல் வந்திருக்கு மகேந்திரன்??//


எதுவும் புதுசா கண்ணுக்குக்கெட்டின தூரம் வரைக்கும் காணோமே .....!

சொன்னது...

//ஜஸ்வந்த் மச்சத்தையும் படிச்சுட்டு வர்றேன்.. //

அய்யா கப்பி மச்சத்த படிச்சுட்டு பின்னூட்டத்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்லேயே போடுங்கய்யா நீங்க மறந்து போயி கதம்பத்துல போட்டு கவுத்துடாதீங்க

சொன்னது...

கப்பி,

ஆமா, நேத்தைக்கு எங்கே விட்டோம், தொடரலாமா? மான் வேட்டையாடுரவரோட சேரதீங்க... சல்மான் நண்பர்களுக்கான கதி உங்களுக்கு ஆகிப்பூடும்...

பட்டுக்கோட்டை பிரபாகர ஒரு முறை நான் பேருந்தில் பார்க்கிற சந்தர்பம் கிடைச்சது,,, அப்ப வந்து நான் ஜமால் முகம்மது கல்லூரியில் படிச்சிகிட்டு இருந்த காலம்...

அந்த கதை அடுத்த பின்னூட்டத்தில சொல்றேன்... :-)

சொன்னது...

//அங்க போய் என்ன-னு கேளுங்க.. //

கப்பி..
பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்

//பட்டுக்கோட்டை பிரபாகர ஒரு முறை நான் பேருந்தில் பார்க்கிற சந்தர்பம் கிடைச்சது//

எங்கப்பா பொடா காரங்க இங்க வந்து பாருங்க தெகா அய்யா பிரபாகரன பட்டுக்கோட்டைல பாத்ததா சொல்றாரு

//களி கிண்டவிட்டாத்தான் சரி வரும் போல...//

இந்த மான் எந்தன் சொந்தமான்
பக்கம் வந்தமான்

பின்னூட்டம் போடுங்கய்யா போடுங்க :))

சொன்னது...

பட்டுகோட்டை பிரபாகர பார்த்த பொழுது....1

அப்படி பார்த்த ஆச்சர்யத்திலே, அந்த ஆள அப்பப்ப அவரோட "ஃபார்மஸில" பட்டுக்கோட்டையில இருக்கிறதில நடந்து கிடந்து கடந்து ;-) (கவுஜ நடையில வந்துருச்சு) போறப்ப பார்க்கிறது.

இருந்தாலும் பஸ்ஸில வச்சு அதுவும் அவரு பக்கத்து இருக்கை வேற காலியா இருந்துச்சு அப்பல்லாம் நாம இங்கிலீபீஸ் நாவல்கள் படிக்கிறதில்ல அவருதான் ட்ரான்ஸ்லேட் பண்ணி எழுதிடுவாரில்ல ;-))) அதப் படிச்சாவே போதும்...

சரி விசயத்துக்கு வாரேன் அடுத்தப் பின்னூட்டத்தில...

சொன்னது...

சொல்லுங்க .....
ம்... அப்புறமா என்னாச்சு?

சொன்னது...

பட்டுகோட்டை பிரபாகர பார்த்த பொழுது....2

ரொம்ப புளாகாங்கிதப்பட்டுப் போயி, நான் போயி சேர வேண்டிய ஊரு திருச்சி, வந்து நின்ன பேருந்து, திருச்சியில இருந்து புதுக்கோட்டை வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை போறது. நம்ம வெண்னை ஆட்கள் போர்ட மாத்தமா இருந்திருக்குக, அது தெரியமா நான் ஒரு வெளக்கெண்னை அதில ஏறி அந்த ஆள பார்த்ததும் ரொம்ப பந்தாவ பக்கத்தில உட்கார்ந்து கிட்டு. அவரு பார்க்கிற மாதிரி உடனேயே கையில வச்சுருந்த சுஜாதா "மணல் கயிறு"ன்னு நினைக்கிறேன், திறந்து வச்சுகிட்டு உட்கார்ந்துட்டேன் (வயிறு புகையட்டுமின்னு ;-))).

அவரும் நான் எதிர் பார்த்தமாதிரியே எட்டி எட்டி என் புத்தகத்தை சைடு கண்ணு வுட்டு பார்த்துகிட்டு வந்தாறு. எனக்கு என்னமோ அந்த ஆள பீட் பண்ணிப்புட்டதா நினைப்பு.

சொன்னது...

கடைசி பாகம் ப. கோட்டை பிரபாகர சந்திச்சப்ப - 3

சரி பஸ் எடுத்து ஒரு 20 கி.மீ போயாச்சு, கன்டக்டர் டிக்கெட் போட்டு வந்து சேருவதுக்கும் ஆலங்குடின்னு ஒர் ஊரு வராதுக்கும் சரியா இருந்துச்சு, நான் ஸ்டைலா ஒரு திருச்சி ப்ளீஸ் அப்படின்னு சொன்னேன். ப. கோட்டை என்னை ஒரு மாதிரி பாத்து சிரிச்சுச்சு, நடத்துனர், யப்பா இந்த பஸ் பட்டுகோட்டை போகுதுப்பான்னு, அடப் பாவத்தேன்னு, அசடு வழிஞ்சுகிட்டே, அங்கன குதிச்சு திரும்ப வேற பஸ் புடிச்சு... அதென் ஏன் கேக்கிறீங்க (அதான் சொல்லிப்புட்டேன்ல) போங்க...

அன்னிக்கு க்ளாஸ் மட்டம் வேற போட வேண்டியாத போச்சு... அதில இருந்து எனக்கு ஒரு பாடமும் கிடைச்சுச்சு, இப்ப தென்கச்சி அண்ணன் (கோ. சுவாமிநாதன்) மாதிரி படிச்சுட்டு முடிஞ்சா சிரிச்சு வையுங்க...

சொன்னது...

புத்தக விரும்பிகளே.... சந்தனமுல்லை என்பவர் கீழ்காணும் சுட்டியில் புத்தகப் பதிவு போட்டிருக்கிறார், பார்த்து படித்து உங்க கைவரிசையை அங்கு காட்டவும் ;-)

http://sandanamullai.blogspot.com/2006/08/blog-post.html

சொன்னது...

என்னங்கய்யா, ப.கோட்டை கதையை கை கடுக்க உட்கார்ந்து அடிச்சு உங்ககிட்ட சொன்ன ஒண்ணும் அதெப் பத்தி பேசமாடேங்கிறீங்க...

சொன்னது...

//உங்களுக்கு உள்ள இருக்கு ஒரு சூனா-பானா பெருமையில மிதந்திருப்பானே..//

நினைப்புத்தான் பொழப்ப கெடுத்துச்சாம்... அது இந்த கதையின் "நீதி."

சொன்னது...

என்னை நூறுக்கு தள்ளிவிட்டு மேட்சமடையவைத்த அன்புச் அ'சிங்கம், உருகுவேயின் வணங்காமுடி "கப்பி"யாருக்கு, கழுதைப்புலிகளின் தலைவன் தெகா, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... ;-)

சொன்னது...

//அது எங்கள் பாக்கியம் !! ;)

//கழுதைப்புலிகளின் தலைவன் தெகா//

கழுதைப்புலிகளுக்கு மட்டுமா தலைவன்...வாயில்லா ஜீவனுக்கெல்லாம் நீங்க தானே வாத்தியார் :D //

இந்த மாபெரும் பொருப்பை என் தலையில் கட்டிய "கப்பியார்" அவர்களுக்கு இந்த பொன்னடைய (கிழிந்து போன, கூவம் ஆற்றில் துவைத்து ரீ-சைக்கில் செய்யப்பட்ட), எங்களூர் இழுத்தடிச்சான் பட்டி அய்யா குரங்குசாமி அவர்களின் சார்பாக, எக்ஸ்பிரஸ் அய்யாவின் மீது சாத்துகிறேன்...

சொன்னது...

இன்னும் பதிமூனுதான் வாங்கய்யா வந்து சாத்துங்க

சொன்னது...

சீரியஸான கேள்வி 1: தென்னமரிக்க காடுகளில் வசிக்கும் மிகச்சிறிய குரங்கின் பெயர் என்ன?

சொன்னது...

உள்குத்தா ?
இல்லய்யா இல்ல

சொன்னது...

//உள்குத்தா ?
இல்லய்யா இல்ல//

அதானே பாத்தேன்..
தெகா
பதில் சொல்லுங்க..

சொன்னது...

//குவாட்டர் ஏதோ டவுட் கேக்கறாரு..பதில் சொல்லுங்க..//

பதில் சொல்லி அரைநாள் ஆச்சு இன்னும் பதில காணல ;-)))?

அவருகிட்ட கேட்டதே உங்க கிட்டயும்...

இது தொடர்பாகவே... புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?

சொன்னது...

// புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டிய எப்படி கூப்பிடுறாங்க?
//

சிங்கப்புலி :P

சொன்னது...

லைகர் :
புலிக்கும் சிங்கத்துக்கும் பிறந்த குட்டி லைகர்

சொன்னது...

சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?

சொன்னது...

/அனிமல் ப்ளேனட்லாம் பாக்கறதில்ல நைனா :)) //

சரி சரி, இந்த் இண்டெர்னெட், அனிமல் ப்ளானட்லாம் வந்ததும் வந்துச்சு, ச்சே ச்சே... ;-))

சரி இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்... போர்னியோ காடுகளில் உள்ள ஒரு வாலில்லா குரங்கின் பெயரை குறிப்பிடுக... 5 மதிப்பெண்கள்.

சொன்னது...

Barbary Ape??

இதான் முதல்ல கிடைச்ச பதில்..

சொன்னது...

கப்பி உங்கள பத்தி கேட்டுருக்கார்:))

சொன்னது...

monkey of borneo

சொன்னது...

//கப்பி உங்கள பத்தி கேட்டுருக்கார்:)) //

நோஓஓஓஓ...

//monkey of borneo
///

ஓஓஓஓ...

சொன்னது...

நெசமாலுமே நான் ஒரு விலங்கு பிரியனுங்க பி.பி.சி. டிஸ்கவரி நே.ஜி போட்ட எல்லா டி.வி.டி.யும் இருக்கு எஙிட்ட

சொன்னது...

/சீரியஸ் கேள்வி 2. அல்பட்ரொஸ் பறவை எத்தனை ஆண்டுகளில் இணை சேரும்?//

யய்யக்கள, உங்களுக்கு தெரியாத கேள்வியா கேளுங்கய்யா, பொசுக்கு பொசுக்குன்னு ஆன்லைன்லெ தேடி இப்பிடி அனியாயத்திற்கு புத்திசாலிகளா இருக்கீங்களே... :-))

இது காப்பி அடிக்கிறமாதிரிதான்...அரை மதிப்பெண் கூட உங்களுக்கு கிடையாது...

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அவை சேருகின்றன. இரண்டு மாதங்கங்கள் அடைகாப்பிற்கு பிறகே, குஞ்சுபரிப்பு நடைபெறுகிறது.
இந்த பறவைகள் வலசை போதலில் ரொம்பக் கெட்டிக் காரர்கள்!!

சொன்னது...

நெசமாலுமே நான் ஒரு விலங்கு பிரியனுங்க பி.பி.சி. டிஸ்கவரி நே.ஜி போட்ட எல்லா டி.வி.டி.யும் இருக்கு எஙிட்ட

நான் ரொம்ப நல்லவனுங்க காப்பியெல்லாம் அடிக்கல இந்த கேள்வியே நான் பி.பி.சி யோட லைப் ஆப் பேர்ட்ஸ் பாத்து கேட்டது தான் டேவிட் அட்டன் பரோன்னா எனக்கு உசிரு என்னப்போயி காப்பின்னு சொல்லிட்டீங்களே இது நாயமா?

சொன்னது...

//வலசை போதலில்//

அப்படின்னா?

சொன்னது...

//பழம்தின்னி நரி ..கரீட்டா? :)) //

இது ஆனஸ்ட் விடையாக இருப்பதால் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருக்கிறது என்பதலாலும், பரீட்சை பேப்பரிம் முகப்பில் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாலும், வுமக்கு யாம் 2 அரை மதிப்பெண்கள் வழங்குகிறோம்... ;-))) ஜஸ்ட் பாஸ்...

சொன்னது...

நான் நம்பறேன் மகேந்திரன் :)

//டேவிட் அட்டன் பரோன்னா //

மட்டன் பரோட்ட தெரியும்..இது என்ன அட்டன் பரோ?? :)))

சொன்னது...

சரி அடுத்த கேள்வி ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது?

சொன்னது...

//யாம் 2 அரை மதிப்பெண்கள் வழங்குகிறோம்... ;-))) ஜஸ்ட் பாஸ்...
//
ஆத்தா நான் பாஸாயிட்டேன்...

சொன்னது...

//வலசை போதலில்//

அப்படின்னா? //

அப்படின்னா உங்கள் தாய் மொழியில ;-) migration

சொன்னது...

//மட்டன் பரோட்ட தெரியும்..இது என்ன அட்டன் பரோ?? :)))//

கப்பியோட கேள்விய பாத்தீங்களா தெகா நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க?

சொன்னது...

/ப்ளாடிபஸ் எப்படி பால் குடுக்குது? /

ரொம்ப மாடர்னா மாட்டுக்கு பேர் வச்சிருக்கீங்க..வழக்கமா மூக்கா,முருகா-னு தானே வைப்பாங்க..:D

இதுக்கும் நீங்களே பதில் சொல்லிடுங்களேன் ஹி ஹி ..

சொன்னது...

/migration
//
இப்படி தமிழ்ல சொன்னா தானே தெரியும் :(

சொன்னது...

//நீங்க என்னப் போயி மிருக கடத்தல் காரன்னு சொன்னீங்க? //

அட அது அறிவுப்பசில கேட்ட கேள்வி..நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்..தெகா நம்புங்கோவ்வ்வ்வ்..

சொன்னது...

/ஆத்தா நான் பாஸாயிட்டேன்...//

:-)))

இதெல்லாம் சத்தம் போட்ட சொல்ற விசயம், அதெல்லாம் அவுட் அஃப் பாஷன், இன்னிக்கு முக்காடு போட்டுகிட்டு கோவிந்த சாமிகிட்ட ரெண்டு கிளாஸ் வாங்கி சாத்துறதுதான் ஸ்டைலூலூலூ...

சொன்னது...

அதன் உடலின் மயிர்கால் களின் வழியே சுரக்கும் ஒரு திரவத்தை பாலாக ஊட்டுகிறது கொழுப்புச்சத்து நிறந்தது அப்பால் (உபயம் பி.பி.சி. ட்ரயல்ஸ் ஆப் லைப்- டேவிட் அ.பரோ)

சொன்னது...

/Barbary Ape??

இதான் முதல்ல கிடைச்ச பதில்.. //

ரெண்டு பேருமே மாட்டீனீங்கள, அந்த கேள்விக்கு விடை கிடைக்காம...

இதில வேற டிஸ்கஷன் வேற... ;-))))

போர்னியோவில இருக்கிற நம்ம சொந்தக்காரர் வந்து ஒரங்குட்டன்... ;-) அங்கே மட்டுமே காணப்படுகிறார்... அதுவே அவரின் சிறப்பு

சொன்னது...

குறைவான கயமைத் தனத்தில் (33%) 100 அடிக்க உதவிய 'விலங்கியல் வேந்தன்' தெகாவிற்கும் 'பல்கலை பயில்வான்' மகேந்திரனுக்கும் நன்றி..நன்றி

சொன்னது...

நன்றிங்கோவ் மகோ, இன்னொரு கேள்வியோட இன்னைய விளையாட்ட முடிச்சுகிறேன்...

நம்மூரில் காட்டுக்கழுதைகள் எங்கு காணப்படுகின்றன? 10 மதிபெண்கள் சொல்லிவிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம நிறந்து எடுத்துக்கோங்க, சமர்த்தா... ;-))

சொன்னது...

102

சொன்னது...

//நம்மூரில் காட்டுக்கழுதைகள் எங்கு காணப்படுகின்றன?//

மெட்ராஸ்ல ஒரு இடம் ஞாபகம் வருது...வேணாம் உசுரு மேல கொஞசம் ஆசை இருக்கு :D

சொன்னது...

நூறு அடித்த தென் அமெரிக்க தீவிர வாதிகளின் வாதத் தந்தையும், உருகுவேயின் சிறந்த படப்பிடிபாளருமான கப்பி பய நூறு அடித்தற்கு, உ.கோ.உ.சோ, சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு விடைபெறுகிறேன், நன்றி வணக்கம் ;-)))!!!

சொன்னது...

நன்றிக்கு நன்றிக்கு நன்றி..தெகா..பதில் சொல்லிட்டு போங்க

சொன்னது...

/மெட்ராஸ்ல ஒரு இடம் ஞாபகம் வருது...வேணாம் உசுரு மேல கொஞசம் ஆசை இருக்கு :D

தெகா..பதில் சொல்லிட்டு போங்க..//

நீங்க சொல்ற கழுதைங்க நிறைய திரியுது, என்ன மாதிரி.

நான் கேட்டது "அக்மார்க்" wild asses, அவைகள் குஜராத்தில் "ரன் அஃப் கட்ச்" எனுமிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

நீங்க சொல்ற காட்டுக் கழுதைகள் ஊரெலாமிருக்கு அதுகென்ன பஞ்சம் ;-)))

சொன்னது...

இந்தியாவெங்கும் காணப் படுகின்றன சில துபாய்க்கும் உருகுவேக்கும் அமெரிக்காவுக்கும் வேலை நிமித்தம் சென்று விட்டதால் இப்போது உலகமெங்கும் காணப் படுகின்றன மேலும் சில சிங்கப்பூர் , தாய்லாந்து மலேசியா, ஜெர்மனி பாரிஸ் என்ற பறந்த உலகில் இந்தியக் கழுதைகள உலகமெங்கும் காணக் கிடைக்கின்றன

எப்பிடி என்னோட கடைசி பதில் இன்னைக்கு :)
நெசமாவே பதில் தெரியலீங்கோவ்

சொன்னது...

உங்க பதிலுக்கு மக்கள் என்னை அடி பின்ன போறாங்க :)

சொன்னது...

குரங்கிலிருந்து காட்டுக் கழுதை வரை தகவல்களை அள்ளித் தெரித்த தெகாவிற்கு மீண்டும் நன்றி :D

சொன்னது...

நன்றி தெகா, கப்பி நாளை வேறு ஒரு அறிவியல் கேள்விபதிவில் சந்திப்போம்
பின்னூட்ட முயல் தெகா உருகுவே மான் வேட்டை புகழ் கப்பி இருவருக்கும் நன்றி

சொன்னது...

மக்களே,

தண்ணீர் தேசம் PDF பைலை இங்கு ஏற்றியுள்ளேன்.

http://www.uploading.com/?get=NBOP9A6U

சொன்னது...

மிக்க நன்றி பெத்த ராயுடு !!