?!

சென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

*****

இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.

*****


போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.

*****

சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.






*****

விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.


*****

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.

*****

சர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!




*****


இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.

*****


போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"

*****



36 பின்னூட்டங்கள்:

சொன்னது...

இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.
//


::)))

சொன்னது...

நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.
//

same blood :(((

சொன்னது...

அந்தப்பொண்ணு உண்மையாவே தேவதைமாதிரிதான் இருக்கா... அப்படியே பாத்துகிட்டே இருந்தேன்...

சொன்னது...

\
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
\

இதை இப்படியே டேமேஜர் கிட்ட சொல்லிப்பாருங்க...

சொன்னது...

\
இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு
\


:))

சொன்னது...

//அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க.//


எல்லா அம்மாக்களுமே இப்படித்தான் இருப்பாங்க போல!:)))))

சொன்னது...

//தமிழன்... said...
அந்தப்பொண்ணு உண்மையாவே தேவதைமாதிரிதான் இருக்கா... அப்படியே பாத்துகிட்டே இருந்தேன்...
//

நான் திரும்ப திரும்ப வீடியோவை ஓட விட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்! :))

சொன்னது...

// தமிழன்... said...
\
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
\

இதை இப்படியே டேமேஜர் கிட்ட சொல்லிப்பாருங்க...
//

அவுரும், எப்படிப்பா என்னிய மாதிரியே நீயும் ஃபீல்பண்ணுறேன்னு கட்டி பிடிச்சு அழாத குறையாக கண்ணீர் விடுவாரு பாருங்களேன்!!!!!

சொன்னது...

//நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.
/

காலேஜ் படிக்கிற காலத்துல இப்படித்தான் நாங்க ஒரு 14 பேரு டெய்லி காலேஜ் போய்ட்டு வரும்போது கண்டிஷனா சொல்லிட்டோம் எல்லா பயமக்களும் மரியாதையா சார் போட்டு கூப்பிடணும்ம்னு !

சூப்பரா இருக்கும்! பயங்கர காமெடியாவும் கூட....!

1.சார் அசைன்மெண்ட நான் காப்பி பண்ணலாம்ங்களா சார்!
2. சார் வர்றீங்களா டீ சாப்பிடலாம்!
3.என்கிட்ட காசு இல்ல சார் நீங்கள கொடுத்திடுங்க சார்!
4.சார் அந்த பிகரு உங்களுக்கு பதில் சொல்லிச்சுங்களா சார்
5.சார் டெஸ்ட்டுக்கு என் முன்னாடித்தான் சார் நீங்க உக்காரணும் ப்ளீஸ் சார் :))))))))))))))

சொன்னது...

கப்பி சார் நீங்க போட்டோவெல்லாம் சூப்பரா எடுக்கறீங்க சார்!

புரொபொஷனல் கூரியர்கள் லிஸ்ட்ல சேர்த்துடலாமா சார்????

சொன்னது...

//நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.//

யு மீன் சொட்டை.... நோ ராஜா நோ...

சொன்னது...

idhellam sari..
nee eppa rasa oorukku thirumbi vara

சொன்னது...

நேற்றைய முன் தினம் என்றால் "Day before yesterday", right?

சொன்னது...

மின்னல்

இப்படித்தான் அண்ணாச்சி பொழப்பு சிரிப்பா சிரிக்குது..அவ்வ்வ்

:))


ராம்

உங்களுக்குமா?? நான் தனியாள் இல்ல..அதூஊஊஊ :))

சொன்னது...

தமிழன்

//தேவதைமாதிரிதான் இருக்கா//

ஆமாங்கண்ணா

//இதை இப்படியே டேமேஜர் கிட்ட சொல்லிப்பாருங்க...//

அவனுக்கு தமிழ் தெரியாதே..இதை இங்கிலிபீசுல மாத்தி சொல்றதுக்குள்ள தாவு தீந்துடுமே :))

நன்றி தல!


ஆயில்யன்

//
எல்லா அம்மாக்களுமே இப்படித்தான் இருப்பாங்க போல!:)))))//

ரிப்பீட்டு ஹி ஹி

//நான் திரும்ப திரும்ப வீடியோவை ஓட விட்டு பார்த்துக்கிட்டு இருந்தேன்! :))//

ஒவ்வொரு முறையும் வீடியோவை ஓட விட்டு எங்க பார்த்துட்டு இருந்தீங்க? அதை சொல்லுங்க

//அவுரும், எப்படிப்பா என்னிய மாதிரியே நீயும் ஃபீல்பண்ணுறேன்னு கட்டி பிடிச்சு அழாத குறையாக கண்ணீர் விடுவாரு பாருங்களேன்!!!!!//

எனக்கு உதை வாங்கிக் கொடுக்கறதுல அம்புட்டு சந்தோசமா..நல்லா வருவீங்கண்ணே :))


//எல்லா பயமக்களும் மரியாதையா சார் போட்டு கூப்பிடணும்ம்னு !//

ஆமா சார்..இதுவும் காமெடியாதான் சார் கீது...டாங்கிஸ் சார்..யெஸ் சார்..நோ சார் ;))

சொன்னது...

தம்பி

//மீன் சொட்டை.... நோ ராஜா நோ...//

நோ மிஸ்டர் காலிங்...இது அதுக்கு முந்தின ஸ்டேஜ்தான்.. :))


சிவிஆர்

அவ்வ்வ்வ்...என்னத்த சொல்லா...அடிச்ச ஆப்பையெல்லாம் எடுத்துமுடிச்சதும் பொட்டிய கட்ட வேண்டியதுதான் :D

சொன்னது...

அனானி

மன்னிச்சிருங்க்...அந்த போண்டா வாயன் நெனப்புலயே அவசர அவசரமா எழுதனேனுங்..தப்பாயிடுச்சுங்க்..இப்ப பாருங்க..மாத்திட்டேனுங்க..இப்படித்தானுங்கண்னா..சமயத்துல டேமேஜ் ஆயிடுதுங்..கண்டுக்காதீங்க் :))

சொன்னது...

சரோஜா திருட்டு டிவிடி வந்திருச்சா கப்பி.

சொன்னது...

குடுகுடுப்பை

திருட்டு விசிடி வந்துடுச்சா தெரிலீங்க..அதுக்குள்ள வந்திருக்காதுங்க..இந்த மாதிரி நல்ல படத்தை தியேட்டர்ல பார்த்து ஆதரவு கொடுப்போமுங்க :D

சொன்னது...

\\விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.\\



100% true:))

சொன்னது...

kids photos and the video are so cute:)))

சொன்னது...

//இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.//

அட பாவமே...

சொன்னது...

திவ்யா


//kids photos and the video are so cute:)))//

நன்றி நன்றி!! :))


விக்னேஷ்வரன்


//அட பாவமே...//

உங்களுக்கு தெரியுது இவனுங்களுக்கு தெரிலயே..
:))

நன்றி தல!

சொன்னது...

கப்பி... யாரு அந்த அப்ரண்டிசு.... சொல்லி வெயுங்க... சீனியர் கிட்ட சீன போடதேன்னு...

அது சரி... அது என்ன புது டைப் வாழைப்பழம்... நாங்களும் 2 வருஷம் McArthur Market Place வால்மார்ட் பழந்தான் சாப்டோம்... நீங்க ஒரு வேளை வேற ஏதாச்சும் வாங்கிட்டீங்களோ? ;)

சொன்னது...

கப்பி... சொட்டை வந்தா அத பத்தி ஃபீலிங் பண்ணக்கூடாது... அது அறிவோட வெளிச்சம்...

சொன்னது...

//நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன்//
நம்ம சிவாஜி ஒரு படத்துல பண்ணுவாரே, அது மாதிரி பழத்தை தொங்க விட்டுட்டு ஒக்காந்து மிருதங்கம் வாஸிச்சா பழம் பழுத்துடும்;)

//விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.//
சரியா சொன்னீங்க. இந்த வாரம் ஒரு பயன் ஒரு பொண்ணு கால்ல விழற மாதிரி ஒரு கிளிப்பிங் போட்டாங்க. தாங்க முடியல!

//ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.//
:))) சரியா சொன்னீங்க!

//நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.//
இன்னும் ஐந்து வருஷம் கழிச்சி அது எங்க இருக்கும்?

சொன்னது...

//
அது சரி... அது என்ன புது டைப் வாழைப்பழம்... நாங்களும் 2 வருஷம் McArthur Market Place வால்மார்ட் பழந்தான் சாப்டோம்... நீங்க ஒரு வேளை வேற ஏதாச்சும் வாங்கிட்டீங்களோ? ;)//

வாழைப்பழம்னு தானுங்க சொல்லிக் கொடுத்தான் :))

நான் அடிசன்ல இருக்கேனுங்க..அங்கிட்டு பக்கத்துல இருக்க வால்மார்ட் தான்..இர்விங்க்ல இல்ல


//அது அறிவோட வெளிச்சம்...//

அப்படிங்கறீங்க :)))


சத்யா


//தொங்க விட்டுட்டு ஒக்காந்து மிருதங்கம் வாஸிச்சா பழம் பழுத்துடும்//

ஆமா பாஸ்..நான் வாசிக்கற வாசிப்புல ஊரே வந்து ஒதைக்கும்..வாங்கற அடில ஒட்டுமொத்த ஒடம்பும் பழுத்துடும் :))



//இந்த வாரம் ஒரு பயன் ஒரு பொண்ணு கால்ல விழற மாதிரி ஒரு கிளிப்பிங் போட்டாங்க//

என்ன கொடும ராமசாமி இது..நல்ல வேளை இதெல்லாம் நான் பார்க்கல :))



//இன்னும் ஐந்து வருஷம் கழிச்சி அது எங்க இருக்கும்//

அஞ்சு வருஷம் கழிச்சு தலை முழுக்கவே நெத்தியாத்தான் இருக்கும் :))

நன்னி!! :)

சொன்னது...

\\இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. \\

Same Blood !எல்லா பழமுமே அப்படி தான் ஆகுது :((

\\ சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
\\

ஹிம்ம் ஆமாங்க ..

சொன்னது...

சார் நானும் அன்றைய தினமே பார்த்துட்டேன்...கலக்கல் படம் ;))

\\நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.\\

:-)) வாழ்த்துக்கள்!

சொன்னது...

ரம்யா

உங்களுக்கும் அப்படித்தானா..ஆகா..டெக்சாஸுல யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல :)))

நன்றி!


கோபிநாத்

//சார் நானும் அன்றைய தினமே பார்த்துட்டேன்...கலக்கல் படம் ;))
//

எது இங்கிலீஷு படம்னு ஒரு இந்தி படம் பார்த்தீங்களே அதைச் சொல்றீயளா சார்? :)))

/:-)) வாழ்த்துக்கள்!//

நல்லா சிரிங்க அண்ணாச்சி..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போகப்போறோம் :))

சொன்னது...

Sorry de... lateaa vanthathukku... romba idaiveli vittiyaaa... athaan moodittiyonu nenachu freeya vitutten ;)))

Naan Saroja innum paakala :((

சொன்னது...

நடு உச்சி எடுத்து ரெண்டு பக்கமும் கவர் பண்ணிரு ராசா.. :)

சொன்னது...

ஜி

//romba idaiveli vittiyaaa... athaan moodittiyonu nenachu freeya vitutten ;)))//

ரைட்டு விடு :))

//
Naan Saroja innum paakala :((
//

இன்னும் நல்ல பிரிண்ட் வல்லியே...நல்ல ப்ரிண்ட் வரட்டும் பொறுத்திருந்து பாரு மக்கா


இராம்
//நடு உச்சி எடுத்து ரெண்டு பக்கமும் கவர் பண்ணிரு ராசா.. //

வகிடே எடுக்காம மொத்தமா முன்னாடி தள்ளி மறைச்சுக்கலாம்லண்ணே :))

சொன்னது...

ஏதாவது பதிவு போடுப்பா...

சொன்னது...

//
நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு//

வழுக்கை விழுந்திடுச்சா?:):):)

சொன்னது...

வெட்டிப்பயல்

//ஏதாவது பதிவு போடுப்பா...//

அவ்வ்வ் ..ம்முடியல :))


ராப்


//
வழுக்கை விழுந்திடுச்சா?:):):)//

பப்ளிக்ல இப்படியெல்லாம் பேசறது நல்லதுக்கில்ல...எனக்கு :)))