"காதல் வந்தால் ஊட்டிக்கு போவேன்
பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"
பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"
சென்ற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதியைக் கழிக்க எந்தெந்த படங்களைப் பார்க்கலாமென விவாதித்துக் கொண்டிருந்தபோது தென்காசிக்கார நண்பன் மட்டும் ஊருக்குச் செல்வதாகச் சொன்னான். "எங்களோட அப்ப இந்த வாரம் படம் பார்க்க வர மாட்டியா? அப்ப நாங்க உன்னோட ஊருக்கு வர்றோம். இங்கயிருந்து நேரா திருநெல்வேலி போய் அங்கயிருந்து பாபநாசம் போறோம்..பாணதீர்த்தம் ஃபால்ஸ் போயிட்டு அன்னைக்கு சாயங்காலம் தென்காசி வந்துடலாம். உங்க வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் குத்தாலம்லா பாத்துட்டு நைட் கிளம்பி வந்துடலாம். நாங்களும் வரோம்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு" என்று திடீர் திட்டம் ஒன்றைப் போட்டு அவனுடன் கிளம்பிவிட்டோம்.
கோயம்பேடு சென்றால் தென்காசி, திருநெல்வேலி இரண்டுக்குமே அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து காலியாக இருந்தது. முதலில் தென்காசி-குத்தாலம்..அடுத்த நாள் பாபநாசம் என திட்டத்தை மாற்றி தென்காசி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து எடுக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றும் திருநெல்வேலி பேருந்து 10 நிமிடத்தில் எடுக்கப்போவதாக சொன்னதும் மீண்டும் திட்டத்தை மாற்றி திருநெல்வேலிக்கே செல்ல பேருந்து மாறி ஏறினோம்.
திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு தென்காசி பேருந்தில் ஏறிவிட்டோம். நண்பனின் வீட்டிற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவன் அப்பா ஏற்பாடு செய்த காரிலேயே பழைய குற்றாலம் அருவிக்குச் சென்றோம். கூட்டம் நிறைய இல்லை. முதல் ரவுண்ட் குளியலைப் போட்டோம். குளிரில் கைகள் விறைத்துக் கொண்டாலும் அரை மணி நேரத்திற்காவது வெளியே வருவதில்லை என்ற முடிவோடு குளித்தோம். தண்ணீர் அவ்வளவு வேகமாக விழவில்லை. அளவு குறைவு தான்.
அருவியிலும் ம்பு போட்டும் சோப்பு போட்டும் குளிக்கும் நபர்களைக் கண்டால் அப்படியே அடிக்கலாம் போலிருக்கும். வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான். அவர்களிடமிருந்து தப்பி ஓரமாக தண்ணீர் வேகமாக விழும் இடமாக ஒதுங்கி நின்று திருப்தியாக குளித்தோம்.
சூடாக பஜ்ஜி, டீ அடித்துவிட்டு அங்கிருந்து ஐந்தருவிக்கு கிளம்பினோம். ஐந்தருவியில் இரண்டு பெண்களுக்கு. மூன்று ஆண்களுக்கு. இரண்டாவதாக உள்ள அருவியில் தண்ணீர் பெரிய பாறையில் பக்கவாட்டில் விழுகிறது. அந்த பாறையில் படுத்தவாறே அருமையாகக் குளிக்கலாம். இங்கும் பாறை சந்தில் உள்ளே சென்று எவனையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் குளித்தோம்.
சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?
அங்கிருந்து குற்றாலம் மெயின் அருவிக்கு வந்தோம். தண்ணீரும் குறைச்சல். கூட்டமும் அதிகம். அதனால் அங்கு குளிக்கவில்லை. பொங்குமாக்கடலில் விழுந்து இறந்து போன கல்லூரி ஜூனியர் நினைவுக்கு வந்து சிறிது நேரம் கல்லூரி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம்.
நான் அதுவரை பாபநாசம் சென்றதில்லை. பாணதீர்த்தம் ரோஜா படத்தில் மதுபாலா ஆடிய அருவி என்பது மட்டும் தான் தெரியும். அடுத்த நாள் காலை தென்காசியிலிருந்து பாபநாசம் கிளம்பினோம். அங்கிருந்து காரையார் அணை சுமார் இருபது கிலோமீட்டர். ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து படகில் பாணதீர்த்தம் செல்லவேண்டும். அங்கு கடைகள் எதுவும் இருக்காது என்று டிரைவர் கூறியதால் பாபநாசத்திலேயே வயிறு முட்ட சாப்பிட்டு காரையாருக்குச் சென்றோம். காரையார் அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அணை மிகவும் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றபோது மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
படகில் கதை பேசியபடி சென்றுகொண்டிருந்த போது நண்பன் என்னை திரும்பிப் பார்க்கச் சொன்னான். திரும்பினால் அந்த பக்கம் பாணதீர்த்தம் அருவி. பார்த்ததுமே வாயடைத்துப் போனது. அருவி அந்தளவு கம்பீரமாக பிரம்மாண்டமாக இருந்தது. படகிலிருந்து ஒத்தையடி பாதை வழியாக அருவிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் சென்றபோது தான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று கிளம்பியது. அருவியில் மொத்தமே ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள்.
அருவியின் ஒரு பக்கம் மட்டும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியாது. தண்ணீர் அந்தளவு வேகமாக விழுகிறது. முன்னால் விழுந்து நிற்கும் தண்ணீரில் விழுந்தால் கூட பிழைப்பது அரிது. ஐந்தருவி, பழைய குற்றாலத்தை விடவும் தண்ணீர் வேகமாக விழுந்தது. அந்த வேகத்தில் தோள்பட்டையிலும் கழுத்திலும் லேசாக வலியெடுக்கவே ஆரம்பித்தது. ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம். தண்ணீர் மிகவும் இனிப்பாக இருந்தது. அந்த தண்ணீரில் குளித்து அதை குடித்து வாழ்ந்தால் ஒரு நோயும் வராது போல. அந்தளவு சுத்தம். சுவை.
குளித்துக்கொண்டிருக்கும் போது கிழே காலடியில் வானவில். பாறையில் எங்களுக்காகவே தோன்றிய வானவில். அப்போது கவிதை தான் எதுவும் தோன்றவில்லை. நல்ல வேளை. அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் எவனாவது அருவியிலேயே குதித்திருப்பான்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்தோம். கிளம்ப மனமே இல்லை. இதற்கு முன் பல அருவிகளில் குளித்திருந்தாலும் பாணதீர்த்தத்தின் பிரம்மாண்டம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் கிளம்பும்போது இரண்டு படகுகளில் கூட்டம் வந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் திருப்தியாக குளித்திருக்க முடியாது. இங்கும் கூட்டத்தில் இடிபட்டு ஷஅம்பு சோப்பினால் பாணதீர்த்தமே பிடிக்காமல் கூட போயிருக்கும்.
அங்கிருந்து பாபநாசம் வரும் வழியில் சேர்வலார் அணைக்கு செல்லும் பாதை பிரிந்தது. அதையும் சென்று பார்த்துவிடுவோம் என்று சென்றோம். அங்கிருந்த காவலாளி "யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க" என்று கேட்டார். "கேட்கறதுக்கு யாருமே இல்ல..அப்படியே உள்ள வந்துட்டோம்" என்றதும் "சரி பார்த்துட்டு போங்க..போட்டோ எடுக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சேர்வலார் அணை மழைத் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும் அணையாம். மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கால் மணி நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.
இனிப்பு கடை வைத்தால் "சாந்தி ஸ்வீட்ஸ்" என்று வைத்தால்தான் வியாபாரம் நடக்கும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல. திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது "சாந்தி ஸ்வீட்ஸ்" கடைகள். அதிலும் 'அக்மார்க்', 'ஒரிஜினல்', 'அசல்' என பட்டங்களுடன். ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது. அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்.
வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல எளிதாக இடம் கிடைத்ததால் ரிடர்னுக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எங்கள் லாஜிக் பொய்த்துப் போனது. பேருந்து நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். அரசுப் பேருந்தில் ஏறுவதற்கே வாய்ப்பில்லை என முடிவு செய்து மீண்டும் ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து தனியார் பேருந்துகளில் டிக்கெட் வாங்க முயற்சித்தோம். அதுவும் கிடைக்காததால் மீண்டும் புது பேருந்து நிலையம் வந்து அடித்து பிடித்து திருவனந்தபுரதிலிருந்து வந்த பழைய அரசுப் பேருந்தில் ஏறி, மதுரை வரை டிரைவர் கேபினில் அமர்ந்துவந்து, மதுரையிலிருந்து கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஓட்டை சீட்டைப் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை ஓட்டுநர் வண்டி ஓட்டியதைப் பின்னால் உட்கார்ந்து பார்த்ததில் அவரின் ரசிகனாகிவிட்டேன். அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.
சென்று வந்து ஒரு மாதத்திற்கு் ஆகிவிட்டது. இன்று ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதும் பாணதீர்த்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் அதன் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலவில்லை. அதில் குளித்த சுகமும் மறக்கவில்லை. அருவியில் சீசன் வரும்போதெல்லாம் சென்றுவர வேண்டும். அதுவும் பக்கத்திலேயே நண்பன் வீடு இருக்கும்போது சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் கூட பிரச்சனை இல்லை.
29 பின்னூட்டங்கள்:
கலக்கல் கப்பி........
இந்த வருசமும் லிவு கிடைக்காமே குற்றாலம் பக்கம் போகமுடியலை... :(
சுவையான அனுபவம் படிக்கும்போதே.. கொஞ்சம் பொறாமையா இருக்கு.
//சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?
//
அந்த பழம் பேரு "ரம்புட்டாங்" அப்படீன்னு நினைக்கிறேன். கரெக்டான்னு தெரியலை
படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.. குற்றாலம் எல்லாம் போய் வருச கணக்குல ஆவுது...
//அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.//
உண்மை தான் கப்பி.. அதிலும் பல தடவை ஏற்காடு போகும் போதும், சென்னை டூ நாகை போதும் பார்த்து ரசித்து இருக்கேன்... அருமையாக மட்டும் அல்ல ஸ்டைலாக கூடவும்...
நல்ல பயணக் குறிப்பு கப்பி. ஏதோ உங்க கூட வந்த மாதிரியே ஒரு பிரம்மை
//சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?//
மங்குஸ்தான் பழமா சொல்லறீங்க? அது என்ன பூச்சி மாதிரியா இருக்கு? :))
பழம் பேரு மங்குஸ்தான்.
நல்லா இருக்கு படங்களெல்லாம்.. கப்பி. பாபநாசம் போகனுங்கற கனவு இன்னும் கனவாவே இருக்கு... சவுத் போகும் போதெல்லாம் சொந்தக்காரங்களைப்பாக்கவே சரியா இருக்கு.. ஹ்ம்.. எப்ப முடியுமோ?
அந்த பழத்துக்கு பேரு ரம்டம், அர்த்தமெல்லாம் என்னனு கேட்கப்படாது
அந்த பழத்துக்கு பேரு ரம்டம், அர்த்தமெல்லாம் என்னனு கேட்கப்படாது
ada kappi.. namma ooru pakkamlaam poyirukkiya.... sollirunthaa ellaathukkum oru warning koduthiruppenla :))))
intha nerathula ippadi oru posta pottu namma oor emotional feelinga thoondi vittutiyale... India vanthathum marupadiyum inga ellaam poganum :)))
//சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?
//
Rambutan
இத இத இந்த போட்டோக்களின் அழகைத்தான் நான் மிஸ் பண்ணிட்டேன்..
மத்தபடி குளியலை சூப்பரா முடிச்சுட்டோமில்ல!
புகைப்படங்கள் எல்லாமே டாப் கிளாஸ் :-)
ரொம்ப வருஷங்களுக்கு இலஞ்சியில "கிழக்கு வாசல்" ஷூட்டிங்க நடந்திட்டு இருந்தப்போ போனது..ஒவ்வொரு சீசன் போதும் ஏதோ ஒரு தடங்கல் வந்து போக முடியாமப் போயுடுது...
வேலுக்காக அசின் அங்கே தான் கொஞ்ச நாள் இருந்தாங்களாம்..பார்த்தீங்களா??
ஆவியில் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பேர் போன சாப்பாட்டுக் கடைங்களப் பத்தி ஒரு தொடர் வந்தது.அதிலே குத்தாலத்தில் இருக்கும் ஒரு கடையில் கிடைக்கிற பரோட்டா,சிக்கன் குருமாவைப் பத்தி சிலாகிச்சி எழுதியிருந்தாங்க.உச்ச நச்சத்திரம் அந்தக் கடையின் தீவிர ரசிகராம்.அந்தக் கடைக்குப் போனீங்களா??
தேனருவி போகலியா கப்பி குற்றாலத்திலே அதான்யா டாப்பு ..ஐந்தருவில இருந்து ட்ரக்கிங்க் மாதிரி 2 கி.மீ மேல போனா ஒரு அட்டகாசமான அருவி இருக்கு அதான் தேனருவி..த பெஸ்ட் னு அத சொல்லலாம்
அப்பப்ப கரயொதுங்கி லைட்டா உள்ளுக்கும் நனைச்சிட்டு மறுபடியும் வெளிய நனையுற சொகம் ...ஆஹா!! :)
படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு கப்பி. ;)
நமக்கு என்னைக்கு பார்க்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கோ!
இராமண்ணே
//இந்த வருசமும் லிவு கிடைக்காமே குற்றாலம் பக்கம் போகமுடியலை... :(//
அடுத்த வருசம் அண்ணியோட போய் வாங்க :))
புபட்டியன்
//அந்த பழம் பேரு "ரம்புட்டாங்" அப்படீன்னு நினைக்கிறேன். கரெக்டான்னு தெரியலை//
கிட்டத்தட்ட கரெக்ட் தான்..ரம்புட்டான் :)
நன்றி! :)
புலி
படங்கள் சூப்பரா இருக்கா? நெஜமாவா சொல்றீங்களா? :))
//அருமையாக மட்டும் அல்ல ஸ்டைலாக கூடவும்...//
அதே தான்..ஒரே கைல அந்த ஸ்டெரிங்கை வளைக்கறதும்...ஓவர்டேக் பண்ணும்போது அசால்டா ஒரு லுக் விடறதும்...அடட்டா :)))
கொத்ஸ்
மேக்ரோ எஃபெக்ட்ல படம் எடுத்துட்டு வந்திருந்தா ஈசியா கண்டுபுடிச்சிருக்கலாம்..நமக்கு தான் சாப்பிடற ஐயிட்டத்தைப் பார்த்தா வேறெதும் தோணாதே :)))
அது மங்குஸ்தான் இல்லீங்கண்ணா..ரம்புட்டான் தான் :))
இளா
//ஏதோ உங்க கூட வந்த மாதிரியே ஒரு பிரம்மை//
குத்தால அருவியிலே குளிப்பது போல் இருக்குதா? :))))
//பழம் பேரு மங்குஸ்தான்.//
எங்க பிட் அடிச்சீங்க? :))) அது ரம்புட்டான் விவ்ஸ் :))
முத்துலட்சுமி
சொந்த காரங்களை பார்க்கலைனா அது சொ.செ.சூ மாதிரி...அவங்க பேச தாங்க முடியாது :))
கனவு சீக்கிரம் பலிக்கட்டும் :)))
நன்றிக்கா :)
அனானி
அர்த்தம்லா வேணாங்க..அது ரம்டம் இல்ல ரம்டன்
ஜி
ஊர்க்காரங்களுக்கு வார்னிங் கொடுக்கறயா? இதெல்லாம் ஓவர் மக்கா!! :))
இங்க வந்ததும் இன்னொரு டிரிப்பை போட்டுடுவோம் :))
மதி கந்தசாமி
அது ரம்புட்டானே தாங்க :)
www.rambutan.com -ல படம் பார்த்து கன்பர்ம் பண்ணிட்டேன் :))
நன்றி!
பினாத்தலாரே
இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா :))
//மத்தபடி குளியலை சூப்பரா முடிச்சுட்டோமில்ல!//
அதானே முக்கியம் :))
ஓமப்பொடியாரே
//புகைப்படங்கள் எல்லாமே டாப் கிளாஸ் :-)//
டாங்கிஸ் :)
//
ரொம்ப வருஷங்களுக்கு இலஞ்சியில "கிழக்கு வாசல்" ஷூட்டிங்க நடந்திட்டு இருந்தப்போ போனது..ஒவ்வொரு சீசன் போதும் ஏதோ ஒரு தடங்கல் வந்து போக முடியாமப் போயுடுது...
//
ஓ!! கிழக்கு வாசலும் அங்க எடுத்திருக்காங்களா?
//
வேலுக்காக அசின் அங்கே தான் கொஞ்ச நாள் இருந்தாங்களாம்..பார்த்தீங்களா??//
அடடா மிஸ் ஆயிடுச்சே...ஒழுங்கா விசாரிச்சுட்டு போய் இருக்கனுமோ? :))
//
ஆவியில் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பேர் போன சாப்பாட்டுக் கடைங்களப் பத்தி ஒரு தொடர் வந்தது.அதிலே குத்தாலத்தில் இருக்கும் ஒரு கடையில் கிடைக்கிற பரோட்டா,சிக்கன் குருமாவைப் பத்தி சிலாகிச்சி எழுதியிருந்தாங்க.உச்ச நச்சத்திரம் அந்தக் கடையின் தீவிர ரசிகராம்.அந்தக் கடைக்குப் போனீங்களா??//
அந்த கடையைப் பற்றி நண்பனோட அப்பா சொன்னார்..ஆனா அங்க போக முடியல..அவங்க வீட்டுல தான் சாப்பிடனும்னு அன்புத் தொல்லை வேற :)
அய்யனார்
தேனருவி போகலைங்க....மெயின் ஃபால்ஸ் போயிட்டு அங்க போகலாம்னு தான் இருந்தோம்..ரொம்ப லேட் ஆயிடுச்சு...மிஸ்ஸாயிடுச்சு..அடுத்த முறை கண்டிப்பா போயிருவோம் :)
//அப்பப்ப கரயொதுங்கி லைட்டா உள்ளுக்கும் நனைச்சிட்டு மறுபடியும் வெளிய நனையுற சொகம் ...ஆஹா!! :)//
ஆஹா :)
கோபிநாத்
//நமக்கு என்னைக்கு பார்க்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கோ!//
அடுத்த முறை ஒரு டிரிப்பை போட்டுடுவோம் :))
//திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு //
அப்ப அப்ப திட்டத்தை மாத்திட்டு இருக்கறது தான் பேச்சிலர் வாழ்க்கைக்கே பெருமை ;)
அப்பறம் ஊட்டிக்கு போனதை பத்தி ஒரு பதிவு போடறது ;)
படங்கள் அருமை கப்பி...
ஊர் சுத்தறதை பத்தி பதிவு போடறதுல உன்னை அடிச்சிக்க முடியாதுனு மறுபடியும் நிருபிச்சிட்ட...
அறிவுஜீவி...
ஆகமொத்தத்துல ஒரு அருமையான ட்ரீப் போயிருக்கீங்க.. எங்களை யாரும் கூட்டிட்டு போகல நீங்க....
வெட்டி
//அப்ப அப்ப திட்டத்தை மாத்திட்டு இருக்கறது தான் பேச்சிலர் வாழ்க்கைக்கே பெருமை ;)
//
அதே தான் :))
//
அப்பறம் ஊட்டிக்கு போனதை பத்தி ஒரு பதிவு போடறது ;)//
நான் இதுவரை ஊட்டிக்கே போனதில்லண்ணே :)))
//ஊர் சுத்தறதை பத்தி பதிவு போடறதுல உன்னை அடிச்சிக்க முடியாதுனு மறுபடியும் நிருபிச்சிட்ட...//
என்னை இப்படி கலாய்க்கறதுக்கு உங்களை அடிச்சுக்க முடியாதுன்னு மறுபடியும் நிறுபிச்சீட்டீங்க :)))
மை ஃபிரண்ட்
//ஆகமொத்தத்துல ஒரு அருமையான ட்ரீப் போயிருக்கீங்க..//
ஆமா..ஆமா :))
//
எங்களை யாரும் கூட்டிட்டு போகல நீங்க....//
இங்க வாங்க...ஒரு படையை கிளப்பிட்டு போயிடுவோம் :))
கப்பி,
படங்களும் தகவலும் அருமை! இன்னும் குற்றாலத்துக்குச் சென்றதில்லை.... அடுத்தமுறை கண்டிப்பாக செல்ல முடிவெடுத்துவிட்டேன்!
அந்தப் பழம், ரம்புட்டான் தான். மன்குஸ்தான் பெரிசாக இருக்கும். ரம்புட்டான் சின்னதாக முடி போன்ற வெளிப்புறத்தோடு இருக்கும்...ரென்டு பழமும் சாப்பிட நல்லாதான் இருக்கும். சிங்கப்பூரில் சாப்பிட்டு இருக்கிறேன்.
//வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான்//
கப்பி - இப்படி கோவப்பட்டு நான் பாத்ததே இல்லையே! :-))
//ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம்//
கம்பியை=கப்பியை? ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? :-)
//அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்//
எதுக்குங்க கப்பி, தேவைக்கு அதிகமாகவே? யாருக்கு எல்லாம் கொடுத்தீங்க? :-)
//அய்யனார் said...
தேனருவி போகலியா கப்பி குற்றாலத்திலே அதான்யா டாப்பு ..//
அதே!
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்!
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்!
//காரையார் அணையில் படகில் போகும் போது// அந்த photo சூப்பர்!
கப்பி, பேச்சு இலருக்குக் கிடைக்கும் சுதந்திரமே தனிதான்.
நினைச்ச நேரம் நினைச்ச இடமா:)))
என்சாய்!!1
ஆனால் பதிவும் இது போலவே போட்டுடுங்க.
நல்லா இருந்தது.
வாங்க தஞ்சாவூரான்
அது ரம்புட்டானே தான்..பார்க்கவும் நல்லாயிருக்கும்..சாப்பிடவும் நல்லாயிருக்கும்
நன்றி! :)
KRS
//கப்பி - இப்படி கோவப்பட்டு நான் பாத்ததே இல்லையே! :-))//
எனக்கு இன்னொரு முகம் இருக்கு...பார்த்தா நொந்துடுவீங்க :))
//கம்பியை=கப்பியை? ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? :-)//
:))
அங்க போயும் கப்பியை பிடிச்சுட்டிருந்தா கூட வந்த பசங்க தண்ணில தள்ளி விட்ருவாங்களே தல :))
//எதுக்குங்க கப்பி, தேவைக்கு அதிகமாகவே? யாருக்கு எல்லாம் கொடுத்தீங்க? :-)//
யாருக்கும் அல்வா கொடுக்கற பழக்கம் இல்லீங்ண்ணா :))
//அதே!
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்!
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்!//
ஆஹா!! மிஸ் ஆயிடுச்சே!
நன்றி தல!
வல்லிசிம்ஹன்
//கப்பி, பேச்சு இலருக்குக் கிடைக்கும் சுதந்திரமே தனிதான்.
நினைச்ச நேரம் நினைச்ச இடமா:)))
என்சாய்!!1//
ஹி ஹி..அதே தான் :)
//
ஆனால் பதிவும் இது போலவே போட்டுடுங்க.
நல்லா இருந்தது.//
நன்றிங்க வல்லிசிம்ஹன்! :)
அருமையா படம் பிடிச்சிருக்கீங்க! நீங்க எழுதுனத படிச்சதுக்கப்புறம் நானும் கூட வந்த மாதிரி ஒரு பீலிங்கு;)
உங்க கருத்து? Post a Comment