"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"
அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.
"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"
"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.
சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.
கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.
பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.
திங்கள், நவம்பர் 17, 2008
பாட்டுத் தலைவன் பாடினால்
கப்பி | Kappi
வகை அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
26 பின்னூட்டங்கள்:
நீங்க பாடிய அந்த பாடல் வலையேத்தினால் நாங்கெல்லாம் கேட்போம்ல. :-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க பாடிய அந்த பாடல் வலையேத்தினால் நாங்கெல்லாம் கேட்போம்ல. :-)//
ப்ளார்......ப்ளார்....... ப்ளார்....
என்ன வில்லத்தனம் ... (கப்பி மனசு)
உங்கள் விடாமுயற்சி போதும் தோழரே! உங்கள் குரல் இனிமையாக தான் இருக்கும்!
//நீங்க பாடிய அந்த பாடல் வலையேத்தினால் நாங்கெல்லாம் கேட்போம்ல. :-)//
நானும் வழிமொழிகிறேன்.
கப்பி.. இந்த பாட்டுத் தலைவன் பாடினால் சம்பவம் போலவே நமக்கும் ஒரு சம்பவம் இருக்கு. சூடானில் நான் தங்கி இருந்த வீட்டில் ஒரு வேலை விசயமாக நண்பன் ஒருவன் வந்து 40 நாள் தங்கி இருந்தான் என் அறையில்(தமிழன்)
காலையில் எழுந்தவுடன் சுப்புரபாதம் போல் "சாமி கிட்ட சொல்லிப்புட்டேன்" என்ற பாடலை போட்டு விடுவான்(6 மணிக்கு எல்லாம்) அதுக்கு அப்புறம் போய் குளிச்சுட்டு வந்து மறுபடியும் அதை பாட்டை போடுவான். அந்த பாட்டை கேட்டே அந்த 40 நாளும் என் பொழுது விடிந்தது. அதனாலே அந்த பாட்டை கேட்டாலே கோபம் வரும். அம்புட்டு இம்சையா இருந்தது. இப்ப அந்த பாட்டை கேட்டால் அவன் ஞாபகம் வந்து சிரிப்பு தான் வருகிறது.
\\என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.
\\
;))) இந்த சுகமான கொடுமை எல்லாம் இங்கையும் நடந்திருக்கு.
//பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்//
ஹி...ஹி...நல்லா சுத்திருக்கேப்பா கொசுவத்தியை. நல்லாருந்துச்சு படிக்க.
//நாகை சிவா said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க பாடிய அந்த பாடல் வலையேத்தினால் நாங்கெல்லாம் கேட்போம்ல. :-)//
ப்ளார்......ப்ளார்....... ப்ளார்....
///
பாஸ் இப்படி எல்லாம் அடிச்சு கூப்பிட்டு பாட வைச்சா அண்ணாச்சியோட பர்பாமென்ஸ் நல்லா வராது ஆசையா கூப்பிடுங்க!
கப்பியண்ணாச்சி பாடி அதை வலையில ஓட விடுங்க :)))
//நாகை சிவா said...
கப்பி.. இந்த பாட்டுத் தலைவன் பாடினால் சம்பவம் போலவே நமக்கும் ஒரு சம்பவம் இருக்கு. சூடானில் நான் தங்கி இருந்த வீட்டில் ஒரு வேலை விசயமாக நண்பன் ஒருவன் வந்து 40 நாள் தங்கி இருந்தான் என் அறையில்(தமிழன்)
காலையில் எழுந்தவுடன் சுப்புரபாதம் போல் "சாமி கிட்ட சொல்லிப்புட்டேன்" என்ற பாடலை போட்டு விடுவான்(
//
அடுத்த வரிகளையும் பாடுங்க பாஸ்
சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்
உங்க கூட தங்கிக்கிட்டேன்
ஒத்தையா நீங்களும் பேசிக்கிட்டே இருந்தா...
:)))))))
பாஸ் என்னோட அனுபவத்தையும் நானும் சொல்லிக்கிறேன் பாஸ்!
ஒரு காதல் தோல்வி பார்ட்டீ நாங்க படிப்பு விசயமா சர்வே கேம்புக்குன்னு திருவண்ணாமலை போய் தங்கியிருந்தப்ப காலையில சாரி சாரி இரவு தூங்க போறப்ப 4 மணிக்கு அமைதிக்கு பெயர்தான் சாந்தி பாடிக்கிட்டே இருந்தான் பாஸ் !
இப்ப அவனோட வீட்டுக்காரி அனேகமா பாடுவாங்க! “உன்னோடு வாழ்ந்தால் சில காலம் போதும் காலி நான் காலி :))))))
// .:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க பாடிய அந்த பாடல் வலையேத்தினால் நாங்கெல்லாம் கேட்போம்ல. :-)
//
அப்புறம் அதை நாங்க தேன் ”கப்பி”கிண்ணத்தில கேக்கலாமா??
/./சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.
//
எல்லா ஊர்லயும் இப்படித்தான் போல!
எங்க ஊருலயும் ஒரு பயபுள்ள இப்படித்தான் பாடிக்கிட்டிருந்தாரு கொஞ்ச நாளைக்கு பிறகு “என்னவளே என்னவளேக்கு மாறி போய்ட்டாரு :))
comedyil aarambichu.. kadaisila sentiment.. thamiz padam edukka vendiya anaiththu thaguthigalum irukku :))) kalakku makka...
\\அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு.\\
மகனுக்கு???
\\(அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) \\
:))
\\ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.\\
உங்கள் விருப்பம் நிறைவேறட்டும்!
பதிவு ரொம்ப நல்லாயிருக்கு கப்பி:))
மை ஃபிரண்டு
நான் சொல்ல வேண்டியதை புலி சொல்லிட்டாரு..அவ்வ்வ் :))
நாகை சிவா
ஹிஹி
உங்களுக்கு 'சாமிகிட்ட சொல்லிகிட்டேன்' எனக்கும் ஒருத்தன் இருந்தான்..ரெண்டு படத்துலருந்து 'மொபைலா மொபைலா'ன்னு அப்படியே மொத்தலாமான்னு இருக்கும் :))
காண்டீபன்
நீங்க ரொம்ம்ப நல்லவர் :))
கோபிநாத்
வாக்கர் அண்ணாச்சி..சுகமான கொடுமையா?
என்ன கொடும இது :))
கைப்புள்ள
கொசுவத்தி சுத்தறதுக்கென்ன..சும்மா கெடக்கறப்போ எடுத்து சுத்திட்டிருக்க வேண்டியதுதான் :))
டாங்கிஸ் தல
ஆயில்ஸ்
//பாடி அதை வலையில ஓட விடுங்க :)))//
எதுக்கு கேக்கறவங்க தலைதெறிக்க ஓடறதுக்கா? :))
//“உன்னோடு வாழ்ந்தால் சில காலம் போதும் காலி நான் காலி//
இப்ப அமைதிக்கு பேரு சாந்திக்கு பதில் அவர் பெயரை போட்டு பாடுவாராயிருக்கும் :))
//எல்லா ஊர்லயும் இப்படித்தான் போல!//
சேம் குட்டைஸ்..சேம் மட்டைஸ்..ஒன்னியும் பண்ணமுடியாது :))
ஜி
எதுனாலும் பேசித் தீர்த்துகலாம்டே :))
திவ்யா
//
மகனுக்கு???//
அந்த பெருமைய தான் முதல் முக்கால் பதிவுல சொல்லியிருக்கேனே :))
நன்றி நன்றி!
ya. my dad also used to sing... but he doesnt sing.
me too participated in singing competition during pongal festival in my native. they used to give me third prize.
but during my hostel life i never opened my mouth for singing.
Hi Kappi,
I read u blog...nice writings.
U also wrote u r from TCE.
Which batch TCE u belong to?
mayvee
_/\_
Sambath
நன்றி!
2000-04. நீங்களும் TCE தானா? :)
இல்லைங்க கப்பி நான் மகாலிங்கம் இன்ஜினியரிங்(2001-05)....என்னோட தோழி தான் உங்க ப்லோக் ரேபிர் பண்ணினா....எல்லா போச்டிங்கும் படிச்சுட்டேன்...ரொம்ப நல்ல எழுதுறீங்க...வாழ்த்துக்கள்....
சம்பத்
சம்பத்
நன்றி! :)
கப்பி | Kappi
unga nameku enna artham pa
unga anupavam nalla iruku
me they 25th
//"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"//
//"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"//
thangal kastathai correct-a puriya vachi irukar unga frd.
உங்க கருத்து? Post a Comment