"மாப்ள, இப்பல்லாம் எந்த படமும் உருப்படியா வர்றதில்லடா. எதுவுமே சரியில்ல"
"டேய் வெண்ண! இதை என்னவோ நியூஸ் மாதிரி சொல்ற? பல வருஷமா இதைத்தானடா சொல்லிட்டிருக்கோம்! அடுத்த வாரமும் தியேட்டர் முன்னாடி நின்னுட்டு இதே டயலாக் தான் சொல்லப் போற!"
*****************************************************************
பரத் இரட்டை வேடம். பாவனா, சந்தியா இரு கதாநாயகிகள். வழக்கம் போல அழுதுபுலம்பும் அம்மா, அரசியல்வாதி வில்லன், வில்லன் வீட்டுல ஒரு நல்லவன் இதுமாதிரி நிறைய கதாபாத்திரங்கள், செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பைட்டு, நாலஞ்சு பாட்டு.
அண்ணன் பரத் லெண்டிங் லைப்ரரில வேலை பார்க்கறவர். தம்பி அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வேலை பார்ப்பவர். தம்பி அப்பப்ப வில்லனுக்கு எடுபிடி வேலை செய்வார். அண்ணன் வில்லன் பொண்ணு பாவனாவை கரெக்ட் செய்வார். விஷயம் வில்லனுக்கு தெரிஞ்சு அண்ணனை போட்டு தள்ளுவார். அவர் செத்த சோகத்துல பாவனா தொங்கிடுவாங்க. தம்பி தன் காதலி சந்தியாவுடன் சேருவதற்கு முன் வில்லனைக் கொன்று பழிதீர்ப்பார்.
இந்த அரதப்பழசான கதை தவிர படத்துல எதுவுமே சொல்லிக்கற மாதிரி இல்ல. ஆரம்ப காட்சிகளிலேயே படத்தோட பரிதாப நிலைமை தெரிஞ்சுடுது. இதுல வித்தியாசமா எடுக்கறோம்னு சைக்கிள், மொபெட், கார், ஆம்புலன்ஸ்ன்னு எல்லா வண்டிக்கு முன்னாடியும் கேமரா வச்சிடறாங்க. நல்ல வேளையா இப்ப இருக்க ட்ரெண்ட் மாதிரி கேமராவை அடிக்கடி ஆட்டாம இருக்கறதால தலைவலி வரல. பின்னணி இசை, பாடல்கள் பத்தி கேட்கவே வேணாம். நான் சொல்லவும் போறதில்ல.
இடைவேளைல படத்துல நிறைய ட்விஸ்ட் யோசிச்சோம். படத்தோட ஆரம்பத்துல ரெண்டு பரத்தும் சின்ன பசங்களா இருக்கும்போது சொந்த ஊர்ல விட்டுட்டு வந்த நாய்க்குட்டி, அவங்க குடும்ப பாட்டு ட்யூன்ல குரைச்சு அவங்க கூட சேரும்னு எதிர்பார்த்தோம். டைரக்டர் நாயை மறந்துட்டார் போல.
வில்லனை அண்ணன் கொன்னதும் தம்பியே மார்ச்சுவரில அந்த பிணத்தை அறுப்பார்ன்னு எதிர்ப்பார்த்தது பொய்க்கவில்லை :)) . அதுக்கப்புறம் சண்டையில தம்பியோட காதலி சந்தியா சாவாங்க. தம்பி பாவனாவை கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சோம். அது நடக்கல.
பரத் ஏற்கனவே சென்னை காதல்னு ஒரு மொக்கைல நடிச்சார். இது சென்னை காதல் விட ரொம்பவே நல்ல படம்னாலும் இன்னும் ஒரு படம் இதே மாதிரி நடிச்சாப்போதும். பேக்-அப் பண்ணிடலாம்.
படம் முழுக்க திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுத்துவட்டாரத்துல எடுத்திருக்காங்க. திருப்பரங்குன்றம் நம்ம காலேஜ் ஏரியா. அதுதான் படத்துல ஒரே சந்தோஷம். பார்த்து ரொம்ப நாள் ஆன இடங்களை திரையில் பார்த்ததில் ஒரு திருப்தி.
டைரக்டர் நிறைய ட்ரை பண்ணியிருக்கார். ஆனா எதுவும் சரியா வரல. சீரியசான படமாகவும் இல்லாம, மசாலாவும் ஒழுங்கா இல்லாம மரணக்கடியான படமாயிடுச்சு. சீனு ராமசாமி இன்னொரு படம் எடுத்தா நாலு பேர்கிட்ட விமர்சனம் கேட்டுட்டுத்தான் படம் பார்க்க போகனும்.
படம் முடிச்சு தியேட்டர் வெளியே வரும்போது விகடன் மதன் முன்னாடி போயிட்டிருந்தார். ரொம்ப கூட்டமா இருந்ததால "அடுத்த வாரம் விஜய் டிவி விமர்சனத்துல கார்ட்டூன் வரையும்போது ஆடியன்ஸ் படத்தை வரைஞ்சு ரொம்ப பாவம்னு எழுதி எங்களைவச்சு காமெடி பண்ணிடாதீங்க மதன் சார்"ன்னு அவர்கிட்ட சொல்ல முடியல.
கூடல் நகர்
கப்பி | Kappi
வகை சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
16 பின்னூட்டங்கள்:
அடடா, நன்றிங்க கப்பி. அடுத்து சித்திரை1க்குதான் படத்தைப்பத்தி யோசிக்கனும். படத்தோட பேரு எங்க ஊர் பேருங்க. கூடல்நகர்-பவானி. என்னாத்த பண்ண ஒரு ஆசையா நம்ம ஊரு பேரா இருக்கே போலாம்னு பார்த்த இப்படி சொல்லிட்டீங்களே
கப்பி ஒரு படமும் தேறலைப்பா. இன்னிக்கி வியாபாரி பாத்தேன் அதை ஏன் கேக்குற வாய்விட்டு அழ முடியலை அம்முட்டு சோகம் எங்களை விடுங்கடா விடுங்கடான்னு கதறக்கதற கொல்றாங்கப்பா.
//அடடா, நன்றிங்க கப்பி. அடுத்து சித்திரை1க்குதான் படத்தைப்பத்தி யோசிக்கனும்.
//
அப்ப மட்டும் என்ன விவ்ஸ் :(
//
படத்தோட பேரு எங்க ஊர் பேருங்க. கூடல்நகர்-பவானி. என்னாத்த பண்ண ஒரு ஆசையா நம்ம ஊரு பேரா இருக்கே போலாம்னு பார்த்த இப்படி சொல்லிட்டீங்களே
//
ஓ பவானிக்கும் கூடல் நகர்ன்னு பேர் இருக்கா? எனக்கு மதுரை கூடல் நகர் தான் இதுவரை தெரியும் :)
/கப்பி ஒரு படமும் தேறலைப்பா. இன்னிக்கி வியாபாரி பாத்தேன் அதை ஏன் கேக்குற வாய்விட்டு அழ முடியலை அம்முட்டு சோகம் எங்களை விடுங்கடா விடுங்கடான்னு கதறக்கதற கொல்றாங்கப்பா.
//
வாங்க தல
நான் எஸ்.ஜே.சூர்யா படம் பார்க்கறதில்லைன்னு முடிவுல இருக்கேன் :))
என்னப்பா இதுவும் தேறலையா?? படத்தை பத்தி டைரக்டர் ஓவர் பில்டப்பு கொடுத்துயிருந்தாரு ஆனந்தவிகடன் பேட்டியில??
நல்லா பேட்டி மட்டும் கொடுக்குறானுங்க.....படத்தை மட்டும் கவுத்துடுறானுங்க.
பாவனாவ பத்தி ஒரு பாராவாச்சும் எழுதி இருந்தனா பதிவாச்சும் வரலாறுல வந்திருக்கும்.
என்னமோ போ!
தானைத்தலைவிய புகழாம போனதுக்காக உனக்கு வியாபாரி டிக்கெட் வழங்கப்படும்.
//நல்லா பேட்டி மட்டும் கொடுக்குறானுங்க.....படத்தை மட்டும் கவுத்துடுறானுங்க.
//
அதே தான் தல..அவனுங்க பேட்டியையும் பில்டப்பையும் நம்பி நாம ஏமாந்துபோறோம்
//பாவனாவ பத்தி ஒரு பாராவாச்சும் எழுதி இருந்தனா பதிவாச்சும் வரலாறுல வந்திருக்கும்.
//
யோவ் நானே பாவனாவை ஊறுகாய் ஆக்கிட்டாங்களேன்னு ஃபீலிங்க்ல இருக்கேன்..நீங்க வேற!!
//தானைத்தலைவிய புகழாம போனதுக்காக உனக்கு வியாபாரி டிக்கெட் வழங்கப்படும்.
//
அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?? :((
//"டேய் வெண்ண! இதை என்னவோ நியூஸ் மாதிரி சொல்ற? பல வருஷமா இதைத்தானடா சொல்லிட்டிருக்கோம்! அடுத்த வாரமும் தியேட்டர் முன்னாடி நின்னுட்டு இதே டயலாக் தான் சொல்லப் போற!"//
கப்ஸ்...நல்ல வேளை காப்பாதுனீங்க..இல்லனா கஷ்டபட்டு டவுன்லோட் பண்ணி நொந்து போய் இருக்கனும் :-)
//அடுத்த வாரம் விஜய் டிவி விமர்சனத்துல கார்ட்டூன் வரையும்போது ஆடியன்ஸ் படத்தை வரைஞ்சு ரொம்ப பாவம்னு எழுதி எங்களைவச்சு காமெடி பண்ணிடாதீங்க மதன் சார்//
ROTFL.... :-)
இந்த படத்த நேத்து ரொம்ப முயற்சி பண்ணினேன், பார்க்க, 20 நிமிசம் தான் நிறுத்திட்டேன். தொடருவேன், என்ன ஆனாலும் சரி.....
டேய்ய்ய்ய் நாங்க எல்லாம் கடமை வீரர்களடா...........
இந்த பதிவு போட்டு ஒரு வாரமாச்சி ஆனா தினமும் தமிழ்மணத்துல தெரியுது.
"ஏண்டா இந்த மொக்கை பதிவுல்லாம் தெரியுதுன்னு சொல்ல வரல"
அத புரிஞ்சிக்கணும் கப்பி நண்பா!
ஆனா நான் எப்படி, எப்ப பதிவு போட்டாலும் நாப்பது அடிச்சி தூக்கி வெளிய வீச ஒரு கொலவெறி குரூப்பே திரியராங்க.
ஏன் இந்த மாதிரி நடக்குது. அவங்களுக்கு ஏன் உன்ன மாதிரி நல்லவனுங்க பதிவு பக்கமெல்லாம் வரவே மாட்டேன்றாங்க?
//
கப்ஸ்...நல்ல வேளை காப்பாதுனீங்க..இல்லனா கஷ்டபட்டு டவுன்லோட் பண்ணி நொந்து போய் இருக்கனும் :-)
///
டவுன்லோட் பண்ணி முடிச்சுட்டு ரவுண்டு வந்தா இப்படியா..??
//
டேய்ய்ய்ய் நாங்க எல்லாம் கடமை வீரர்களடா...........
//
::)))
கப்பி,
இந்த படத்தை எப்பிடிய்யா முழுசா பார்த்தே??? நம்ம பசங்க ஊரிலே படத்தை பார்த்திட்டு போன் பண்ணாங்க..
"அடேய் மண்டயா... மதுரை கூடல்நகர்'ன்னு படத்தை பார்த்து தொலைச்சிராதே?"
:(((
ஊர் பேரை கெடுக்கனுமின்னே இப்பிடியெல்லாம் கூடல்நகர்,மதுர'ன்னு வெச்சிட்டு அலையுறாய்ங்கே! :(
நானும் இந்த படம் பார்த்தேன். இந்த பையன் தேறுவான் என்ற எண்ணம் சுத்தமா போச்சு!!!!
இதுதான் என் முதல் வருகை.. இனி அடிக்கடி வருகிறேன். ;-)
ரொம்ப டேங்க்ஸ் பா ..இந்த வாரம் போலாம்னு இருந்தேன் தப்பிச்சேன் :)
உங்க கருத்து? Post a Comment