"ஏங்க நெல்லுமூட்டைல இருந்து ஒரு படி எடுத்து குத்தி வச்சிருக்கேன். பருப்பும் வெல்லமும் வாங்கிட்டு வரணும்"
"ஏம்மா செல்வி, சுகுமார் கடைல போய் 100 கிராம் வெல்லமும் 200 கிராம் பருப்பும் வாங்கிட்டு வா. அப்பா சாயந்திரம் வந்து காசு தருவாருன்னு சொல்லு"
"பொண்ணுக்கு பாவாடை துணி எடுத்தாச்சு. உங்க அப்பாவுக்கு வச்சு படைக்க ஒரு வேட்டி துண்டு வாங்கிட்டு வந்துடுங்க"
********************************************************************
"சார், பொங்கல் சார். சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோட போய் கொண்டாடுவோம் சார். அன்னைக்குப் போய் ஆபிஸ் வர சொல்றீங்களே"
"தெரியுது மோகன், ஆனா இந்த வாரம் டெலிவரி இருக்குன்னு தெரியும்ல...வேணும்னா நீங்க இந்த மாசக்கடைசில ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்களேன்..."
(மனதுக்குள்)"பொங்கலுக்கு ஊருக்கு போக விடாம மாசக்கடைசில லீவ் கொடுக்கறானாம்...போடாங்க"
*******************************************************************
"மாப்ள, மாட்டு கொம்புக்கு அடிக்க பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டயா"
"எல்லாம் ரெடி மாமா, காலைல போய் குளத்துல மாட்டைக் குளிப்பாட்டறோம்..அங்க வச்சே பெயிண்ட் அடிச்சு அலங்காரம் பண்ணி வண்டியோட சேர்த்து பூசை பண்ணி வண்டி கட்டிக்கிட்டு பசங்களை எல்லாம் ஏத்திகிட்டு ஊரை சுத்திட்டு மசானகொல்லைக்கு போய் படையல் வச்சுட்டு பட்டையைக் கிளப்பறோம்"
"கரும்பு கட்டு வண்டியில எடுத்து வச்சிடு...போன வருசத்தை விட பிண்ணிடனும் மாப்ள"
********************************************************************
"இந்த முறையாவது போனஸ் கூட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா கையை விரிச்சுட்டாங்களேய்யா"
"என்ன சார் பண்றது..போனஸ் காசுல தான் பொங்கல் கொண்டாடனும் என்னென்னவோ ப்ளான் போட்டிருந்தேன்...இதை வச்சுகிட்டு என்ன பண்றது...கைமாத்தா ஒரு ஆயிரம் ரூபா இருந்தா குடு சார்"
"அட நீ வேறய்யா..நானே எவன்கிட்ட கேட்கலாம்னு பாத்துட்டிருக்கேன்"
**********************************************************************
"முருகேசா...இந்த வருசமாச்சும் அந்த கருப்பனை அடக்கிடனும்டா"
"ஆமா மாப்ள..போன வருசமே நமக்கு தண்ணி காமிச்சுட்டான்..அந்த குமார்ப்பய குறுக்கப்பூந்து வவுத்துல குத்து வாங்காம இருந்தா போன வருசமே கருப்பன் கணக்கை செட்டில் பண்ணியிருக்கலாம்..இந்த வருசம் அந்த ஊர்க்காரனுங்க மொகத்துல கரியப் பூசனும்"
*********************************************************************
"ஏங்க இந்த பொங்கலுக்காவது ஊருக்கு போய் வரலாம்ங்க."
"அவனுங்க கூட சண்டை போட்டதெல்லாம் மறந்துபோச்சா? இனிமே அந்த ஊரு பக்கம் காலை வைக்க மாட்டேன்"
"பண்டிகை நாள் அதுவுமா எதுக்குங்க வீம்பு? என்ன இருந்தாலும் நல்ல நாள்ல பெரியவ்ங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா நமக்கு தானே நல்லது"
"யார் அவங்களா பெரியவங்க? வேலையை பாத்துட்டு போ..இல்ல அவங்க தான் உனக்கு முக்கியம்னா நீ மட்டும் போய் வா"
**********************************************************************
"மச்சி இந்த பொங்கல் பட்டாசு கிளப்பப் போகுதுடா. தல படம் வருது. போக்கிரி வருது. தீபாவளியும் வருதாம்."
"குரு விட்டுட்டியே"
"தியேட்டர் டிக்கெட் விலை வேற குறைச்சுட்டாங்க... ஆனா என்ன யூஸ்...இவனுங்க ப்ளாக்ல தான் விப்பானுங்க"
"ப்ளாக்கோ வொயிட்டோ...மாப்ள பொங்கல் மூனு நாள்ல ரிலீசான எல்லா படத்தையும் பார்த்துடறோம்"
**********************************************************************
"பொங்கல் எதுக்குப்பா கொண்டாடறோம்?"
"இது நமக்கு இயற்கைக்கு நன்றி செலுத்தி வழிபடற பண்டிகைடா கண்ணா. விவசாயிகளின் பண்டிகை. கிராமத்துல சூரியனுக்கு நிலத்துக்கு நமக்கு உதவற மாடுகளுக்கு பூஜை செய்வாங்க"
"நாம் என்னப்பா செய்யப்போறோம்?"
"நாம புதுத்துணி போட்டுகிட்டு மெரினா பீச் போலாம்டா"
**********************************************************************
"இந்த தடவை பொங்கலுக்கு டிவில என்ன படம்டா போடறாங்க?"
"இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையா "(அ)சிங்கமுல்ல" படம் போடறாங்க...படம் சூப்பரா இருக்கும்பா..."
"நீ என்ன படம் வேணும்னா பாத்துக்க...பட்டிமன்றம் போடும்போது ரிமோட்டை தொடக்கூடாது"
"உங்க ரெண்டு பேருக்கும் படம், பட்டிமன்றம்னு இருக்கு.ஆனா சிறப்பு நிகழ்ச்சின்னு சீரியல் எதுவும் போடமாட்டாங்க. நான் என்ன பண்றது?"
***********************************************************************
அமெரிக்காவிலிருந்து ஜிடாக்கில் நண்பன்
"டேய், ஊரை விட்டு ஊரு வந்து மொத முறையா பொங்கல் கொண்டாடறோம்டா..பீலிங்கா இருக்கு"
"ஆமா மாப்ள..எனக்கும் தான்..என்ன பண்றது"
"நானே நாளைக்கு பொங்கல் செய்யலாம்னு இருக்கேன் டா..நீ என்ன பண்ணப் போற?"
"நாங்க விவரம்ல...இங்க குடும்பத்தோட இருக்க நம்மாளு ஒருத்தரை புடிச்சு வச்சுட்டேன்...அவர் வீட்டுல தான் பொங்கல் ;D"
*********************************************************************
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!
பொங்கலோ பொங்கல்!!!!
பொங்கலோ பொங்கல்!
கப்பி | Kappi
வகை பொது
Subscribe to:
Post Comments (Atom)
35 பின்னூட்டங்கள்:
கப்பி,
நல்லா எழுதியிருக்கிங்க எல்லா டயலாக்கும் நல்லா இருக்கு !
நல்லா இருங்க !!!
பொங்கல் வாழ்த்துக்கள் !
பொங்கலோப் பொங்கல் கப்பீஸ்
பொங்கல் வாழ்த்துக்கள் கப்பி பயலே.. நீங்க என்ன பிளான் பொங்கல் கொண்டாட
"ம்ம்ம்ம்ம்ம்மா!
ம்ம்ம்ம்ம்மா!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!
ம்ம்மாம்ம்ம்ம்மா!"
இந்த டயலாக்கை விட்டீங்க போல!!
:)
(எனக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொல்லீறப்போறீங்க)
:)
பொங்கல் நல்வாழ்த்துகள்.
ரொம்ப பொங்காத நீயி ஆம்ம்மா!!!
பொங்கல் வாழ்த்துக்கள்!
நன்றி GK!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! :)
நன்றி கொத்ஸ்!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
கப்பி, கலக்கல்...
பொங்கலை குக்கர்ல வெச்சு கொண்டாடிருங்க !!!
//நீங்க என்ன பிளான் பொங்கல் கொண்டாட //
அதான் கடைசில சொல்லியிருக்கேனே :)..உங்களுக்கு??
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்தி!
//ம்ம்மாம்ம்ம்ம்மா!"
//
தமிழி, சூப்பருங்க :))
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துகள் கப்பி,
ஜுனியர் விகடன் டயலாக் படிக்கிற மாதிரி இருந்துச்சுப்பா இந்தப் பதிவைப் படிக்கும் போது. நல்லா இருக்கு.
:)
நன்றி ரவி!
//பொங்கலை குக்கர்ல வெச்சு கொண்டாடிருங்க !!!//
விருந்து சாப்பாட்டுக்கே ரெடி பண்ணியாச்சு! கடைசி டயலாக் நம்மோடதுதான் ;)
நன்றி கைப்ஸ்!!
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
//ரொம்ப பொங்காத நீயி ஆம்ம்மா!!!
//
சரிங்க ஆபிசர் :))
//
பொங்கல் வாழ்த்துக்கள்!
//
இப்பவாவது சரியா சொன்னீங்களே :))
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தம்பி!
nice கப்பி :)
இதையும் சேத்துக்கங்க....
"ஹே! பொங்கலுக்கு என்னடி ஸ்பெஷல்?"
"ரெண்டு சுடி எடுத்தேன். அப்புறம்....... மாட்டு பொங்கல் அன்னைக்கு எங்க மாமா வீட்டுக்கு போறேன்"
"எப்படியோ உன் birthdayய உங்க மாமா வீட்டுல கொண்டாட போற. ஹ்ம்ம்ம்ம். இந்த வருஷம் வாப்பூசை அங்கதானா???"
"அடிங்க.........."
இம்சை அரசி,
கூட இருக்கவங்க காலை வாரலைனா நமக்கு தூக்கம் வராதே :))
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! :)
பொங்கல் வாழ்த்துக்கள் கப்பி அவர்களே.
நன்றி அரை பிளேடு!!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!
கப்பி,
கடைசில வரது நம்ம டயலாக் ;)
பட்டைய கிளப்பிட்ட..
பொங்கலோ பொங்கல் :-)
//கடைசில வரது நம்ம டயலாக் ;)
//
சேம் ப்ளட்டா :))
//
பட்டைய கிளப்பிட்ட..
பொங்கலோ பொங்கல் :-)
//
நன்றி வெட்டி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
பொங்கல் வாழ்த்துக்கள் கப்பி, நல்லா இருந்தது பதிவு.
நன்றி சந்தோஷ்!!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் கப்பி
பொங்கல் வாழ்த்துக்கள்
நல்லா எழுதியிருக்கீங்க...
நன்றி கோபிநாத்!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! :)
// கூட இருக்கவங்க காலை வாரலைனா நமக்கு தூக்கம் வராதே :))
//
அய்யய்யோ.......
நமக்கு ஆப்படிச்சு பழக்கமில்லீங்க.......
வாங்கித்தான் பழக்கம்........
நீங்க மாத்தி புரிஞ்சிக்கிட்டீங்க :))))
உங்களுக்கும், உங்க friends-க்கும், உங்க family-க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் :)))
நல்லா இருக்கு கப்பி!!
உங்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இம்சை அரசி,
இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே!! :)
தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஆதிபகவன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! :)
//"நாம் என்னப்பா செய்யப்போறோம்?"
"நாம புதுத்துணி போட்டுகிட்டு மெரினா பீச் போலாம்டா"//
சும்மா நச்சுன்னு இருக்கு.
பொங்கல் வாழ்த்துக்கள் கப்பி
பொங்கலோ பொங்கல்
பொங்குங்க பொங்குங்க பொங்கி கிட்டே இருங்க
நன்றி இளா!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!
வாங்க புலி
பொங்கலுக்கு கரெக்டா ஊருக்கு போயிட்டீங்க :)
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
கப்பி,
எல்லா டயலாக்கும் சூப்பரப்பு:)
அடபாவமே, நான் முன்னாடி போட்ட பின்னூட்டம் அனானி'ன்னு சொல்லுது :)
உங்க கருத்து? Post a Comment