'?!' & நன்றி

விஜய் தொலைக்காட்சியின் சென்ற வார 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் "பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா" என்ற சுவாரசியமான தலைப்பில் இடையில் விவாதம் நடந்தது. இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது. பதினைந்து வயது சிறுவனில் இருந்து ஐம்பத்தைந்து வயதானவர் வரை தங்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எதிர்தரப்பில் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளாமல் 'பிள்ளையின் எதிர்காலத்திற்கு, பொருளாதார நிலை, பிள்ளையின் ஆசை, எங்களின் கனவு' என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பல இனிமையான அனுபவப் பகிர்வுகளுடனும், வாதங்களுடனும் இருதரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த கோபிநாத் எப்போதும் போல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

'ஜெயா டிவி' காமெடி டைம்-இல் கடித்துக்கொண்டிருந்த நடிகர் 'லொள்ளு சபா'வுக்கு வந்ததிலிருந்து இதையும் பார்ப்பதில்லை. சந்தானத்தைத் தொடர்ந்து ஜீவாவும் கிளம்பிவிட்டார் போல. நிகழ்ச்சி மரண மொக்கையாகிவிட்டது. சிரிப்பே வரல.


*****

இரண்டு வாரங்களாக தூங்குவதற்கு முன்னும் தூங்கி எழுந்த பின்னும் ஏ.ஆர்.ரகுமானின் 'Ada' மற்றும் 'Jaane Tu Ya Jaane Na' படங்களின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் அட்டகாசம்.

*****

நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சிலப்பல காரணங்களால் இயலவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில்.



All About Superstar என்ற பதிவில் சுந்தர் என்பவர் தினம்தினம் சுவையான பல தகவல்களையும், சுடச்சுட செய்திகளையும் தலைவரின் பழைய பத்திரிகைப் பேட்டிகளையும் தருகிறார்.


*****

ஒரு வழியாக இங்கு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பொது நூலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த ஏழு மாதங்களில் இரண்டே நாவல்களை முழுதாக வாசித்திருக்கிறேன். ஓர்ஹன் பாமுக்-கின் 'My Name is Red' புத்தகத்தை இரண்டு மாதங்களாக இருநூறு பக்கங்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இந்த வேகத்தில் படித்தால் அதை முடிப்பதற்குள் 2009 வந்துவிடும் என்ற அச்சத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு நூலகத்தில் இருந்து கொண்டுவந்த தஸ்தாவஸ்கியின் 'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக

*****

இந்த பாட்டு செமையா இருக்கு.





*****

இரண்டு மாதங்களாக ?! பதிவுகளை எழுதவில்லை என்று கவலையில் இருந்தேன்.

*****

இந்த மாத ?! தத்துவம்

""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."

- எங்கோ படித்தது.

*****

இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் அடாத மொக்கையிலும் விடாது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)



27 பின்னூட்டங்கள்:

சொன்னது...

Karamazov//

ஏதோ காராசேவ்தான் ஞாபகம் வருது. பாட்டு பட்டைய கெளப்புதுங்கோ.

இந்த வாரம். நல்ல வாரம்.

சொன்னது...

செம கலக்கலான தலைவர் படத்தோட நன்றி சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் :)))

சொன்னது...

கப்பி,

//"பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா"//

நானும் இந்த நிகழ்சியை பார்த்தேன்.சில பெற்றோர்கள் காட்டும் அது போன்ற அறியாத் தவறை பொதுமை படுத்தி விட முடியாது.

இருந்தாலும் சில நேரங்களில் பெற்றோர்கள் கூறும் விளக்கங்களும் ஒத்துக் கொள்ளும் படியாகத்தானே இருந்தது. உ.தா: ஒரு அம்மா கூறியது, இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை சிறப்புக் கவனம் பெறுவதற்குக் காரணம் சற்றே அறிவு, அல்லது ஏனைய தினப்படி செய்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் படி நேர்ந்தால், ஒரு வகுப்பில் மக்குக் குழந்தைக்கு ஒரு ஆசிரியையின் சிறப்புக் கவனத்தை கொடுப்பதனைப் போன்றுதான் கொடுத்தாக வேண்டும்...

இரண்டாவது, ஒரு அக்கா கூறுகிறாள் தனது தம்பி பிறந்தவுடன் என்னிடம் காட்டப்பட்ட அன்பு பறிபோனதென்று, இதற்கும் சரியான காரணம் என்னாவாக இருக்குமென்று விளக்கப் பட வில்லை அந்த வளரும் பெண்ணிடம்...

ஆக, குழந்தை வளர்ப்பில் அவ் நிலையில் ஈடுபட்டு அதிலுள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து விட்டு நடிகர் பாண்டியராஜன் கூறியதைப் போன்று கூற வந்தால் குழந்தை வளர்க்கும் பொற்றோர்களுக்கு ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கும், அல்லவா?

எல்லா பதிவுகளையும் படித்தே வந்தேன்... ஸ்பானிஷ் கற்றுக் கொண்டதினைப் பற்றி எழுதியதற்கு ஒரு சிறப்பு நன்றி :-).

சொன்னது...

சூப்பர் வாரம் கப்பி ;)

சொன்னது...

அப்பாடா!! இந்தப் பதிவு ஒண்ணுமே புரியலை!! :))

சொன்னது...

இளா

//ஏதோ காராசேவ்தான் ஞாபகம் வருது//

:))

நன்றி விவ்ஸ்! :)


ஆயில்யன்

நன்றி அண்ணாத்த!! :))

சொன்னது...

தெகா


//
இருந்தாலும் சில நேரங்களில் பெற்றோர்கள் கூறும் விளக்கங்களும் ஒத்துக் கொள்ளும் படியாகத்தானே இருந்தது. உ.தா: ஒரு அம்மா கூறியது, இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை சிறப்புக் கவனம் பெறுவதற்குக் காரணம் சற்றே அறிவு, அல்லது ஏனைய தினப்படி செய்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் படி நேர்ந்தால், ஒரு வகுப்பில் மக்குக் குழந்தைக்கு ஒரு ஆசிரியையின் சிறப்புக் கவனத்தை கொடுப்பதனைப் போன்றுதான் கொடுத்தாக வேண்டும்...
//


அது சரிதான்..அதே போல் மற்ற குழந்தைகளை விட நன்றாக படிக்கும் குழந்தையின் மேல் அதிக பாசம் செலுத்துவதாகவும் சிலர் ஒத்துக்கிட்டாங்களே :)


//
இரண்டாவது, ஒரு அக்கா கூறுகிறாள் தனது தம்பி பிறந்தவுடன் என்னிடம் காட்டப்பட்ட அன்பு பறிபோனதென்று, இதற்கும் சரியான காரணம் என்னாவாக இருக்குமென்று விளக்கப் பட வில்லை அந்த வளரும் பெண்ணிடம்...
//

எனக்கே கூட சில சமயம் அப்படி தோணியிருக்கு :)))

தம்பி பிறந்தவுடனே அந்த பெண்ணைக் கூப்பிட்டு பேசியிருந்தால் இது போல் அவர் கருதியிருக்க வாய்ப்பிருக்காது..ஆனா நம்ம ஊர்ல பிரச்சனையே பசங்ககிட்ட பேசாததுதானே!! எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சுகிட்டு டெலிபதி வேலை செய்யுமான்னு பாக்கறவங்க தானே நிறைய பேர்

//
எல்லா பதிவுகளையும் படித்தே வந்தேன்... ஸ்பானிஷ் கற்றுக் கொண்டதினைப் பற்றி எழுதியதற்கு ஒரு சிறப்பு நன்றி :-).//

நன்றி தலைவா :)

சொன்னது...

கோபிநாத்

டாங்கிஸ் அண்ணாச்சி :)


கொத்ஸ்

//அப்பாடா!! இந்தப் பதிவு ஒண்ணுமே புரியலை!! :))//

அப்பாடா!! இந்தப் பின்னூட்டமும் ஒன்னும் புரியல :)))


நன்றி! :)



சென்ஷி

_/\_ :))

சொன்னது...

குழந்தைங்க கிட்ட பாரபட்சம் காட்டுறாங்கங்குறத விட குழந்தைகள் கிட்ட மனம் விட்டுப் பேசிப் பழகி வளக்கலைங்குறதுதான் உண்மை.

என்னது நன்றியா? என்னையா கப்பி. உங்களுக்கு அகோனியா வந்ததப் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தேன். அதை ஒங்க குருநாதர் வேற சொல்லீருந்தாராமே! அவர் சொன்னாக் கேக்க மாட்டீங்களா! :)

சொன்னது...

அந்த பாட்டு சூப்பர்!!!

//""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."
//

இதுவும் சூப்பர்!!!

சொன்னது...

நன்றாக போர் அடிக்காமல் எழுதினீங்க கப்பி, (இன்னும் புகழவேண்டும் என்றால் அதுக்கு தனி பொட்டி).

//தஸ்தாவஸ்கியின்// 'The Brothers Karamazov'

அவரு பேரை படிக்கங்காட்டியும் நாக்கு சுளுக்கிக்கும் போல இருக்கு அண்ணாச்சி.

சொன்னது...

//'My Name is Red' //

அட நம்ம தல யை பற்றி வெளிநாட்டு காரனே புத்தகம் எழுதி இருக்கானா?

அது!

சொன்னது...

//'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக//

அப்படியே அருள்புரிந்தேன் கப்பி! :-)
வாசித்த பின் தஸ்தாவஸ்கியின் தஸ்தாவேஜ்களை எல்லாம் பதிவில் அரங்கேற்ற உனக்கு எல்லா அருளும் சித்திக்கட்டும்! :-)

சொன்னது...

?! & நன்றி!
?! படிக்கறவங்க பொறுமைக்கு நட்சத்திர வாரம் தானா நன்றி சொல்ல வச்சிருச்சி பாத்தியா கப்பி? :-)

//இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது//

பாரபட்சம் இருக்கு என்பது குழந்தைகளுக்கும் தெரியும்! பெற்றவர்களுக்கும் தெரியும்! பாரபட்சமே இல்லை என்று சாதிப்பதை விட்டு விட்டு, ஏன் அந்த விஷயத்தில் அவனை மட்டும் பிடிச்சிருக்கு, இந்த விஷயத்தில் இவளை மட்டும் பிடிச்சிருக்கு-ன்னு மாசத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் உட்கார்ந்து பேசினாலே பாரபட்சம் தூரபட்சம் ஆகிவிடும்!

ஆனா வழக்கமான சென்ட்டி தான் உண்மையை ஒப்புக் கொள்ள விடாது பாரபட்சமே இல்லைன்னு சாதிக்கும்!
அது சரி....நண்பர்கள் கிட்ட நாம காட்டாத பாரபட்சமா? பெற்றவர்களைக் குறை சொல்ல? :-))

சொன்னது...

//நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன்//

அது மட்டுமா?
இன்னும் என்னென்னமோ?????

கப்பியின் நட்சத்திர வாரம் சில பல காரணங்களுக்காக unofficialஆக இன்னும் --- வாரங்கள் நீட்டிக்கப்படுகிறது!

சொன்னது...

ஜி.ரா

_/\_ :))



ச்சின்னப் பையன்

வாங்க தலைவா :))

சொன்னது...

//நன்றாக போர் அடிக்காமல் எழுதினீங்க கப்பி, (இன்னும் புகழவேண்டும் என்றால் அதுக்கு தனி பொட்டி).
//

இப்படி சொன்னதுக்கே என் சொத்து மொத்தம் கொடுக்கனுமே :)))


//அவரு பேரை படிக்கங்காட்டியும் நாக்கு சுளுக்கிக்கும் போல இருக்கு அண்ணாச்சி.
//

அதுக்குதான் அந்த ரிஸ்கெல்லாம் எடுக்காம மனசுக்குள்ளயே படிச்சுக்கனும் :)))


//அட நம்ம தல யை பற்றி வெளிநாட்டு காரனே புத்தகம் எழுதி இருக்கானா?

அது!
//

:))

தல போல வருமா :))

சொன்னது...

KRS

//?! & நன்றி!
?! படிக்கறவங்க பொறுமைக்கு நட்சத்திர வாரம் தானா நன்றி சொல்ல வச்சிருச்சி பாத்தியா கப்பி? :-)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//மாசத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் உட்கார்ந்து பேசினாலே //

எக்ஜாக்ட்டிலி :))

//பாரபட்சம் தூரபட்சம் ஆகிவிடும்!//

கவுஜ கவுஜ

//
கப்பியின் நட்சத்திர வாரம் சில பல காரணங்களுக்காக unofficialஆக இன்னும் --- வாரங்கள் நீட்டிக்கப்படுகிறது!//

பாசம் உங்க கண்ணை மறைக்குது :))


நன்றி அண்ணாத்த!

சொன்னது...

நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது.......

/செம கலக்கலான தலைவர் படத்தோட நன்றி சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் :)))//

ஆயில்ஸ் கருத்துக்கு ரீப்பிட்டு... :)

சொன்னது...

:)))

Nice week nu naan sollithaan theriyanumaa???

:)))

சொன்னது...

//""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."//

padithathum p;idithathu :)

thalaivar pathi sollita.. superu makka!

சொன்னது...

மொத்தமா ஒரு கலக்கலான வாரம் தல...
ரொம்ப நல்லா இருந்தது... இடையில வந்து பின்னூட்ம் போட முடியலை ஆனா எல்லா பதிவும் படிச்சிருக்கேன் நல்ல அலுப்படிக்காத நடையில தந்திருக்கிங்க பதிவுகளை...

தொடர்ந்தும் எழுதுங்க...

வாழ்த்துக்கள்...

சொன்னது...

இராம்

நன்றிண்ணே :)

ஜி

டாங்கிஸ் மக்கா :)

சொன்னது...

ட்ரீம்ஸு

//p;idithathu :)//

ஒரு வார்த்தைல இப்படி போட்டுத் தாக்கறயே மாப்பி :)

நன்றி மக்கா!!


தமிழன்

நெஞ்சார்ந்த நன்றிகள்!! :)

சொன்னது...

புதுப் பதிவு போடுங்க மக்கா..

வெயிட் பண்றோம்ல..

சொன்னது...

Pattu Nalla irukku kappi..andha programme kooda nalla irundhu :)

சொன்னது...

பரிசல்காரன்

வாங்க தல...சம்பளம் கொடுக்கற திமிர்ல வேலையெல்லாம் பார்க்க சொல்றாங்க தல..மன்னிச்சிருங்க :)))


ரம்யா ரமணி

வாங்க _/\_ :))