தமிழ் சேனல்ல எதிலயுமே நல்ல நிகழ்ச்சி போட மாட்டறாங்க. புதுசா வர்ற படமெல்லாமும் மொக்கையாவே இருக்கு. இதுக்கெல்லாம் ஒரே வழி இனி NGC,அனிமல் ப்ளானெட் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்த்து அறிவை வளர்த்துக்கறதுதான்னு முடிவெடுத்தேங்க. இதை என் நண்பன்கிட்ட சொன்னா "தமிழ்படங்கள்ல ஹீரோயின் இருக்க ரூமுக்குள்ள நுழையுமே கரப்பான்பூச்சி...அதுக்கு எத்தனை காலு அதை முதல்ல சொல்லு பார்க்கலாம்"ன்னு கலாய்க்கிறான். படத்துல கரப்பான்பூச்சியை நாம பார்த்தா தானே?
என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசுல நினைச்சுட்டே அனிமல் ப்ளானெட் வச்சா அஞ்சு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல. தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடுது. அந்த நேரத்துல புதுமுக நடிகை பூர்ணிகா அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தி எஸ்.எஸ். ம்யூசிக்ல பேசிட்டிருந்தாங்க. இதுலயும் விலங்குபத்தி தானே சொல்றாங்கன்னு அவங்களைப் பார்த்து கொளுகையை மறந்துட்டேன்.
சாதாரணமாவே பாம்பு பல்லியெல்லாம் பார்த்தா பயத்துல பசியெடுக்க ஆரம்பிச்சிடும். இதுல காட்டுவிலங்குகளைப் பத்தி எப்படி கத்துக்கறதுன்னு ஒரே குழப்பமாயிடுச்சு. இங்கிலீஷ் சேனல் பார்த்தாதான் ஒன்னும் புரியலயே தமிழ்படமா பார்த்து கத்துக்கலாம்னு டி.ஆர் படம், இராம.நாராயணன் படம் சிடியெல்லாம் வாங்க கடைக்கு போனா கடைக்காரன் ஏதோ விநோத ஜந்துவை பார்க்கற மாதிரி பார்க்கறான்.
படம் பார்த்து கத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் மகேந்திரனின் வனவாசம் படிச்சோ இயற்கைநேசியின் பதிவுகளை படிச்சோ அறிவை வளர்த்துக்கலாம் முடிவெடுத்தேங்க. ஆனா அவங்க பதிவை பாதி படிச்சுட்டிருக்கும்போதே ஒரு கும்மி பதிவோ மொக்கை பதிவோ வந்து அந்த ஜோதியில ஐக்கியமாயிடறேன் :))
ஓணான் ஒன்னுக்கிருக்கறதை படம் பிடிக்கறது, மைனாவை சைட் அடிக்கறது, சும்மா இருந்த நாய்கிட்ட கையைக் கொடுத்து கடிவாங்கிட்டு அதே நாயை போட்டோ புடிக்கறதுன்னு நம்ம தல ஒலகமகா ஒளி ஓவியரா இருக்காரு. அவர் வழியில 'தலயின் வாரிசு' இராயலும் "ஆகீத்தா ஐவத்து ஆகலைனா கும்மாங்குத்து"ன்னு படம் புடிச்சு வச்சிருக்காரு. நாமளும் அதே வழியை ஃபாலோ பண்ணவேண்டியதுதான்ன்னு முடிவெடுத்து எடுத்த வீடியோ தான் கீழே இருக்கறது. பார்த்து துப்பிட்டு போங்க மக்களே.
யப்பா...ஒரு முப்பது செகண்ட் படம் காட்டறதுக்கு எவ்வளவு மொக்கை போட வேண்டியிருக்கு!!!
படம் எடுத்து பார்த்ததும்தான் எனக்கு இதிலயும் நிறைய சந்தேகம் வந்துச்சு. இதுல மொத்தம் எத்தனை எறும்புகள் இருக்கு? ஒவ்வொரு முறையும் எறும்புகள் ஒரே ஒரு மண் துகளைத்தான் எடுத்துட்டு வருமா அதுக்கு மேலயும் எடுத்துட்டு வருமா? ஒரு பக்கம் மட்டும் தூர் வாறின மண்ணைப் போடாம காலியா இருக்கே..அதான் வெளியே வர்ற வழியா?
இப்படி மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் 'தல'யை அடமானம் வைத்தாவது பதில் கண்டுபிடிச்சு நானும் ஒரு நாள் விலங்குகளுக்காக ஒரு தனி சேனல் ஆரம்பிக்கனும் என்பதுதான் இப்போதைய லட்சியம்.
நேஷனல் ஜியோகப்பி சேனல்
கப்பி | Kappi
வகை ச்சும்மா..ச்சும்மா, டெக்கு
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டங்கள்:
மாடு மேய்ப்பது எப்படி பதிவும் விலங்குகள் பதிவுல வருமா கப்பி?
http://vavaasangam.blogspot.com/2007/03/blog-post_18.html
ஆமா நெட்வொர்க் ஷேரிங் பத்தி கேட்டனே பதில் எங்கப்பா கிடைக்கலைன்னா பரவால்ல நானே கூகிளாண்டவர் தயவுல கண்டுகிட்டேன் :0
http://saralil.blogspot.com/2007/05/blog-post_22.html
மகி,
மாடு பதிவும் கண்டிப்பா வரும் :))
//நானே கூகிளாண்டவர் தயவுல கண்டுகிட்டேன்//
எனக்கும் அனுப்பி வைங்க..அறிவை வளர்த்துப்போம் :D
JK,
ஆகா..பதிவு போட்டாச்சா? :)
ஓளி ஓவியர் தங்கர் பச்சானின் வலையுலக வாரிசு கப்பி நிலவர் வாழ்க..... :))
கப்பி,
அக்கவுண்ட் நம்பர் தெரியுமில்லை??? ;-)
உங்க கருத்து? Post a Comment