ஒருமாதமாக இருந்த கைகால் நடுக்கம் சென்ற சனிக்கிழமை சரியானது. நடுக்கத்திற்கான காரணம் தியேட்டர் பக்கம் போகாமலிருந்தது. 'பில்லா' பார்க்கச் சென்றிருந்தோம். பின் வரிசையில் இருந்த குழந்தை நமீதா திரையில் தோன்றிய காட்சியில் "இது யாருப்பா? அவனுக்கு அக்காவா? அண்ணியா? சித்தியா? தங்கச்சியா?" என ஆரம்பித்து படம் முழுக்க கேள்விகள் தான். செம ஜாலி.
குழந்தையில் பாட்டியும் இன்னொருவரும் "இந்தி டான்ல இப்படி இருக்கும். பழைய டான்ல தேங்காய் சீனிவாசன் வருவான்ல. படம் வேகமாவே போலியே" என லைவ் விமர்சனம் செய்துகொண்டிருந்தனர்.
இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் யாராவது ஸ்லோமோஷனில் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். ரிச்சாக எடுக்கிறோமென்று எல்லாருமே மாடலிங் செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது. அஜீத் 'வெத்தலைய போட்டேண்டி' பாடலுக்கு ஆடிய நடனம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை நினைவுபடுத்தியது. அதே ஸ்டெப்ஸ்தான். 'மை நேம் இஸ் பில்லா'.....வேணாம் அழுதுடுவேன். விஷ்னுவர்தன் எப்போதுமே இடைவேளைக்குப் பிறகு ரொம்ப இழுக்காமல் படத்தை முடித்துவிடுவார். இந்த படத்திலும் அதே. முதல் பாதி தான் கொஞ்சம் இழுவை. ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம் - தலக்காகவும், படமாக்கப்பட்ட விதத்துக்காகவும்(நயனுக்காகவும்னு சேர்க்கலாம்..ஆனா அம்மணி ஏமாத்திப்புட்டாங்க..படம் ஃபுல்லா அவங்க காஸ்ட்யூம் மாதிரியே அவங்க ரியாக்ஷனும் ஒரேஏஏஏ மாதிரி தான் இருந்துச்சு). படம் எப்படியும் ஓடிடும்.
கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. என் நண்பனுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.
எவனோ ஒருவன் - ப்ரிண்ட் சரியில்ல. இன்னும் பார்க்கல.
******************************
சென்ற வாரம் இங்கு ஒரு அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. டாக்ஸியில் அமர்ந்ததும் வயதான டிரைவர் "இந்தியாவா" எனக் கேட்டுவிட்டு தான் ஈரான் என்றும் தன் பெயரையும் சொன்னார். உடனே எனக்கு தம்பியண்ணனின் ஞாபகம் வந்தது ஏன் எனத் தெரியவில்லை ;).
பழைய இந்தி திரைப்படங்கள் பார்த்திருப்பதாயும் ராஜ்குமாரைப் பிடிக்குமென்றும் சொன்னார். இந்தியாவைப் பற்றியும் ஈரானைப் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொண்டு வந்த போது அலுவலகம் வந்துவிட்டிருந்தது. எனக்காக காத்திருப்பதாகச் சொன்னார். உள்ளே எவ்வளவு நேரமாகும் என்றும் தெரியாது. வெயிட்டிங் என்று இவர் எவ்வளவு வாங்குவார் என்றும் தெரியாது. எனவே வேண்டாமெனக் கூறி வந்ததற்கான பணத்தைக் கொடுத்தேன். "நான் உனக்காக செய்யவில்லை. இந்தியாவிற்காகத் தான் காத்திருப்பதாகச் சொன்னேன்" என டயலாக் விட்டு என்னுடனே உள்ளே வந்து வரவேற்பரையில் அமர்ந்துகொண்டார். அவர் சீரியசாக சொன்னாரோ என்னமோ ஆனால் "அரைமணி நேரம் காத்திருந்து முப்பது டாலர் சம்பாதிக்க தாத்தா என்னமா டயலாக் விடுறாரு" என்று எனக்குத் தோன்றியதற்கு நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை என்னை ஏமாத்தியிருந்த ஆட்டோக்காரர்களும் கடைகாரர்களும் காரணமாக இருக்கலாம்.
***************************************
நேற்று திடீரென இந்த பாட்டு ஞாபகம் வந்தது. கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு யூடியூப்ல தேடிப் பிடிச்சேன். சூப்பர் பாட்டு. பெண் குரல் செமையா இருக்கும். ஆனா அவங்க பேரு தெரியாது.
***************************************
இந்த ஊர் தண்ணி ரொம்பவே மோசமாயிருக்கு. தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது. நெத்தி பெருசாயிட்டே இருக்கு. ஊருக்குப் போகும்போது எங்கப்பாரு அளவுக்கு முடியிருந்தாலே சந்தோசப்படுவேன்.
***************************************
நேற்று நெட்டில் படம் பாரத்துக் கொண்டிருக்கும்போது அறை நண்பர் "என்னடா கப்பி படமா? பாதி படம் பார்த்துட்டிருக்கும்போதே அப்படியே தூங்கிடுவ. மீதி படத்தை கனவுலதான் பார்ப்ப.தூங்கி எழுந்ததும் லேப்டாப்பை தொறந்து விமர்சனம்னு எழுதுவ"ன்னு கலாயச்சிட்டு இருந்தார். "இல்ல தல..நான் எழுதறதெல்லாம் ரொம்ப நாள் முன்ன பாத்த படங்கதான்..இப்ப பாக்கறது எதுக்குமே எழுதலை"ன்னு சொன்னேன். "அடப்பாவி அப்போ இத்தினி மாசம் கழிச்சு அந்த படத்துக்கெல்லாமே இப்பத்தான் கனவுல கதை டெவலப் பண்றயா"ன்னு சதாய்ச்சுட்டாரு.
****************************************
இந்த வெத்து ஏரியால எழுத நெறய விஷயம் தோன்றினாலும் எதுவுமே வேணாம்னு விட்டாச்சு. காரணம் கீழ இருக்க தத்துவம்.
***************************************
இந்த மாத ?! தத்துவம்
"சும்மா இருப்பதே சுகம்"
***************************************
?! - டிசம்பர் (?!)
Subscribe to:
Post Comments (Atom)
20 பின்னூட்டங்கள்:
:-)
மெட்ராஸ்ல கொஞ்ச நாள் இருந்தாலே நியாயமான ஆட்டோகாரரு,டாக்ஸிகாரரு யாராச்சும் பாத்தா கண்ல தண்ணி வந்துரும்!!
நான் இங்கிட்டு வந்துட்டு ஏர்போர்ட்லையே அழுதுட்டேன்!! :-P
---தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது.---
சேம் பின்ச் :)))
cvr
/நான் இங்கிட்டு வந்துட்டு ஏர்போர்ட்லையே அழுதுட்டேன்!! :-P//
அவ்வ்வ்வ்வ் :))
boston bala
உங்களுக்குமா? நான் தனி ஆள் இல்ல :)))
உன்கிட்ட உண்டான கெட்ட பழக்கம் இது....
//இந்த வெத்து ஏரியால எழுத நெறய விஷயம் தோன்றினாலும் எதுவுமே வேணாம்னு விட்டாச்சு. காரணம் கீழ இருக்க தத்துவம்.
இந்த மாத ?! தத்துவம்
"சும்மா இருப்பதே சுகம்"//
அப்படினு சொல்லிட்டே சும்மா இருக்க முடியாம அப்ப அப்ப சொறிஞ்சு விட்டுக்குற...
\\இந்த மாத ?! தத்துவம்
"சும்மா இருப்பதே சுகம்"\\
இதை தானே இத்தனை மாசமாக நான் செய்யுக்கிட்டு இருக்கேன்...;))
//தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது.//
Same Blood :-))
புலி பிள்ளாய்
// சும்மா இருக்க முடியாம அப்ப அப்ப சொறிஞ்சு விட்டுக்குற...//
ஏன்னா சொறிஞ்சு விட்டுக்கறதும் சுகம் :))))
கோபிண்ணே
//இதை தானே இத்தனை மாசமாக நான் செய்யுக்கிட்டு இருக்கேன்...;))//
:))
ஒரே இனம்லா :)))
வெட்டிகாரு
//Same Blood :-))//
உங்களுக்குமா :)))
அப்பக்கூட குடும்பஸ்தருக்கு என்னய்யா கவலை? :))))
//---தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது.---
சேம் பின்ச் :)))//
same same pinch :((((
\\இந்த ஊர் தண்ணி ரொம்பவே மோசமாயிருக்கு. தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது\\
Water Softner fix panina konjam improvement irukuthu, hair loss complete aa stop agaleenalum, oralavuku kammi agum.
//நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை என்னை ஏமாத்தியிருந்த ஆட்டோக்காரர்களும் கடைகாரர்களும் காரணமாக இருக்கலாம்.//
இப்படி பல நேரத்துல நல்லவங்களையும் தப்பாவே நினைக்கத் தோணுங்க..எல்லாருக்குமே..
ஜி
// same same pinch :(((//
என்ன மக்கா இதுக்கெல்லாம் அழுவாச்சி போட்டுகிட்டு..ஊருல உலகத்துல இல்லாததா...ஃப்ரீயா விடு....ன்னு ஒனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதல் சொல்லி தேத்திக்கலாம் மக்கா :)))
Divya
// Water Softner fix panina konjam improvement irukuthu, hair loss complete aa stop agaleenalum, oralavuku kammi agum.
//
அந்தளவுக்கெல்லாம் பொறுப்புணர்ச்சி இல்லீங்...ரொம்ப கஷ்டம்ங்.. :)))
இளா
// இப்படி பல நேரத்துல நல்லவங்களையும் தப்பாவே நினைக்கத் தோணுங்க..எல்லாருக்குமே..//
அதே தான் விவ்ஸ்!..ம்ம்ம்...
மேல படிச்சுட்டு கமெண்ட் போடலாம்னு வந்த ஊர்காரங்கல்லாம் ஒன்னுகூட ஒப்பாரி வைக்கிறாப்புல இருக்கு.
நான் அப்பாலிக்கா வர்ரேன்...
/தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது. நெத்தி பெருசாயிட்டே இருக்கு. ஊருக்குப் போகும்போது எங்கப்பாரு அளவுக்கு முடியிருந்தாலே சந்தோசப்படுவேன்.//
KTM,
நாமே என்ன பாவம் செஞ்சோம்??? :(
//தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது//
சந்தோஷம்யா. எனக்கு மட்டும் நடக்கரதில்லயா இது?
சேந்தே இழப்போம்! :)
// இந்த மாத ?! தத்துவம்
"சும்மா இருப்பதே சுகம்"
//
ஓ! தத்துவ ஞானி ஆயாச்சா???
J K
// ஊர்காரங்கல்லாம் ஒன்னுகூட ஒப்பாரி வைக்கிறாப்புல இருக்கு.//
உனக்கென்னப்பா...இந்த ஒப்பாரியெல்லாம் கடந்து வந்தவன் நீ :)
இராமண்ணே
//
நாமே என்ன பாவம் செஞ்சோம்??? :(//
டொண்டடொண்ட டொண்டடொய்ங்ங்ங்...:))
surveysan
//சந்தோஷம்யா. எனக்கு மட்டும் நடக்கரதில்லயா இது?
சேந்தே இழப்போம்! :)//
அட இதை வச்சு ஒரு கட்சியே ஆரம்பிச்சுடலாம் போலிருக்கே தல :))
இம்சை அரசி
//ஓ! தத்துவ ஞானி ஆயாச்சா???//
அதுவா வருதே :)))
அடங்கொக்கமக்கா இந்த மாசம் ஒரே மயிர் கூச்செறியும் செய்தியும் பின்னூட்டமுமாவும் இல்ல இருக்கு நான் கொஞ்சம் லேட்டு... என்னச் செய்ய உங்களுக்கு தண்ணியால தொல்லை..எனக்கு.... ம்ம்ம்ம் கப்பி உனக்குத் தெரியும் நான் என்னச் சொல்ல வர்ரேன்னு....:)))))))
பத்து விரல தலையில வைக்காம ஒத்த விரல வைக்கலாம்ல, ரெண்டு முடிதான விழும்... யோசிங்க தல.
அப்புறம் என் ஞாபகம் ஏம்பா வந்துச்சு?
தேவ்ண்ணே
:)))
தம்பி
// பத்து விரல தலையில வைக்காம ஒத்த விரல வைக்கலாம்ல, ரெண்டு முடிதான விழும்... யோசிங்க தல.//
இப்படி ஒரு ஐடியா சொல்லத்தான்யா உங்கள மாதிரி ஒருத்தர் வேணும்ங்கறது :))
//
அப்புறம் என் ஞாபகம் ஏம்பா வந்துச்சு?//
அனுபவச்சித்தர் ஞாபகம் வராதா பின்ன :))
ம்ம்ம்ம்ம் - சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் படுத்தும் பாடு - தாங்க முடியாது. என்ன செய்வது..... அப்பா மாதிரி முடி இருக்கேன்னு மகிழ்ச்சி அடையுங்க
உங்க கருத்து? Post a Comment