சுண்ணாம்புக் கால்வாய் என்றழைக்கப்படும் விசாலாட்சிபுரம் கிரிக்கெட் டீம் ஷார்க்ஸ்(Sharks) அணியினரைப் பற்றிய படம். நான்கு இளைஞர்களை வைத்து படம் எடுத்தாலே நாலு பேருக்கும் சேர்த்து ஆறு லவ் ட்ராக், வேலை இல்லாமல் வெட்டியாய்த் திரிதல், பெற்றோரை திட்டுவது, பெற்றோர்கள் இவர்களைத் திட்டுவது, ட்ரிபிள் மீனிங் காமெடி என ஒரு வட்டத்துக்குள்ளே சுற்றாமல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து சுவாரசியமான படமாக எடுத்திருக்கும் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்ட வேண்டும்.
ஷார்க்ஸ் கிரிக்கெட் அணிக்கும் ராக்கர்ஸ் அணிக்கும் பல வருடமாக வாய்க்கால் தகராறு. இந்த நிலையில் ராக்கர்ஸ் அணியிலிருக்கும் கார்த்திக் குடும்பத்தினர் விசாலாட்சிபுரம் ஏரியாவிற்கு வீடு மாறி வருகின்றனர். அவனுக்கும் மற்ற இளைஞர்களுக்குமான முறைப்பு, மோதல் என முதல்பாதி செம ஜாலியாகப் போகிறது. இடையில் காபி ஷாப்பில் வேலை செய்பவனுக்கு ஒரு லவ் ட்ராக், கிரிக்கெட் அணியின் கேப்டன் கார்த்திக்கு பழனியின் தங்கையுடன் ஒரு லவ் ட்ராக். அதற்கு பின் நண்பர்களிடையே ஏற்படும் மனத் தாங்கல்கள், சமரசங்கள், கிரிக்கெட் டோர்னமெண்ட், குழுக்களுக்கிடையான சண்டை என வேகமாக செல்லும் திரைக்கதைக்குத் தடையாக வலிந்து திணிக்கப்பட்ட இரண்டு டூயட் பாடல்கள்.
அசத்தலான பாடி லேங்குவேஜ், அளவான நடிப்பு, டயலாக் டெலிவரி என பத்து பசங்களும் கலக்கியிருக்கிறார்கள். முக்கியமாக வெங்க்ட் பிரபுவின் தம்பி பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். டைமிங் காமெடியும் வசனமும் பெரும்பலம். எல்லோரையும் வெட்டி ஆபிசர்களாக சுற்ற வைக்காமல் வேலைக்கும் படிப்புக்கும் இடையே கிரிக்கெட் விளையாடுவதாகக் காண்பித்திருப்பது வெகு இயல்பு.
சிறுவர்களிடம் தோற்பது, சிறுவயதில் வாங்கிய பேட்டை இழப்பது, கேட்ச் பிடிக்காமல் பொது மாத்து வாங்குவது, கிரிக்கெட் மேட்சில் கமெண்டரியில் அடுத்தவரைக் கலாய்ப்பது என படம் முழுக்க சம்பவங்களைக் கோர்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
"இதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் சுமார் மூஞ்சி குமாரிடம் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஐ லவ் யூ சொல்வது எந்த அளவு சாத்தியமில்லையோ அதே போல் 15 ஓவர்களில் 135 ரன் அடிப்பதற்கு சாத்தியமே இல்லை."
வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்ற பேரில் சொதப்பாமல் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.பல இடங்களில் நம் சொந்த அனுபவத்துடன் பொருத்திப் பார்க்க முடிவது படத்திற்கு பெரிய வெற்றி( வெயிட் ஃபார் மதுரை-625015 :D). படம் பார்த்து இரண்டு நாட்களாக சில காட்சிகளையும் வசனங்களையும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்.
சென்னை-600028
கப்பி | Kappi
வகை சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
16 பின்னூட்டங்கள்:
கப்பி படம் நம்பி பார்க்கலாம்ன்னு சொல்லுற.. பாத்துருவோம்ய்யா
சொல்லிட்டீங்கல்ல.. நாளைக்கு இதான் எனக்கு வேலை..
:-D
padam parakalama kappai?
\படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்.\\
பார்த்துடுவோம் ;-)))
//வெயிட் ஃபார் மதுரை-625015 :D). //
வழிமொழிகிறேன்
இப்படிக்கு
625012
கப்பி,
ஆனந்த விகடன், குமுதம்ல விமர்சனம் வருவதற்கு முன்னால நீங்க போட்டறிங்க.
கலக்குங்க
பரட்டை என்கிற அழகுசுந்தரம், மதுரை வீரன், முதல் கனவே போன்ற படங்களின் விமர்சனங்களையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
தேவ்
//கப்பி படம் நம்பி பார்க்கலாம்ன்னு சொல்லுற.. பாத்துருவோம்ய்யா //
கண்டிப்பா பார்க்கலாம்ண்ணா!
//சொல்லிட்டீங்கல்ல.. நாளைக்கு இதான் எனக்கு வேலை..//
ஓ வேற ஏதாவது படம் பார்க்கற வேலை வச்சிருந்தீங்களோ ;))
//padam parakalama kappai?//
கப்பையா? கிரிக்கெட் விளையாடும்போது காட்ச் விடறதை நாங்க 'கப்பை'ன்னு சொல்லுவோம்!!
கண்டிப்பா பார்க்கலாம் கா.பி.
//பார்த்துடுவோம் ;-))) //
பார்த்துடுவோம்னா? எப்ப வரீங்க? ;)
//வழிமொழிகிறேன்
இப்படிக்கு
625012
//
முத்துக்குமரன்,
அட நம்ம ஏரியா :)
நிர்மல்
/ஆனந்த விகடன், குமுதம்ல விமர்சனம் வருவதற்கு முன்னால நீங்க போட்டறிங்க//
என்னங்க செய்ய..வெள்ளி சனி ஆச்சுன்னா 9 மணிக்கு பைக் நேரா ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயிடுது :))
//பரட்டை என்கிற அழகுசுந்தரம், மதுரை வீரன், முதல் கனவே போன்ற படங்களின் விமர்சனங்களையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்//
தெய்வமே..என்னை அடிக்கனும்னா நேரா அடிச்சுடு..எவ்வளவு அடிச்சாலும் வாங்கிக்கறேன்..அதை விட்டுட்டு இப்படி ஆப்படிக்காதே
பரட்டை என்கிற அழகுசுந்தரம், மதுரை வீரன், முதல் கனவே ///
பாத்தாச்சி...!!!!
//வெயிட் ஃபார் மதுரை-625015 :D). //
வழிமொழிகிறேன்
இப்படிக்கு
625012//
நாங்க
625001
:)
உங்க கருத்து? Post a Comment