முகமில்லாத காதலி!

எனக்கு
முகமில்லாத காதலி
ஒருத்தி இருக்கிறாள்!

அவளுக்குப்
பல முகங்களைப்
பொருத்திப் பார்த்தேன்!

ஆனால்
உன் முகம்தான்
அழகாகப் பொருந்துகிறது!

இதை அவளிடம்
நான் சொன்ன இரவு
கனவுகளால்
நீண்டிருந்தது!

நாம்
பேசிக் கொண்டிருக்கும்
வேளைகளில்
அவள் தனியே விலகிச்
சென்றுவிடுகிறாள்!

நீ என்னைப் பார்த்துப்
புன்னகைக்கும்
தருணங்களில் அதைக்
கவனியாதவள் போல்
தலை திருப்பிக்கொள்கிறாள்!

என் காதலை
உன்னிடம் சொல்லும்
அந்த நாளில்
அவள்
மரித்துப் போவாள்!

உனக்கு நான்
எழுதும் காதல்கடிதம்
அவளுக்கான
இரங்கற்பா!

நம் இல்லறம்
அவளுக்கு நாம்
செலுத்தும்
அஞ்சலி!



21 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நீயுமா?
சரி ஒழிச்சு போ

சொன்னது...

ஹாஹ்ஹா...ச்சும்மா..ச்சும்மா..

அதுசரி..மண்டையை உடைச்சுக்கிட்டு எழுதியிருக்கேன்...திற்னாய்வெல்லாம் செஞ்சு எப்படி இருக்குன்னு சொல்றதில்லையா???

சொன்னது...

கப்பி கவிதை சூப்பரு, சிவா என்ன இது ஒரு புள்ள எவ்வளவு அழகா காதல் கவிதை எழுதி இருக்கு நீ என்னடான்னா இப்படி சொல்லிப்புட்டே. நாளைக்கே நம்ம கப்பி(வைரமுத்து மாதிரி கப்பிமுத்து பாரு பேரே எவ்வளவு பொருத்தமா இருக்கு..) ஒரு வைரமுத்து(தேவதாஸாவும் (அ) கப்பிதாஸு ஆகலாம்) ஆகாலாம் யார் கண்டது.. நீ எழுதுராஜா ஜோரா எழுது.

சொன்னது...

//கப்பி கவிதை சூப்பரு//

ஹி ஹி ஹி..

//சிவா என்ன இது ஒரு புள்ள எவ்வளவு அழகா காதல் கவிதை எழுதி இருக்கு//

ஆங்..நல்லா எடுத்து சொல்லு சந்தோஷ்...


//கப்பி(வைரமுத்து மாதிரி கப்பிமுத்து பாரு பேரே எவ்வளவு பொருத்தமா இருக்கு..) ஒரு வைரமுத்து(தேவதாஸாவும் (அ) கப்பிதாஸு ஆகலாம்) ஆகாலாம் யார் கண்டது.. //

இப்படி கப்பித்தனமா அள்ளிபோடறதுக்கு என்னை ரெண்டு அடி அடிச்சுட்டு போயிருக்கலாம் :))

சொன்னது...

Tengo una novia sin cara(identidad)
Busque varias caras para ella
Pero suya es la mas bella

La noche que avise a ella alargo con sueños

Cuando nos conversamos ella separa
Los momentos que tu me das la risa ella actua como no dio cuenta
El dia que yo declaro nuestra amor a ti, ella muere.

La carta del amor que yo escribo es su pena de muerte.

Nuestra vida es su Q.E.P.D

கப்பீஸ்

உங்க கவுஜய ஏதோ எனக்கு தெரிஞ்ச முறையில்
முழி பெயர்த்து español ல எழுதியிருக்கேன்.

உங்க இஷ்டத்துக்கு பிரிச்சு மேஞ்சுக்கங்க.

சொன்னது...

குரு..

muchas buen..

(இதைத் தவிர வேற பெருசா பெருச புகழற வார்த்தை தெரியாதே!!..)

உங்க மொழி பெயர்ப்புல எங்களை முழி பிதுங்க வச்சுட்டீங்க...
காலைக் காட்டுங்க...

ஸ்பானிஷ் கவி பெரு(சு)க்கு இங்க சிலை வைக்கச் சொல்லி பேரணி
ஏற்பாடு பண்ணப் போறேன்!!!

இங்க கூட வேலை பாக்கறவனே உங்க மொழி பெயர்ப்பை பாத்து மெய்சிலிர்த்துட்டான்..

இதுல எனக்கு இருபது வார்த்தைகளுக்கு கிட்ட அர்த்தம் தெரியுது..பரவால்ல..நான் நினைச்சதை விட நிறையவே.. :D

சொன்னது...

//muchas buen..//இல்லீங்க.


அது muy bien.
இது ஸ்பானிஷ் புணர்ச்சி விதி.
தமிழ்-ல பொன்ஸ் அக்கா சொல்லி
குடுத்துருக்காங்க.

சொன்னது...

அட்ரா சக்கை..அட்ரா சக்கை..

பெருசு..புணர்ச்சி விதியெல்லாம் பின்னி பெடலெடுக்கறீங்களே..

நீங்க ஒரு ஸ்பானிஷ் tiegre!!!

சொன்னது...

NO ES TIEGRE

TIENE QUE DECIR TIGRE!!

சொன்னது...

//என் காதலை
உன்னிடம் சொல்லும்
அந்த நாளில்
அவள்
மரித்துப் போவாள்//

கப்பி சேட்டா! நன்னாயிட்டுண்டு கேட்டோ.
:)

சொன்னது...

குரு
உங்களைப் புகழ இன்னொரு வார்த்தை கிடைச்ச சந்தோஷத்துல அவசர அவசரமா அடிச்சதுல வந்த டங் ஸ்லிப் அது..கண்டுக்காதீங்க..

இது போல் ஸ்பானிஷ் தவறுகளைச் சுட்டிக் காட்டி திருத்துவதால் இன்று முதல் "சுட்டிக் காட்டிய சூடாமணி" என்று அழைக்கப் படுவீர்கள்...
(எல்லாம் இஅ இபு எஃபெக்ட் :D)

கைப்பு...
வளரெ நன்னி...

சொன்னது...

கப்பி நல்ல இருக்குப்பே.... என்னா பிரச்சினைனா நீ ஒரு காதலிக்கு மட்டுக்குமே சொன்னெனு வச்சுக்கோ....
கோச்சுக்குறுக்காவாகிலெ மிச்ச அம்புட்டும் பேரும்....:-)

சொன்னது...

வா ராம்...

//நீ ஒரு காதலிக்கு மட்டுக்குமே சொன்னெனு வச்சுக்கோ....
கோச்சுக்குறுக்காவாகிலெ மிச்ச அம்புட்டும் பேரும்....:-)
//

அப்பு..என்ன யோசிச்சு தான் பேசுறயா?? விளங்கிரும்... :D..

சொன்னது...

hmmm aaga motham innoru kadhal kavidha. Naan solrathukku perusa onnum illa neraya paer yaerkanave sollitaanga, but ithu mattum solraen. Ellaarukkum oru template irukku athukku best fit thaan kadhali aagaranra antha concept .... realistic. very true..

சொன்னது...

//Ellaarukkum oru template irukku athukku best fit thaan kadhali aagaranra antha concept .... //

அதே..அதே...

சொன்னது...

நல்ல கற்பனை, வாழ்த்துக்கள்!

சொன்னது...

நன்றி மணியன்!

சொன்னது...

// நீ என்னைப் பார்த்துப்
புன்னகைக்கும்
தருணங்களில் அதைக்
கவனியாதவள் போல்
தலை திருப்பிக்கொள்கிறாள்!

//

உண்மையான ஒரு காதலி எப்படி பொசஸிவா இருப்பாங்களோ அவ்வளவு யதார்த்தமா இருக்கு....

nice :)

சொன்னது...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இம்சை அரசி!!

சொன்னது...

அருமை... நீங்க சொல்ல வந்தது.. நமது கற்பனைக் காதலியத்தானே... அட... அட.. அட...

அருமை.. இப்படியெல்லாம் யோசிக்கலாமோ?

சொன்னது...

நன்றி ஜி! :)