எஸ்கேஏஏஏப்ப்!!

ஏற்கனவே தங்கக்கம்பி, பாசத்தும்பி, அன்புத்தும்பி வாழ்த்து சொல்லி அறிக்கை விட்டுட்டார். இருந்தாலும் நானும் ஒரு அறிக்கை விடனும்ல. மக்களே, இந்த ஞாயிற்றுக்கிழமை 11-ம் தேதி இங்கயிருந்து எஸ்கேப். நவம்பர்ல கிளம்பியிருக்க வேண்டியது. "நீ இன்னும் நிறைய ஆணி புடுங்கிட்டு தான் டா போகனும்"னு சொல்லி உட்கார வச்சுட்டாங்க. இப்பக்கூட சண்டைபோட்டு அசால்ட் கேஸ் புக் ஆகி ஏகப்பட்ட பிரச்சனைக்கு அப்புறம் தான் எஸ்கேப் ஆப் மாண்டிவிடியோ.



டிக்கெட் கன்ஃபர்ம் ஆனதும் இங்க கூட இருக்க ஒரு பாசக்காரப் பய 'என்னை விட்டுட்டு போறியாடா'ன்னு ஃபீல் பண்ணினான், "ஃபீல் பண்ணாத மாப்ள,வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போற நேரம் வந்துடுச்சுடா"ன்னு ஒரு பிட்டைப் போட "டேய்,இதெல்லாம் உன் பதிவுல வச்சுக்க...என் கிட்ட இந்த கட்டம்,வட்டம், சதுரம்னு டயலாக் விடாத"ன்னு ஆஃப் பண்ணிட்டான். போற நேரத்துல எதுக்கு பொதுமாத்து வாங்கனும்னு நானும் சைலண்ட் ஆயிட்டேன்.

தென்னமெரிக்க நாடுகளில் ஒரு ரவுண்ட் வரனும்னு நினைத்தேன். அர்ஜெண்டினா மட்டும் தான் போக முடிந்தது. ரியோ டி ஜெனிரோ, இகுவாசு அருவிகளுக்கு செல்ல முடியாதது ஏமாற்றமே.

எட்டரை மாதங்கள். பல நினைவுகள். அனுபவங்கள். ஊருக்கு வந்ததும் மொத்தமா எழுதனும். விடறதில்ல :))

வர்ட்டா!! :)



42 பின்னூட்டங்கள்:

சொன்னது...

வாங்க கப்பி பாய் !
:)

சொன்னது...

தம்பி...தனியாத்தானே வாறீக...எக்ஸ்ட்ரா...ஹி..ஹி...

ஏன்னா நம்ம பயபுள்ளைக மேல அம்புட்டு நம்பிக்கை...எங்க போனாலும் கொடிய நாட்டீருவாய்ங்க! அதான் கேட்டேன்....

சொன்னது...

கப்பி பையா, நல்லபடியா ஊருக்கு போய், நடேசன் பார்க் சந்திப்புல எல்லாம் கலந்துகிட்டு, காரசாரமா விவா'தம்' எல்லாம் பண்ணிட்டு காச'தண்ணி'யா செலவு பண்ணம, ஒழுங்கா பொருப்பா ஒரு பொண்ண பாத்து கண்ணாலம் கட்டிகிட்டு வாழ்கன்னா இன்னான்றது தெற்ஞ்சிகிட்டு என்னய மாதிரி எப்போவும் குஷாலா இருக்கனும் சரியா?

சொன்னது...

சொல்ல மறந்துட்டேன். "தாயகத்தை முத்தமிடப்போகும் தமிழன்"ன்னு தம்பி சொல்லியிருக்கார். முத்தம் போட்டு முடிச்சவுடனே வாய நல்லா கழுவிட்டுதான் எதுவானாலும் சாப்புடனும். ஒக்கே.

சொன்னது...

ஐயன்மீர்,

உங்களை இந்தியாவில் வரவேற்க மிகப்பெரிய நடனக்குழு தயராகி கொண்டுருகின்றது.

அதன்பின்னர் நடக்கும் கலைநிகழ்ச்சியில் வெற்றிவிழா படங்கள் தயாரித்து வழங்கும் கலைகுடும்பமான அடுக்குமொழி வேந்தன், அண்ணன் TR & பாட்டில் சூப்பர்ஸ்டார் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தங்களுக்கு அறிய தருகிறேன்.


இவண்,
விழா ஒருகிணைப்பாளர்

சொன்னது...

ஜூனியர்,
//ஏன்னா நம்ம பயபுள்ளைக மேல அம்புட்டு நம்பிக்கை...எங்க போனாலும் கொடிய நாட்டீருவாய்ங்க! அதான் கேட்டேன்....
//
நம்ம அண்ணனின் வார்த்தைகளை வழி மொழிகிறேன்.

நீங்கள் இந்தியா வந்ததும் நாம் இருவரும் "வீராசாமி" போகிறோம் என்பதை இந்தக் கணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொன்னது...

தாயகம் திரும்பினாலும் தங்கள் திருப்பணி தொடரட்டும் ; )

அடுத்த ஊர் எங்கே??

சொன்னது...

தாயகத்தைத் தேடி தமிழனின் பயணம்...

போயிட்டு வெயிட்டா அனுபவப் பதிவு ஒன்னு போடுங்கப்பா...

அங்க கொலவெறியோட ராயலு காத்துக்கிட்டு இருக்கறாரு போல...

இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்...

சொன்னது...

வாங்க GK. நன்றி :)

சொன்னது...

பங்காளி

//தம்பி...தனியாத்தானே வாறீக...எக்ஸ்ட்ரா...ஹி..ஹி...//

வாங்க தலைவா..நானும் எப்படியாவது ஸ்பானிஷை மாமியார்மொழி ஆக்கிடனும் ட்ரை பண்ணேன்..ஒன்னும் முடியல :))

//ஏன்னா நம்ம பயபுள்ளைக மேல அம்புட்டு நம்பிக்கை...//

இந்த விஷயத்துல உங்க நம்பிக்கை பொய்த்துபோச்சே :(( :D

சொன்னது...

அபி அப்பா

உங்க அறிவுரைபடியே நடந்து உங்கள மாதிரியே குஜாலா கீரேன் :)))

//முத்தம் போட்டு முடிச்சவுடனே வாய நல்லா கழுவிட்டுதான் எதுவானாலும் சாப்புடனும்//

என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க அபி அப்பா...பாவம் அபி..இப்படி அநியாயத்துக்கு அறிவுரை அள்ளித் தெளிக்கறீங்களே :)))

சொன்னது...

இராயலு,

//மிகப்பெரிய நடனக்குழு //
வாங்கிப் போட்டு குத்துங்கோ :))


//அடுக்குமொழி வேந்தன், அண்ணன் TR & பாட்டில் சூப்பர்ஸ்டார் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி//

ஏன்? ஏன்? ஏன்??

ஒரு அறியாப்புள்ள ஊருக்கு வருதே..அதுக்கு நல்ல மாதிரி விருந்து வைப்போம்னு இல்லாம வீராச்சாமி,லிட்டில் சூப்பர் ஸ்டார்ன்னு கொலவெறி??

சொன்னது...

//நீங்கள் இந்தியா வந்ததும் நாம் இருவரும் "வீராசாமி" போகிறோம் என்பதை இந்தக் கணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
//

தல நீங்களுமா? சரி நாம பார்க்கலைன்னா வேற யாரு பார்க்கறது?

போய் வந்து விமர்சனம் எழுதனும்..ஓகேவா :))

சொன்னது...

//தாயகம் திரும்பினாலும் தங்கள் திருப்பணி தொடரட்டும் ; )
//

கண்டிப்பா தொடரும் பாலா :)

என்ன ஆஃப்ஷோர்ல ப்ளாக் எல்லாத்தையும் தடை செஞ்சு வச்சிருப்பாங்க...வீட்டுல இருந்து 'வேலை' பார்க்கனும் :))

//அடுத்த ஊர் எங்கே?? //

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றார் :))

சென்னப்பட்டினம் தான்!

சொன்னது...

//தாயகத்தைத் தேடி தமிழனின் பயணம்...//

தேடி இல்லப்பா நாடி :))

//
போயிட்டு வெயிட்டா அனுபவப் பதிவு ஒன்னு போடுங்கப்பா...
//
ஒன்னா? நான் பல எபிசோடுகளுக்கு மேட்டர் தேத்திட்டிருக்கேன் :)))

//
அங்க கொலவெறியோட ராயலு காத்துக்கிட்டு இருக்கறாரு போல...
//

அதான் ஒரே பயம் ;))

//
இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்... //

மிக்க நன்றி ஜி!

சொன்னது...

கப்பி,
ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கு :-((((

சரி போய் ஒரு வாரம் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வந்து வழக்கம் போல வெளுத்து கட்டு...

சொன்னது...

ஊருக்கு போறியாலே

சந்தோஷமா போயிட்டு வா!

சொன்னது...

நீங்க மீனம்பாக்கத்துல கால வெச்ச உடனே தவுசண்ட்வாலா வெடிக்கும் அப்படியே அந்த புகைக்கு நடுவில சேப்பு கலர் சட்டையில தலய சிலுப்பிகிட்டு இறங்கறிங்க.

அங்கருந்து ஒரு கரகாட்டம், ஒயிலாட்டம் கோஷ்டி வரும் அவங்க உங்கள திறந்த கார்ல (கரகாட்டக்காரன்ல சொப்பனசுந்தரி வெச்சிருந்ததா சொல்றாங்களே அந்த கார்தான்) கொண்டுபோயி கமபெனில சேத்துருவாங்க!

ஏற்பாடு ராயலு தலைமையில நடந்துட்டு இருக்கு!

இதுல எதுனாச்ச்சும் நிகழ்ச்சிய சேக்கணும்னா சொல்லு கப்பி நிகழ்ச்சி நிரல மாத்திரலாம்.

சொன்னது...

//அங்கருந்து ஒரு கரகாட்டம், ஒயிலாட்டம் கோஷ்டி வரும் அவங்க உங்கள திறந்த கார்ல (கரகாட்டக்காரன்ல சொப்பனசுந்தரி வெச்சிருந்ததா சொல்றாங்களே அந்த கார்தான்) கொண்டுபோயி கமபெனில சேத்துருவாங்க!//

அப்படியே ஒரு யானை கப்பிக்கு வந்து மாலையப் போடுது.. அப்புறம் கலர் கலரா பல பசங்களும் பொண்ணுங்களும் குத்தாட்டம் போட, நடுவுல கப்பி தலையில கர்சீப்ப கட்டிக்கிட்டு "நீ எந்த ஊரு'ன்னு செண்டர்ல நின்னுக்கிட்டு ஆடுறாரு. இதையும் நிகழ்ச்சி நிரல்ல சேத்துடுங்க தம்பி...

சொன்னது...

//கப்பி,
ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கு :-((((//

வெட்டி,
வொய் ஃபீலிங்க்ஸ்..நோ நோ :)

//
சரி போய் ஒரு வாரம் நல்ல ரெஸ்ட்//

நீங்க வேற..குறைஞ்சது ரெண்டு வாரமாவது கட் அடிக்கலாம்னு இருக்கேன் :))

சொன்னது...

//ஊருக்கு போறியாலே

சந்தோஷமா போயிட்டு வா!

//

டாங்கிஸ் தம்பி :)

சொன்னது...

தம்பி, ஜி,


படமே எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க போலிருக்கே..பாசத்துக்கு கொஞ்சம் அணைபோடுங்க ராசா..நான் பாவம் :)))

சொன்னது...

//படமே எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க போலிருக்கே..பாசத்துக்கு கொஞ்சம் அணைபோடுங்க ராசா..நான் பாவம் :)))//

முடியாது... அதென்ன அணை போட்டவுடனே நிக்கிற ஆத்து தண்ணின்னு நினைச்சிய்யா... இது சுனாமியா பொங்கிவர்ற கடல்தண்ணிய்யா... :)

சொன்னது...

நல்லபடியா ஊருக்கு போய் நல்ல நல்ல பதிவ போடு...

சொன்னது...

ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..பாட்லெல்லாம் பாட மறந்துடதா...ஓகே...

சொன்னது...

// இது சுனாமியா பொங்கிவர்ற கடல்தண்ணிய்யா//

அது சரி :))

சொன்னது...

நன்றி கோபிநாத்! :)

//ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..பாட்லெல்லாம் பாட மறந்துடதா...ஓகே...//

பாடிடலாங்ண்ணா :)))

சொன்னது...

// உங்களை இந்தியாவில் வரவேற்க மிகப்பெரிய நடனக்குழு தயராகி கொண்டுருகின்றது.

அதன்பின்னர் நடக்கும் கலைநிகழ்ச்சியில் வெற்றிவிழா படங்கள் தயாரித்து வழங்கும் கலைகுடும்பமான அடுக்குமொழி வேந்தன், அண்ணன் TR & பாட்டில் சூப்பர்ஸ்டார் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தங்களுக்கு அறிய தருகிறேன்.
//

இன்னொரு முக்கியமான விஷயம்.... விழாவுல நாந்தான் MOC பண்ணப் போறேனே......ஹையா.... ஜாலி ஜாலி.......

"Dear Kappi Guy! Welcome to India!!"

சொன்னது...

//விழாவுல நாந்தான் MOC பண்ணப் போறேனே......ஹையா.... ஜாலி ஜாலி.......//

:)


வருகைக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி இம்சை அரசி :)

சொன்னது...

அடுத்தது எங்க? எப்போ? :)

சொன்னது...

//இப்படி அநியாயத்துக்கு அறிவுரை அள்ளித் தெளிக்கறீங்களே :)))//

எல்லாம் ஒரு கல்யாணம் ஆனாத் தெரியும். சதா அறிவுரை கேட்டுக்கேட்டு உமக்கும் அது ஒரு பழக்கமாவே ஆயிடும்.

என்ன அபி அப்பா நான் சொல்லறது சரிதானே!

சொன்னது...

//அடுத்தது எங்க? எப்போ? :)//

வாங்க கொத்ஸ்

நாளை நடப்பதை யாரறிவார்? :))

சொன்னது...

//எல்லாம் ஒரு கல்யாணம் ஆனாத் தெரியும். சதா அறிவுரை கேட்டுக்கேட்டு உமக்கும் அது ஒரு பழக்கமாவே ஆயிடும்.

என்ன அபி அப்பா நான் சொல்லறது சரிதானே!
//

அப்படியா சொல்றீங்க..ரைட்டு :)

சொன்னது...

அது என்ன நம்ம பேரை மட்டும் கொட்டை எழுத்தில் போட்டு இருக்கீரு? உள்குத்து எதுவும் இல்லையே?

சொன்னது...

//உள்குத்து எதுவும் இல்லையே?
//

இல்லன்னு தான் நினைக்கறேன் :))

அது சும்மா கொத்ஸ்..கண்டுக்காதீங்க :))

சொன்னது...

Kaps ! India poi nalla rest eduthuttu Uruguay experiences ezhudha thondangunga.

சொன்னது...

கப்பி, தென்னமெரிக்காவே அரபிக் கடல் தாண்டியாச்சு போல. பெருசு சவுண்ட் அங்கங்க பாக்குறேன் :) ...

உருகுவே சென்று தமிழ் வளர்த்த காஞ்சி கப்பி வாழ்க வாழ்க, வருக வருக! :)

Wish you a wonderful time retuning home!

சொன்னது...

நன்றி கிட்டு! கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுடுவோம் ;)

சொன்னது...

//உருகுவே சென்று தமிழ் வளர்த்த காஞ்சி கப்பி வாழ்க வாழ்க, வருக வருக! :)

Wish you a wonderful time retuning home!
//

மதுரா,

நன்றி! நன்றி!! நன்றி!! :)

பெருசு தான் பாவம்...அங்க தனியா இருக்காரு :)))

சொன்னது...

எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-)

சொன்னது...

//எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-) //

இன்னும் இல்லையே :((

நீங்க சொல்லித்தான் தெரியுது :)

சொன்னது...

இதைத் தான் சொன்னேன்:
http://raamcm.blogspot.com/2007/03/when-i-was-in-us.html
அப்புறம் நீங்க படிச்சிட்டீங்கன்னும் தெரிஞ்சிக்கிட்டேன் :)