பின்நவீனத்துவக் கனவு

இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு. நம்ம கனவில் வழக்கமா வருபவர்கள் ;-) வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.

**********************************************

தியேட்டரில் ஏதோ ஒரு செல்வராகவன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாசர் கிரிக்கெட் கோச். தனுஷ் ஒரு பந்தை அடிக்காமல் மிஸ் செய்துவிடுகிறார். உடனே நாசர் கோபமாக "பேட்ட ஒழுங்கா புடிடா பேமானி" என்று தனுஷைத் திட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் தனுஷைப் பார்த்து சிரிக்கின்றனர்.

அடுத்த காட்சி - ஒரு ஆற்றங்கரையில் நாசர் தனுஷுக்கு அறிவுரைகள் கூறுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு ஆங்கிளில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் மறு பக்கத்தில் இருந்து ஒரு ஷாட் அருமையாக இருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்.

"தமிழ்நாடு,ஆந்திரா, பாலிவுட் எல்லாத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு. ரஜினி, சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்(?!) யாரும் அவ்வளவு சீக்கிரத்துல பேசமாட்டாங்க" என்கிறார் நாசர்.

உடனே தனுஷ் திரும்பி நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார்.

**********************************************

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியா திரும்பிச் செல்கிறான். நீளமாக முடி வளர்த்திருந்தவன் ஒட்ட முடி வெட்டிக்கொண்டு வந்தான். காரணம் கேட்டதற்கு "தென்னாப்ரிக்கா வழியா போறேன். பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

**********************************************

சத்யராஜும் கவுண்டமணியும் சைக்கிள் ரிக்ஷாவில் வந்துகொண்டிருக்கிறார்கள். பின்னால் விவேக் ஒரு வேனின் டாப்பில் அமர்ந்து வருகிறார். மைக்கில் யாருக்கும் புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வருகிறார். யாரும் அவரை கவனிப்பது போல் தெரியவில்லை.

வேனில் இருந்து இறங்கிய விவேக் சீட்டாடச் செல்கிறார். குறைந்தது ஐநூறு ரூபாய் கட்டி ஆட வேண்டும். விவேக் தொடர்ந்து ஜெயித்து ஐநூறு ஐநூறாக அள்ளுகிறார்.

**********************************************

நான் காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.

ஆட்டம் முடிந்ததும் அமிதாப் "எனக்கு வயசாகிடுச்சு. என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்" என்கிறார். அவர்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.

**********************************************

தெருமுனையில் என் அப்பா வந்துகொண்டிருக்கிறார். என் அம்மா என்னிடம் "இப்போதெல்லாம் இவர் தெருல அக்கம்பக்கம் எல்லார்கிட்டயும் பயங்கரமா சண்டை போட்றாரு..என்ன-ன்னு கேளுடா" என்கிறார்.

"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்" என்கிறேன் நான்.

என் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.

**********************************************

"சாலைப் பணியாளர் பிரச்சனைக்குத் தீர்வு வந்தால் பாமக்-வுடன் உறவு வைத்துக் கொள்வீர்களா?" - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்திடம் கேள்வி கேட்கப் படுகிறது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைச்சா கூட்டணிக்குத் தயார் சார்" என்கிறார் கேப்டன்.

உடனே ஜிமெயிலில் அவர் இன்பாக்சில் 43 பழைய மடல்கள் 'Unread'-ஆக மாறுகின்றன. இதைக் கண்ட விஜயகாந்த் "இல்லை சார்..எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வோம். இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது" என்றவுடன் அவை மீண்டும் படிக்கப்பட்டவையாக மாறுகின்றன.

பத்திரிகையாளர் கூட்டம் முடிந்ததும் கேப்டன் ஒவ்வொன்றாக பழைய மடல்களைத் திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.

**********************************************

அவ்வளவு தான்ங்க...இதுக்குள்ள விழிப்பு வந்துடுச்சு...ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வந்த கனவு. பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.

புரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்கப்பு!!!!



39 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கனவு மாதிரி தெரியலையே.. ஒக்காந்து யோசிச்சா மாதிரி தெரியுதே..

கனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.

// பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென //

//என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்//

//சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்//

//என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன்//

வாய் விட்டுச் சிரிக்க முடிந்தது!

சொன்னது...

//பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.//
கப்பி எனக்கு முழுசாவே புரியுது. அது என்னனு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா.

சரி அத விடு, இன்னிக்கு சனிக்கிழமை, இன்னிக்கு போய் நடுஜாமம் 7 மணியை விடிகாலை என்று தவறாக கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

சொன்னது...

//கனவு மாதிரி தெரியலையே.. ஒக்காந்து யோசிச்சா மாதிரி தெரியுதே..//

பினாத்தலார் சார்...சொன்னா நம்புங்க..
சத்தியமா கனவு தாங்க...

பாதி தூக்கக் கலக்கத்துல எழுந்து வந்து எழுதியிருக்கேன்...

எல்லாமே கனவுல வந்த நிகழ்வுகள் தான்...எழுதும்போது கொஞ்சம் தலை,வால் எல்லாம் சேந்துடுச்சு :D

கதை எழுதினாலும் நம்ப மாட்டேங்கிறாங்க..கனவை எழுதினாலும் நம்ப மாட்டேங்கிறாங்கப்பா...

//கனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.//
அதான் எனக்கே பயமா இருக்கு சார்...டாக்டரைப் பாக்க போலாமானு இருக்கேன்...

ஆனா இங்க இவனுங்க கிட்ட ஸ்பானிஷ்ல பேசி புரியவைக்கறதுக்கு பதில் இழுத்துப் போர்த்திகிட்டு திரும்பவும் தூங்க ட்ரை பண்ணலாம்!!!

சொன்னது...

//கப்பி எனக்கு முழுசாவே புரியுது. அது என்னனு நான் சொல்லி தான் உனக்கு தெரியுனுமா.//

சிவா...
ஏதோ எக்குத்தப்பா புரிஞ்சுக்கிட்டே-ன்னு மட்டும் தெரியுது...
அதையும் சொல்லிடு..

//இன்னிக்கு சனிக்கிழமை, இன்னிக்கு போய் நடுஜாமம் 7 மணியை விடிகாலை என்று தவறாக கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்//

மன்னிச்சுடு புலி...
தூக்கக் கலக்கத்துல டங் ஸ்லிப் ஆயிடுச்சு...
கண்டனத்தை சீக்கிரம் வந்து வாபஸ் வாங்கிக்கோ :))

சொன்னது...

//கண்டனத்தை சீக்கிரம் வந்து வாபஸ் வாங்கிக்கோ :)) //
சரி நீ மன்னிப்பு கேட்டதால் வாபஸ்

//சிவா...
ஏதோ எக்குத்தப்பா புரிஞ்சுக்கிட்டே-ன்னு மட்டும் தெரியுது...//
ஹிஹி....

//அதையும் சொல்லிடு..//
நீ தமிழ் சினிமா மட்டும் இல்ல, இந்தி சினிமாவும் பாத்து கெட்டு போன பையன் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.
மண்டையில் முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும் என்பதும் புரிகின்றது.
இன்னும் ஏகப்பட்டது புரியுது, அது எல்லாத்தையும் சொல்லனுமா என்ன?

சொன்னது...

//சரி நீ மன்னிப்பு கேட்டதால் வாபஸ்//
வாபஸ் வாங்கிய வருங்கால சூடான் ஜனாதிபதி சிவா..வால்க வால்க...

//நீ தமிழ் சினிமா மட்டும் இல்ல, இந்தி சினிமாவும் பாத்து கெட்டு போன பையன் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை. //
ஹி ஹி

//மண்டையில் முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. //
ஆகா..நமக்கு முடி கொட்டற விசயம் அங்க வரைக்கும் தெரிஞ்சு போச்சா..

//இன்னும் ஏகப்பட்டது புரியுது, அது எல்லாத்தையும் சொல்லனுமா என்ன?//

இப்பவே கண்ணைக் கட்டுது....ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்...

சொன்னது...

தமிழ் வலைப் பூக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்று தலைப்பைப் பார்த்தவுடன் புரிகிறது.

விரைவில் சரியாகி விடும். கவலை வேண்டாம்.

சொன்னது...

கப்பி,

//இங்க இவனுங்க கிட்ட ஸ்பானிஷ்ல பேசி புரியவைக்கறதுக்கு பதில் இழுத்துப் போர்த்திகிட்டு திரும்பவும் தூங்க ட்ரை பண்ணலாம்!!! //

நான் ஸ்பானிஷ் கற்றபோது எனக்கு உதவிய தளங்கள்.

http://www.studyspanish.com/tutorial.htm

http://www.bbc.co.uk/languages/spanish/

அப்புறம் படைப்பைப் பத்தி,

நடுநடுவே ஒன்னறை பக்கத்துக்கு ராமஜெயம் வரணும்.

ஆப்ரிக்கா/தென்னமெரிக்க/கிழக்காசிய நாடு/ஜார்க்கண்ட், இப்படி ஏதோவொரு பிண்ணனியில, தோழர் டீக்கடயில அமர்ந்து வர்க்க போராட்டத்தின் நுணுக்கங்கள் பற்றி சாமான்யனுக்கு விளக்க வேண்டும்.

சிம்ரனின் பேட்டியை போடவேண்டும்.

Non-linearity கூடக்கூட பின் நவீனத்துவப் படைப்பு வலிமையுறும் எனக் கொள்க.

ஸீரோ டிகிரி மாத்திரம் பத்தாது பாஸ். 360 டிகிரியிலயும் சுத்தி சுத்தி அடிக்கணும் :)))

சொன்னது...

/வாபஸ் வாங்கிய வருங்கால சூடான் ஜனாதிபதி சிவா..வால்க வால்க...//
கூவனுது நல்லா தான் இருக்கு. ஆனா கொஞ்சம் ஸ்பிப் ஆயிட்ட, வருங்கால இந்திய ஜனாதிபதி என்று கூவி இருக்கனும். பரவாயில்ல அடுத்த தபா முயற்சி பண்ணு.

//ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்...//
ME TOO....

சொன்னது...

//தமிழ் வலைப் பூக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்று //

அதே..அதே...
நீங்க வெறும் சிபி இல்லைங்க...துப்பறியும் சிபி..:))

//விரைவில் சரியாகி விடும். கவலை வேண்டாம்//
அனுபவசாலி சொன்னா சரி தான்...

சொன்னது...

வாங்க பெத்தராயுடு...

நமக்கு ஸ்பானிஷ் குரு பெரு(சு) இருக்காரு...ஓரளவு தேறிட்டு வர்றேன்...

//ஸீரோ டிகிரி மாத்திரம் பத்தாது பாஸ். 360 டிகிரியிலயும் சுத்தி சுத்தி அடிக்கணும் :))) //

இன்னைக்கு ராத்திரி தூங்கப் போறதுக்கு முன் சிம்ரன்,இடுப்பு,தென்னமெரிக்கா,போராட்டம்,non-linearity, radius,circumference எல்லாத்தையும் நினைச்சுட்டு தூங்கறேன்...கனவுல சுத்தி சுத்தி அடிக்கும்..என்ன சொல்றீங்க? :)))

சொன்னது...

//வருங்கால இந்திய ஜனாதிபதி என்று கூவி இருக்கனும்.//
என்னா இப்போ..காசா பணமா...இன்னொருக்கா கூவிட்டா போச்சு..

வருங்கால இந்திய ஜனாதிபதி சிவா!!!

இப்போ ஓகேவா??

சொன்னது...

வாழ்க! உட்டுட்ட பாரு ;)

சொன்னது...

அது ஒன்னுமில்ல கப்ஸ்

தொடர்ந்து தமிழ்ல பேசாம (sin hablar)இருந்தா, அல்லது
தொடர்ந்து தமிழ் வலையப் படிச்சா(leer continuamente) ,
பாத்திங்களா இதில வர்ர mente உங்க mind ஐ குறிக்குது.
அல்லது
நாளைக்கு என்ன பதியலான்னு யோசிச்சுகிட்டே தூங்கப்போனா

அல்லது,

ஸ்பானிஷ் பேசறதுக்கு தமிழ்ல யோசிச்சா இப்படித்தான்.
piensa bien

கொல்டி காரச்சட்னிய கொஞ்சமா தொட்டுக்கணும், entiendes.

buen fin de semana.
கொஞ்ச நாள்ல ஷகிரா,ஜெசிக்கா ஆல்வா, ஜெ.லொ

எல்லாரும் லோ ஹிப்போட லோ லோ ன்னு உங்க
கனவுல வரப்போறாங்க.

சொன்னது...

வாள்க..வாள்க..வாள்க... :))

சொன்னது...

ஹுக்கும் நல்லாவே குலைக்குற ;)

சொன்னது...

குரு..
sin hablar y leer continua - mas o menos கரெக்ட் தான்...:))

//கொல்டி காரச்சட்னிய கொஞ்சமா தொட்டுக்கணும், entiendes//

entendido...
காரசட்னியும் தீரப் போகுது :(

//கொஞ்ச நாள்ல ஷகிரா,ஜெசிக்கா ஆல்வா, ஜெ.லொ
எல்லாரும் லோ ஹிப்போட லோ லோ ன்னு உங்க
கனவுல வரப்போறாங்க//

அவங்க எப்பவும் வர்றவங்க தானே..நேத்தும் ஒழுங்கா அவங்க வந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லையே :D

உங்களுக்கும் buen fin de semana!!
haste despues comentario!!

சொன்னது...

//ஷகிரா,ஜெசிக்கா ஆல்வா, ஜெ.லொ//

//வால்க வால்க.//
//வாள்க..வாள்க..வாள்க... :)) //

நீங்க யாருக்கு வாழ்க வாழ்க போடப்போறீங்க

சொன்னது...

நம்ம வாழ்க என்னைக்கும் தலைவி ஷகிலாக்கு..ச்சே ஷகிராவுக்கு தான்...

இன்னைக்கு நான் வாழ்க போட்ட சிவா யாருக்கு வாழ்க போடுவாருன்னு தெரியாது!!

சொன்னது...

கப்ஸ்

உங்க தொல்லை பேசி எண்ணை குடுக்கவும்.

நேரம் கிடைக்கும்போது LLAMAR செய்யலாம்

சொன்னது...

குரு..

598 2 7118775..

மின்னஞ்சல் முகவரி சொல்லுங்க...
மடல் அனுப்புகிறேன்...

சொன்னது...

""பின்நவீனத்துவக் கனவு"

கனவுல கண்டத மறக்காமல் எழுதிய ஸ்பானிஸ் ஜனாதிபதி கப்பி வால்(க) ::)))))))))

சொன்னது...

//கப்பி வால்(க)//
இதெல்லாம் ரொம்ப ஓவர்..சொல்லிப்புட்டேன்...

//ஸ்பானிஸ் ஜனாதிபதி //
ஸ்பானிஸா...சொல்றத சொல்ற..உலக ஜனாதிபதி-ன்னாவது சொல்லு மக்கா..

சொன்னது...

ஏதோ புரியாத மாதிரி இல்லை :-)

சொன்னது...

அதே தான் பாபா :)))

சொன்னது...

//இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு//

ஏழு மணி உங்க ஊருல அதிகாலையா? குடுத்து வச்சவங்க.

சொன்னது...

கைப்பு...
7 மணி விடிகாலை இல்லையாம்..நடுஜாமம்-னு சிவா சொல்றாரு.....

அவரைக் கேளுங்க..அவர் தான் ரொம்ப கொடுத்து வச்சவரு...

சொன்னது...

//"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்" என்கிறேன் நான்.

என் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.//

இது செம சிரிப்புங்க.

அப்படியே நம்ம கனவையும் பாருங்க.

http://kaipullai.blogspot.com/2006/05/blog-post.html

சொன்னது...

:))..
இதோ அங்க வந்துட்டே இருக்கேன்..

சொன்னது...

//நீங்க வெறும் சிபி இல்லைங்க...துப்பறியும் சிபிஐ//

இப்படியெல்லாம் சொல்லி ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க?

:)

சொன்னது...

என்னங்க சிபிஐ..ச்சே..சிபி..
உங்களைப் போய் வம்புல மாட்டி விடுவோமா..

(மாட்டி விடத் தான் ட்ரை பண்ணேன்..யாரும் கண்டுக்கலையே :))...)

சொன்னது...

//என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.//

இதுதான் தலைப்பின் பெயர்க்காரணமா? :-D

சொன்னது...

//இதுதான் தலைப்பின் பெயர்க்காரணமா? :-D//

அதே! அதே!! ;)

சொன்னது...

கனவுக்கு ஒரே அர்த்தம்தான். 'என்ன பதிவு போடலாம்னு' இராத்திரி 1 மணிவரைக்கும் யோசிச்சிட்டிருந்தீங்கல்ல அதனால வந்த கனவு.

நிஜமா கனவுன்னா சுமார்தான்
யோசிச்சு எழுதினதுன்னா சூப்பரப்பு.

:)

சொன்னது...

//கனவுக்கு ஒரே அர்த்தம்தான். 'என்ன பதிவு போடலாம்னு' இராத்திரி 1 மணிவரைக்கும் யோசிச்சிட்டிருந்தீங்கல்ல அதனால வந்த கனவு.
//

:))

//
நிஜமா கனவுன்னா சுமார்தான்
யோசிச்சு எழுதினதுன்னா சூப்பரப்பு.

:)
//

கலந்து செய்த கலவை நான் :)))

நன்றி சிறில்!

சொன்னது...

கப்பி கல்யாணம் ஆகிடுச்சா.
இல்ல பொழப்பு கெட்டு இராத்திரி 7 மணிக்கே முழிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க..

சொன்னது...

//கப்பி கல்யாணம் ஆகிடுச்சா.
இல்ல பொழப்பு கெட்டு இராத்திரி 7 மணிக்கே முழிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க..

//

:))
அகில்,
அன்னைக்கு இந்த கனவுனாலதாங்க சீக்கிரம் முழிச்சுகிட்டேன்..இல்லைனா எதுக்கு ராத்திரி 7 மணிக்கே எழுந்துக்கப்போறேன் :))

சொன்னது...

///காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.///

ஐஸ்வர்யா ராயா இருக்கும்...ஏதாவது பேப்பர படிச்சுட்டு தூங்கவேண்டியது...வயத்தெரிச்சல்ல இப்படி கனவு வர்ரது சகஜம்தான்...சரி ரம்மி எல்லா கார்டும் கரெக்டா சேத்தாரா அமிதாப்பு ? நீங்க எவ்ளோ பாயிண்டு ?

சொன்னது...

//ஐஸ்வர்யா ராயா இருக்கும்...//
இல்ல ரவி...வேற யாராவது தான் இருக்கும்..தலைவி வந்தா தெரியாம இருக்குமா :D

//
ஏதாவது பேப்பர படிச்சுட்டு தூங்கவேண்டியது...வயத்தெரிச்சல்ல இப்படி கனவு வர்ரது சகஜம்தான்...//

ஹி ஹி

//
சரி ரம்மி எல்லா கார்டும் கரெக்டா சேத்தாரா அமிதாப்பு ? நீங்க எவ்ளோ பாயிண்டு ?
//
ஒழுங்காத்தான் சேர்த்திருப்பார்ன்னு நினைக்கறேன்...பிக் பி மேல ஒரு நம்பிக்கைதான்...கணக்கெல்லாம் போடல ரவி..நான் எப்பவும் போல ஃபுல்லாத்தான் இருக்கும் ;))