Apocalypto

திரைப்படத்தில் ஒரு வன்முறைக் காட்சியை மூன்று வகைகளில் எடுக்கலாம். மேலோட்டமாக காட்டிவிட்டு அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடலாம். கொஞ்சம் ரத்தத்துடன் கொடூரமாகக் காட்டலாம். அல்லது மூன்றாவதாக மெல் கிப்சனைப் போல காட்டலாம். உதாரணத்திற்கு ஒரு சிறுத்தை மனிதனைத் தாக்கும் காட்சியில் சிறுத்தை பாய்வதைப் போல் காட்டுவது முதல் வகை. சிறுத்தையுடன் மனிதன் சண்டை போடுவது போல் காட்டி கையிலோ காலிலோ அடிபட்டு சிறிது ரத்தத்தையும் காட்டுவது இரண்டாவது வகை. 'மெல் கிப்சன்' வகையில் சிறுத்தை நேராக அந்த மனிதனின் முகத்தைக் கவ்வி தாக்க ஆரம்பிக்கும். அவன் முகத்தை சிறுத்தை கடித்துச் சின்னாபின்னமாவது முழுதாகக் காட்டப்படும். :))

மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனப் பழங்குடியினரைப் பற்றிய திரைப்படம் அபோகலிப்டோ (Apocalypto). மாயன் இனம் அழிந்த காலகட்டத்திற்கு சற்றுமுன்னர் புனையப்பட்ட கற்பனைக் கதை. காட்டில் மிருகங்களை வேட்டையாடி வாழும் கதாநாயகனின்(ஜாகுவார் பா) கிராமத்தை நகரிலிருந்து வரும் மாயன் இன வீரர்கள் தாக்குகிறார்கள். அங்கிருக்கும் அனைவரையும் அடிமைபடுத்துகிறார்கள். கதாநாயகன் தன் கர்ப்பினி மனைவியையும் குழந்தையையும் ஒரு குழியில் இறக்கி காப்பாற்றுகிறான். மற்றவர்களைக் காப்பாற்ற முயலும்போது அவனும் சிக்கிக்கொள்கிறான்.



மாய இனக் கடவுளான குகுல்கனுக்கு நரபலி கொடுக்கப்பதற்காகக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் அரச குடும்பத்தினரின் முன்னிலையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பலியிடப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக விற்கப்படுகிறாகள். கதாநாயகனை பலிபீடத்தில் படுக்க வைக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கடவுள் குகுல்கன் திருப்தியடைந்துவிட்டதாகவும் கதாநாயகனையும் மற்றவர்களையும் விடுதலை செய்துவிடுமாறும் பூசாரிகள் கூறிவிடுகிறார்கள்.

ஆனால் இவர்களைக் கொணர்ந்த வீரர்கள் ஒரு மைதானத்தில் இவர்களை ஓடவிட்டு ஈட்டியெறிந்தும் வில் அம்புகளாலும் கொல்கிறார்கள். அவர்களிடமிருந்து கதாநாயகன் காட்டினுள் தப்பிச்செல்கிறான். தப்பிக்கும்போது தலைவனின் மகனைக் கொன்றுவிடுகிறான். இதனால் ஆத்திரம் கொண்டு அவனைத் துரத்துகிறார்கள்.


பின் தொடர்ந்து வரும் வீரர்களை ஒவ்வொருவராகத் திட்டமிட்டுக் கொன்று இறுதியில் தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்து தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றுகிறான். படத்தின் முடிவில் ஐரோப்பியர்கள் கப்பலில் வருகிறார்கள். அவர்களைத் தொலைவிலிருந்து பார்க்கும் கதாநாயகனின் மனைவி அவர்களிடம் செல்லலாமா எனக் கேட்கிறாள். கதாநாயகன் அதை மறுத்து தன் குடியை மீண்டும் எழுச்சிபெறச் செய்வதாகச் சொல்லி காட்டிற்குள் அழைத்துச் செல்வதாய் படம் முடிகின்றது.

மாயன் மொழியில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மாயன் இன மக்களின் வாழ்வுமுறையையும் அவர்கள் சடங்குகளையும் (வரலாற்றுச் சான்றுகள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும்) சிறப்பாகப் பதிவு செய்கிறது. சிறப்பான பின்னணி இசையும் அடர்ந்த காடுகளில் அநாயசமாக சுழன்றுவரும் படப்பதிவும் படத்திற்குப் பெரும்பலம். அதிலும் கதாநாயகன் அருவியிலிருந்து குதித்துத் தப்பிக்கும் ஒரு காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது.



படத்தில் ரத்தவாடை சிறிது அதிகம்தான் என்றாலும் கதை நடந்த காலகட்டத்தையும் கதையின் கருவையும் வைத்துப் பார்க்கும்போது குற்றம் சொல்ல முடியவில்லை. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே காட்டுப்பன்றியின் வயிற்றைக் கிழித்து உறுப்புகளை எடுப்பதும், அடிமைகளைப் பலியிடும்போது நெஞ்சைக் கீறி இதயத்தை எடுப்பதும் தலையைக் கொய்வதும், ஆரம்பத்தில் சொன்ன சிறுத்தை தாக்குதலும் கொஞ்சம் அதிகம் தான்.

அடிமைகளை அழைத்துச் செல்லும் வழியில் கிராமங்களில் மக்கள் நோய்வாய்பட்டு இறந்துகிடக்கிறார்கள். பயிர்கள் விளையாமல் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன. காட்டை அழித்து சுண்ணாம்பு சுரங்கங்கள் உருவாகின்றன. கட்டிடங்கள் எழுப்புவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. அடிமைகள் வியாபாரம் நடக்கின்றது. பொதுமக்கள் நோய்வாய்பட்டிருக்கின்றனர். ஏழ்மையில் இருக்கின்றனர். அதே நேரம் அரச குடும்பத்தினர் சகல வசதிகளுடன் ஆரோக்கியமாய் இருக்கின்றனர். பலியிடும் பூசாரி மக்களைத் தன் பேச்சால் உணர்ச்சிவசப்பட வைக்கிறான். அரசனுக்கு நெருக்கமாய் இருக்கிறான். சூரிய கிரகணத்தைத் தனக்கு சாதகமாக்கி கடவுள் திருப்தியடைந்துவிட்டதாகப் பொய்யுரைக்கிறான். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை வீரர்கள் தங்கள் விளையாட்டுப் பொருட்களாக கொன்று குவிக்கிறார்கள். இவ்வாறு மாயன் சமூகத்தில் நிகழ்ந்த அத்தனை அவலங்களையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன். இது மாயன் சமூகத்திற்கு மட்டுமல்லாது எல்லா நாகரீகங்களும் அழிவதற்கும் காரணிகளாய் இருந்தவை. இன்றும் சமூகத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமாய் இருப்பவை.

நமக்குப் புரியாத மொழியில் பேசினாலும் காட்சியமைப்பினாலும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும் ஒன்றி பார்க்கமுடிகிறது. காட்சிகளின் நேர்த்தியும் படமாக்கப்பட்ட விதமும் பிரமிக்க வைக்கின்றன. வன்முறையை சிறிது குறைத்திருந்தால் சிறந்த ஆக்ஷன் திரைப்படமாக இருந்திருக்கும். ஆனால் அது மெல் கிப்சன் படமாய் இருந்திருக்காது.



24 பின்னூட்டங்கள்:

சொன்னது...

படம் பார்க்கணும் கப்பி... இப்போ எல்லாம் இங்கிலீஷ் படம்ன்னா உன் விமர்சனம் படிச்சுத் தான் கதையைத் தெரிஞ்சுக்குறேன்.. தொட்ரட்டும் உன் சேவை.. இன்னும் லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாண்ட் பெண்டிங்ப்பா... ஒர்ரே பிசி... சிவாஜியையே ரிப்பீட்டாப் பாத்து முடியல்லடா சாமி

சொன்னது...

வேற மொழிப்படம்ன உடனே எப்படி புரிஞ்சதுன்னு நெனச்சேன். சப் டைட்டில் படிச்சுதான் புரிஞ்சிக்க வேண்டி இருக்கா? நல்லா இருக்கு உங்க விமர்சனம். அதுவும் ஆரம்பம்.. செம சூடு

சொன்னது...

அண்ணாச்சி,

//இவ்வாறு மாயன் சமூகத்தில் நிகழ்ந்த அத்தனை அவலங்களையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன்.//

இது அப்படிக்கப்படியே 100% உண்மை கிடையாது. நிறைய வரலாற்றாசிரியர்கள். இதற்கு எதிராய் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள்.

மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்தை நாடலாம்.

http://en.wikipedia.org/wiki/Apocalypto

சொன்னது...

தேவ்

//தொட்ரட்டும் உன் சேவை.. //

ஹி ஹி

//ஒர்ரே பிசி... சிவாஜியையே ரிப்பீட்டாப் பாத்து முடியல்லடா சாமி
//

சேம் ப்ளட் :))

சொன்னது...

//வேற மொழிப்படம்ன உடனே எப்படி புரிஞ்சதுன்னு நெனச்சேன். சப் டைட்டில் படிச்சுதான் புரிஞ்சிக்க வேண்டி இருக்கா? //

ஆமா விவ்ஸ்

ஆனா படத்தில் வசனங்கள் ரொம்ப குறைவு


//நல்லா இருக்கு உங்க விமர்சனம். அதுவும் ஆரம்பம்.. செம சூடு
//

நன்னி நன்னி :))

சொன்னது...

மோகன்தாஸ்

தல,

"வரலாற்றுச் சான்றுகள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும்" அப்படின்னு ஊடால சொல்லியிருக்கேனே ;)

சொன்னது...

விமர்சனம் நல்லாயிருக்கு.. படம் பாக்கனும்னு ஆவலை தூண்டுது..

சொன்னது...

கிர்ர்ர்ர்ர்ர்ர், எழுதியிருந்ததை வேகமா படிச்சப்ப கவனிக்கலை போலிருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க.

ஏன்னா சூரிய கிரகணத்தைப் பார்த்து பயப்படும் அளவிற்கு இல்லாமல் மாயன் இன மக்கள் வானியல் விஷயத்தில் திறமையானவர்களாக இருந்தார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் தான் சொல்ல வந்தேன்.

சொன்னது...

பிரமிக்க வைத்த படம். நல்லதொரு விமர்சனத்திற்கு நன்றி!

மோகன் தாஸ் சொல்வது போல் படத்தின் பின்புலம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டாலும், படத்தை பார்க்கும் பொழுது நாம் அந்த காலத்திலே வாழ்கிறோம்.

பள்ளத்தில் இருக்கும் பொழுது பையனின் கால் காயத்திற்க்கு தாய் சிகிச்சை அளிக்கும் காட்சி, தண்ணீரில் குழந்தை பெறும் காட்சி, நாயகனின் தந்தை பயத்தை பற்றி பேசுவது, பலி பீடத்திலிருக்கும் பூசாரிகளின் நடவடிக்கைகள் அப்படியே நம்மையும் அந்த காலத்திற்க்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.

காட்டில் வாழும் பூர்வ குடியினரின் வாழ்க்கையை முறையை எப்படி வன்முறை இல்லாமல் எடுப்பது? அதுதானே அவர்களது நாகரீகம் :-))

சொன்னது...

நான் 2 மாசத்துக்கு முன்னாடியே பார்த்துட்டேன். விமர்சனம் தெளிவா, நல்லா எழுதி இருக்கீங்க!!

சொன்னது...

எனக்கு ரெத்தமுனா புடிக்காது அதனால.....

சொன்னது...

ppattian

டாங்க்ஸ் :)

மோகன்தாஸ்

//
கிர்ர்ர்ர்ர்ர்ர், எழுதியிருந்ததை வேகமா படிச்சப்ப கவனிக்கலை போலிருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க.

ஏன்னா சூரிய கிரகணத்தைப் பார்த்து பயப்படும் அளவிற்கு இல்லாமல் மாயன் இன மக்கள் வானியல் விஷயத்தில் திறமையானவர்களாக இருந்தார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் தான் சொல்ல வந்தேன். //

ஆமா தல..நானும் மாயன் இன மக்களைப் பத்தி வலையில் தேடினப்ப இதை படிச்சேன்...படத்தில இதையெல்லாம் Artistic License-ன்னு எடுத்துக்க வேண்டியது தான் ;))

தப்பா எடுத்துக்கறதா? ஹி ஹி அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது :))

சொன்னது...

ஸ்ரீதர் வெங்கட்

//படத்தை பார்க்கும் பொழுது நாம் அந்த காலத்திலே வாழ்கிறோம்.
//

உண்மை ஸ்ரீதர். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டவை. சில காட்சிகளை ஸ்லோ மோஷனில் காண்பித்து தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.

//காட்டில் வாழும் பூர்வ குடியினரின் வாழ்க்கையை முறையை எப்படி வன்முறை இல்லாமல் எடுப்பது? அதுதானே அவர்களது நாகரீகம் :-)) //

அதே தான் :)

நன்றி ஸ்ரீதர்.

குட்டி பிசாசு

பார்த்தாச்சா...பிடிச்சிருந்ததா?

வாழ்த்துக்களுக்கு வளரெ நன்னி :)


மின்னலு

அம்புட்டு ரத்தம் இல்ல ராசா..தைரியமா பார்க்கலாம்...நாம வீர பரம்பரை இல்லையா :))

சொன்னது...

சரி கப்பியே சொல்லியாச்சி. கண்டிப்பா பாக்கறோம் :-)

சொன்னது...

அய்ய்யோ....
தலைவா இப்பதான் நினைச்சேன்

என்னடா கப்பி பய இன்னும் ஹாலிவுட் பீட்டர் போடலயேன்னு.. ஆனாலும் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுத உன்ன விட்டா ஆளே இல்ல கப்பி.

உண்மைலயே தியேட்டர்லதான் பாக்கறியா?

சொன்னது...

கப்பி நிலவா,

கலக்குறப் போ... :)

நாங்கெல்லாம் இந்த மாதிரி படம் பார்த்தா ஏதோ புரியாத மொழியிலே பேசிக்கிறானுக, அதுவுமில்லாமே ஏதோ இன்னொரு மொழியிலே வேற எழுத்தை காட்டுறானுக'ன்னு செவனேன்னு வந்துருவோம்.... :((

நீ இதெய்யாலாம் பார்த்துட்டு விமர்சனமெல்லாம் எழுதுறே.... :)

/வெட்டிப்பயல் said...

சரி கப்பியே சொல்லியாச்சி. கண்டிப்பா பாக்கறோம் :-) //

இ.த,

நானும் கட்டாயமா பார்க்கிறேன்... :))

சொன்னது...

//சரி கப்பியே சொல்லியாச்சி. கண்டிப்பா பாக்கறோம் :-) //

வெட்டி அண்ணனுக்கு ஒரு டிவிடி பார்சல் :))

தம்பி

//என்னடா கப்பி பய இன்னும் ஹாலிவுட் பீட்டர் போடலயேன்னு.. ஆனாலும் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுத உன்ன விட்டா ஆளே இல்ல கப்பி.
//

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே :)))

//உண்மைலயே தியேட்டர்லதான் பாக்கறியா? //

120 ரூபா டிக்கெட்டுய்யா..இதுல பின்னாடி உட்கார்ந்திருந்த அம்மணி "Disgusting"ன்னு சவுண்ட் விட்டுட்டு பக்கத்துல இருந்த பொண்ணுகூட பேச ஆரம்பிச்சுடுச்சு...முன்னாடி இருக்கவன் செல்போன்ல கடனை அடைச்சுட்டிருக்கான்....அங்கங்க மொக்கை ரிங்டோன் தொல்லை..நிம்மதியா படம் பார்க்க விட மாட்டறாங்கப்பா :((

சொன்னது...

நல்ல விமர்சனம்!
வாழ்த்துக்கள்!! :-)

சொன்னது...

U N M A I ONLINE விமர்சனம்

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர் :)

பாபா

சுட்டிக்கு நன்றி :)

சொன்னது...

படம் பார்க்க தூன்டும் அளவுக்கு உங்கள் விமர்சனம் இருந்தது. பின்னனி தகவல்களும் சிறப்பு

சொன்னது...

கப்பி கேள்விப் பட்டீங்களா... நானும் இந்தப் பட சீரிஸ்ல ஒரு பதிவு போட்டிருக்கேன். ஆனா, நீங்க கதை விமர்சனம் எழுதிட்டீங்க அதனால நான் வேறு கோணத்தில் மெல் க்ப்சனை அணுகி இருக்கேன். நேரமிருப்பின் போயி பாருங்க கீழ் காணும் சுட்டியில்...

http://thekkikattan.blogspot.com/2007/07/apocalypto.html

சொன்னது...

நன்றி முரளி!!

தெகா

தல, போட்டுத் தாக்குங்க..இதோ வரேன் :)

சொன்னது...

Its Something extrodinary from hollywood...
Hats Off.........