1. ஞாயித்துக்கிழமையும் ஆணி பிடுங்க போயிட்டேன்
2. லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கையைக் காட்டி நேராப் போய் மீடியன்ல முட்டிக்கிட்ட ஆட்டோனால ட்ராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்
3. நடேசன் பூங்காவுக்கு வழி கேட்டதுக்கு "அப்படி எதுவும் இங்க இல்ல. நடேசன் முதலியார் பார்க்"தான் இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.
4. கிண்டி ஹால்டா சிக்னல் ட்ராபிக் டைவர்ஷன்னால அந்த ஏரியாவையே நாலு முறை சுத்தி எங்கே போறோம்னே மறந்துபோய் வீட்டுக்கே திரும்ப போயிட்டேன்.
5. மாயக்கண்ணாடி ஹீரோவோட(பேரெல்லாம் சொல்ல மாட்டேன்) ஹேர் ஸ்டைல், டான்ஸ்லாம் பார்த்ததுல பயங்கர தலைவலி, காய்ச்சல். மயக்கம்
6. அப்பாவோட ஒன்னுவிட்ட தம்பியோட மாமனாரோட சின்ன பையனோட மச்சானோட மாமனார் செத்துபோயிட்டார்.
7. 'உன்னாலே உன்னாலே' படம் பார்த்து மனம் வெறுத்துப் போய் இழுத்து போத்து தூங்கிட்டேன்.
8. எப்பவும் போல இல்லாம சுத்தமான நல்ல பெட்ரோல் போட்டதுல பைக் இஞ்சின் சீஸ் ஆகி நின்னுப்போச்சு
9. டிக்கெட் எடுக்காம வந்ததால பனகல் பார்க் பஸ் ஸ்டாப்ல செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.
10. தாழ்தள சொகுசுப் பேருந்தின் ஆட்டோமெட்டிக் கதவு திறக்காததால வெளிய வர முடியாம ரெண்டு மணி நேரம் பஸ்ஸுக்குள்ளேயே இருந்தேன்.
இப்படியெல்லாம் மொக்கையான காரணம் ஏதுமில்லீங்க. "ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. இந்த வாரம் வரலைனா பஞ்சாயத்தைக் கூட்டி வீட்டை விட்டு விலக்கி வச்சிருவேன்"னு எங்கப்பாரு போன் செஞ்சு மிரட்டினதால ஊருக்கு போயிட்டேன். :))
சந்திப்பு நல்லபடியா முடிஞ்சுதா? பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
வலைப்பதிவர் சந்திப்பு - லீவ் லெட்டர்
கப்பி | Kappi
Subscribe to:
Post Comments (Atom)
27 பின்னூட்டங்கள்:
wow, Kappi is back at least in blog :-)
என் லீவு லெட்டெர்
http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_22.html
aaha aahaa.. ungge leave letterle maddum yEn iththanai kaaranam irukku? teacher kidde koduththu avanggalaiye enna kaaranam pidikkumo athai select pannikkongannu solliduveenggannu nenachen.. aanaa vevaramaa innoru mokkai reason koduththu asaththiddeengga. ;-)
இந்த (மொக்கை) பதிவுக்கு சங்கம் சார்பாக 100 பின்னுட்டம் உண்டு என்பதை பனிவென்புடன் தெரிவித்துகொள்கிறேன்
:::)))
;-)
ஊர் எப்படி இருக்கு. தென் அமெரிக்காவின் கரை தொட்ட சிங்கமேனு போஸ்டர் இருந்துச்சா?
//5. மாயக்கண்ணாடி ஹீரோவோட(பேரெல்லாம் சொல்ல மாட்டேன்) ஹேர் ஸ்டைல், டான்ஸ்லாம் பார்த்ததுல பயங்கர தலைவலி, காய்ச்சல். மயக்கம்//
வாந்திய விட்டுட்டியே :-))
என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இண்டர்வெலுக்கு பலமா கைத்தட்டினாங்களாம் :-)
கப்பி இருந்தா மீட்டிங் கல கட்டிருக்கும்னு மக்கள்ஸ் பேசிக்கிட்டாங்களாம் :-)
:):)
1. //ஞாயித்துக்கிழமையும் ஆணி பிடுங்க போயிட்டேன்//
ரொம்பத் தப்பு.. இந்த ஞாயித்துக்கிழமை குளிக்கக்கூடக் கூடாதுன்னு 'சிங்கத்தோட கையாள்' மூணு நாளா விடாம SMS அனுப்பினாரே.. அதைவிட ஆணி பிடுங்கறது முக்கியமா போச்சா.. ?
//2. லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கையைக் காட்டி நேராப் போய் மீடியன்ல முட்டிக்கிட்ட ஆட்டோனால ட்ராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்//
இந்த மாதிரி கிறுக்குத்தனத்தையெல்லாம் எழுதறதுக்குத்தான் Wired மேட்டர் ஆரம்பிச்சோம்ல. அப்புறமென்ன? நேராவே செஞ்சு காட்டணுமா?
//3. நடேசன் பூங்காவுக்கு வழி கேட்டதுக்கு "அப்படி எதுவும் இங்க இல்ல. நடேசன் முதலியார் பார்க்"தான் இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.//
நடேசன்னு ஒரு பேர் இருக்குல்லே.. வந்து தேடிப் பார்த்திருக்கலாம்ல.. பிளாக்கர்ஸ்ல பின்னூட்டம் போட மட்டும் யாருக்குமே சோம்பேறித்தனம் வர மாட்டேங்குதுய்யா..
//4. கிண்டி ஹால்டா சிக்னல் ட்ராபிக் டைவர்ஷன்னால அந்த ஏரியாவையே நாலு முறை சுத்தி எங்கே போறோம்னே மறந்துபோய் வீட்டுக்கே திரும்ப போயிட்டேன்.//
அதெப்படி வீடு மட்டும் மறக்காம இருக்கு.. செலக்டிவ் அம்னீஷியாவா?
//5. மாயக்கண்ணாடி ஹீரோவோட(பேரெல்லாம் சொல்ல மாட்டேன்) ஹேர் ஸ்டைல், டான்ஸ்லாம் பார்த்ததுல பயங்கர தலைவலி, காய்ச்சல். மயக்கம்..//
பக்கத்து தியேட்டர்ல 'வியாபாரி'ன்னு ஒரு படம் ஓடுச்சாம்ல. சூட்டோட்ட சூட்டா அதையும் பார்த்திருந்தா இது எல்லாமே பஞ்சா பறந்திருக்குமே?
//6. அப்பாவோட ஒன்னுவிட்ட தம்பியோட மாமனாரோட சின்ன பையனோட மச்சானோட மாமனார் செத்துபோயிட்டார்.//
இம்புட்டு சொந்தத்துக்கும் போறவுக.. மொத 'சொந்தத்த' மறந்திட்டேன்னு சொன்னா..
உங்களையெல்லாம் Alcatel வாசல்ல நிக்க வைச்சே சுடணும்..
//7. 'உன்னாலே உன்னாலே' படம் பார்த்து மனம் வெறுத்துப் போய் இழுத்து போத்து தூங்கிட்டேன்.//
அதான் 'கொன்னாலே.. கொன்னாலே'ன்னு நம்ம அ.மு.க. தொண்டர் படையினர் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்களே.. அப்புறமும் போயிட்டு வெறுத்துட்டேன்னு சொன்னா எப்படி?
8. எப்பவும் போல இல்லாம சுத்தமான நல்ல பெட்ரோல் போட்டதுல பைக் இஞ்சின் சீஸ் ஆகி நின்னுப்போச்சு
ஒரு போன் அடிச்சு விட்ருந்தா பிளைட் அனுப்பி கூப்பிட்டிருப்போம்ல.. மெட்ராஸ் ஏர்போர்ட்ல புதுசா 256 கோடில ரெண்டு பிளைட் வந்து இறங்கி சும்மாவே நிக்குதாம்..
9. டிக்கெட் எடுக்காம வந்ததால பனகல் பார்க் பஸ் ஸ்டாப்ல செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.
'தளபதி' பேரைச் சொல்லிருந்தா விட்ருப்பான்ல்ல.. சுதாரிக்கணும்லே..
//10. தாழ்தள சொகுசுப் பேருந்தின் ஆட்டோமெட்டிக் கதவு திறக்காததால வெளிய வர முடியாம ரெண்டு மணி நேரம் பஸ்ஸுக்குள்ளேயே இருந்தேன்.//
அவ்ளோ பொறுமையா இருந்திருக்கீக.. பஸ்ல கூட இருந்தவங்களை அ.மு.க.ல சேரச் சொல்லி கேன்வாஷாவது பண்ணீங்களா இல்லையா?
//"ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. இந்த வாரம் வரலைனா பஞ்சாயத்தைக் கூட்டி வீட்டை விட்டு விலக்கி வச்சிருவேன்"னு எங்கப்பாரு போன் செஞ்சு மிரட்டினதால ஊருக்கு போயிட்டேன்.://
இப்படியெல்லாம் பயப்படுறவுகளை வெச்சு நாங்க என்னத்த ஆணி புடுங்கறது..?
எத்தனை பேர் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு ஊரை, உறவை விட்டு இங்கன 'அலப்பறை' பண்ணிட்டுத் திரியறாங்க.. பார்த்துத் தெரிஞ்சுக்க வேணாம்..
சரி.. சரி.. அடுத்த மீட்டிங்குக்கு கண்டிப்பா வந்திருங்க..
கோச்சுக்காதீங்க..
'மொத அறிமுகம்'ன்றதால சும்மா கம்மியா, குறைச்சலாத்தான் பேசிருக்கேன்..
ஞாயித்துக்கிழமையும் ஆணி பிடுங்க போயிட்டேன்//
:::)))
லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கையைக் காட்டி நேராப் போய் மீடியன்ல முட்டிக்கிட்ட ஆட்டோனால ட்ராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்
///
ஆஹா நல்ல ஐடியா...
நடேசன் பூங்காவுக்கு வழி கேட்டதுக்கு "அப்படி எதுவும் இங்க இல்ல. நடேசன் முதலியார் பார்க்"தான் இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க
///
நம்புற மாதிரி இல்ல...
:)))) நம்பிட்டேன்
//wow, Kappi is back at least in blog :-)
//
வாங்க உதய்.. ஹி ஹி
பிரின்ஸ்,
கூல் டவுன்..அடுத்த முறை பார்த்துக்கலாம் :))
மை ஃபிரண்ட்
என்னங்க செய்யறது..எல்லாத்துக்கும் இது மாதிரி மொக்கை காரணம் சொல்லி பழக்கமாயிடுச்சு :)))
மின்னலு
உங்க பாசத்தை நினைச்சா....அவ்வ்வ்வ்வ்வ் :)))
வாங்க நிர்மல்
//
ஊர் எப்படி இருக்கு. தென் அமெரிக்காவின் கரை தொட்ட சிங்கமேனு போஸ்டர் இருந்துச்சா?
//
நானே பணம் கொடுத்து போஸ்டர் அடிக்க சொன்னாலும் என்னைத்தான் திரும்ப திரும்ப அடிக்கறாங்களே ஒழிய போஸ்டர் அடிக்க மாட்டேங்கறாங்க :))
வெட்டி
//வாந்திய விட்டுட்டியே :-))
//
அந்த கொடுமையெல்லாம் வேணாம்னுதான் அந்த படமே இன்னும் பார்க்கல ;))
//கப்பி இருந்தா மீட்டிங் கல கட்டிருக்கும்னு மக்கள்ஸ் பேசிக்கிட்டாங்களாம் :-) //
இது அவங்களுக்குத் தெரியுமா?? :))))
வினையூக்கி
வாங்க சீனியர் :)
உண்மைத் தமிழன்
செம ஜாலியான பின்னூட்டம் ;))
சங்கம், சங்கம் 2, சங்கம் 3
சிங்கங்களா...தங்கங்களா... ;))
கோபிநாத்
//:)))) நம்பிட்டேன் //
டாங்க்ஸ்ண்ணா :)
அடப்பாவிகளா... இப்படி காரணங்கள அள்ளி குமிச்சா, அடித்தத் தடவ சந்திப்புக்குப் போகாம இருக்க இதுல இருந்து மக்கள் காரணத்தச் சுட்டுப் போவாம இருந்திடப் போறாங்க
சங்கம், சங்கம் 2, சங்கம் 3
சிங்கங்களா...தங்கங்களா... ;))
//
நன்றி நன்றி
நானே பணம் கொடுத்து போஸ்டர் அடிக்க சொன்னாலும் என்னைத்தான் திரும்ப திரும்ப அடிக்கறாங்களே ஒழிய போஸ்டர் அடிக்க மாட்டேங்கறாங்க :))
///
::::))))
ஜி
//அடப்பாவிகளா... //
அவசரத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப்போச்சுன்னு நினைக்கறேன்..அது அப்பாவிகளா :)))
சங்கம் 4
நன்றி நன்றி :)))
மின்னலு
அடுத்தவன் அடி வாங்கினா நல்லா சிரிப்பீங்களே
கப்பி பய said...
மின்னலு
அடுத்தவன் அடி வாங்கினா நல்லா சிரிப்பீங்களே
///
என்ன பண்ணுறது இருக்குற இடம் அப்படி...::))
இவண்
வ வா ச
நம்பர் 6
துபாய் குறுக்கு சந்து
துபாய்.
துபாய் பஸ்செல்லாம் வந்து நிக்குமுல்ல அதேதான்..:)
மின்னலு அங்க தங்குறத்துக்கு வாடகை ரெண்டு வருசமா குடுக்கலையா...
பஸ்சை மேல விட்டுபுடுவாங்க பாத்து..:)
எழுதுறதே இல்லனு முடிவு பண்ணிட்டியாமுல்ல அப்படியா கப்பி..??
::)
//எழுதுறதே இல்லனு முடிவு பண்ணிட்டியாமுல்ல அப்படியா கப்பி..??//
யாரு மின்னலு இப்படியொரு புரளியைக் கிளப்பிவிட்டது?? :))
Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!
உங்க கருத்து? Post a Comment