துள்ளல் - இன்று முதல்!!

வெளியாவதற்கு பல மாதங்கள் முன்னரே பரபரப்பைக் கிளப்பிய ப்ரவீன் காந்தின் துள்ளல் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. முக்கியமாக தி.நகர் கிருஷ்ணவேணி, சைதை ராஜ், விருகம்பாக்கம் தேவி கருமாரி, கே.கே.நகர் விஜயா போன்ற உலகப் புகழ் பெற்ற திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகின்றது.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் என பல வெற்றிப்படங்களை இயக்கிய ப்ரவீன்காந்த் முதன்முறையாக கதாநாயகனாக களத்தில் குதித்திருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கிய படங்களில் கொலைவெறி கதாபாத்திரங்களை ஏற்று பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர்.



இவர் இயக்கிய ரட்சகன் திரைப்படத்தால்தான் ஜென்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் லட்சாதிபதி ஆனார் என்பது குறிப்படத்தக்கது. ஜோடி ஒரு டப்பா படம் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம். ஸ்டார் திரைபடம் அவரது திரைவாழ்வில் மற்றுமொரு மைல்கல்லாக இருந்தது என்றால் மிகையாகாது. பாலகிருஷ்னா- சிம்ரன் நடித்து 'ஓ போடு' என்று தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட தெலுகு படத்தின் தழுவல் தான் ஸ்டார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் புரளி கிளம்பியது. இந்த படத்தில் ப்ரவீன்காந்தின் உணர்ச்சிமிக்க நடிப்பை பிரசாந்த் பாராட்டியுள்ளார்.

வழக்கமாக ஏ.ஆர்.ரகுமான் இந்தி படத்திற்கு போட்ட மெட்டுக்கள் தமிழுக்கு கொண்டுவர பிரவீன் காந்தின் முந்தைய படங்களே காரணம். ஆனால் இந்த முறை 'இன்னிசை இடி' தினா துள்ளல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் எந்த எஃப்.எம் சேனலிலும் வராதது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

சின்ன கலைவாணர் விவேக் ஒத்தை ஆளாக படத்தைக் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே.





படத்தில் டூயட் காட்சிகளில் ப்ரவீன் காந்தின் ரொமான்டிக் லுக் 'மேட்டுக்குடி' கவுண்டமணிக்கு இணையாக இருக்குமென படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

இந்த திரைப்படம் பலதரப்பட்ட மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'Youngஅ Aரியா உள்ளே வாங்க' என்ற படு மொக்கையான டேக்லைனுடன் வெளியடப்படும் இந்த திரைப்படம் தன் திரைவாழ்வில் திருப்புமுனையாக இருக்குமென ப்ரவீன் காந்த் பேட்டியளித்துள்ளார்.

'சென்னையில் கடந்த இரண்டு வாரமாக மழை பெய்யுது. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சொல்லியிருக்காங்க. மழைக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்கறவங்களை நம்பித்தான் இந்த படத்தை ரிலீஸ் பண்றோம்" என சென்னை வட்டார விநியோகஸ்தர் தெரிவித்தார்.

'அகில உலக ப்ரவீன்காந்த் ரசிகர் மன்றம்' சார்பாக தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ரித்தீஷ் (எ) முகவை குமார் நடித்த 'கானல் நீர்' திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் விரைவில் வெளியாகும்.



33 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கானல் நீர் திரைக்காவியத்தைத் திரையிட்ட அனைத்து இடங்களிலும் சென்று கண்டு களித்து தமிழ் திரையுலகைக் காப்பாற்ற கிளம்பியிருக்கும் ரசிகப் புயல் தம்பி கப்பிக்கு ஒரு ஒரே கேள்வி...

என்னக் கொடுமை சார் இது?

சொன்னது...

ட்ரைலர் சூப்பர்!

சின்ன திருத்தம் சைதை கிருஷ்ணவேணி இல்லே. தி.நகர் கிருஷ்ணவேணி.

சொன்னது...

போனப் பின்னூட்டத்திலே கேட்டக் கேள்வியோட நிறுத்திக்கலாம்ன்னாத் தான் பார்த்தேன் ஆனா முடியல்ல...

பாசத்துக்குரிய 'காஞ்சிப்புரத்து கைமுறுக்கே' உனக்கு ஏன் இப்படி ஒரு கொலவெறி...

போரடிச்சா பொரண்டு படு... இல்லை பாயைப் பிராண்டு... ஏன் விட்டத்தை வெறிச்சுப் பாரு... இல்ல காஞ்சி கைமுறுக்கு படத்துக்கு நம்ம காதல் முரசுக்கு போனைப் போட்டுப் பாட்டு வரி டிஸ்கஸ் பண்ணு...

மழைப் பெய்தா அதில்ல நனைஞ்சுகிட்ட வேளச்சேரி வெள்ளத்திலே அப்படியே போனாலும் நாளைக்கு வரலாற்றுல்ல உன் பெயர் வீரன்னு என் செலவுல்ல செதுக்குறேன்.. ஆனா மழைக்குப் பயந்து இந்தத் தியேட்டர் பக்கம் நீ 12 பரம்பரை வரைக்கும் உன்னிய மன்னிக்காது சொல்லிபுட்டேன்

சொன்னது...

//சின்ன திருத்தம் சைதை கிருஷ்ணவேணி இல்லே. தி.நகர் கிருஷ்ணவேணி.//

லக்கி

சைதை ராஜ், தி.நகர் கிருஷ்ணவேணின்னு எழுதவந்தது...ஒரு படப்பிடிப்புல சாரி படபடப்புல மிஸ் ஆயிடுச்சு :))

சொன்னது...

தேவ்

//கானல் நீர் திரைக்காவியத்தைத் //

இது துள்ளல்'ண்ணே :))

//என்னக் கொடுமை சார் இது? //

இது கொடுமையா?? கடமை :)))

//பாசத்துக்குரிய 'காஞ்சிப்புரத்து கைமுறுக்கே' உனக்கு ஏன் இப்படி ஒரு கொலவெறி...
//

காஞ்சிபுரத்து கைமுறுக்கா...அடப்பாவி மக்கா!!

// இல்ல காஞ்சி கைமுறுக்கு படத்துக்கு நம்ம காதல் முரசுக்கு போனைப் போட்டுப் பாட்டு வரி டிஸ்கஸ் பண்ணு...//

அவர் பாட்டு எழுத சிட்சுவேஷன் சரியில்லன்னு கோவிச்சுட்டு போயிட்டாரு

//மழைப் பெய்தா அதில்ல நனைஞ்சுகிட்ட வேளச்சேரி வெள்ளத்திலே அப்படியே போனாலும் நாளைக்கு வரலாற்றுல்ல உன் பெயர் வீரன்னு என் செலவுல்ல செதுக்குறேன்.. ஆனா மழைக்குப் பயந்து இந்தத் தியேட்டர் பக்கம் நீ 12 பரம்பரை வரைக்கும் உன்னிய மன்னிக்காது சொல்லிபுட்டேன்
//

மொக்கை படங்களை பார்க்கறதுன்னு பரம்பரை பரம்பரையா கட்டிக்காத்துட்டு வர இந்த சம்பிரதாயத்தை இந்த படத்துக்கு மட்டும் மாத்தனுமா?? ஐயகோ..இதை எதிர்த்து தியேட்டர் கேன்டினில் டீ குடிக்கும் போராட்டம் நடக்கும் :))

சொன்னது...

ம்ஹூம் கேக்க மாட்டே நீயு...

சரி சின்னத் தலக் கிட்டச் சொல்லி துள்ளல் காணச் செல்லும் வள்ளல்(!!!??) அப்படின்னு தி நகர் கிஸ்ணவேணி தியேட்டர் வாசல்ல பேனர் வைக்கச் சொல்லுறேன்... பில்லை பிரவீண் காந்தரைக் கொடுக்கச் சொல்லிரு....

சொன்னது...

அடப்பாவி! படம் வெளிவருவதற்கு முன்பே குளோஸ் பண்ணிட்டியே!அப்படி என்னயா பிரவீன் காந்தி மேலே உனக்கு கோபம்!

இருந்தாலும் அருமையான நகைச்சுவை பதிவு!

சொன்னது...

//இந்த திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் விரைவில் வெளியாகும். //

விட்டு விடுங்க..ரொம்ப வலிக்குது :)

சொன்னது...

//இந்த திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் விரைவில் வெளியாகும். //

விட்டு விடுங்க..ரொம்ப வலிக்குது :)

சொன்னது...

//படத்தில் டூயட் காட்சிகளில் ப்ரவீன் காந்தின் ரொமான்டிக் லுக் 'மேட்டுக்குடி' கவுண்டமணிக்கு இணையாக இருக்குமென படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.//

:))))))
ஆமா ஆமா அப்படியே தான் இருக்கு :D

சொன்னது...

/'Youngஅ Aரியா உள்ளே வாங்க' என்ற படு மொக்கையான டேக்லைனுடன் வெளியடப்படும் இந்த திரைப்படம் தன் திரைவாழ்வில் திருப்புமுனையாக இருக்குமென ப்ரவீன் காந்த் பேட்டியளித்துள்ளார்.

//

ஆமா இதுக்கு அப்புறம் அவர் படம் எடுக்க கையில் துட்டு இருக்காது என்று நம்புவோமாக

சொன்னது...

//'சென்னையில் கடந்த இரண்டு வாரமாக மழை பெய்யுது. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சொல்லியிருக்காங்க. மழைக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்கறவங்களை நம்பித்தான் இந்த படத்தை ரிலீஸ் பண்றோம்" என சென்னை வட்டார விநியோகஸ்தர் தெரிவித்தார்//

சிங்கப்பூரில் வெள்ளமே வந்தாலும் சரி நான் கண்டிப்பாக அந்த பக்கம் போக மாட்டேன்.வெயில் அடித்தலும் கூட அந்த பக்கமே போக மாட்டேன் :))

சொன்னது...

நான் பத்தாவது படிக்கும்போது இந்த படத்தை எடுக்க ஆராம்பிச்சாங்க. இப்பதான் ரிலீஸ் பண்றங்களா?

சொன்னது...

\\ப்ரவீன் காந்தின் ரொமான்டிக் லுக் 'மேட்டுக்குடி' கவுண்டமணிக்கு இணையாக இருக்குமென//

கவுண்டமணி லுக்கு கூட பரவால்ல போலயே படத்தப்பார்த்தா...
கவுண்டமணி உங்கள கோச்சுக்கப்போறார்..பாத்து .

சொன்னது...

_ மேலதிக செய்திகள் -

இந்தப் படம் தனது சிவாஜி படத்திற்க்குப் போட்டியா வந்து சிவாஜி வசூலைப் பாதிக்கக்கூடாதுன்னு ரஜினியே நேரில் சென்றி பிரவீண் காந்தியிடம் வேண்டியதாகக் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.

அண்ணா மேம்பாலம் அருகே போட்டிருந்த துள்ளல் பேனரைப் பார்த்தே, இனிமேல் எந்தவிதமான பேனர்களும் வைக்கக்கூடாது என்று முதல்வர் அறிவித்திருக்கின்றார்.


இலங்கையில் தமிழர் பகுதிகளில் திரையிடுவதற்கான மகிந்த ராஜபக்சே தன் சிறப்புத்தூதுவரை தமிழகம் அனுப்பியிருக்கின்றார்.

சன் நியூசிற்காக

சொன்னது...

யோவ் கப்பி என்ன நக்கலா?

தொலைச்சுப்புடுவோம் தொலச்சு...

எஸ்.ஜே. சூரியா விடவா ப்ரவீன் ஒனக்கு இளக்காரமா போயிட்டார்...

டிரையலர் பாத்தியா இல்லையா... சும்மா அதிருது... மனசு எல்லாம் அதிருது.... இந்த படத்தை பாத்தே ஆகுனும் என்று அதிருது....

சொன்னது...

//ஏற்கனவே அவர் இயக்கிய படங்களில் கொலைவெறி கதாபாத்திரங்களை ஏற்று பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர். //

அதிலும் ஜோடில வருவார் பாரு... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச் நினைச்சாலே மயக்கம் வருதே...

சொன்னது...

//ஜென்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் லட்சாதிபதி ஆனார் என்பது குறிப்படத்தக்கது. //

அதற்கு முன்பு அவர் கோடிஸ்வராக இருந்தார் என்பது குறிப்படத்தக்கது...
பிறகு கோடிஸ்வரன் படம் எடுத்து லட்சாதிபதியை விட்டு கீழே போனதும் குறிப்பிடத்தக்கது

சொன்னது...

//முக்கியமாக தி.நகர் கிருஷ்ணவேணி, சைதை ராஜ், விருகம்பாக்கம் தேவி கருமாரி, கே.கே.நகர் விஜயா போன்ற உலகப் புகழ் பெற்ற திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகின்றது.//

பரங்கிமலை ஜோதி என்னாச்ச... பாடி சாந்தி... என்னாச்சு...

சொன்னது...

//மொக்கை படங்களை பார்க்கறதுன்னு பரம்பரை பரம்பரையா கட்டிக்காத்துட்டு வர இந்த சம்பிரதாயத்தை இந்த படத்துக்கு மட்டும் மாத்தனுமா?? //

என் இனமடா நீ.....

சொன்னது...

:))

சொன்னது...

அய்யா!

இது ட்ரெயிலர்.

வெற்றி நிச்சயம்னு போருக்கு போறவன் வீரன்.

வெற்றியா தோல்வியா எனத்தெரியாமல் போருக்குப்போறவன் மாவீரன்.

தோல்வி நிச்சயம்னு தெரிஞ்சே கிளம்பறவன் - மாமாமா வீரன்!

கப்பி - நீரும் மாமாமா வீரன் அய்யா!

ரெண்டு படங்கள்லே அவருடைய நடிப்பைப்பார்த்து (ஸ்டார், ஜோடி) விக்கித்து நின்றவன்ற முறையில நீங்க எடுக்கப்போற ரிஸ்க் எவ்வளவு பெரிசுன்னு எனக்கும் தெரியும் :-(

சொன்னது...

என்னடே இதெல்லாம் ?
அடங்க மாட்டியா ?
கூகிள் டாக்கில் கொலைவெறியோடு காத்திருக்கிறேன்

சொன்னது...

தேவ்

/ம்ஹூம் கேக்க மாட்டே நீயு...
//

முடியாது..நான் அந்த படத்துக்கு போறதே சின்ன தல சொல்லித்தான் :)))

அனானி

அந்த படத்தை க்ளோஸ் பண்றதுக்கு நாமெல்லாம் வேணாம்..ப்ரவீன்காந்த் ஒருத்தரே போதும் :))

சொன்னது...

துர்கா

இது சின்ன தல மேல எடுத்த சத்தியம்...இந்த படத்தை பார்க்காம விடறதில்ல :))

//ஆமா இதுக்கு அப்புறம் அவர் படம் எடுக்க கையில் துட்டு இருக்காது என்று நம்புவோமாக //

வேற யாரோ தானேங்க தயாரிப்பாளர்..அவர்தான் ரொம்ம்ப பாவம்

//சிங்கப்பூரில் வெள்ளமே வந்தாலும் சரி நான் கண்டிப்பாக அந்த பக்கம் போக மாட்டேன்.வெயில் அடித்தலும் கூட அந்த பக்கமே போக மாட்டேன் :)) //

உங்களுக்கு டவுன்லோட் லின்க் நாளைக்கே கிடைக்கக்கடவது :))

சொன்னது...

தம்பி

//நான் பத்தாவது படிக்கும்போது இந்த படத்தை எடுக்க ஆராம்பிச்சாங்க. //

இப்ப வரைக்கும் அதுதானேண்ணே?? :))

//இப்பதான் ரிலீஸ் பண்றங்களா? //

ஆமா...லலிதா ஜுவல்லரி ஸ்பான்சர்ஷிப் வேற :))

சொன்னது...

கானா பிரபா

தலைவர் மேல பலபேர் கொலவெறில இருப்பாங்க போல :)))

நியூசெல்லாம் செம ஹாட்டு :)))

சொன்னது...

புலி

//எஸ்.ஜே. சூரியா விடவா ப்ரவீன் ஒனக்கு இளக்காரமா போயிட்டார்...//

அவன் ஒரு ஆளு..அவனைப் பத்தி பேசினா வயித்தெரிச்சலா இருக்குது ஒய்!!

//அதிலும் ஜோடில வருவார் பாரு... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச் நினைச்சாலே மயக்கம் வருதே... //

என் ப்ரெண்ட் ஒருத்தன் அன்னைக்கு படம் பார்க்கறதை நிறுத்தினவன் தான்..இன்னும் தெளியல!!

//அதற்கு முன்பு அவர் கோடிஸ்வராக இருந்தார் என்பது குறிப்படத்தக்கது...
பிறகு கோடிஸ்வரன் படம் எடுத்து லட்சாதிபதியை விட்டு கீழே போனதும் குறிப்பிடத்தக்கது //

அதே அதே!! கோடீஸ்வரன் அவரை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் வாசல் வரை கொண்டுவந்துவிட்டது :))

//பரங்கிமலை ஜோதி என்னாச்ச... பாடி சாந்தி... என்னாச்சு... //

அங்கயெல்லாம் உலகசினிமா மட்டும் தான் ரிலீஸ் பண்ணுவாங்க :)))


//என் இனமடா நீ..... /

அவ்வ்வ்வ்வ்

சொன்னது...

டாங்கஸ் பாலா :)

சுரேஷ்

தெய்வமே..தத்துவம் தத்துவம்..நோட் பண்ணிக்கறேன் கொஞ்சம் மெதுவா சொல்லுங்க ;))

//கப்பி - நீரும் மாமாமா வீரன் அய்யா!
//

அவ்வ்வ்வ்வ்வ்!!


//
ரெண்டு படங்கள்லே அவருடைய நடிப்பைப்பார்த்து (ஸ்டார், ஜோடி) விக்கித்து நின்றவன்ற முறையில நீங்க எடுக்கப்போற ரிஸ்க் எவ்வளவு பெரிசுன்னு எனக்கும் தெரியும் :-(
//

வாழறதுக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்க தயார்னு சமீபத்தில பார்த்த ஏதோ ஒரு மொக்கை படத்தோட மொக்கை டயலாக் சம்பந்தா சம்பந்தமில்லாம ஞாபகம் வந்தாலும் கடமைனு வந்துட்டா இந்த கப்பி எதுக்கும் கலங்கமாட்டான்னு சொல்லிக்க கடமைபட்டிருக்க இந்த நேரத்துல நான் படற கஷ்டத்துக்கு வருத்தப்பட ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்கும்போது ஆனந்த கண்ணீரே வருது :)))

சொன்னது...

பரங்கிமலை ஜோதி ல ரிலிஸ் பண்ணலியா கப்பி ..மாமாவீரரை குறித்த உனது விமர்சனம் கண்ணடிக்க தகுந்தது

சொன்னது...

உங்க கான்பிடன்சை பார்த்தா ரஜினிகாந்த், விஜயகாந்த் அடுத்து பிரவீண்காந்த்'தான் போலிருக்கு...

All the best! படம் பார்ப்பதற்கு

சொன்னது...

துள்ளல் படத்தின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

சொன்னது...

தெய்வமே! ஆளை விடுங்க