தெளிவு

"மாப்ள, அவசரமா ஐயாயிரம் ரூபாய் வேணும். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?நாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவா?"

சென்னையில் இருந்து அருண் தொலைபேசியில் அழைத்தபோது படிக்கற பையனுக்கு அப்படி என்ன அவசர செலவு என்றுதான் முதலில் தோன்றியது. அருண் என் பள்ளித் தோழன். அப்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்தான். சென்னையில் அவன் கல்லூரியில் சேர்ந்ததும் அவன் தந்தையும் மாற்றல் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் ராமாபுரத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.

"என்னடா அப்படி திடீர் செலவு?"

"ஒரு பொண்ணை லவ் பண்றேன் மச்சி. அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்"

"டேய், என்னடா சொல்ற? நீ லவ் பண்றதே இப்பதான் சொல்ற. அவசரப்படாதடா. இரு நானும் தினாவும் நாளைக்கு மெட்ராஸ் வரோம். அங்க வந்து நேர்ல பேசிக்கலாம்"

தினகரை போனில் அழைத்து விஷயத்தை சொன்னேன். ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது அருணுக்காக இருக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும்போது இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் அவன் எதிர்காலம் என்ன ஆவது என்ற யோசனையுடன் மறுநாள் நானும் தினகரும் சென்னைக்குக் கிளம்பினோம். அருணை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்திப்பதாகத் திட்டம்.நாங்கள் சென்றபோது கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டு அங்கு எங்களுக்காகக் காத்திருந்தான்.

"பேரு காயத்ரிடா. எங்க பக்கத்து தெருல இருக்காங்க. நான் இங்க ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்ததுல இருந்தே பழக்கம். இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவளை நேர்ல மீட் பண்ணவும் முடியல. அவ ஃப்ரெண்ட் மூலமா தான் பேசிட்டிருக்கேன். நாங்க பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்"

"டேய், பைத்தியக்கார தனமா பேசாத. என்ன விளையாட்டா?"

"இல்லடா சீரியசா தான் சொல்றேன். அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க மேட்டர் அவங்களுக்கு இன்னும் தெரியாது.

தெரிஞ்சா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது"

"மாப்ள, முதல்ல எல்லா டீடெயிலயும் எங்க கிட்ட சொல்லு. பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். அவங்க அப்பா என்ன் பண்றாரு?". தினகர் கேட்டான்.

"அவங்கப்பா ராமாபுரத்துலயே மளிகைக்கடை வச்சிருக்காருடா. அந்த ஏரியா வியாபாரிகள் நல சங்கத் தலைவர்"

"அடப்பாவி. அப்ப அந்தாளுக்கு காண்டாக்ட்ஸ் நிறைய இருக்குமே"

"ஆமா மாப்ள, அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்க போறாருன்னு காயத்ரி சொன்னா"

"வெளங்கிரும். டேய், அவரைப் பத்தி விடு. மொதல்ல உன்னைப் பத்தி யோசி. அஞ்சு வருஷ கோர்ஸ். ஏற்கனவே ஒரு வருஷம் அட்டண்டென்ஸ் லேக்ல திருப்பி படிக்கற. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு"

"என் சீனியர் ஒருத்தர்ட்ட பேசினேன் டா. அவர் கம்பெனில பார்ட் டைம் வேலைக்கு சேரப் போறேன்"

"எவ்ளோ, ரெண்டாயிரம் சம்பளம் கொடுப்பாங்களா?"

"ஆயிரத்து என்னூறு"

"டேய், நீ ஆர்க்கிடெக்ட் படிச்சு முடிச்சாலே ஆரம்பத்துல நாலாயிரம் ஐயாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாங்க. இந்த ஆயிரத்தி என்னூறை வச்சு குடும்பம் நடத்துவியா? படிப்பு என்னடா ஆகறது?"

"அவளும் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்காடா. ஏதாவது கம்பெனில வேலை கிடைக்கும். இல்லனா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேரலாம். அப்படி முடியலைனா நான் படிப்பை நிறுத்திடுவேன்"

"மாப்ள, நடக்கற கதையா பேசு. நீயே யோசிச்சுப் பாரு. இப்ப உங்கப்பா இவ்வளவு செலவு பண்ணி நாலு வருஷம் படிக்க வச்சதை பாதில நிறுத்த போறயா?"

"எனக்கு வேற வழி தெரியலடா"

"என்ன வழி தெரியல? படிப்பை பாதில நிறுத்திட்டு மெட்ராஸ்ல எப்படிடா குடும்பம் நடத்துவ?"

"கோடம்பாக்கத்துல நேத்து போய் விசாரிச்சேன் மச்சி. 800 ரூபாய்க்கு ஒரு சின்ன ரூம் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துட்டா ஆரம்பத்துல செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டேன். அப்புறம் போகப் போக மெயிண்டெயின் பண்ணிக்கலாம்"

"அதெல்லாம் கொடுக்க முடியாது. கடன் நட்பை முறிக்கும்"

"டேய், சும்மா கடிக்காத. சீரியசா பேசு"

"வெண்ண, நாங்க ஆரம்பத்துல இருந்தே சீரியசா தான் பேசறோம். இது வேளைகே ஆவாது. அந்த பொண்ணை இன்னும் ஒன்றரை வருஷம் வெயிட் பண்ண

சொல்லு.தேவைப்பட்டா அவங்கப்பா கிட்ட உங்க லவ்வைப் பத்தி சொல்ல சொல்லு"

"அவ அப்பாட்ட சொல்றதா? வாய்ப்பே இல்ல. அந்தாளு ரொம்ப ஸ்டிரிக்டுடா"

"ஏண்டா இப்படி எல்லா பக்கமும் நெகடிவ் வச்சிட்டு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்ச? ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா?"

"என் க்ளாஸ் மேட்ஸ் பாரீஸ் பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒருத்தரை புடிச்சு வச்சிருக்கானுங்கடா. மொதல்ல 4000 கேட்டிருக்கார். இப்ப 2500 ஓகே சொல்லியிருக்காராம். அவனுங்க இந்த ஏற்பாடெல்லாம் கவனிக்கறாங்க"

"அட வீணாப் போனவங்களா, அவனுங்க வேலை தானா இது..உன்னை ஏத்திவிட்டுட்டு இருக்கானுங்களா...எங்கயிருந்துடா வந்து சேர்ந்தீங்க? உனக்கு புத்திமத்தி சொல்லாம அவனுங்களும் இறங்கியிருக்கானுங்க பாரு..அவனுங்களை உதைக்கனும்"

"இல்லடா. நீங்க என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்"

"நல்லா பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்து ராசா! அதுக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணம் நிச்சய்மாயிருக்கறதை யோசிச்சுக்கோ. உங்க அப்பா ரிட்டயர் ஆகப்போறாரு. அதை மனசுல வச்சுக்கோ. அப்படியே உனக்கு இருக்க ஆஸ்துமா ப்ராப்ளத்தையும் யோசிச்சுக்கோ"

"அக்காவுக்கு அடுத்த 3-ம் தேதி திருச்சில கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் 7-ம் தேதி இங்க வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். வீட்டுல எல்லாரும் ஊர்ல தான் இருப்பாங்க. பிரச்சனை இல்ல"

"எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்னியிருக்கியேடா பாவி. எங்கள பணம் வாங்க மட்டும் கூப்பிட்டியா?"

"டேய் என்னடா இப்படி சொல்லிட்ட?"

"மச்சி இங்க பாரு. எனக்கு இந்த லவ் பண்ணனும், என்ன தடை வந்தாலும் அதே பொண்ணை கல்யாணம் பண்ணனும் அது இது எல்லாம் ஓகே. ஆனா உனக்கு இப்ப அதுக்கான டைம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கோர்ஸை முடிச்சதும் இதை நீ சொல்லியிருந்தா நாங்களே எங்க செலவுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.

மொதல்ல படிச்சு முடி ராசா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பொன்னுகிட்ட வேணும்னா கூட நாங்க பேசறோம். அவளை மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்க சொல்லு. நல்லா யோசி. மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணு"

இப்படியாக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாம்பரம் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் அவனுடன் விவாதம் நடந்தது. ஒரு வழியாக அவன் மனதை மாற்றினோம்.

அப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடுவதெனவும், அப்படி காயத்ரிக்கு திருமணம் நிச்சயிப்பது நிலையானால் அடுத்து செய்வது குறித்து யோசிக்கலாம் எனவும் அவனைத் தேற்றி பக்கத்திலிருந்த பாருக்கு அழைத்து சென்று தாகசாந்தி செய்து அனுப்பி வைத்தோம்.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். காலப்போக்கில் அருண் காயத்ரியை மறந்தான். அரியர்ஸ் பல வைத்தாலும் ஒரு வழியாகப் படிப்பை முடித்து இப்போது டெல்லியில் வேலை செய்கிறான். அவனுடன் உடன் வேலை பார்க்கும் ப்ரியங்கா என்ற பெண்ணுடன் சுற்றுவதாக தினகர் போன வாரம் தொலைபேசியில் சொன்னான்.

நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன். என் காதல் மணைவி கவிதா இங்கு ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.38 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.//

அப்பறம் தான் உருகுவே வந்தியா???

//ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //
நல்ல கொள்கை!!!
அதான் உனக்கே போட்டுக்கிட்டியேப்பா!!!

சொன்னது...

சொல்ல மறந்துட்டேன்!!!

கதை அருமை! வழக்கம் போல :-)

கடைசில கப்பி டச் :-)

சொன்னது...

ஊருக்குத்தான் உபதேசம்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...

அந்த கருத்த அழகா படம்புடிச்சிக் காட்டிருக்கீங்க கப்பி...

சொன்னது...

அப்படி போடு அருவாள!

அப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற!

சொன்னது...

//அப்பறம் தான் உருகுவே வந்தியா???
//

நான் வந்து எட்டு மாசம் ஆச்சே :P

//நல்ல கொள்கை!!!
//
ஹி ஹி

//கடைசில கப்பி டச் :-) //
நான் எங்கயும் டச் பண்ணலயே :)))


மிக்க நன்றி வெட்டி!

சொன்னது...

ஜி,

அதே அதே! அதுமட்டுமில்லாம அருணோட காதலை அறிவுப்பூர்வமா அனுகியவன் தன் காதலில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுத்ததையும் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜி!

சொன்னது...

//அப்படி போடு அருவாள!
//

எங்கே போட?


//
அப்போ பதிவு திருமணம் பண்ணக்கூடாதுங்கற!
//

நான் எப்பய்யா சொன்னேன்? இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..

நான் போய் அப்படியெல்லாம் சொல்வேனா? :)))

சொன்னது...

சீரும் சிறப்புமா இருங்க கப்பி.
உங்க நண்பரை நல்ல வேளையில் காப்பாத்தினீர்கள்.
அந்தப் பெண்ணையும் தான்.
வாழ்த்துகள்.

சொன்னது...

//நான் எப்பய்யா சொன்னேன்? இதுல ஒருத்தனோட இரட்டை நிலையைத் தானே சொல்லியிருக்கேன்..//

எலே
நான் கல்யாணமே வேணாங்கேன், நீ நீ என்னமோ பதிவு திருமணம், பண்ணாத திருமணங்கே,

அப்பன்காரன் பாத்து பண்ற கல்யாணமே வெளங்க மாட்டேங்குது இதுல காதலு, மோதலுன்னுகிட்டு

எலே நான் சொல்றேன் எழுதி வச்சிக்கோ 2009 ல கல்யாணமே இருக்காது, இத நான் சொல்லல 400 வருசத்துக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணது.

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க வல்லிசிம்ஹன்!

சொன்னது...

யாகவா..மெய்யாகவா?

ஏன் இந்த கொலவெறி? :)))

சொன்னது...

கப்பி,

நல்ல கதை.

5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன்.

சொன்னது...

கப்பி,

கதை அருமையா இருக்குப்பா....

ஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))

சொன்னது...

நன்றி நிர்மல்!

//5000 ஏற்பாடு பண்ண கேட்கவும் 'நான்' ஏதோ வேலையில் இருக்கார் நினைத்தேன். //

இல்ல..அவரும் யார்கிட்டயாவது கடன் வாங்கிதான் கொடுத்திருப்பார் :))

சொன்னது...

டாங்கிஸ் ராம்

//ஆனா ஒனக்கு நடந்ததை கூட இவ்வளோ தெகிரியமா கதை மாதிரி சொல்லிருக்கே... அதுக்காவது ஒன்னை பாராட்டணும். :))
//

அடப்பாவிகளா..டிக்ளேரே பண்ணிட்டீங்களா? :))

சொன்னது...

//அடப்பாவிகளா..டிக்ளேரே பண்ணிட்டீங்களா? :))//

அது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...

அது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்...

சொன்னது...

//அது நீயே சொல்லுறமாதிரி தானே கதையிலே இருக்கு...

அது நானில்லை கதாபாத்திரம் , நெளிச்சபாத்திரமின்னு சொன்னன்னு வை பிச்சு புடுவேன்... //

இந்த வெளாட்டுக்கு நான் வரல :))

சொன்னது...

கப்பி,

கதை அருமையா இருக்கு...

\\ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //

இங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா..

சொன்னது...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:))

சொன்னது...

ஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க? அதைச் சொல்லவே இல்லையே?!! நீர்தான் உருகுவேயிலிருந்து அனுப்பினீரா?

சொன்னது...

நன்றி கோபிநாத்

//
இங்க நம்ம நண்பர் ஒருத்தருக்கு தேவைப்படுது...கொஞ்சம் வரியாப்பா.. //

:)))
டிக்கெட் எடுத்துகுடுங்க..அலவன்ஸ் எல்லாம் குடுக்கனும்...கண்டிப்பா வரேன் :))

சொன்னது...

//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கப்பி...:)) //

டுபுக்கு

நன்றி தலைவா :)

சொன்னது...

//ஆமாம் இவரு கல்யாணத்துக்கு மட்டும் யாரு பைனான்ஸ் பண்ணினாங்க? அதைச் சொல்லவே இல்லையே?!! நீர்தான் உருகுவேயிலிருந்து அனுப்பினீரா?//

நோ நோநோநோ :))

அவனும் கடன் வாங்கி தான் பண்ணியிருக்கனும்..கடன் கதையை முறிச்சுடப்போதுன்னு சொல்லாம விட்டுட்டேன் கொத்ஸ் :))

சொன்னது...

Kalyanam sorgahtil mattum nitcyerka paduvathillai!

சொன்னது...

// ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. //

ஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்!!!!

கதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)

சொன்னது...

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க???

சொன்னது...

வருகைக்கு நன்றி கணேஷ் பாண்டியன்! :)

சொன்னது...

//ஆஹா... என்ன ஒரு உன்னத லட்சியம்!!!!
//

:))

//
கதை ரொம்ப நல்லா இருக்கு கப்பி :)
//

மிக்க நன்றி இம்சை அரசி!


//தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க???
//

அதானே :)

சொன்னது...

ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க

சொன்னது...

அருமையான கதை :)

சொன்னது...

//ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க
//

இதுல உ.கு எதுவும் இல்லையே ;))

நன்றி poornima

சொன்னது...

//
அருமையான கதை :)
//

உண்மை,

மிக்க நன்றி :)

சொன்னது...

அருணுக்கு இருந்த அறிவு கூட இக்கதையின் நாயகனுக்கு இல்லாமப் போயிருச்சே!

'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்!

ம்ம்ம்ம்ம்..... விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க!
:))

சொன்னது...

வாங்க SK ஐயா

//'மாப்ளே'ன்னு இவனும் யாரையாச்சும் கூப்ட்டு கேட்டிருந்தா, இந்தக் கவிதா பொண்ணும் தப்பிச்சிருக்கும்!
//

:)))

சொன்னது...

டேய் நான் தான் அருண் டா...எனக்கு புத்திமத்தி சொல்லிட்டு இப்படி பண்ணிட்டியேடா..ஆன இந்தவாடி உனக்கு phone பண்ணமாட்டேன் டா..பண்ண நீ வந்து காரியத்த கெடுத்துடுவே... :)

சொன்னது...

அனானி அருண்

:)))

சொன்னது...

கப்பி அட என்னா கதை என்னா கருத்து ! கடைசில முடிச்சது சூப்பர் டச் !! :)))))

சொன்னது...

நன்றி ஜொள்ஸ்ண்ணா

கதை சரி..அது என்ன கருத்து? :)))