மாண்டி'வீடியோ'

ஆரம்பிச்சுட்டாங்கய்யா. இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க. டிசம்பர் 8-ம் தேதி 'La Noche de las Luces'-ன்ற பேர்ல ஒளி இரவு நடத்தினாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு வான வேடிக்கை. இந்த நிகழ்ச்சிதான் இவங்க கோடைக்கால கொண்டாட்டங்களுக்குத் துவக்கமாம். கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள்(இந்த ஊர் மக்கள்தொகையில் மூன்றிுல ஒரு பங்கு) பீச்சை நிரப்பிட்டாங்க. இரவு 10 மணிக்கு நடந்த இந்த ஒளிவிருந்துக்கு மதியம் 2 மணியில் இருந்தே பீச்சில் மக்கள் குவிய ஆரம்பிச்சாச்சு. மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டுக் கிடந்தாங்க.

சும்மாவே இப்படி பட்டையைக் கிளப்பறாங்களே கிறிஸ்துமஸுக்கும் இப்படி தூள் கிளப்புவாங்கன்னு பார்த்தா ஏமாற்றமா போயிடுச்சு. நள்ளிரவு 12 மணிக்கு வெடி வெடிச்சாங்க. ஊர் முழுக்க எல்லாரும் ஒரே நேரத்துல ராக்கெட் விட்றது பத்தாவது மாடில இருந்து பார்க்க வண்ணமயமா அருமையா இருந்தது. ஆனா அவ்வளவுதான் இவங்க கிறிஸ்துமஸ் போல. கிறிஸ்துமஸ் அன்னைக்கு தெருவில ஒரு ஈ,காக்கா இல்ல. பொதுவா லீவ் நாளாச்சுன்னா பீச்சுக்கு வந்து வெயில்ல படுத்து கிடக்கற கூட்டத்தையும் காணோம். சினிமா தியேட்டரல் கூட நேத்து ராத்திரி ஷோ மட்டும்தான் ஓட்டினாங்க. இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே :))

ஒளி இரவு வீடியோ:



5 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,

கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந்துண்டு, இறை வழிபாடு செய்து நடப்பது. கார்னிவல் முறையிலான கொண்டாட்டங்கள் இப்போது கிடையாது.ஆதியில்தான் இவ்வாறான கொண்டாட்டங்கள்
இருந்தது.

சொன்னது...

//இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க.//

என்னப்பு காது குத்தறே? அடிக்கிற மார்கழி மாசக் குளிர்ல, எங்கேயோ கோடைக்காலம் தெரியுதாம்ல?

மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சுக்கிட்டு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டே இந்த பதிவை எழுதினியாப்பூ?

சொன்னது...

//கிருஸ்மஸ் குடும்ப பண்டிகை. உறவுகளோடு விருந்துண்டு, இறை வழிபாடு செய்து நடப்பது. //

ஆமாங்க நிர்மல்...ஆபிஸ்ல வந்து விசாரிச்சா அப்படித்தான் சொல்றாங்க :)

//கார்னிவல் முறையிலான கொண்டாட்டங்கள் இப்போது கிடையாது.//

கார்னிவல் என்றதும் நினைவுக்கு வருகிறது...பிப்ரவரியில் பிரேசில் ரியோவில் கார்னிவல் ஆரம்பிப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு இங்கும் சிறிய அளவில் கார்னிவல் விழா நடக்குமாம்...

சொன்னது...

//என்னப்பு காது குத்தறே? அடிக்கிற மார்கழி மாசக் குளிர்ல, எங்கேயோ கோடைக்காலம் தெரியுதாம்ல?
//

தல...சொன்னா நம்பனும்...இப்படி குறுக்கு கேள்வி கேட்டுட்டிருந்தா எனக்கு 'ஆமாம்' தவிர வேற பதில் சொல்ல தெரியாது..முடியாது :)


//
மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சுக்கிட்டு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டே இந்த பதிவை எழுதினியாப்பூ?
//

ஓவர் குசும்பு உடம்புக்கு ஆவாது தல...கிவ் அண்ட் டேக்கா?? :))

சொன்னது...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்