பாபேல் (Babel)

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? கட்டலாம் என்கிறது பாபேல்(Babel). நாம் சந்தித்திராத மக்களிடம் நம் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும், மொழி தெரியாத இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும், எண்ணங்களை விருப்பங்களை அடுத்தவரிடம் எடுத்தியம்ப இயலாமையால் நேரும் விசனங்களையும பதட்டத்தில் நாம் செய்யும் செயல்களின் பின்விளைவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவர் ஒருவர் ஆடுகளை நரிகளிடமிருந்து காப்பாற்ற மற்றொரு மொராக்கோவாசியிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்குகிறார். அவரின் இரு மகன்களும் அந்த துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுக்கும்போது மொராக்கோவிற்கு சுற்றுலா வந்திருக்கும் அமெரிக்க தம்பதியரில் மனைவியை சுட்டுவிடுகின்றனர். இங்கிருந்து கதை நான்கு கிளைகளாகப் பிரிகின்றது. ஒவ்வொரு கிளைக்கதையும் படத்தின் போக்கில் முழுமையடைகின்றது.

மனைவி சூசனுடனான(கேட் ப்ளான்ச்செட் Cate Blanchett) கருத்து வேறுபாடுகளைக் களைய ஒரு மாற்றத்திற்காக மொராக்கோவிற்கு சுற்றுலா வருகிறார் ரிச்சர்ட் (பிராட் பிட் Brad Pitt). தங்கள் இரு குழ்ந்தைகளையும் எமிலியா என்ற மெக்சிக பெண்மணியின் பொறுப்பில் கலிபோர்னியாவில் விட்டுவருகின்றனர்.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவரின் மகன்கள் அப்துலும் யூசுப்பும். அண்ணனை விட தம்பி சுட்டி('வெயில்' மாதிரி தான்). துப்பாக்கியின் குண்டுவீச்சு தூரத்தை சோதிக்க ஒரு பேருந்தை நோக்கி சுடுகின்றனர். அது சூசனின் தோள்பட்டையை காயப்படுத்துகிறது.

மொழி தெரியாத, மருத்துவ வசதிகளற்ற சிறிய கிராமத்தில் தன் மனைவியுடன் ரிச்சர்ட் படும் இன்னல்களும் படத்தின் ஒரு கிளையாக, தன் மகனின் திருமணத்திற்காக ரிச்சர்டின் குழந்தைகளுடன் மெக்சிகோவிற்கு எமிலியா பயணப்படும் கதை மற்றொரு கிளையில் செல்கிறது.மொராக்கோ பாலைவனப் பரப்புகளில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரகளின் வாழ்க்கை காட்டப்படுகிறது. மற்றொரு கதை ஜப்பானில் வாய்பேச, காது கேட்காத இளம்பெண்ணைப் பற்றியது. இந்த நான்கு கதைகளுக்கும் மையப்புள்ளி அந்த துப்பாக்கிச் சூடு.

அடிபட்ட மனைவியைக் காப்பாற்றத் துடிக்கும் கணவனாக பிராட் பிட் கலக்கியிருக்கிறார். மருத்துவ உதவி வேண்டி தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போதூம் , உதவி கிடைக்கத் தாமதமாகும் நேரத்தில் ஆத்திரம் கொள்வதும், மனைவி படும் வலியின் வேதனையை உள்வாங்கி கலங்குவதுமாக பிராட் பிட் தன் நடிப்பாற்றலை முழுவீச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சக சுற்றுலா பயணிகளைத் தொற்றிக் கொள்ளும் உயிர் பயமும், உதவ வேண்டும் என்ற சிலரது எண்ணமும், எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற மற்ற சிலரின் சுயநல மனப்பாங்கும் அவர்களுக்குள் மூளும் வாக்குவாதங்களும் அருமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

எமிலியா தன் மகனின் திருமணத்திற்காக தன் உறவினர் சாண்டியாகோ(Gael Garcia Bernal)வுடன் ரிச்சர்டின் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மெக்சிகோ வருகிறார். அங்கு திருமணக் கொண்டாட்டங்கள் அழகாகக் காட்டப்படுகின்றன. தன் அத்தையை திரும்ப கலிபோர்னியாவிற்கு அழைத்துவரும்போது இமிக்ரேஷன் பிரச்சனையில் சிக்கி எல்லைப் போலீசாரிடம் தப்பும் சாண்டியாகோ குழந்தைகளையும் எமிலியாவையும் தன்னந்தனியாக பாலைவனத்தில் இறக்கிவிட்டுச் செல்கிறார்.

அந்த பாலைவனத்தில் குழந்தைகளுடன் எமிலியா அல்லாடுகிறார். குழந்தைகளை ஒரு இடத்தில் விட்டுவிட்டு உதவி தேடச் சென்று எல்லை காவல்துறையிடம் அகப்பட்டு பின் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் மெக்சிகோவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். குழந்தைகளும் பாலைவனத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். இந்த படத்தில் மிகவும் கவர்ந்தது எமிலியா கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு தான். கெய்ல் கார்சியா பெர்னாலின் நடிப்பு மிக இயல்பு.

மூன்றாவது கதை, மொராக்கோவில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரர்களின் கதை. துப்பாக்கி விற்ற நபர் காவல்துறையிடம் உண்மையைச் சொல்லிவிட காவல் துறை இவர்களைத் தேடி வருகிறது. அந்த பயத்தில் தந்தையிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லுகிறார்கள். தந்தை அவர்களை அழைத்துக்கொண்டு தலைமறைவாக முயற்சிக்கிறார். ஆனால் வழியில் போலீசிடம் சிக்குகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் அண்ணன் இறக்கிறான்.. அதைக் கண்டு கலங்கும் தம்பி யூசும் அண்ணனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியபடியே போலிசில் சரணடைகிறான்.

நான்காவது கதை, மொராக்கோவாசியிடம் துப்பாக்கியை விற்ற ஜப்பானியரின் மகளைப் பற்றியது. வாய்பேச முடியாத காது கேளாதவரான அந்த இளம்பெண் இளைஞர்களின்பால் ஈர்க்கப்படுவதும் பாலுணர்வினால் பரிதவிப்பதும் தன் மேல் அக்கறை காட்டாத தந்தையின் மேல் கொள்ளும் வெறுப்பும் எந்தவித பூச்சுகளுமின்றி யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு கதைகளும் சுழற்சி முறையில், ஆனால் காலவரிசையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் கதைகளின் போக்கை எந்தவித சிக்கல்களுமின்றி எளிதாகப் புரியும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவும் பின்னணி இசையும். மொராக்கோ, அமெரிக்கா, மெக்சிகோ, ஜப்பான் என அந்தந்த நிலப்பரப்புகளை கனகச்சிதமாக அழகாக உள்வாங்குகிறது ஒளிப்பதிவு. குறிப்பாக மெக்சிகோ திருமண கொண்டாட்டங்களும் இரவு நேர டோக்கியோ நகரமும் மிக அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் பால்கனியில் இருந்து விலகி டோக்கியோ நகரை மேலிருந்து காட்டும் காட்சி அபாரம்.

டோக்கியோ நகர டிஸ்கோக்களாகட்டும், மெக்சிகோவில் திருமணத்தின்போது லத்தீன் அமெரிக்க இசையாகட்டும் மொராக்கோவின் பாலைவனக் கடுமைக்கேற்ற மெல்லிய பின்னணி இசையாகட்டும் காட்சிகளோடு இயைந்திருக்கின்றது.

படத்தில் சில மாண்டேஜ் காட்சிகள் க்ராஷ்(Crash) திரைப்படத்தை ஞாபகப்படுத்துகின்றன. இந்த இரு படங்களுக்கும் படமாக்கப்பட்ட விதத்திலும், அடிநாதத்திலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கிராஷ் திரைப்படத்தில் இனவெறிக்கு எதிரான செய்தி படம்நெடுக சொல்லப்படும். ஆனால் பாபேலில் வெளிப்படையாக எந்தவித மெசெஜும் இல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நான்கு கதைகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படத்திலிருந்து எடுத்துக்கொள்ள நமக்குப் பல செய்திகள் இருக்கின்றன.



16 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நல்ல விமர்சனம் கப்பி.

சொன்னது...

நன்றி நிர்மல்.

சொன்னது...

இந்த படமெல்லாம் பாக்கலின்னா நம்ம கெதி என்னா ஆவுறது?

பாதிபேர் நம்மள மறந்துடற அபாயம் இருக்கு!

வழக்கம்போல கப்பி டச் இருக்குப்பா இந்த பதிவிலயும்!

பொங்கள் வாழ்த்துக்கள்!

சொன்னது...

கப்பி,

நல்ல விமர்சனம். இதேமாதிரி இந்தியா வந்ததுகப்புறம் தமிழ் படத்துக்கும் தொடருமா???

:)

சொன்னது...

HI FROM PORTUGAL
GREAT BLOG
VISIT ME ON MY BLOG TOO
BEST REGARDS

சொன்னது...

யப்பா தம்பி...உலகமகா உள்குத்துடா சாமி!!!! :))

பொங்கல் வாழ்த்துக்களுக்கு அதுக்குள்ள என்ன அவசரம்?

சொன்னது...

நன்றி இராம்!!


//தமிழ் படத்துக்கும் தொடருமா???//

அதிலென்ன சந்தேகம்..விட மாட்டேன் :)

சொன்னது...

அருமையான விமர்சனம்..நான் இந்த படம் பார்த்தேன்...நீங்க சொன்ன எல்லா விஷயமும் ரொம்ப கரெக்ட்...
மீண்டும் வாழ்த்துக்கள்.

சொன்னது...

நல்ல விமர்சனம்

சொன்னது...

//பொங்கல்//

எல்லாரும் கொண்டாடுற ஒரு பண்டிகைல கல் வரக்கூடாதுப்பா! அதான் ள் போட்டேன்! அதுல கூட மறத்தழிழர்களின் உற்சாக பானமான கள் வரும்! அந்த உற்சாக இந்த கல் னால கலைஞ்சிட கூடாதுல்ல! :))

ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு எவ்ளொ சப்பைக்கட்டு கட்ட வேண்டியிருக்கு பாரு! :((

சொன்னது...

//யப்பா தம்பி...உலகமகா உள்குத்துடா சாமி!!!! :))//

அதுல என்னய்யா உள்குத்து இருக்கு?

சொன்னது...

//அருமையான விமர்சனம்..நான் இந்த படம் பார்த்தேன்...//

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்ப்பிரியன்!! படம் பிடித்திருந்ததா? :)


வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வநாயகி! :)

சொன்னது...

//ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு எவ்ளொ சப்பைக்கட்டு கட்ட வேண்டியிருக்கு பாரு! :((
//

"விட்றா விட்றா சூனாபானா" :))

இதெல்லாம் நமக்கென்ன புதுசா..விடுங்க :)

//அதுல என்னய்யா உள்குத்து இருக்கு? //

இருந்த மாதிரி இருந்துச்சு...இல்லையா? அப்ப சந்தோஷம் :)

சொன்னது...

கப்பி,
நல்ல விமர்சனம்...

ஆனால் அதிகமா சினிமா விமர்சனம் போடறியொனு தோனுது...

எங்களுக்கு சீக்கிரம் ஒரு கதை வேண்டும் :-)

சொன்னது...

//கப்பி,
நல்ல விமர்சனம்...
//

நன்றி தலைவா!

//எங்களுக்கு சீக்கிரம் ஒரு கதை வேண்டும் :-) //

தெய்வமே என்ன இது? :))

புது வருசம் பொறந்ததுல இருந்து நம்ம கதையே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு...கூடிய சீக்கிரம்.. :)

சொன்னது...

பயனுள்ள விமர்சனம்