வெயில் கொஞ்சம் அதிகம் தான்

"போன வருசத்தை விட இந்த வருசம் வெயில் அதிகம்பா" இந்த அரதப்பழசான மொக்கையான டயலாக்கை இன்னும் எத்தனை வருசம் தான் சொல்லிட்டு இருப்பாங்களோ தெரியல. இவங்க இந்த டயலாக் சொல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்து வருசத்துக்கு அரை டிகிரி வெயில் கூடியிருந்தாலும் இந்நேரத்துக்கு 100-200 டிகிரியை தொட்டிருக்கனும்.

வெயில் காலத்துல மக்கள் பண்ற அழிச்சாட்டியத்துக்கு அளவேயில்லாம போயிட்டிருக்கு. படத்துல பாருங்க.தலைவர் சிக்னலுக்கு முப்பதடி முன்னாடியே வண்டியை நிழல்ல நிப்பாட்டிட்டாரு. பின்னாடி வேன்காரன் சங்கு ஊதற மாதிரி ஹாரன் அடிச்சாலும் அண்ணாத்தை வெயில்ல நிக்க மாட்டாராம். பச்சை விளக்கு போடற வரைக்கும் நிழல்லயே தான் இருப்பாராம். சிக்னல் இருக்கறதே 30 செகண்ட். இவங்க பண்ற ரவுசுல நாலு வண்டி கூட சிக்னலை தாண்ட முடியாது. அண்ணே இப்படி கஷ்டப்பட்டு எதுக்குண்ணே வண்டி ஓட்டறீங்க? வெயில் அதிகமா இருந்தத உடம்போட சேர்த்து ஒரு குடை கட்டிக்கவேண்டியதுதானே இல்லைனா குடை பிடிக்கறதுக்கு ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வச்சுக்க வேண்டியது தானே பாஸு?

இதுல ஹெல்மெட் போட இவங்க கொடுக்கற பில்டப் இருக்கே..ஒரு மங்கி கேப்பை போட்டு இல்ல இரு கலர் கர்ச்சீப்பை கட்டி அதுக்கு மேல இதைக் கவுத்துட்டு...யப்ப்ப்பப்பா.முந்தாநாள் டிவில ஒரு அக்கா "எங்களுக்கு வெயில்ல ஹெல்மெட் போட்டா முடியெல்லாம் சிக்கலாயிடும்ங்க. மெயிண்டெயின் பண்ண கஷ்டம்"ன்னு 'கோதாவரி' கமலினி முகர்ஜி டயலாக்கெல்லாம் பேசிட்டிருக்காங்க. இன்னொருத்தரு "முடியெல்லாம் கொட்டி போயிரும்ங்க"ன்னு ஃபீல் பண்றாரு. அண்ணனுக்கு ஏற்கனவே பாதி தலைமுடி கொட்டி லோ பீம்ல ஹெட்லைட் எரிஞ்சுட்டிருக்கு. இதுக்கு மேல முடி கொட்டி என்ன ஆகப்போகுது? தலைமுடி கொட்டறதைப் பத்தி நினைக்கறவங்க தலையைப் பத்தி நினைக்க மாட்டறாங்க.

இவங்க தொல்லையெல்லாம் தாண்டி தவிச்ச வாய்க்கு இளநீர் குடிப்போம்னு வண்டியை நிறுத்தினா அங்கேயும் அவிப்பு. கண்ணுக்கு முன்னாடியே ஒருத்தருக்கு 12 ரூபாய்க்கு கொடுக்கற இளநீரை நாம போய் கேட்டதும் 15 ரூபாய் சொல்லுது இளநீர் விக்கற அக்கா. அவங்களுக்கு மட்டும் பண்ணிரெண்டு ரூபாயான்னு கேட்டா சூம்பிப் போன இளநீரை எடுத்து இதுதான் 12 ரூபாய்க்கு வரும்னு கலாய்க்குது. எங்க ஏரியால 13 ரூபாய்க்கு விக்கறாங்களேன்னு சொன்னா ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டி "கூடவே வர்றேன். எனக்கும் மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போ கண்ணு"ன்னு லந்து வேற. பைக் தானாவே பொட்டிக்கடைல் தண்ணி பாக்கெட் தேடியும் ஜூஸ் கடையில சூஸ் என்ற பேருல ஜில் தண்ணி குடிக்கவுமே போய் நிக்குது.

"இப்படி தாகத்தை தணிச்சே சம்பாதிச்ச சொத்தெல்லாம் இழந்துடுவோம் போலிருக்கேடா"ன்னு நண்பன்கிட்ட கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கிறான். "மாப்ள, நானெல்லாம் நயா பைசா செலவு பண்ணமாட்டேன். காலைல பதினொரு மணிக்கு முன்ன தாகம் எடுத்தாலோ நாலு மணிக்கு மேல தாகம் எடுத்தாலோ ஏதாவது ஓட்டலுக்கு போய் உட்கார்ந்து நாலு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு மீல்ஸ் இருக்கான்னு கேட்பேன். அவன் இல்லைம்பான். நான் எழுந்து வந்துடுவேன். இடைப்பட்ட அந்த மூணு மணி நேரம் தான் எப்படியாவது மேனேஜ் பண்ணனும்"ன்னு ஐடியா தர்றான்.

பீச்செல்லாம் போனா வண்டி நிறுத்த இடம் தேடியே தாவு தீர்ந்துடுது. வெயில்ல இருந்து தப்பிக்க ஒரே சரணாலயம் தியேட்டர் தான். அதனால தான் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'நினைத்தாலே', 'திரு ரங்கா'ன்னு பல மொக்கைகள் பல வாரமா ஓடுது. ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்னு தியேட்டருக்கு வந்தா ஒரு கூல்டிரிங்க்ஸ் பாட்டில் அம்பது ரூபாய் சொல்வானுங்க. அதுல அதிகபட்ச விலை 35 போட்டிருக்கும். கேட்டா "எல்லா தியேட்டர்லயும் இப்படித்தான் சார்"ன்னு அடுத்தவன் முதுகை காட்டுவாங்க. அவனுங்க கிட்ட அரை மணி நேரம் சண்டை போட்டு தொண்டை எரிய தியேட்டருக்குள்ள போன அந்த படத்தைப் பார்த்து வயிறெரிய ஆரம்பிச்சுடுது.

ஆபிஸ்ல கூட இருக்கவனுங்க ஏதோ சில்வர் ஃபேனோடவே பொறந்தவன் மாதிரி பில்டப் கொடுப்பானுங்க. நாக்குக்கு ருசியா காரமா ஆந்திரா மெஸ் போலாம்டான்னு கூப்பிட்டா "நோ யார்..ரொம்ப ஹாட் யார்"ன்னு பீட்டர் விட்டுட்டு இத்துப்போன கேண்டின்ல உப்பில்லாத சாப்பாட்டை திம்பாங்க. ஆண்டிக்குட்டைல அரை டவுசர் போட்டு திரிஞ்சதை 'கூலா' மறந்துடுவானுங்க.

லீவ்ல ரூம்ல ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா அங்கேயும் கொலவெறி கும்பல் காத்துட்டிருக்கும். வீடு முழுக்க ஜன்னல் வச்சிருப்பாங்க. ஆனா தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, மேல்கிழக்கு, கீழ்மேற்குன்னு எந்த பக்கம் காத்தடிச்சாலும் வீட்டுக்குள்ள காத்தே வராத மாதிரி வாஸ்து பார்த்து கட்டியிருப்பாங்க.

ஹூம்..என்னவோ போங்க..ஒரே புலம்பல்ஸா இருக்கு...இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம் தான் :)))36 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஆமாமாம். பதிவைப் படிச்சாலே தெரியுது. வெயில் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம்தான்!!

சொன்னது...

கப்பி,
பேசாம இங்க வந்துடு... இன்னைக்கு கூட மழை தான் ;)

சொன்னது...

கப்பி,
பேசாம இங்க வந்துடு... என்னிக்குமே வெயில்தான் :(

சொன்னது...

//மேல்கிழக்கு, கீழ்மேற்குன்னு //

இத பாக்குறப்பவே தெரியுது. வெயில் அதிகமா இருக்கிறத விட நீங்க ரொம்ப சூடாயிட்டீங்கனு நினைக்கிறேன்.

சொன்னது...

தாகத்தை தீர்க்கும் ரஸ்னாவை முயற்சி செய்து பார் கப்பி.
எங்கும் ரஸ்னா
எதிலும் ரஸ்னா

சொன்னது...

தாகத்தை தீர்க்கும் ரஸ்னாவை முயற்சி செய்து பார் கப்பி.
எங்கும் ரஸ்னா
எதிலும் ரஸ்னா

சொன்னது...

ஆமாமா... வெயில் ரொம்ப அதிகம்தான்.. வென் ஐ வாஸ் இன் யுஎஸ்.... னு டையலாக் வேற விடுவானுங்களே...

சொன்னது...

// தம்பி said...
தாகத்தை தீர்க்கும் ரஸ்னாவை முயற்சி செய்து பார் கப்பி.
எங்கும் ரஸ்னா
எதிலும் ரஸ்னா
//

அய்யே.. அந்த ரஸ்னாவ சொல்றியா நீயீ...

சொன்னது...

ஹி ஹி....

அநியாத்துக்கு சூடா ஆகிட்டே போலே இருக்கே.. :)

சொன்னது...

/தாகத்தை தீர்க்கும் ரஸ்னாவை முயற்சி செய்து பார் கப்பி.
எங்கும் ரஸ்னா
எதிலும் ரஸ்னா//


ஏலேய் கதிரு,

அந்த ரஸ்னா'லாம் இப்போ நினைச்சுக்கூட பார்க்கிறதே இல்லே... :)

சொன்னது...

//ஆமாமாம். பதிவைப் படிச்சாலே தெரியுது. வெயில் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம்தான்!!

//

கொத்ஸ்

ஹி ஹி :)

சொன்னது...

/கப்பி,
பேசாம இங்க வந்துடு... இன்னைக்கு கூட மழை தான் ;) //

வெட்டிகாரு

என்ன அவசரம்..மெதுவா வரலாம் ;)

சொன்னது...

//கப்பி,
பேசாம இங்க வந்துடு... இன்னைக்கு கூட மழை தான் ;) //

அய்யனார்

வெயில் பிரச்சனை இல்ல தல..நம்மாளுங்க பண்ற ரவுசு தான் தாங்க முடியல :)))

சொன்னது...

//இத பாக்குறப்பவே தெரியுது. வெயில் அதிகமா இருக்கிறத விட நீங்க ரொம்ப சூடாயிட்டீங்கனு நினைக்கிறேன்.//

JK

நாமளாவது சூடாகறதாவது...அது சும்மா காமேஏஎடி :))))

சொன்னது...

தம்பி

//தாகத்தை தீர்க்கும் ரஸ்னாவை முயற்சி செய்து பார் கப்பி.
எங்கும் ரஸ்னா
எதிலும் ரஸ்னா//

அடக்கொலைகார பாவி மக்கா!!
இந்த ரஸ்னாவை விட்டு தொலைங்க சாமி ;)))

சொன்னது...

ஜி

//வென் ஐ வாஸ் இன் யுஎஸ்.... னு டையலாக் வேற விடுவானுங்களே...
//

அவனுங்களை டோட்டலா மறந்துட்டேனே!

//அய்யே.. அந்த ரஸ்னாவ சொல்றியா நீயீ...
//

தம்பி எப்போ எங்கே போனாலும் அந்த ரஸ்னாவைத் தான் சொல்வாப்ல :)))

சொன்னது...

//ஹி ஹி....

அநியாத்துக்கு சூடா ஆகிட்டே போலே இருக்கே.. :) //

இராயல்

ஆமா சின்ன தல...நீங்கதான் ஏதாவது செய்யனும் :))))

//ஏலேய் கதிரு,

அந்த ரஸ்னா'லாம் இப்போ நினைச்சுக்கூட பார்க்கிறதே இல்லே... :)
//

ரஞ்சனியை மட்டும் தான் நினைச்சு பார்க்கறீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? அதையெல்லாம் சொல்லனுமா என்ன? :))

சொன்னது...

மொட்ட வெயில்ல ஒங்க பதிவ படிக்கையில குளுகுளுன்னு இருந்துச்சு பங்காளி.

இளங்கோவன்.

சொன்னது...

//இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம் தான் :)))//
இங்கே புலம்புவதற்குப் பதிலாகப் பேசாமல் மாண்டிவிடியோவிலேயே இன்னும் கொஞ்ச:-) நாள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா ஊர்ஸ் ?
:-)))

சொன்னது...

:)) வெயில் தான் வறுத்தெடுக்குதுன்னு பாத்தா, இளநீர் விக்கறவன்ல இருந்து எல்லாருமே லொள்ளு பண்றாங்களே..

சொன்னது...

இளங்கோவன்

//மொட்ட வெயில்ல ஒங்க பதிவ படிக்கையில குளுகுளுன்னு இருந்துச்சு பங்காளி.//

வாங்க பங்காளி :)

சொன்னது...

//இங்கே புலம்புவதற்குப் பதிலாகப் பேசாமல் மாண்டிவிடியோவிலேயே இன்னும் கொஞ்ச:-) நாள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா ஊர்ஸ் ?
:-)))
//
பாலராஜன்

அங்க அதுக்குமேல தாங்காதுன்னு தானே ஓடி வந்தேன் :))))

'கொஞ்ச' பக்கத்துல நீங்க போட்டிருக்க ஸ்மைலியையும் பார்க்கல..அதுல இருக்க உகுவும் தெரியல :))))

சொன்னது...

//வெயில் தான் வறுத்தெடுக்குதுன்னு பாத்தா, இளநீர் விக்கறவன்ல இருந்து எல்லாருமே லொள்ளு பண்றாங்களே..
//

சிங்கம்லே ஏஸ்

என்ன கொடுமை சார் :))

சொன்னது...

கப்பி,

வெயில்ல இவ்வளவு விஷயம் இருக்கா?

சொன்னது...

வெயில் கொஞ்சம் அதிகம் தான் இங்க. 21 டிகிரி செல்சியஸ் :-)

சொன்னது...

கொடுமப்பா கொடும அவன மொதல்ல சிக்னல்ல வண்டிய ஒழுங்கா நிருத்த சொல்லு நான் வெயிலை நிருத்தறேன்

சொன்னது...

நீ ஒழுங்கா இரு மொதேல்லா காஞ்சிபுரம் போகனும்மா வேனாமா?

சொன்னது...

நான் எங்க வேனும்னாலும் பார்க் பன்னுவேன் உனக்கென்னா நைனா?

பார்கிங்க் பரட்டை

சொன்னது...

நான் அடிச்சா அது தம்மு,
சுட்டா அது வடை,
எடுத்தா அது தோசை
ஆனா சாப்டா அது கூழ்தான்

சொன்னது...

மாண்டி விடியோவில் ஆணியை பிடுங்கிவந்து அதை சென்னையில் அடிக்கும் கப்பி உனக்கும் அடிக்குமோ வெயில்

சொன்னது...

//வெயில்ல இவ்வளவு விஷயம் இருக்கா? //

நிர்மல்

ஹி ஹி :)

உதய்

//வெயில் கொஞ்சம் அதிகம் தான் இங்க. 21 டிகிரி செல்சியஸ் :-) //

அது சரி :))

சொன்னது...

மழை, காஞ்சி மட அதிபதி, பார்க்கிங் பரட்டை, தி லூசு, ஸ்ரேயா

எல்லாம் கும்மி மயம் :)))

சொன்னது...

மழை பொழிகின்றது சிங்கப்பூரில்... ஆன உங்களை இங்க வர சொல்ல மாட்டேன்.அப்புறம் நீங்க வெறு மாதிரி புலம்ப ஆரம்பித்து விடுவீங்க :-))

சொன்னது...

//ஆன உங்களை இங்க வர சொல்ல மாட்டேன்.அப்புறம் நீங்க வெறு மாதிரி புலம்ப ஆரம்பித்து விடுவீங்க :-))

//

உலகத்தை நல்லா புரிஞ்சுவச்சிருக்கீங்க :)))

சொன்னது...

நிறைய DHMO குடித்து வெய்யில் கொடுமையை சமாளிக்கவும்.

சொன்னது...

Water bottle ல தண்ணீர் எடுத்திட்டு போற்தில்லையா னீங்க?